Search

TNPSC - தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Saturday, 30 July 2022

 தொழில் ஆலோசகர்,  சமூக அலுவலர் உள்ளிட்ட  பணிகளில் காலியாக உள்ள 16 பணியிடங்களுக்கானதேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


அறிவிப்பு விவரம்: 

தொழில் ஆலோசகர்(மருத்துவக் கல்வித் துறை), சமூக அலுவலர் (தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) பணியிடங்களில் 16 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்கு www.tnpsc.gov.in என்ற இணையவழி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.  இதற்கு வயதுவரம்புகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


தொழில் ஆலோசகர் பதவிக்கு சம்பளம் மாதம் ரூ.36,200 முதல் 1,33,100 வரை வழங்கப்படும். சமூக ஆர்வலர் பதவிக்கு மாதம் ரூ.35,600 முதல் 1,30,800 வரை வழங்கப்படும். தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 26 ஆம் தேதி கடைசி நாளாகும். இணையவழி விண்ணப்பத்தை திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது. 


சமூக அலுவலர் பதவிக்கு கணினி வழித் தேர்வு நவம்பர் 12 ஆம் தேதி காலை மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ளது. சமூகப் பணி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையில், சமூக அலுவலர், தொழில் ஆலோசகர் பதவிகளுக்கான கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை மொழித் தேர்வும் நடத்தப்படும் என்றும்,  தொழில் ஆலோசகர் பதவிக்கு நவம்பர் 13 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறும் என அரசுப்பணியாளர் தேர்வாணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/VOC%20&%20CO%20Tamil.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Read More »
 

Most Reading

Tags

Sidebar One