Search

போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்காக கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை ஏற்படுத்தி பாடங்கள் கற்பிக்கப்படும் : தமிழக அரசு

Monday, 24 January 2022

போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்காக கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை அமைப்பது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


டிஎன்பிஎஸ்சி மற்றும் இதர போட்டி தேர்வுகளுக்கு தயாராகுவோருக்காக கல்வி தொலைக்காட்சியில் தனி அலைவரிசை உருவாக்கப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்படும் என கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


அதில்+, 'ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்திய குடிமைப் பணித் தேர்வுகள், இந்திய பொறியியல் பணி தேர்வுகள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகள் , staff selection commission நடத்தும் போட்டித் தேர்வுகள், வங்கித் தேர்வுகள், ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள் என பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் போட்டித்தேர்வு ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் கல்வித் தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுக்கு என்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் தனி அலைவரிசை ஏற்படுத்தி போட்டித் தேர்வுகளுக்கான பாடங்கள் ஒளிபரப்பப்படும். இதற்காக 50 லட்சம் ரூபாய் செலவிடப்படும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One