Search

போட்டித் தேர்வு எழுதப்போகிறீர்களா?

Monday, 18 October 2021

போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்திக் கொள்ளும்போது என்னென்ன முறைகளைப் பின்பற்றுவது?

படிக்கும்போது நேரத்தை எவ்வாறு பயனுள்ள முறையில் நிர்வகிப்பது என்பதற்கான வழி முறைகள்....

தேர்வுகளுக்குத் தயாராகும்போது, நேரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் இருந்து, நமது வெற்றிக் கான பாதை தொடங்குகிறது. எனவே நேர மேலாண்மை குறித்த புரிதல் வேண்டும். இதற்கு முன்கூட்டியே திட்டமிட வேண்டும். 24 மணி நேரத்தில், நாம் செய்யும் அன்றாட வேலைகள் அனைத்தையும் குறித்த ஒரு அட்டவணையைத் தயாரித்துக் கொள்வது சிறந்தது. விளையாட்டு, உறக்கம், உணவு இடைவேளை, பொழுதுபோக்கு என எல்லாவற்றுக்கும் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதைக் கணக்கிடுதல் வேண்டும். நேரத்தைத் தேவையில்லாமல் எதில் செலவிடுகிறோம் என்பதைக் கண்டறிந்து, பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்தால் வீணாகும் நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.




பிடித்த துறை எது? என்பதை முதலில் தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்றவாறு போட்டித் தேர்வுகளைத் தேர்வு செய்ய வேண்டும். தேர்வு அறிவித்த பின்பு படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடாமல், தினசரி படிப்பதை வழக்கமாக வைத்திருத்தல் அவசியம். எல்லோருக்கும் ஒரே மாதிரியான மனநிலை அமைந்து விடுவதில்லை. காலை, மாலை, இரவு என ஒவ்வொருவருக்கும் சுறுசுறுப்பாக இருக்கும் நேரம் மாறுபடும். எனவே நம் மனநிலைக்கேற்றவாறு படிக்கும் நேரத்தை ஒதுக்கித் திட்டமிடுதல் வேண்டும். சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குக் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவதும், நேரத்தைச் சேமிக்க சிறந்த வழியாகும்.


ஒரு நாள் முழுவதும். ஒரே பாடத்தை படிக்காமல் பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறு வெவ்வேறு பாடங்களுக்கு நேரத்தை வரையறை செய்து கொள்ளுதல் சிறந்தது. குறிப்பிட்ட இடைவெளியில் சிறு ஓய்வு எடுத்துக் கொள்வது, மூளை புத்துணர்வாகச் செயல்பட உதவும். படிக்கும்பொழுது கவனச்சிதறல் ஏற்படாத வகையில், இடத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.

தேர்வு குறித்த பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி செய்தித்தாள்கள், புத்தகங்கள் படிப்பதற்கும் நேரத்தை ஒதுக்க வேண்டும். நூலகங்களைப் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். எவ்வளவு நேரம் படிப்பிற்காகச் செலவிடுகிறோம் என்பதைவிட, எவ்வளவு தெளிவாகப் படிக்கிறோம் என்பது முக்கியமானது. குறிப்பிட்ட நேரம் செலவிட்டாலும், மனதில் குழப்பங்களுக்கும், கவலைகளுக்கும் இடம் தராமல் முழுக் கவனத்தோடு படிக்க வேண்டும்.



வாரம் ஒருமுறை நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது. இதன் மூலம் எவ்வாறு நம்மைத் தயார்படுத்தி வைத்து இருக்கிறோம் என்பதை தெரிந்துகொள்ள முடியும். இது எந்தப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை கணிக்கவும் உதவும். புதிதாகத் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் அடிப்படையான விதிகள், தகவல்களைப் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும். போட்டித்தேர்வுகள் என்றாலே பலரும் மனரீதியாகப் பதற்றம் கொள்வார்கள். அதைத் தவிர்த்து மனதளவில் தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் இருப்பது முக்கியமானது.
Read More »

TRB - ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டுகள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.

ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டுகள் நீட்டித்து உத்தரவு - இது 31.12.2022 வரை வெளியாகும் அறிவிப்புகளுக்கு  மட்டுமே பொருந்தும்!








ஆணை :


1. மேலே ஒன்று முதல் மூன்று வரையில் படிக்கப்பட்ட அரசாணைகளில் முறையே தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் , தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகளை மறுவெளியீடு செய்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன . அவ்வரசாணைகளில் வெளியிடப்பட்ட சிறப்பு விதிகளில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் , ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40 வயது என்றும் , இதர பிரிவினர்களுக்கு 45 வயது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


 2. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கையில் , ஆசிரிய வெளியிடப்பட்ட 09.09.2021 நாளிட்ட பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பு மேற்காணும் அரசாணைகளில் நிர்ணயிக்கப்பட்டவாறு பொதுப் பிரிவினருக்கு 40 எனவும் , இதர பிரிவினருக்கு 45 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.





3. அரசாணை ( நிலை ) எண் .91 , மனிதவள மேலாண்மைத் ( எஸ் ) துறை , நாள் 13.09.2021 ல் , அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பு , தற்போதுள்ள 30 ஆண்டுகளிலிருந்து 32 ஆண்டுகளாக உயர்த்தியும் , அதிகபட்ச வயது உச்ச வரம்பினைக் கொண்டுள்ள பதவிகளைப் பொறுத்த வரையில் , தொடர்புடைய பணி விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது உச்ச வரம்பு மேலும் இரண்டு ஆண்டுகள் உயர்த்தியும் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் , அதனடிப்படையில் தொடர்புடைய பணி விதிகளுக்கு உரிய திருத்தம் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது . 


4. மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் , பள்ளிக் கல்வி ஆணையர் ஆசிரியர் பணிக்கான பணிநாடுநர்கள் ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு எழுத காத்திருக்கும் நிலையில் , கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்று காரணமாக எவ்வித நேரடி நியமனத்திற்கான அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை எனவும் , இந்நிலையில் ஆசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்ச வயது வரம்பினை அவர்கள் கடந்து விட்ட நிலையில் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் வெளியிடப்பட்ட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என பணிநாடுநர்கள் மனு அளித்துள்ளனர் 61 GOT தெரிவித்துள்ளார் . எனவே , ஆசிரியர் பணிநாடுநர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி விதிகள் , தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிவிதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி விதிகளில் , ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 40 லிருந்து 45 ஆகவும் , இதரப் பிரிவினருக்கு 45 லிருந்து 50 ஆகவும் , 31.12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயித்து ஆணைவழங்கிட பள்ளிக் கல்வி ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.


5. பள்ளிக் கல்வி ஆணையரின் கருத்துருவினை அரசு ஆய்வு செய்து பின்வருமாறு ஆணையிடுகிறது : 



( i ) தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் , தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் ஆகியவற்றில் முறையே வயது வரம்பிற்கான விதி எண் .6 ( a ) , 5 ( a ) மற்றும் 6 ல் நிர்ணயிக்கப்பட்டுள்ள , ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக உச்ச வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 40 - லிருந்து 45 - ஆகவும் , இதரப் பிரிவினருக்கு 45 - லிருந்து 50 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

( ii ) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு பொருந்தும்.

 ( iii ) இவ்வாறு உயர்த்தப்படும் உச்ச வயது வரம்பினை 31.12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயிக்கப்படுகிறது . இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு 31.12.2022 வரை வெளியிடப்படும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கைகளுக்கு பொருந்தும்.

( iv ) அரசாணை ( நிலை ) எண் .91 , மனிதவள மேலாண்மைத் ( எஸ் ) துறை , நாள் 13.09.2021 ன்படி ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பினை , 01.01.2023 முதல் பொதுப் பிரிவினருக்கு 42 ஆகவும் , இதர பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது . 



6. சிறப்பு விதிகளுக்கான உரிய வரைவு விதித் திருத்தங்களை உடன் அரசுக்கு அனுப்பி வைக்குமாறும் பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . /

GO No. 144 - SE2 - TRB Age Relaxation .pdf - Download here



Read More »

தேசிய மாணவர் படையில் (NCC அலுவலகம்)காலியாக உள்ள டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு


  திருச்சியில் உள்ள தேசிய மாணவர் படையில் காலியாக உள்ள டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு      அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது.

இதற்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் 05.11.2021 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



காலிப்பணியிடங்கள்:

டிரைவர் - 2
அலுவலக உதவியாளர் - 1

வயது வரம்பு:

01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 37 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

டிரைவர் கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் VIII வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக மற்றும் கனரக வாகன உரிமம் வைத்திருக்க வேண்டும். மோட்டார் வாகனத்தின் தற்போதைய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் கல்வி தகுதி;

அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.





சம்பளம்:

  • டிரைவர் - ரூ.19500 - 62000/-
  • அலுவலக உதவியாளர் - ரூ.15700 - 50000/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 05.11.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Application Form – https://cms.tn.gov.in/sites/default/files/documents/eligibility_criteria_application_driver_0.pdf

Read More »

TN MRB உணவு பாதுகாப்பு அதிகாரி (Food Safety Officer) பதவிக்கு வேலைவாய்ப்பு :சம்பளம் ரூ.35,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,13,500/- வரை

தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தில் (TNMRB) இருந்து தற்போது உணவு பாதுகாப்பு அதிகாரி (Food Safety Officer) பதவிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அரசு பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.




வேலைவாய்ப்பு :

தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தில் Food Safety Officer பதவிக்கு 119 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது 01.07.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 32-59 வயதிற்கு உட்பட்டிருக்க வேண்டும். பிரிவிற்கு ஏற்ப வயது தளர்வுகளை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

Food Technology or Dairy Technology or Biotechnology or Oil Technology or Agricultural Science or veterinary Sciences or Bio- Chemistry or Microbiology பாடங்களில் Bachelor's degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது
Master's Degree in Chemistry அல்லது Bachelor's degree in medicine தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.35,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,13,500/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக என அறிவிக்கப்பட்டுள்ளது.




தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் எழுத்துத்தேர்வு அல்லது கணினி அடிப்படையிலான தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொது விண்ணப்பதாரர்கள் - ரூ.700/-
  • SC/ SCA/ ST/ DAP(PH) விண்ணப்பதாரர்கள் - ரூ.300/-

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் கொண்டவர்கள் 13.10.2021 முதல் வரும் 28.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.




Official PDF Notification – http://www.mrb.tn.gov.in/pdf/2021/FSO_notification_131021.pdf

Apply Online – http://www.mrb.tn.gov.in/

Official Website – http://www.mrb.tn.gov.in/


Read More »

LAB ASSISTANT, SKILLED ASSISTANT தேவை -நிரந்தர பணியிடம் :சம்பளம் ரூ 19,500- 71,900 வரை

LAB ASSISTANT, SKILLED ASSISTANT தேவை -நிரந்தர பணியிடம் :சம்பளம் ரூ 19,500- 71,900 வரை 




Read More »
 

Most Reading

Tags

Sidebar One