Search

IAS / IPS முதல்நிலைத் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் குறித்து தலைமைச் செயலாளரின் செய்திக் குறிப்பு!

Sunday, 2 October 2022

 


தமிழக அரசின் அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் , அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையங்கள் , கோயம்புத்தூர் , மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் , தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆகியோருக்கு , 28.05.2023 மத்திய நடைபெற அன்று குடிமைப்பணித் தேர்விற்கு கட்டணமில்லாப் ( ஞாயிற்றுக்கிழமை ) நடத்தும் தேர்வாணையம் பயிற்சியினை அளிக்க உள்ளது . உள்ள சென்னை அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் கட்டணமில்லாமல் தங்கும் வசதி , உணவு , தரமான நூலகம் , காற்றோட்டமுள்ள வகுப்பறைகள் ஆகியவற்றை வழங்குகிறது . இப்பயிற்சி மையம் 225 முழுநேரத் தேர்வர்களையும் , 100 பகுதிநேரத் தேர்வர்களையும் முதல்நிலைப் பயிற்சிக்காக அனுமதிக்கிறது . 

அதே போன்று , அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையங்கள் , கோயம்புத்தூர் , மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் , தலா 100 முழுநேரத் தேர்வர்களை முதல்நிலை தேர்வு பயிற்சிக்காக அனுமதிக்கின்றன . 2023 - ஆம் ஆண்டில் மத்தியக் தேர்வாணையக்குழு ( UPSC ) நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற விரும்பும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com வாயிலாக 07 : 10.2022 முதல் 27.10.2022 வரை விண்ண ப்பிக்கலாம் . இப்பயிற்சி மையத்தில் ஏற்கெனவே முதல்நிலைத் தேர்வுக்கு முழு நேரப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் . மேலும் , விண்ணப்பிக்கும்பட்சத்தில் அவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட மாட்டாது . மேலும் , பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தங்கள் கல்வி மற்றும் வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை மத்திய தேர்வாணையக் குழுவின் இணைய தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் . தகுதியுடைய நபர்கள் 13.11.2022 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.


முதல்நிலைத் தேர்வு பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டு . தெரிவு செய்யப்படும் மாணவ / மாணவியர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி மையங்களில் இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாகப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர் . 2022 , டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.


Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials


No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One