Search

கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புதல் குறித்த அறிவிக்கை

Wednesday, 5 October 2022

IMG_20221004_211838
கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புதல் குறித்த அறிவிக்கை

Village Administration Tamil Nadu Village Assistant Service Rules , 1995 - Filling Up of Vacancies Instructions Issued - Reg . Reported.


Read More »

அறிவியல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.10.2022

அறிவியல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! - Applications are invited for the post of Scientific Assistant - Last date to apply: 18.10.2022

இந்திய வானிலை ஆய்வுத் துறையில் அமைச்சகம் சாராத அரசிதழ் அல்லாத (பதிவுறா) குரூப் ‘பி’ பணியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Scientific Assistant

மொத்த காலியிடங்கள்: 900




தகுதி: இயற்பியலை ஒரு பாடமாகக் கொண்டு அறிவியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய ஏதாவதொரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18.10.2022 தேதியின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 33 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35க்குள்ளும் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 




தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி, கோவை, திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி, புதுச்சேரி ஆகிய இடங்களில் நடைபெறும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.10.2022

Read More »

தபால் துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு... அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள் - விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 19.10.2022

தபால் துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு... அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்! - SUPER JOB IN POSTAL DEPARTMENT... DON'T MISS A RARE OPPORTUNITY - Last Date To Apply: 19.10.2022

சென்னையில் உள்ள தபால் துறை அலுவலக மெயில் மோட்டார் சர்வீஸ் பிரிவில் காலியாக உள்ள Skilled Artisans பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




அறிவிப்பு எண். MSE/B9-4/XI/2022

பணி: Skilled Artisans

பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
1. M.V.Mechanic - 2
2. M.V.Electrician - 1
3. Painter - 1
4. Tyreman - 1

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

வயதுவரம்பு: 1.7.2021 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பணி சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் எம்.வி.எம் பிரிவுக்கு விண்ணப்பிப்போர் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு குறித்த விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.




கட்டணம் விவரம்: விண்ணப்பக் கட்டணம் ரூ.100, தேர்வுக் கட்டணம் ரூ.400. இதனை இந்தியன் போஸ்டல் ஆர்டராக(ஐபிஓ) எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 




விண்ணப்பிக்கும் முறை: www.indianpost.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்று செய்து அதனை விரைவு, பதிவு தபாலில் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 
The Senior Manager(JAG)
Mail Motor Service,
No.37, Greams Road, Chennai - 600 006.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 19.10.2022
Read More »

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) தேர்வுக்குத் தயாராகுபவர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!


ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( Staff Selection Commission ) ஆண்டுதோறும் ஒன்றிய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை பிரிவு B மற்றும் C பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது . இந்த ஆண்டு 20,000 - க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Read More »

20,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் - மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) ஆண்டுதோறும் ஒன்றிய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை பிரிவு B மற்றும் C பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது. இந்த ஆண்டு 20,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பெரும்பாலான B பிரிவு பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்த 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் Combined Graduate Level Examination (CGLE) போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவற்றில் உதவி பிரிவு அலுவலர் (Assistant Section Officer) பணியிடங்கள் ஒன்றிய அரசின் தலைமைச் செயலகம், மத்திய புலனாய்வுத் துறை, இரயில்வே துறை, வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை, தலைமை அலுவலகம் ஆகியவற்றிற்கும், ஆய்வாளர் பணியிடங்கள் (Inspector) ஒன்றிய அரசின் வருவாய் துறைகளான Central Board of Direct Taxes, Central Board of In Direct Taxes & Customs, Directorate of Enforcement, Central Bureau of Narcotics  ஆகியவற்றிலும் மற்றும் உதவியாளர், கண்காணிப்பாளர் (Assistant Superintendent) பணியிடங்கள் ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.



மேலும் C  பிரிவு பணிகள் 12ஆம் வகுப்பு முடித்த 18 முதல் 27 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் Combined Higher Secondary Level (CHSL)  தேர்வு மூலம் ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு (Lower Division Clerks) தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும், இப்பொதுப்பணிகள் தவிர Junior Engineer தேர்வு, Stenographer  தேர்வு, Sub Inspector in Delhi Police, Central Armed Police Force (CAPF) and Central Industrial Security Force (CIF) தேர்வுகளும் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

மேற்கண்ட தேர்வுகளுக்கு நிலை 1-ல் பொதுவான போட்டித் தேர்வுகளுக்குரிய பாடத்திட்டங்களான General Intelligence and Reasoning, General Awareness, Quantitative Aptitude, English Comprehension பிரிவுகளிலிருந்துதான் வினாக்கள் கேட்கப்படுகிறது. நிலை 2-ல்    Mathematics Abilities, Reasoning and General Intelligence, English, General Awareness and Computer Knowledge மற்றும் General studies பாடப் பிரிவுகளிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படுகிறது. இப்பாடப் பிரிவுகள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் அனைவரும் அறிந்த ஒன்றே!




எனவே தமிழ்நாடு மாணவர்கள் ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பெருமளவு பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகிய துறைகள் இணைந்து, இத்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் அனுபவம் மிக்க வல்லுநர்களை கொண்டு, ஒரு நாள் கருத்தரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை 09.10.2022 அன்று சென்னை, கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் காலை 10.00 மணி முதல் நடைபெறும்.  

அரசு நடத்தும் இப்பயிற்சி முகாமில் போட்டித் தேர்வுகளில் ஆர்வமுள்ள இளைஞர்கள் கலந்துக் கொள்ளலாம். நேரில் வர இயலாத மாணவர்கள் பயனடையும் வகையில் இந்நிகழ்ச்சி முழுவதுமாக  இணையதளத்திலும், அரசு கேபிள் டிவியிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் மற்றும் சமூக ஊடகங்களிலும் பதிவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »
 

Most Reading

Tags

Sidebar One