Search

தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதி: அரசாணை வெளியீடு.!

Friday, 19 November 2021

 கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நோய்த்தொற்று தாக்கமானது படிப்படியாக குறைந்து கொண்டே இருக்கும் இந்த நிலையில், தமிழகத்தில் இருக்கக்கூடிய பொது இடங்களாக கருதக்கூடிய திரையரங்குகள், வணிக வளாகங்கள், கோவில்கள், பள்ளி, கல்லூரிகளில் பொதுமக்கள், அந்த நிறுவனத்துக்கு செல்லக்கூடிய நபர்கள் யாராக இருந்தாலும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டுமென்று, தற்போது பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக இதுவரை 75 சதவீத குறைவான நபர்களே முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாகவும், அதில், 36 சதவீத உட்பட்டோர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த இருக்கிறார் என்றும், இதன் காரணமாக இந்த மாதம் நவம்பர் மாத முடிவில் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கானது சுகாதாரத்துறை தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய பொது இடங்களான திரையரங்குகள், வணிக வளாகங்கள், கோவில்கள், பள்ளி, கல்லூரிகள் போன்ற இடங்களில் பொதுமக்கள் செல்லும்போது இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும்.

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். இல்லை எனில் அந்த பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்கள் போன்றவர்களின் உரிமையாளர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் தற்போது சுற்றறிக்கை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Read More »

பள்ளிகளில் பாலியல் டார்ச்சரா? எண் 14417-ல் புகார் அளிக்கலாம் .. தமிழக அரசு அதிரடி .!!

 பள்ளிகளில் பாலியல் ரீதியான புகார்கள் வரும்போது பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படும் என நிர்வாகம் அதை மூடி மறைக்க முயற்சி செய்யக்கூடாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான சர்வதேச வன்முறை தடுப்பு நாளை முன்னிட்டு ஆசிரியர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி பணிமனையினை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சியில் ஆரம்பித்துள்ள இந்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறையை மற்ற மாவட்டங்களுக்கும் எடுத்துச்செல்ல உள்ளோம் என்றார்.

மேலும் பள்ளி மாணவர்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க அறிவிக்கப்பட்டுள்ள உதவி எண் 14417 வரும் காலங்களில் பாட புத்தகத்தின் முதல் பக்கத்தில் அச்சடிக்க திட்டமிட்டுள்ளோம் எனவும், மாணவர்கள் எந்த எண்ணை புகார் கொண்டு, புகார் அளிக்க ஒருங்கிணைந்த புகார் மையம் செயல்படுகிறது எனவும், இதில் வரும் புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.

Read More »

கனமழை காரணமாக இன்று (20.11.21 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

1. திருப்பத்தூர் ( பள்ளி , கல்லூரி ) 

2. வேலூர் ( பள்ளி, கல்லூரி )

3. ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி )

4. காஞ்சிபுரத்தில் ( பள்ளி, கல்லூரி )

5. செங்கல்பட்டு ( பள்ளி மட்டும்) 

6. விழுப்புரம்  ( பள்ளி, கல்லூரி )








7. கடலூர்  ( பள்ளி மட்டும்) 

8. கள்ளகுறிச்சி   ( பள்ளி, கல்லூரி )

9. திருவள்ளூர்  ( பள்ளி மட்டும்) 

10. திருவண்ணாமலை   ( பள்ளி மட்டும்

Read More »
 

Most Reading

Tags

Sidebar One