Search

வங்கி வேலை வாய்ப்பு; டிகிரி தகுதிக்கு 1000 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

Thursday, 6 July 2023

 பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் மேலாளர் (Manager) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 1000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.07.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Manager

காலியிடங்களின் எண்ணிக்கை : 1000

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மற்றும் CAIIB முடித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 31.05.2023 அன்று 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.


சம்பளம் : ரூ. 48,170 – 69,810

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் வங்கி, பொருளாதாரம், கணினி ஆகிய பகுதிகளில் இருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். இதற்கான கால அளவு 1 மணி நேரம்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/cbimmjun23/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.07.2023

விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினர் ரூ.850. SC/ST பிரிவினர் ரூ.175

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.centralbankofindia.co.in/sites/default/files/_Notification%20_RECRUITMENT-OF-MANAGERS-IN-MMGS-II-IN-MAINSTREAM.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One