Search

பள்ளி நேரத்தில் வெளியே சென்ற சிறுவன்! எதிரே வந்து 'ஷாக்' கொடுத்த உதயநிதி, கல்வி அமைச்சர்.!

Tuesday, 16 November 2021

 பள்ளி நேரத்தில் வெளியே சென்ற சிறுவனுக்கு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதியும் எதிரே வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

அவர்களை சில நொடி ஏற இறங்கப்பார்த்த சிறுவன் மீண்டும் பள்ளிக்கு செல்கிறான். இதுதொடர்பாக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.ராஜா ட்விட்டரில் பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் கடந்த 1-ம்தேதி திறக்கப்பட்டன. இதற்கிடையே நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி, கோவை ஆனைமலை அருகே படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தார். அப்போது, அவரும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், ஆனை மலை அருகேயுள்ள பெத்தநாயக்கனூர் பள்ளியை பார்வையிட சென்றனர்.

பள்ளிக்கூட வாசல் அருகே இருவரும் வந்து கொண்டிருந்தனர். அப்போது வெளியே செல்வதற்காக வந்த சிறுவன், இருவரையும் பார்த்து திரும்பி பள்ளியை நோக்கி சிறிது தூரம் ஓடினான்.



அவனிடம், 'உன்னைய பார்க்கத்தான் உதயநிதி வந்துள்ளார்' என்று அமைச்சர் கூற, சிறுவன் அதைக் கேட்டு விட்டு பள்ளிக்குள் சென்றான்.



இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. மீம் கிரியேட்டர்களிடம் சிக்கிய இந்த வீடியோவும், ஃபோட்டோக்களும் பெரும்பாலான வாட்ஸ்ஆப் குரூப்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதாவது 'ஸ்கூலை கட் அடிக்க முயன்ற சிறுவன், கல்வித்துறை அமைச்சரிடமே சிக்கினான்' என்ற ரீதியில் மீம்ஸ்கள் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில், மீம் வீடியோவை வெளியிட்டுள்ள மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, மாணவர்கள் சார்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கிண்டலாக கூறியுள்ளார்.




இந்த வீடியோவும், அதற்கு ட்விட்டர் பயனாளர்களின் கமென்ட்டுகளும் ரசிக்கும்படி உள்ளன.




சிறுவன் பள்ளியை விட்டு வெளியே செல்லும்போது அமைச்சரின் கண்ணில் பட்டுள்ளான். ஆனால் அவன் கட் அடித்தான் என்பது உறுதி செய்யப்படவில்லை. ஒருவேளை, ஆசிரியரிடம் அனுமதி பெற்றும் கூட வீட்டிற்கு கிளம்பியிருக்கலாம். மீம்ஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பொய்யாக இருந்து, அதனால் சிறுவனும், அவனது குடும்பத்தாரும் வருத்தப்பட்டிருப்பார்கள் என்றால் அதற்கு சமூகம்தான் பொறுப்பு.

Read More »
 

Most Reading

Tags

Sidebar One