Search

சென்னை ஐஐடியில் பிஎஸ் பட்டப்படிப்பு: 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Tuesday, 2 August 2022

 சென்னை ஐஐடி தனது பி.எஸ்சி., புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் (B.Sc., in Programming and Data Science) பாடத்தை,   நான்காண்டுப் பி.எஸ் பட்டப்படிப்பாக  (BS in Data Science and Applications)  அறிமுகப்படுத்தி உள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு உலகின் முதல் இணையவழி (B.Sc) நிரலாக்கல், தரவு அறிவியலுக்கான இளநிலைப் பட்டப்படிப்பை சென்னை ஐஐடி தொடங்கியது. கேட் மதிப்பெண், வயது, அனுமதிக்கப்பட்ட இடங்கள் உள்ளிட்ட அனைத்து தடைகளையும் நீக்கி, தரமான உயர்கல்வியை படிக்க விரும்பும் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் இந்த பட்டப்படிப்பைத் தொடரலாம். அதன்படி, 10ம்வகுப்பில் ஆங்கிலம் மற்றும் கணிதத்துடன் தேர்ச்சிப் பெற்றவர்கள்,  12ம் வகுப்பை முடித்தவர்கள், கல்லூரிகளில் ஏதேனும் இளநிலைப் படிப்பைத் தொடர்பவர்கள், ஏதேனும் பணிகளில் வேலை செய்பவர்கள் என அனைவரும் இந்த  இணையவழி பட்டப்படிப்பைத் தொடரலாம்.

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப, பல் நுழைவு வெளியேறுதல் சுதந்திரமும் (Multiple Entry Exit options) இந்த பாடத்திட்டத்தில் அளிக்கப்பட்ட்டது.



அதன்படி, அடிப்படை பட்டம் (Foundation programme), டிப்ளமோ பட்டம் (Diploma programme), இளநிலைப் பட்டப்படிப்பு (Degree Programme) என்ற மூன்று வெவ்வேறு நிலைகளிலும் மாணவர்கள் வெளியேறலாம். அவ்வாறு வெளியேறும் மாணவர்களுக்கு சென்னை ஐஐடி-யில் இருந்து   முறையே அடிப்படைச் சான்றிதழ், டிப்ளோமா சான்றிதழ் அல்லது இளநிலைப் பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படும்.

இந்நிலையில், இந்த பி.எஸ்சி., புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் (B.Sc., in Programming and Data Science) பாடத்தை,   நான்காண்டுப் பி.எஸ் பட்டப்படிப்பாக  (BS in Data Science and Applications)  சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், இந்த பி.எஸ். பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனங்கள் அல்லது ஆராய்ச்சிக் கல்வி நிலையங்களில் மாணவர்கள் 8-மாத கால பணிப் பயிற்சியோ (apprenticeship), ஆய்வுத் திட்டமோ (project) மேற்கொள்ள முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 2022-ல் ஆரம்பமாகும் பிஎஸ் பாடத்திட்ட வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க 19 ஆகஸ்ட் 2022 கடைசி நாளாகும். விருப்பமுள்ள மாணவர்கள் https://onlinedegree.iitm.ac.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பப் பதிவு செய்யலாம்.





No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One