Search

அறிவியல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.10.2022

Wednesday, 5 October 2022

அறிவியல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! - Applications are invited for the post of Scientific Assistant - Last date to apply: 18.10.2022

இந்திய வானிலை ஆய்வுத் துறையில் அமைச்சகம் சாராத அரசிதழ் அல்லாத (பதிவுறா) குரூப் ‘பி’ பணியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Scientific Assistant

மொத்த காலியிடங்கள்: 900




தகுதி: இயற்பியலை ஒரு பாடமாகக் கொண்டு அறிவியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய ஏதாவதொரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18.10.2022 தேதியின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 33 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35க்குள்ளும் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 




தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி, கோவை, திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி, புதுச்சேரி ஆகிய இடங்களில் நடைபெறும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.10.2022

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One