ICMR – NJIL & OMD நிறுவனத்தில் ரூ.19,900/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!
ICMR – NJIL & OMD ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . இதில் காலியாக உள்ள Technical assistants, Technician T-1, Laboratory Attendant பணிகளுக்கான 68 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
ICMR காலிப்பணியிடங்கள்:
ICMR – NJIL & OMD தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Technical assistant, Technician T-1, Laboratory Attendant பணிகளுக்கென மொத்தம் 68 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICMR வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 40 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ICMR – NJIL & OMD கல்வி தகுதி:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் பல்கலைக்கழகத்தில் Bachelor’s degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ICMR ஊதிய விவரம் ;
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19,900/- முதல் ரூ.1,12,400/- வரை சம்பளம் பெறுவார்கள்.
ICMR – NJIL & OMD தேர்வு செய்யப்படும் முறை:
பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ICMR விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூரவ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு (28.07.2023 ) இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Download Notification & Application Form Link
Click here for latest employment news