Search

10/12ம் வகுப்பு தேர்ச்சி போதும்: சிப்பெட் நிறுவனத்தில் பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் - நுழைவுத் தேர்வு கிடையாது

Friday, 15 July 2022

மத்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகத்தால், சென்னை கிண்டியை தலைமையிடமாக கொண்டு நடத்தப்பட்டு வரும், மத்திய பெட்ரோகெமிக்கல்ஸ் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் (CIPET) பட்டம் மற்றும் பட்டய படிப்புகளை நடத்தி வருகிறது.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், நுழைவுத் தேர்வு ஏதுமின்றி, நேரடி சேர்க்கை மூலம் 3 ஆண்டுகால பட்டய படிப்பை (DPMT/DPT) படிக்கலாம்.

இதேபோன்று, கல்லூரிகளில் அறிவியல் பட்டப்படிப்பை முடித்தவர்கள் 2 ஆண்டு கால முதுநிலை பட்டப்படிப்பில் பிளாஸ்டிக் செயல்முறை மற்றும் சோதனை பயிற்சியில் நேரடியாக சேரலாம்.

12-ம் வகுப்பு பயின்று உயர் கல்வியை பெற முடியாதவர்கள், 3 ஆண்டு கால பட்டயப்படிப்பில் நேரடி சேர்க்கை மூலம் 2-ம் ஆண்டில் நேரடியாக அனுமதி பெற்று படிப்பை முடிக்கலாம்.




மேலும் விவரங்களுக்கு,

தொலைபேசி எண்- 93600 98600 / 96002 54350


மின்னஞ்சல் முகவரி – Chennai@cipet.gov.in – ல் தொடர்பு கொள்ளுமாறு சென்னையில் உள்ள சிப்பெட் நிறுவனத்தின் முதன்மை இயக்குனர் மற்றும் தலைவர் ஸ்ரீகாந்த் சிராலி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாய்ப்புகள்: 

தொழில் தொடங்க வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும்.

சிறந்த தொழிற் பயிற்சி அளிக்கப்படும்.

மாணவர்களின் வேலை பெறும் திறன் 100% ஆக இருக்கும் (100% Placement Assistance)


Read More »
 

Most Reading

Tags

Sidebar One