Search

2074 காலியிடங்களுக்கான SSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

Monday, 23 May 2022

ssc.jpg?w=360&dpr=3


மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப் பி, சி பணியிடங்களுக்கான புதிய வேலைவாப்பு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். Phase-X/2022/Section Posts

தேர்வு பெயர்: SSC Selection Post Exam- 2022

மொத்த காலிடங்கள்: 2074

பணி: MTS

பணி: Fieldman

பணி: Junior Scientific Officer

பணி: Fertilizer Inspector

பணி: Junior Geological Assistant

பணி: Data Entry Operation

பணி: Chargeman

பணி: Technical Officer

பணி: Pharmacist

பணி: Nursing Assistant

பணி: Account Clerks

பணி: Farm Assistant

பணி: Cleaner

பணி: Radio Technician

பணி: Canteen Assistant

பணி: Mechanic

பணி: Electrician

பணி: Welder

பணி: Medical Assistant

பணி: Library Assistant

பணி: Seed Analyst

பணி: Sub Editor

பணி: Staff Car Driver

பணி: Head Clerk

பணி: Caretaker

சம்பளம்: 7 ஆவது ஊதியக் குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிவாரியான தகுதி குறித்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும் 

வயதுவரம்பு: பத்தாம் வகுப்பு அடிப்படையிலான பணிகளுக்கு 18 முதல் 25க்குள்ளும், பிளஸ் 2 அடிப்படையிலான பணிகளுக்கு 18 முதல் 27க்குள்ளும், பட்டபடிப்பு தகுதியலான பணிகளுக்கு 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் மாதம்: 2022 ஆகஸ்ட்

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி,மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக, விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.06.2022

 


Read More »

TN TET Exam 2022 | தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் ஜூலை இறுதிக்குள் நடைபெற வாய்ப்பு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானது (TRB), தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி 6.3 லட்சத்திற்கும் அதிகமானோர் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தேர்வு வருகின்ற ஜூலை மாதம் இறுதிக்குள் நடக்க உள்ளதாக அறிவிப்பு தரப்பட்டுள்ளது.




ஆனால், தேர்வுக்கான தேதிகள் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், தேர்வு நடத்தப்படும் என்கிற அறிவிப்பை மட்டும் தந்துள்ளனர்.பள்ளி, கல்லூரி தேர்வுகள் முடிவதற்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். எனவே இந்த தேர்வுகள் முடிந்ததும் ஜூலை இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்படும்.

தமிழ்நாட்டை சேர்ந்த கல்லூரிகளில் கற்பிப்பதற்கு தகுதி பெற, TN TET என்கிற தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதுவே இதற்கான குறைந்தபட்ச தகுதியாக வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், TN TET தாள் 1'இல் தகுதி பெறுபவர்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்க தகுதியுடையவர்கள் மற்றும் தாள் 2'இல் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிகளுக்கு பரிசீலிக்கப்படுவார்கள்.

ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) 2022 ஆண்டுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள், மார்ச் 14 முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை பெறப்பட்டன. இந்த கால இடைவெளியில், 6.3 லட்சம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இன்று வரை இந்த தேர்வு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. எனினும் சில வட்டாரங்கள் வருகின்ற ஜூலை மாத இறுதிக்குள் தேர்வு நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

அதன்படி, இரண்டு தாள்களிலும் தலா ஒரு மதிப்பெண் கொண்ட 150 மல்டிபிள் சாய்ஸ் (MCQ) கேள்விகள் இடம்பெறும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் இதில் இருக்காது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தகுதி மதிப்பெண் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ஜூலை மாதத்திற்குள் சிபிஎஸ்இ மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (CTET) அறிவிப்பை வெளியிடும். இது ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும். அதே போன்று இந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும். இரண்டாவது அமர்வு டிசம்பரில் நடத்தப்படும். 2021ம் ஆண்டில், சிபிஎஸ்இ மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வானது ஆன்லைனில் நடத்தப்பட்டது. இருப்பினும், தேர்வின் முதல் நாள் அன்று, தேர்வு எழுதியவர்களுக்கு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டது. இதனால் பலரால் தேர்வை சரியாக முடிக்க கூட முடியவில்லை.

மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா சங்கதன், நவோதயா வித்யாலயா சமிதி, மத்திய திபெத்திய பள்ளிகள் மற்றும் சண்டிகர், தாத்ரா & நகர் ஹவேலி, டாமன் & டையூ, அந்தமான் & நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு மற்றும் டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேசம் ஆகிய யூனியன் பிரதேசங்களால் நடத்தப்படும் பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான மதிப்பெண் பொருந்தும். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களைத் தேர்வுசெய்யும் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளிலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
Read More »

6TH STD SOCIAL SCIENCE TET, TNPSC STUDY MATERIALS

1. சமண மதம் எத்தனை  தீர்த்தங்கரர்களை  மையமாகக் கொண்டது- *24*

2. சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரர் - *ரிஷபர்* 

3. சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரர் - *மகாவீரர்*

4. சமணம் என்ற சொல் - *ஜினா  என்ற சமஸ்கிருதச்* சொல்லிலிருந்து பெறப்பட்டது

5. சமணம் என்பதன் பொருள்-   *தன்னையும் வெளி உலகத்தையும் வெல்வது*

6.வர்த்தமானர் என்பதன் பொருள் - *செழிப்பு*

7. மகாவீரர் 12 ஆண்டுகள் கடுமையான தவத்திற்கு பின்னர் இந்த நிலை- *கைவல்ய*




8. திரி ரத்தினங்கள் அல்லது மூன்று ரத்தினங்கள் - *நம்பிக்கை,   நல்லறிவு,  நற்செயல்* 

9. மகாவீரரின் போதனைகளை தொகுத்தவர்-  *கௌதம சுவாமி*

10. மகாவீரரின் போதனைகளின் தொகுப்பு - *ஆகம சித்தாந்தம்*

11. பௌத்த மதத்தை நிறுவியவர்-  *கௌதமபுத்தர்*

12. கௌதம புத்தரின் இயற்பெயர்-  *சித்தார்த்தர்* 






13. கௌதம புத்தர் பிறந்த இடம் - *லும்பினி தோட்டம் நேபாளம்*

14. கௌதம புத்தர் தனது முதல் போதனை சொற்பொழிவு நிகழ்த்திய  இடம் - *சாரநாத்(வாரணாசி)*

15. கௌதம புத்தர் ஆற்றிய முதல் சொற்பொழிவு இவ்வாறு அழைக்கப்படுகிறது - *தர்ம சக்கர பிரவர்தனா  அல்லது தர்ம சக்கரத்தின் பயணம்*
Read More »

6TH STD SOCIAL SCIENCE TET, TNPSC STUDY MATERIALS

1. இந்திய வரலாற்றில் வேதகால காலகட்டம்  *கிமு 1500- 600* வரை 

2. நான்கு வேதங்கள் - *ரிக்,  யஜீர்,  சாம,  அதர்வன* 

3. வேத கால இலக்கியங்களின்  இருபெரும் பிரிவுகள் - *சுருதிகள் ஸ்மிருதிகள்*

4. சுருதி என்பதன் பொருள்- *கேட்டல்( வாய்மொழி வாயிலாக அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லுதல்)*

5. சத்யமேவ ஜெயதே என்ற வாக்கியம் எதிலிருந்து பெறப்பட்டது - *முண்டக உபநிடத்தில்* 

6. சத்யமேவ ஜெயதே என்பதன் பொருள் - *வாய்மையே வெல்லும்*

7. தொடக்க ரிக்வேத கால காலகட்டம் *கிமு 1500- 1000*

8. பின் வேதகால காலகட்டம் *கிமு 1000- 600 வரை* 






9. ரிக்வேத கால அரசியலின் அடிப்படை அலகு - *குலம்*

10. ரிக்வேத கால கட்டங்களில் விவசாய மகசூலில் அல்லது கால்நடைகளில் 1/6 பங்கு வரியாக செலுத்தும் வரி- *பாலி  வரி*

11.  ரிக் வேத கால மக்கள் அறிந்திருந்த உலோகங்கள்- *தங்கம்  (ஹிரண்யா), இரும்பு ( சியாமா) செம்பு( அயாஸ்)*

12. பெருங்கற்காலம் ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது- *Megalithic Age*





13. ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தில் உள்ளது - *தூத்துக்குடி* 

14.  கீழடி எந்த மாவட்டத்தில் உள்ளது - *சிவகங்கை* 

15. வேத கால அரசியல் எதனை அடிப்படையாகக் கொண்டது - *இரத்த உறவு*
Read More »

6TH STD SOCIAL SCIENCE TET AND TNPSC STUDY MATERIALS

1. மெசபடோமியா நாகரிகம் *_கிமு 3500-2000*_ வரை. 

2. சிந்துவெளி நாகரிகம்
 *கிமு 3300- 1900 வரை* 

3. எகிப்து நாகரிகம் *கிமு  3100- 1100* வரை 

4. சீன நாகரிகம் *கிமு 1700- 1122* வரை 

5. நாகரிகம் என்ற சொல் பண்டைய லத்தீன் மொழிச் சொல்லான *சிவிஸ்* என்பதிலிருந்து வந்தது

6.CIVIS என்பதன்பொருள் *நகரம்* 

7. இந்திய தொல்லியல் துறை -ASI(Archaeological survey of india)








8.இந்திய தொல்லியல் துறை அமைந்துள்ள இடம் *புதுதில்லி* 

9. நிலத்தடி ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும் கருவி *காந்தப்புல வருடி* 

10. மனிதனால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட உலோகம் *செம்பு*

11. சிந்துவெளி மக்கள் அறிந்திராதவை *இரும்பு மற்றும் குதிரை* 

12. சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய பயன்படுத்தியவை  *சிவப்புநிற மணிக்கற்கள்*

13. முதல் எழுத்து வடிவத்தை உருவாக்கியவர்கள்  *சுமேரியர்கள்*



Read More »

6TH STD SOCIAL SCIENCE TET AND TNPSC STUDY MATERIALS

1. வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளின் *காலவரிசை பதிவு* 

2. வரலாறு என்ற சொல் கிரேக்கச் சொல்லான *இஸ்டோரியா* என்பதிலிருந்து பெறப்பட்டது

3.  *இஸ்டோரியா* என்பதன் பொருள் விசாரிப்பது மூலம் கற்றல் என்பதாகும். 

4. நாணயங்களைப் பற்றிய படிப்பு *நாணயவியல்* . 

5. எழுத்துப் பொறிப்புகள் பற்றிய படிப்பு *கல்வெட்டியல்* . 

6. பண்டைய இந்திய அரசர்களில் பேரும் புகழும் பெற்ற அரசர் *அசோகர்* . 

7. அசோகர் குறித்த அனைத்து வரலாற்று ஆவணங்களையும் சேகரித்து தொகுத்து நூலாக வெளியிட்ட ஆங்கில எழுத்தாளர் *சார்லஸ்  ஆலன்*

8.The search of India's lost Emperor என்ற நூலின் ஆசிரியர் *சார்லஸ் ஆலன்*






9. மனிதர்கள் மற்றும் அவர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய படிப்பு *மானுடவியல்*

10.Anthropos என்பதன் பொருள் என்பதன் பொருள் *மனிதன்*

11.Logos என்பதன் பொருள் *எண்ணங்கள் அல்லது காரணம்*

12. கிழக்கு ஆப்பிரிக்க பகுதியில் வாழ்ந்த மனித இனம் *அஸ்ட்ரலோபிதிகஸ்*

13. தென் ஆப்பிரிக்க பகுதியில் வாழ்ந்த மனித இனம் *ஹோமோ ஹேபிலிஸ்* 

14. ஆப்பிரிக்க மற்றும் ஆசிய பகுதிகளில் வாழ்ந்த மனித இனம் *ஹோமோ எரக்டஸ்* 

15. ஐரோப்பா மற்றும் ஆசிய பகுதிகளில் வாழ்ந்த மனித இனம் *நியாண்டர்தால்*








16. பிரான்ஸ் பகுதியில் வாழ்ந்த மனிதன் எனும் *குரோமேக்னான்ஸ்*

17.சீனப் பகுதியில் வாழ்ந்த மனிதன் எனும் *பீகிங் மனிதன்*

18. ஆப்பிரிக்கப் பகுதியில் வாழ்ந்த மனித இனம் *ஹோமோ சேப்பியன்ஸ்*

19. Time machine என்பதன் தமிழாக்கம் *கால இயந்திரம்*

20 தான்சானியா எந்த கண்டத்தில் உள்ளது *ஆப்பிரிக்கா*
Read More »
 

Most Reading

Tags

Sidebar One