TN TRB தமிழக மருத்துவத்துறையில் வேலைவாய்ப்பு 2022 – ரூ.1,12,400 வரை சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழ்நாடு மருத்துவ துறையில் Pharmacist (Siddha), Pharmacist ( Ayuveda), Pharmacist ( Unani), Pharmacist (Homoeopathy) ஆகிய துறைகளுக்கு 84 காலியிடங்கள் இருப்பதாக தமிழ்நாடு மருத்துவ துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மருத்துவ துறையில் வேலைவாய்ப்பு:
தமிழ்நாடு மருத்துவ துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப தமிழக அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது மருத்துவ துறையில் 84 காலியிடங்கள் உள்ளன. அதாவது Pharmacist (Siddha) பிரிவில் 83 காலியிடங்கலும், Pharmacist ( Ayuveda) பிரிவில் 06 காலியிடங்களும், Pharmacist ( Unani) பிரிவில் 02 காலியிடங்களும், Pharmacist ( Homoeopathy) பிரிவில் 03 காலியிடங்களும் இருப்பதாக தமிழ்நாடு மருத்துவ துறை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த Pharmacist (Siddha), Pharmacist ( Ayuveda), Pharmacist ( Unani), Pharmacist ( Homoeopathy) துறைகளுக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பணி சம்மந்தப்பட்ட துறையை சார்ந்தவர்கள் இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமல்லாமல் நேர்முக தேர்வின் மூலமாக மட்டுமே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இந்த https://mrb.tn.gov.in இணையதள முகவரிக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல் பொது, BC மற்றும் MBC பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 600 ம், மற்ற பிரிவினருக்கு ரூ. 300 ம் செலுத்த வேண்டும். இந்த காலியிடங்கள் குறித்தான விவரங்களை மேலும் அறிய விரும்பினால் mrb.tn.gov.in அல்லது https://mrb.tn.gov.in/notifications.html என்கிற இணையதள முகவரிக்கு சென்று அறிந்து கொள்ளலாம்.