Search

சத்துணவுப் பணியாளர் காலிப் பணியிடங்கள் நிரப்புதலுக்கு குழு அமைத்து அரசாணை வெளியீடு. ( GO NO : 28 , DATE : 05.09.2020 )

Saturday, 5 September 2020

அரசாணை எண் -28 நாள்-05.09.2020- சமூக நலத்துறை சத்துணவுப் பணியாளர் காலிப் பணியிடங்கள் நிரப்புதல்.

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை – புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் . சத்துணவுத் திட்டம் சத்துணவுப் பணியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புதல் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுக்களை நடத்துவதற்கு தேர்வுக் குழுக்களை ஏற்படுத்துதல் – ஆணையிடப்படுகிறது.

Download Go 28 ….


Read More »

ரயில்வேயில் காலியாக உள்ள 1.40 லட்சம் பணியிடங்களுக்கு டிச.15 முதல் போட்டித் தேர்வு!

‘ரயில்வேயில் காலியாக உள்ள 1.40 லட்சம் பணியிடங்களுக்கான பணியாளர் தேர்வு, டிசம்பர் 15ம் தேதி முதல் ஆன்லைனில் நடத்தப்படும்,’ என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ரயில்வேயில் காலியாக உள்ள 1 லட்சத்து 40 ஆயிரத்து 640 பணியிடங்களை நிரப்ப, ரயில்வே வாரியம் இந்தாண்டு ஆரம்பத்தில் முடிவு செய்தது. இதற்காக விண்ணப்பங்களையும் வரவேற்றது. பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. பின்னர், போட்டித் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், கொரோனா குறுக்கிட்டது. இதனால், இந்த தேர்வு கிடப்பில் போடப்பட்டது. 

தற்போது, கொரோனா ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு, நாடு இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து, இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வை, கொரோனா ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடத்த ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இது பற்றி ரயில்வே வாரியத்தின் தலைவர் வி.கே. யாதவ் நேற்று அளித்த பேட்டியில் கூறுகையில், ‘‘ரயில்வேயில் 3 பிரிவுகளில் காலியாக உள்ள ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 640 பணியிடங்களுக்கு, மொத்தம் 2 கோடியே 42 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவை அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயார்நிலையில் உள்ளது. கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த போட்டித் தேர்வை, டிசம்பர் 15ம் தேதி முதல் நடத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை நேரடியாக நடத்தப்படாமல், கம்யூட்டர் மூலமாக ஆன்லைனில் நடத்தப்படும். இதற்கான விரிவான தேர்வு பட்டியல் விரைவில் வெளியிடப்படும்,’’ என்றார்.

Read More »

எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் நிறுவனங்களில் ஒன்றான Indian Institute Of Integrative Medicine நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : Indian Institute Of Integrative Medicine (IIIM)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : மூத்த திட்ட உதவியாளர்

கல்வித் தகுதி : M.Sc Biochemistry, M.Sc Biotechnology, M.Sc Organic Chemistry, Ph.D. துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு அரசு விதிமுறையின் படி வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.42,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.iiim.res.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

நேர்முக தேர்வு நடைபெறும் நாள் : 10.09.2020 காலை 10.00 மணி

தேர்வு முறை : ஸ்கைப் / எம்எஸ் குழு / கூகிள் சந்திப்பில் வீடியோ கான்பரன்சிங் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ. 750
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 450

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் ,விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iiim.res.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Read More »
 

Most Reading

Tags

Sidebar One