Search

அனைத்து மாநில அரசுப் பணிகளும் இனி TNPSC மூலம் தேர்வுகள் வைத்து நிரப்பப்படும் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்..

Friday, 7 January 2022

அனைத்து அவகையான மாநில அரசுப் பணியிடங்களும் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.



சட்டப்பேரவையில் 2021- 22ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து பேசிய அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாக தேர்வுகள் நடத்தி நிரப்பப்பட்டு வருகின்றன. குரூப் 1, குரூப் 2 , 2A, குரூப் 4 , விஏஓ என குரூப் 8 வரை தமிழகத்தில் பல்வேறு படிநிலைகளில் உள்ள அரசுப் பணிகள், தேர்வுகள் நடத்தி அதன் மூலம் நிரப்பப்படுகின்றன. தேர்வாணையம் மூலம் அறிவிப்புகள் வெளியிடப்படுவதைத் தொடர்ந்து, தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து அவர்களுக்கு போட்டித்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. இருப்பினும் ஆவின், போக்குவரத்துக் கழகம், சத்துணவு பொருப்பாளர்கள் உள்ளிட்ட அரசுப் பணிகள் தேர்வுகள் இன்றி நிரப்பப்படுகின்றன.


இந்நிலையில் தற்போது, ஆவின் நிறுவனம், அரசுப் போக்குவரத்துக் கழக பணிகள் உள்ளிட்ட அனைத்து மாநில அரசுப் பணிகளுக்கு இனி TNPSC மூலம் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், தேர்வு அடிப்படையிலேயே இனி அந்தப் பணிகள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்திருக்கிறார். மேலும் இதுகுறித்த மசோதா விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


தமிழகத்தில் கொரொனா பரவல் காராணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படவில்லை. இதனைத் தொடர்ந்து நடப்பாண்டில் (2022) போட்டி தேர்வுகள் நடத்தப்படும் என தேவாயணையம் அறிவித்தது. மேலும் தமிழ் மொழித்தாளில் 40% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 100% தமிழர்களுக்கே முன்னுரிமை, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என பல்வேறு அதிரடி அறிவிப்புகளை தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One