தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாகவுள்ள ஐந்து (5) அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் நியமிக்கும் பொருட்டு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கீழ்க்காணும் பிரிவுகளை சார்ந்த 18 வயது பூர்த்தியடைந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சம்பள விவரம் : தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.15700 - 58,100/- (Level-1) வரை சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களுக்கு அந்தந்த பிரிவினருக்கு உரிய வயது வரம்பிலிருந்து தளர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்ட எல்லைக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
www.tnsic.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து,
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்,
செயலாளர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம், எண்.19,
அரசு பண்ணை இல்லம். பேர்ன்பேட், நந்தனம், சென்னை-35
என்ற முகவரிக்கு 02.09.2022-க்குள் கிடைக்குமாறு பதிவு தபாலில் அனுப்பப்பட வேண்டும்.
மேற்கண்ட நியமனத்திற்கான நேர்காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இரத்து செய்யவோ, சென்னை, தமிழ்நாடு தகவல் ஆணைய செயலாளர் அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. மேலும், தேவைப்படின் தேர்வர்களுக்கு எழுத்துத் தேர்வும் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்ப படிவம்
பதிவிறக்கம் செய்து இந்த வேலைக்கு தபால் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment