Search

தமிழகத்தில் பொதுத்தோவுகள் தள்ளிப்போக வாய்ப்பு.!

Thursday, 18 November 2021

 தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான பாடங்களை முடிப்பதற்காக பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோவுகளை வரும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தாமல், மே முதல் வாரத்தில் நடத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறாமல் இருந்தன. ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஜூன் மாதத்தில் வழக்கமாகப் பள்ளிகள் திறக்கப்படும். கரோனா இரண்டாவது அலையின் காரணமாக நிகழ் கல்வியாண்டிற்கான வகுப்புகள் இரு கட்டங்களாகத் திறக்கப்பட்டன.

ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரை கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதியிலிருந்தும், அடுத்தகட்டமாக ஒன்று முதல் 8-ஆம் வகுப்புகள் வரை நவம்பா் 1-ஆம் தேதியிலிருந்தும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

தற்போது வடகிழக்குப் பருவமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, தொடா்ச்சியாக வகுப்புகளை நடத்த இயலாததால், மாணவா்களுக்குப் பாடங்களை முழுமையாக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நிகழ் கல்வியாண்டுக்கான பொதுத் தோவுகளை மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை அரசுத் தோவுத் துறை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மாணவா்களுக்கு உரிய பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப் போதுமான கால அவகாசம் இல்லை என கூறப்படுகிறது.

எனவே, மாணவா்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோவுக்குத் தயாராவதற்கு வசதியாக இரண்டு மாதங்கள் தள்ளிவைத்து பொதுத்தோவு நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மாா்ச், ஏப்ரல் மாதங்களுக்கு பதிலாக, மே மாதம் முதல் வாரத்தில் பொதுத்தோவை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More »

கனமழை - இன்று (19.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

கனமழை காரணமாக இன்று  (19.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.



1)திருப்பத்தூர் -பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


2)சென்னை- பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


3)வேலூர்-  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.


4) திருவள்ளூர் -பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


5)ராணிப்பேட்டை - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை







6)காஞ்சிபுரம் -மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


7)செங்கல்பட்டு -மாவட்ட  பள்ளிகளுக்கு  விடுமுறை. 


8) விழுப்புரம் -மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.


9)தருமபுரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை


10)கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை 

11) கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


12) பெரம்பலூர் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 

13) நீலகிரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

14) சேலம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


15)அரியலூர் மாவட்டத்தில் நாளை(19.11.2021) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

16)கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை(19.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.





Read More »
 

Most Reading

Tags

Sidebar One