Search

போஸ்ட் ஆபிஸில் 98,000 காலியிடங்கள்: 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்

Thursday, 18 August 2022

 இந்திய அஞ்சல் துறையில் கிட்டத்தட்ட 1 லட்சம் பணியாளர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

கிராம அஞ்சல் பணியாளர்களில் இருந்து தபால்காரர்கள், மெயில்கார்டு, பல்வகைப் பணியாளர்கள் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள்: 98,083


தபால்காரர் பதவிகளில் 58099 பணியிடங்களும், மெயில் கார்டு பதவிகளில் 1445 பணியிடங்களும், பல்வகைப் பணியாளர் பதவிகளில் 37539 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.


இதில் தமிழ்நாடு வட்டத்தின் கீழ், தபால்காரர் பணிகளில் 6110 பேரும்,பல்வகைப் பணியாளர் பணிகளில் 3316 பேரும், மெயில்கார்டு பணிகளில் 128 பேரும் பணியமர்த்தப்பட உள்ளனர்.


அடிப்படை தகுதிகள்: கணினி அறிவு, 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுளது.


இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், குறைந்தபட்சம் 18 வயதுக்கு மேல் இருக்க இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.


தேர்வுப் பாடம், விண்ணப்பக் கட்டணம், தெரிவு முறை, வயது வரம்பு, விண்ணப்பங்கள் சமர்பிக்கப்படும் தேதி உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்படும்.


விண்ணப்பம் செய்வது எப்படி?


விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in என்ற முகவரியின் கீழ் விண்ணப்பிக்கலாம்.


தமிழ் நாடு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும் என்று சேர்க்கவும்


மேலும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் பதிவு செய்யும் விவரங்களுக்கு ஆதாரமாக உரிய ஆவணங்களையும் (சாதி சான்றிதழ், கல்வித் தகுதி, மின்னஞ்சல், புகைப்படம், கையெழுத்து, தொலைபேசி எண்) பதிவேற்றம் செய்ய வேண்டும்.


Click here to join WhatsApp group for Daily employment news 

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One