Search

TNPSC - தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Saturday, 30 July 2022

 தொழில் ஆலோசகர்,  சமூக அலுவலர் உள்ளிட்ட  பணிகளில் காலியாக உள்ள 16 பணியிடங்களுக்கானதேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


அறிவிப்பு விவரம்: 

தொழில் ஆலோசகர்(மருத்துவக் கல்வித் துறை), சமூக அலுவலர் (தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) பணியிடங்களில் 16 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்கு www.tnpsc.gov.in என்ற இணையவழி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.  இதற்கு வயதுவரம்புகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


தொழில் ஆலோசகர் பதவிக்கு சம்பளம் மாதம் ரூ.36,200 முதல் 1,33,100 வரை வழங்கப்படும். சமூக ஆர்வலர் பதவிக்கு மாதம் ரூ.35,600 முதல் 1,30,800 வரை வழங்கப்படும். தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 26 ஆம் தேதி கடைசி நாளாகும். இணையவழி விண்ணப்பத்தை திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது. 


சமூக அலுவலர் பதவிக்கு கணினி வழித் தேர்வு நவம்பர் 12 ஆம் தேதி காலை மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ளது. சமூகப் பணி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையில், சமூக அலுவலர், தொழில் ஆலோசகர் பதவிகளுக்கான கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை மொழித் தேர்வும் நடத்தப்படும் என்றும்,  தொழில் ஆலோசகர் பதவிக்கு நவம்பர் 13 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறும் என அரசுப்பணியாளர் தேர்வாணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/VOC%20&%20CO%20Tamil.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Read More »

பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை நிரந்தர பணியிடம்

Friday, 29 July 2022

மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள கீழ்காணும் நிரந்தர பணியிடத்தை நேர்முகத் தேர்வு மூலம் நிரப்புவதற்கு தகுதி-வாய்ந்த பணிநாடுநர்களிடமிருந்து...விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Read More »

PGTRB ( 2020 - 2021 ) List of Qualified Teachers ( From Survey )

Wednesday, 27 July 2022

 SSS Academy மூலமாக தற்போது வெளியிடப்பட்ட PGTRB போட்டித்தேர்வுக்கான மதிப்பெண் விவரத்தை தேர்வர்களை பதிவிட செய்து எடுக்கப்பட்ட Survey மூலமாக Economics படத்திற்கான முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளவும்.


PGTRB ( 2020 - 2021 ) - Economics List of Qualified Teachers ( From Survey ) - SSS Academy - Download here
Read More »

TAMILNADU- SI -RESULT-2022

 

TAMILNADU- SI -RESULT-2022


Read More »

கேந்திரிய வித்யாலயாக்களில் 12,000க்கும் மேற்பட்ட காலி பணயிடங்கள் - மத்திய அரசு

Tuesday, 26 July 2022

 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள காலியிடம் குறித்து லோக்சபாவில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, கல்வித் துறை இணை அமைச்சர் ஸ்ரீமதி அன்னபூரணா தேவி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் குறித்து அரசு கவலைப்படுகிறதா? குறிப்பாக தமிழ்நாட்டில்; அப்படியானால் தமிழ்நாட்டில் உள்ள மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இவ்வளவு பெரிய காலியிடங்களை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை, மாநில வாரியாக; இந்தப் பணியிடங்கள் அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நிரப்புவதற்கான செயல்திட்டத்தை அரசாங்கம் சிந்தித்து வருகிறதா என்பதையும் மற்றும் அப்படியானால் அதன் விவரங்கள் மற்றும் இதில் அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக? என நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி, ஓ.பி ரவீந்திரநாத் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த கல்வி அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஸ்ரீமதி அன்னபூரணா தேவி ,

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயாக்களில் 12044 ஆசிரியர் பணியிடங்களும், 1332 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் காலியாக உள்ளன. மாநில யூனியன் பிரதேசம் வாரியாக அனுமதிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கு எதிராக தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் மற்றும் ஒப்பந்த ஆசிரியர்களின் இணைக்கப்பட்டுள்ளன.

Read More »

TNPSC - குரூப் 4 தேர்வு - ஓர் ஆய்வு

Monday, 25 July 2022

 இதோ.. மிகப்பெரிய அளவில் தேர்வு நடத்துவதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொழில்முறை நிபுணத்துவம் மீண்டும் ஒருமுறை ஐயத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. 22 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் - சுமார் 8000 தேர்வு மையங்கள் - கூடுதலாக சுமார் 2,000 சிறப்பு பேருந்துகள் - தேர்வர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத கண்காணிப்பு ஏற்பாடுகள்... தேர்வாணையம், நன்கு திட்டமிட்டு செம்மையாக செயல்பட்டு இருக்கிறது. பாராட்டுகள்.


சில குறைகள் இருக்கத்தான் செய்தன. சில மையங்களில் தேர்வர்கள் உடன் வந்த பெற்றோர் / பாதுகாவலர் காத்திருக்க இடம், குடிநீர் கழிப்பறை வசதிகள் அறவே இல்லை. வண்டிகள் நிறுத்தும் இடமும் போதுமான அளவுக்கு இல்லை; சில மையங்கள் பேருந்துபோக்குவரத்தில் இருந்து மிகவும் தள்ளி, ஒதுக்குப்புறமாக இருந்தன. காலை 9 மணிக்கே மையத்துக்கு வர இயலாமல் சில தேர்வர்கள் தேர்வு எழுத இயலாமல் போயிற்று.


இத்துடன் தேர்வர்கள் எதிர்கொள்ள வேண்டி இருந்த மிக முக்கிய சவால் - ‘இயற்கை அழைப்பு'. காலை 9 முதல் மதியம் 1 வரை நான்கு மணி நேரம் ஒரே இடத்தில் ‘அடைக்கப்பட்டு' இயற்கை அழைப்புகளை சமாளிக்க முடியாமல் அவதிப்பட்டவர்கள் நிலைமை சங்கடம்தான். குறிப்பாக, 'வயது உச்சவரம்பு' இல்லாத இத்தேர்வில், நாற்பதுவயதிற்கு மேற்பட்டோர் கணிசமானஅளவில் தேர்வு எழுத வந்திருக்க வாய்ப்புகள் அதிகம். அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருப்பார்கள். இந்த ‘பிரச்சினை' குறித்துதெளிவான ‘வழிகாட்டு' குறிப்புகள்,தேர்வர்களுக்கு, கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்படலாம்.



ஓர் அம்சத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் - விண்ணப்பித்த தேர்வர்களில் எத்தனை பேர் தேர்வு எழுத வருகிறார்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல. வந்தாலும் வராவிட்டாலும், அத்தனை பேருக்கும்தான், வினாத்தாள் - விடைத்தாள் முதல் தேர்வு மைய இருக்கை வரை தயார் செய்தாக வேண்டும். ஒரே நாளில் ஒரே நேரத்தில் 22 லட்சம் பேரைக் கையாள்வது மிகவும் அசாதாரண பணி. தேர்வு ஏற்பாடுகளில் மிக நேர்த்தியாக செயல்பட்டு இருக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தேசிய அளவில், சர்வதேச அளவில், ‘சிறந்த தேர்வு ஏற்பாட்டு அமைப்பு' என்று அங்கீகரிக்கப்படலாம்; அதற்கு முற்றிலும் தகுதி உடையது. சற்றும் ஐயமில்லை.


இனி, தேர்வுக்குள் நுழைவோம்.


தமிழ்மொழி, பொது அறிவு ஆகிய இரண்டு பிரிவுகளிலும் பரவலாகப் பல கேள்விகள் மிகவும் தரமாக இருந்தன.


இலக்கணக் குறிப்பு - தொடர் வகைகள், பொருத்தமற்ற பெயர்ச் சொற்களைக் கண்டறிதல், பிழைகள் அற்ற, குறிப்பாக சந்திப்பிழை அற்ற தொடர், விடைக்கேற்ற வினா உள்ளிட்ட வழக்கமான கேள்விகள் தேவர்களை ‘அமைதிப்படுத்தி' இருக்கும்.


"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்.." கூறியவர் யார்? ‘‘மன்னனும் மாசறக் கற்றோனும்..’’, ‘‘மதியாதார் முற்றம்..’’ ‘ஆற்றூர்' பேச்சுவழக்கில் எவ்வாறு மருவியுள்ளது? ‘உள்ளங்கை நெல்லிக்கனி போல..' ‘சிலைமேல் எழுத்து போல' உணர்த்துவது என்ன? உள்ளிட்ட சுமார் 40 வினாக்கள் எளிமையோ எளிமை. கிராமப்புறத் தேர்வர்களுக்கு மகிழ்ச்சி தரும்.


‘இடைநிலை' கேள்விகள் நிறைய இருந்தன.


தமிழ், ஆட்சி மொழியாகத் திகழும் நாடுகள் எவை? கவிஞர் மு.மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றுத்தந்த நூல் எது? சரியான இணை: விசும்பு - வானம், மதியம் - நிலவு; நடனக் கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட திருநங்கை; இளம் பெண்களுக்கு திருமண உதவி திட்டம் யாருடைய பெயரில் அரசு வழங்குகிறது? ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தில் உள்ளது?


தேர்வுக்காகச் சற்று ‘மெனக்கெட்டு' இருந்தால், நிச்சயம் விடை அளித்து இருக்க முடியும்.


கடினமான கேள்விகளில் ‘சாமர்த்தியம்' தெரிகிறது.


ஒரு வாக்கியம்: வேலைவாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டு வரப்போகிறது - செயற்கை நுண்ணறிவுக்கு முன்பாக ‘ச்' என்கிற ஒற்று வருமா? ‘செயற்கை நுண்ணறிவு' ஒரு பாடப்பிரிவு என்று கொண்டால் ஒற்று வராது; தனியே ‘செயற்கை' என்று சொல்லாகக் கொண்டால் ஒற்று வரும்! ஆணையம் ஒருவேளை இரண்டு விடைகளையும் ஏற்றுக் கொள்ளலாம்... பார்ப்போம்.


அடுத்ததாக பொது அறிவு! இந்தத் தேர்வைப் பொருத்தவரை இந்தப் பிரிவில்தான், ஆணையம் மிகச்சிறப்பான பாராட்டு பெறுகிறது.


எந்தப் பக்கமும் சாயவில்லை; நேர்த்தியான நடுநிலைக் கேள்விகள். பொது அறிவுப் பிரிவில் ஒரு பொதுநோக்கு தெரிகிறது. குரூப்-4 தேர்வு தானே என்று ஒதுக்கிவிட முடியாத அளவுக்கு சரியான தரம். சபாஷ்!


எபிதீலீயஸ் புற்றுநோய் உருவாவதற்கு என்ன பெயர்? ‘மார்ஸ் மிஷன்' நாடுகள் எவை? ஓரவை ஈரவை சட்டமன்றங்கள், பள்ளிக்கல்வி தொடர்பான விருதுகள், இதர பிற்பட்ட வகுப்பினர் பட்டியலை மாநிலங்கள் தயாரிக்கும் அதிகாரம், கரோனா வைரஸ் சோதனைக் கருவி தொடர்பான வினாக்கள், மிக நிச்சயம், ‘யுபிஎஸ்சி' இன் தரத்துக்கு இணையானவை.


கணிதத்தில் எப்போதும் போல தனிவட்டி - கூட்டுவட்டி, வேலை ஆட்கள் - நாட்கள், மீச்சிறு பொது மடங்கு ஆகிய பகுதிகளில் இருந்து வழக்கமான எளிய கேள்விகள்.


எளிமை, கடினம் இரண்டும் சரி விகிதத்தில் இருந்த பொது அறிவுப் பகுதி, ஆணையத்தின் பொறுப்புணர்வைக் காட்டுகிறது.


இந்தப் பகுதியிலும் ‘சுவாரஸ்யமான' கேள்விகள் இருந்தன. அவற்றில் ஒன்று மட்டும் நிச்சயம் ஒரு 'புதிர்'! (முழுதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை)


'100இல் இருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?'


நிறைவாக, ஒரு கேள்வி மட்டும் மிஞ்சுகிறது.


7300 பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பம்!


இத்தனை லட்சம் பேருக்கும் நாம் என்ன சொல்லப் போகிறோம்? என்ன செய்யப் போகிறோம்?

Read More »

TET - விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதி

Sunday, 24 July 2022

 ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2022-ம் ஆண்டுக்கான, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு(தாள்1, தாள் 2) அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வாயிலாக கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஏப்ரல் 26-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.


மேலும், ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 878 பேரும், தாள் 2-க்கு 4லட்சத்து ஆயிரத்து 886 பேரும் மொத்தம் 6 லட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 மற்றும் தாள் 2-க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு, சில தொழில்நுட்ப காரணங்களால் திருத்தம் மேற்கொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.



தற்போது, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால், ஜூலை 27 ம் தேதி வரை திருத்தம் செய்யஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுஉள்ளது. விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள அளிக்கும் விண்ணப்பங்கள் மீது ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதுஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

TNPSC Group 4 Full Answer Key 2022 by Shankar IAS Academy


TNPSC Group 4 Full Answer Key 2022 by Shankar IAS Academy 

🔖 Tamil 

🔖 General Studies 

🔖 Maths 


 Click here to download pdf file

Read More »

TNPSC தேர்வில் இதுவரைக் கேட்கப்பட்ட 3231 பக்கங்கள் கொண்ட வினாவிடைத் தொகுப்பு

Friday, 22 July 2022

TNPSC தேர்வில் இதுவரைக் கேட்கப்பட்ட 3231 பக்கங்கள் கொண்ட வினாவிடைத் தொகுப்பு 



Read More »

TNPSC - Group 1 Notification - 2022

Wednesday, 20 July 2022

Applications are invited from eligible candidates only through online mode upto 22.08.2022 for direct recruitment to the vacancies in the posts included in Combined Civil Services Examination - I ( Group - I Services )

 TNPSC - Group 1 Notification - Download here....

Read More »

டிஎன்பிஎஸ்சி குருப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு |இந்தியா-2 (இந்திய மாநிலங்கள், முக்கிய நகரங்கள் - அ)

Tuesday, 19 July 2022

1. இந்தியாவில் முதல் இரும்பு தொழிற்சாலை உருவாகிய நகரம் எது?
அ) ரூர்கேலா. ஆ) ஜாம்ஷெட்பூர்
இ) பிலாய். ஈ) தன்பாத்

2. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ள பானிபட் எந்த இந்திய மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப் ஆ) குஜராத்
இ)ஹரியானா ஈ) பீகார்

3. தமிழகத்தின் மீன்பிடித்தொழில் நகரமான நாகப்பட்டிணம் எந்தக் கடல் பகுதியில் அமைந்துள்ளது?
அ) வங்காள விரிகுடா
ஆ) மன்னார் வளைகுடா
இ) இந்து மகா சமுத்திரம்
ஈ) கட்ச் வளைகுடா

4. சாஞ்சி தூபி அமைந்துள்ள இந்திய மாநிலம் எது?
அ) பஞ்சாப் ஆ) மத்திய பிரதேசம்
இ) குஜராத் ஈ) பீகார்

5. மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய வணிகசந்தை நகரம் எது?
அ) போபால். ஆ) உஜ்ஜயினி
இ) இந்தூர். ஈ)ஓங்காரேஸ்வரம்

6. கஜூராஹோ கோயில் எந்த மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப் ஆ) குஜராத்
இ)பீகார். ஈ) மத்திய பிரதேசம்

7. தென்னிந்தியாவின் தலைவாசல் என அழைக்கப்படும் நகரம் எது?
அ) சென்னை ஆ) பெங்களூரு
இ )ஹைதராபாத் ஈ) தூத்துக்குடி

8. பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்க தளங்களுள் ஒன்றான உஜ்ஜயினி நகரம் எந்த இந்திய மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப் ஆ) மத்திய பிரதேசம்
இ)ஹரியானா ஈ) பீகார்

9. தெற்காசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படும் நகரம் எது?
அ) மும்பை ஆ) புனே
இ)சென்னை ஈ) பெங்களூரு

10. கன்ஹா தேசியப் பூங்கா எந்த இந்திய மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப் ஆ) குஜராத்
இ)மத்திய பிரதேசம் ஈ) பீகார்

11. தென்னிந்தியாவின் கலாச்சார தலைநகர் என அழைக்கப்படும் நகரம் எது?
அ) சென்னை ஆ) பெங்களூரு
இ) ஹைதராபாத் ஈ) திருப்பதி

12. குணோ வனவிலங்குகள் சரணாலயம் எந்த இந்திய மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப் ஆ) குஜராத்
இ)மத்திய பிரதேசம் ஈ) பீகார்

13. தென்னிந்தியாவின் நெசவுத்தொழில் தலைநகரான (மான்செஸ்டர்) எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?

அ) தாமிரபரணி ஆ) பவானி
இ) நொய்யல் ஈ) காவிரி

14. செம்பு மற்றும் வைர உற்பத்தியில் முதன்மையாக உள்ள இந்திய மாநிலம் எது?
அ) பஞ்சாப் ஆ)மத்திய பிரதேசம்
இ)ஹரியானா ஈ) பீகார்

15. நீராறு அணை தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உள்ளது?
அ) நீலகிரி ஆ) தஞ்சாவூர்
இ) மதுரை ஈ) கோயம்புத்தூர்

16. சர்ஜு ஆற்றின் துணை ஆறான கோமதி எந்த இந்திய மாநிலத்தில் பாய்கிறது?
அ) உத்தராகண்ட் ஆ) குஜராத்
இ)ஹரியானா ஈ) பீகார்

17. சூரத், பரூச் ஆகிய பன்னாட்டு வணிக நகரங்கள் எந்த இந்திய மாநிலத்தில் உள்ளன?
அ) பஞ்சாப் ஆ) குஜராத்
இ)மகாராஷ்டிரா ஈ) பீகார்

18. ஜார்க்கண்ட் என்பதன் பொருள் யாது?
அ) மக்கள் கூட்டம் ஆ) நீர்ப்பகுதி
இ) காடுகள் நிறைந்த நிலப்பரப்பு ஈ) மலைகள் நிறைந்த பகுதி

19. இந்திய அரசின் திட்டக்குழு பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக அறிவித்துள்ள டாங் மாவட்டம் எந்த இந்திய மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப் ஆ) பீகார்
இ)ஹரியானா ஈ) குஜராத்

20. கோனாரக் - சூரிய கோயில் எந்த மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப் ஆ) மத்திய பிரதேசம்
இ) ஒடிசா ஈ) பீகார்

Answer :

1. ஆ) ஜாம்ஷெட்பூர் (ஜார்க்கண்ட்)

2. இ. ஹரியானா

3. அ. வங்காள விரிகுடா

4. ஆ. மத்திய பிரதேசம்

5. இ. இந்தூர்

6. ஈ. மத்தியப பிரதேசம்

7. அ. சென்னை

8. ஆ. மத்திய பிரதேசம்

9. இ. சென்னை

10. இ. மத்திய பிரதேசம்

11. அ. சென்னை

12. இ. மத்திய பிரதேசம்

13. இ. நொய்யல் (கோயம்புத்தூர்)

14. ஆ. மத்திய பிரதேசம்

15. ஈ. கோயம்புத்தூர் (பரம்பிக்குளம் ஆழியாறு பாசனதிட்டம்)

16. அ. உத்தராகண்ட்

17. ஆ. குஜராத்

18. இ. காடுகளைக்கொண்ட நிலப்பரப்பு

19. ஈ. குஜராத்

20. இ. ஒடிசா


Read More »

டிஎன்பிஎஸ்சி குருப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு- Part 2 இந்தியா-1 (குடியரசுத் தலைவர்கள், துணைக்குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள்)

16. சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்த முதல் இந்தியர் யார்?

அ) வல்லபபாய் படேல்

ஆ) சி. ராஜகோபாலாச்சாரி

இ) மவுன்ட் பேட்டன் பிரபு

ஈ) ராஜேந்திர பிரசாத்

17. ஐ.கே. குஜ்ரால் தனது பிரதம மந்திரி பதவியை இராஜினாமா செய்தபோது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் யார்?

அ) நரசிம்ம ராவ்

ஆ) பிரம்மானந்த ரெட்டி

இ) சீத்தாராம் கேசரி

ஈ) விஜய பாஸ்கர் ரெட்டி

18. இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத வேறு கட்சி சார்ந்து மூன்று முறை பதவி வகித்த பிரதமர் யார்?

அ) வி.பி.சிங்

ஆ) நரேந்திர மோடி

இ) அ.பி.வாஜ்பாய்

ஈ) ஐ.கே.குஜ்ரால்

19. இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக செயல்பட்டு பின்னர் இந்தியாவின் பிரதமராக உயர்ந்தவர் யார்?

அ) ஐ.கே.குஜ்ரால்

ஆ) மன்மோகன் சிங்
இ)
வி.பி.சிங்

ஈ) முகமது இதயத்துல்லா

20. இந்தியாவில் சமாஜ்வாடி ஜனதா கட்சி சார்பில் வாக்கெடுப்பில் காங்கிரஸ் ஆதரவில் வெற்றி பெற்று பிரதமராக பதவி வகித்தவர் யார்?

அ) மொரார்ஜி தேசாய்

ஆ) தேவ கௌடா

இ) சந்திரசேகர்

ஈ) ஐ.கே.குஜ்ரால்

21. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?

அ) பிரதீபா பாட்டில்

ஆ) இந்திரா காந்தி

இ) சோனியா காந்தி

ஈ) கமலா நேரு

22. இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பெயர் யாது?

அ) பிரதீபா பாட்டில்
ஆ) இந்திராகாந்தி

இ) சோனியா காந்தி

ஈ) கமலா நேரு

23. அணிசேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான இந்தியப் பிரதமர் யார்?

அ) ஜவாஹர்லால் நேரு

ஆ) லால்பகதூர் சாஸ்திரி
இ) இந்திராகாந்தி

ஈ) மொரார்ஜி தேசாய்

24. ஆண்டுதோறும் செம்டம்பர் ஐந்தாம் நாள் யாருடைய நினைவாக ஆசிரியர் தினம் கொண்டாடப் படுகிறது?

அ) ஜவாஹர்லால் நேரு

ஆ) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

இ) ஜாகீர் உசேன்

ஈ) மதன் மோகன் மாளவியா

25. ஆண்டுதோறும் நவம்பர் பதினான்காம் நாள் யாருடைய நினைவாக குழந்தைகள் தினம் கொண்டாடப் படுகிறது?

அ) ஜவாஹர்லால் நேரு

ஆ) ராதாகிருஷ்ணன்

இ) ஜாகீர் உசேன்

ஈ) மதன் மோகன் மாளவியா

26. எந்த ஆண்டு ஏவுகணை மனிதன் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். அ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது?

அ) 1995
ஆ) 1996

இ) 1997
ஈ) 1998


27. 1963 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்று பின்னாளில் இந்திய குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் யார்?

அ) ஜாகீர் உசேன்

ஆ) ஜெயில் சிங்

இ) சங்கர் தயாள் சர்மா

ஈ) அ.ப.ஜெ.அப்துல் கலாம்

28. சிறப்பு வாய்ந்த தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியப் பிரதமர் யார்?

அ) ஜவாஹர்லால் நேரு

ஆ) லால்பகதூர் சாஸ்திரி

இ) இந்திரா காந்தி

ஈ) மொரார்ஜி தேசாய்

29. ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதல்வராக இருந்து பின்னர் இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் யார்?

அ) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

ஆ) நீலம் சஞ்சீவி ரெட்டி

இ) வி.வி.கிரி

ஈ) வெங்கையா நாயுடு

30. இந்தியாவில் மைனாரிட்டி அரசுடன் ஐந்தாண்டு பதவிக் காலம் முழுமைக்கும் (அடுத்த பொதுத்தேர்தல் வரை) பிரதமராக இருந்தவர் யார்?

அ) இந்திரா காந்தி

ஆ) மொரார்ஜி தேசாய்

இ) நரசிம்ம ராவ்

ஈ) வி.பி.சிங்

Answer 
16. ஆ. சி.ராஜகோபாலாச்சாரி

17. இ. சீத்தாராம் கேசரி

18. இ. அ.பி.வாஜ்பாய்

19. ஆ. டாக்டர் மன்மோகன் சிங்

20. இ. சந்திரசேகர்

21. ஆ. இந்திராகாந்தி

22. அ. பிரதீபா பாட்டீல்

23. அ. ஜவாஹர்லால் நேரு

24. ஆ. டாக்டர் ராதாகிருஷ்ணன்

25. அ. பண்டித ஜவாஹர்லால் நேரு

26. இ. 1997

27. அ. டாக்டர் ஜாகீர் உசேன்

28. ஆ. லால் பகதூர் சாஸ்திரி

29. ஆ. நீலம் சஞ்சீவி ரெட்டி

30. இ. நரசிம்ம ராவ்

Part 1  : இந்தியா-1 (குடியரசுத் தலைவர்கள், துணைக்குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள்) - Question and Answer 

Read More »

டிஎன்பிஎஸ்சி குருப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு | இந்தியா-1 (குடியரசுத் தலைவர்கள், துணைக்குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள்)

1. இந்தியாவில் முதன்முதலில் தொடர்ந்து இரண்டு முறை குடியரசுத்தலைவராக பதவி வகித்தவர் யார்?
அ) ராஜேந்திர பிரசாத்
ஆ) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
இ) வெங்கட்ராமன்
ஈ) ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்

2. சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக பணியாற்றியவரின் பெயர் யாது?
அ) வல்லபபாய் படேல்
ஆ) ஆர்.கே. சண்முகம் செட்டியார்
இ) சி. சுப்ரமணியம்
ஈ) டி.டி.கே. கிருஷ்ணமாச்சாரி

3. இந்தியாவில் முதன்முதலாக தனது பிரதமர் பதவியை பதவிக்காலம் முடியும் முன்னரே ராஜினாமா செய்தவர் யார்?
அ) ஜவாஹர்லால் நேரு
ஆ) இந்திரா காந்தி
இ) மொரார்ஜி தேசாய்
ஈ) லால் பகதூர் சாஸ்திரி

4. இந்தியாவில் தனது பிரதமர் பதவிக் காலத்தில் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கமுடியாமல் போன முதல் பிரதமர் யார்?
அ) ஐ.கே. குஜ்ரால்
ஆ) சந்திரசேகர்
இ) தேவகௌடா
ஈ) சரண்சிங்

5. சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக இடைக்கால பிரதமராக பதவி வகித்தவர் யார்?
அ) குல்ஜாரிலால் நந்தா
ஆ) வல்லபபாய் படேல்
இ) லால்பகதூர் சாஸ்திரி
ஈ) இந்திரா காந்தி

6. காங்கிரஸ் கட்சியில் இல்லாதவர்களில், தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்த முதல் பிரதமர் யார்?
அ) மொரார்ஜி தேசாய்
ஆ) நரசிம்ம ராவ்
இ)அ.பி. வாஜ்பாய்
ஈ) வி.பி. சிங்

7. சுதந்திர இந்தியாவின் முதல் இளம் பிரதமர் யார்?
அ) ஜவாஹர்லால் நேரு
ஆ) இந்திரா காந்தி
இ) ராஜீவ் காந்தி
ஈ) வி.பி.சிங்

8. அறுதிப் பெரும்பான்மை ஆதரவு இல்லாமல் 13 நாட்களில் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிரதமர் யார்?
அ) இந்திராகாந்தி
ஆ) சந்திரசேகர்
இ) ஐ.கே.குஜ்ரால்
ஈ) அ.பி.வாஜ்பாய்

9. இந்தியாவில் முதன்முதலில் துணைப் பிரதமராக பதவி வகித்தவர் யார்?
அ) வல்லபபாய் படேல்
ஆ) சரண் சிங்
இ) தேவிலால்
ஈ) லால் கிருஷ்ண அத்வானி

10. இந்தியாவில் அரசமைப்பு 352 விதியின்படி 1975 ஆம் வருட நெருக்கடிநிலை பிரகடனத்தின் போது குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் யார்?
அ) வெங்கட்ராமன்
ஆ) ஜாகீர் உசேன்
இ) பக்ருதீன் அலி அகமது
ஈ) ஜெயில் சிங்

11. சுதந்திர இந்தியாவில் இருமுறை இடைக்கால பிரதமராக பதவி வகித்தவர் யார்?
அ) குல்ஜாரிலால் நந்தா
ஆ) வல்லபபாய் படேல்
இ) லால்பகதூர் சாஸ்திரி
ஈ) இந்திரா காந்தி

12. சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக பணியாற்றியவரின் பெயர் யாது?
அ) வல்லபபாய் படேல்
ஆ) ஆர்.கே. சண்முகம் செட்டியார்
இ) சி. சுப்ரமணியம்
ஈ) டி.டி.கே. கிருஷ்ணமாச்சாரி

13. இந்தியாவில் முதன் முதலில் இருமுறை தொடர்ந்து துணைக் குடியரசுத்தலைவராக பதவி வகித்தவர் யார்?
அ) வி.வி.கிரி
ஆ) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
இ) சங்கர் தயாள் சர்மா
ஈ) இதயத்துல்லா

14. உச்ச நீதிமன்ற தலைமை நீதீபதியாகவும், துணைக்குடியரசுத் தலைவராகவும், தற்காலிக குடியரசுத் தலைவராகவும் பணியாற்றியவர் யார்?
அ) ஜாகீர் உசேன்
ஆ) ஜாட்டி
இ) சங்கர் தயாள் சர்மா
ஈ) இதயத்துல்லா

15. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தவர் யார்?
அ) வல்லபபாய் படேல்
ஆ) சி. ராஜகோபாலாச்சாரி
இ) மவுண்ட் பேட்டன் பிரபு
ஈ) ராஜேந்திர பிரசாத்

Answer 

1. அ. டாக்டர் ராஜேந்திர பிரசாத்

2. ஆ. R. K. சண்முகம் செட்டியார்

3. இ. மொரார்ஜி தேசாய்

4. ஈ. சரண் சிங்

5. அ. குல்ஜாரிலால் நந்தா

6. இ. அ.பி. வாஜ்பாய்

7. இ. ராஜீவ் காந்தி

8. ஈ. அ.பி. வாஜ்பாய்

9. அ. சர்தார் வல்லபபாய் படேல்

10. இ. பக்ருதீன் அலி அகமது

11. அ. குல்ஜாரிலால் நந்தா

12. அ. சர்தார் வல்லபபாய் படேல்

13. ஆ. சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன்

14. ஈ. முகம்மது இதயத்துல்லா

15. இ. மவுண்ட் பேட்டன் பிரபு

*டிஎன்பிஎஸ்சி குருப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு*

*Topic:Unit 9- TamilNadu*

👉🏻Part 1 :Click here to view  

👉🏻Part 2 : Click here to view 


Read More »
 

Most Reading

Tags

Sidebar One