தஞ்சை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.6.2023 அன்றைய தேதியில் 5 வருடம் முடிவடைந்தவர்கள், முறையாக பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ்-2 தேர்ச்சி, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனைவரும் தகுதி உடையவர்கள் ஆவர்.
மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை எழுதப்படிக்க தெரிந்தவர் முதல் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து 30.6.2023 அன்று ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடையவர்கள் ஆவர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வருமான உச்சவரம்பு கிடையாது மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. பயனாளிகள் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் படிப்பவராக இருக்கக்கூடாது.

Click here for latest employment news
No comments:
Post a Comment