Search

கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கும், ‘ஆன்லைன் கவுன்சிலிங்’

Monday, 20 July 2020

சென்னை : மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை போல, அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கும், ‘ஆன்லைன்’ பதிவு மற்றும் ‘ஆன்லைன் கவுன்சிலிங்’ அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஆன்லைன் பதிவு நேற்று துவங்கியது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேர, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்தும் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்.முற்றுப்புள்ளிஆனால், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர, ஒவ்வொரு கல்லுாரிக்கும் சென்று, நேரில் விண்ணப்பிக்க வேண்டும். 

அந்தந்த கல்லுாரிகளின் முதல்வர்கள் முடிவு செய்து, சேர்க்கை வழங்குவர். இதில், பல மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவாக இருந்தாலும் இடம் கிடைக்கும். சில இடங்கள், சிபாரிசுகளின் அடிப்படையில் ஒதுக்கப்படும். சில கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையில், முறைகேடு பிரச்னைகள் எழுவதும் வழக்கம். 
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழக உயர் கல்வித்துறை அதிரடி முடிவு எடுத்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு, ஆன்லைன் வழி விண்ணப்ப பதிவு மற்றும் கவுன்சிலிங்கை, உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்து உள்ளார்.முன்னுரிமைஇதற்கான வழிமுறைகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

ஆன்லைன் விண்ணப்ப பதிவு, http://tngasa.in என்ற இணையதளத்தில், நேற்று துவங்கியது. ஒவ்வொரு மாணவரும், தாங்கள் படிக்க விரும்பும் மாவட்டத்தையும், கல்லுாரிகளையும் தேர்வு செய்து, அதில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடப் பிரிவுகளையும் குறிப்பிடலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கல்லுாரிகளையும், மாணவர்கள் பதிவு செய்யலாம். 

மாணவர்கள் பதிவு செய்யும் கல்லுாரிகளில், அவர்களின் மதிப்பெண் அடிப்படையில், பாடப்பிரிவுகளின் முன்னுரிமைப்படி ஒதுக்கப்படும்.ஒவ்வொரு கல்லுாரியும், பதிவு செய்த மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், தர வரிசை பட்டியலை வெளியிடும்; அதன் பின் ஒதுக்கீடு வழங்கப்படும்.

மாணவர்கள் அந்த ஆணையை பெற்று, கல்லுாரிகளில் சேரலாம் என, கல்லுாரி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. பதிவு செய்வது எப்படி? வரும், 31ம் தேதி வரை, ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். 

விண்ணப்பம் பதிவு செய்பவர்கள், தங்களின் சான்றிதழ்களின் அசல் பிரதிகளை, வரும், 25ம் தேதி முதல், ஆகஸ்ட், 5க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்கள் விண்ணப்பத்தை, தங்கள் கணினி அல்லது மொபைல் போனில் இருந்து பதிவு செய்யலாம். அதற்கு வசதி இல்லாதவர்கள், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் அமைக்கப்பட்டுள்ள, சேவை மையங்களின் வழியாக பதிவு செய்யலாம்.

Read More »

ஒப்பந்த அடிப்படையில் வங்கிகளில் வேலை வாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி நாள் 31.07.2020

வணிக நிருபர் மேற்பார்வையாளர்களை நியமிக்க விண்ணப்பங்களை பாங்க் ஆப் பரோடா அழைத்துள்ளது. இந்த நியமனம் ஒப்பந்த அடிப்படையில் செய்யப்படுகிறது…!

பாங்க் ஆப் பரோடா ஆட்சேர்ப்பு 2020: வணிக நிருபர் மேற்பார்வையாளர்களை நியமிக்க பாங்க் ஆப் பரோடா (Bank of Baroda) அழைப்பு விடுத்துள்ளது. இந்த நியமனம் ஒப்பந்த அடிப்படையில் செய்யப்படுகிறது. இந்த பதவிகள் குறித்த தகவல்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் இந்த பதவிகளுக்கு 31 ஜூலை 2020-க்குள் விண்ணப்பிக்கலாம்.

மேற்பார்வையாளர்களின் 49 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பை வங்கி வரைந்துள்ளது.

இதில், பருச், மஹிசாகர் மற்றும் வல்சாத் மாவட்டத்திற்கு 4, நர்மதாவுக்கு 2 மற்றும் தபசி மாவட்டத்திற்கு தலா ஒரு, தாதர் மற்றும் நகர் ஹவேலிக்கு 3 மற்றும் சோட்டா உதய்பூர் மாவட்டத்திற்கு 3, வதோதரா மாவட்டத்திற்கு 3, தஹோத் மற்றும் பஞ்சமஹலுக்கு 6 பதவிகள்.

ALSO 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்… மாதம் 50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்!!

BOB இல் மேற்பார்வையாளர் பதவிக்கு விண்ணப்பிக்க வேட்பாளர்கள் கணினி (MS Office, Email, Internet, முதலியன) அறிவைப் பெற்றிருக்க வேண்டும். வேட்பாளர் அவர் விண்ணப்பிக்கும் மாவட்டத்தில் வசிப்பவராக இருந்தால் நல்லது. விண்ணப்பிக்கும் வேட்பாளரின் சொந்த மொழியை வேட்பாளர் அறிந்திருக்க வேண்டும்.

நேர்காணலின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆட்சேர்ப்பு பணிக்கு எழுத்துத் தேர்வு எதுவும் நடத்தப்படாது. இந்த இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் வேட்பாளர்கள் விண்ணப்பிக்கலாம் https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/Business-Correspondents. மேலும் வயது வரம்பு மற்றும் பலவற்றைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் சரிபார்க்கலாம்

Read More »

‘5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்’.. ‘உங்களுக்கான தமிழக அரசு வேலைவாய்ப்புகள்’.. ‘உடனே அப்ளை பண்ணுங்க’

இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் திருவாடானை வட்டம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிறுவனம்: வட்டாச்சியர் அலுவலகம்

மேலாண்மை: தமிழக அரசு

பணி : கிராம உதவியாளர் ( village assistant)

பணி இடங்கள்: இராமநாதபுரம், திருவாடானை

மொத்த காலிப்பணியிடங்கள் : 31

கல்வி தகுதி :

5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். மேலும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ. 11,100 முதல் ரூ. 35,100 வரை

வயது வரம்பு:

21 வயதிற்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

மேலும் இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை https://ramanathapuram.nic.in/ என்ற அதிகாரபூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

Read More »

கொரோனா தடுப்பூசி வரும் வரை பள்ளிகளை திறக்க வேண்டாம்.. டெல்லி பெற்றோர் சங்கம் கடிதம்.!

ஆகஸ்ட், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு வசதியாக இருக்குமா என்பது குறித்து பெற்றோரின் கருத்துக்களைக் கோரி, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது.டெல்லியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஜூலை 31 வரை மூடப்படும் என்று உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது.

இந்நிலையில் தலைநகரில் இருந்து ஒரு பெற்றோர் சங்கம் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நேற்று கடிதம் எழுதியது. 2020-2021 கல்வியாண்டில் கொரோனா தடுப்பூசி உருவாக்கப்படும் வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

ஜூலை, 17 ல், அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்விச் செயலாளர்கள், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றனர், ஆகஸ்ட், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து பெற்றோரின் கருத்துக்களைக் கோருகிறது. இது குறித்து மாநில அரசு இதுவரை பதிலளிக்கவில்லை என்று டெல்லி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நேற்று டெல்லி பெற்றோர் சங்கம் போக்ரியலுக்கு கடிதம் எழுதியதில் “அனைத்து பள்ளிகளையும் மூடுவதற்கான உத்தரவு மார்ச் 16 அன்று நூற்றுக்கணக்கான பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இருந்தபோது செய்யப்பட்டது. இப்போது, ​​இது 10 லட்சம் வழக்குகளைத் தாண்டிவிட்டது. இந்த சூழ்நிலையில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து வேண்டுமென்றே சிரிப்பதுதான் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் பரீட்சை இல்லாமல் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெற வேண்டும் என்றும், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகள் மூலம் சோதிக்கப்பட வேண்டும் என்றும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிலைமை கட்டுப்பாட்டில் இல்லை என்றால் போர்டு தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்பட வேண்டும் என்றும் அது பரிந்துரைத்தது.

Read More »

பள்ளிக் கல்வி – Fit India Movement – விடுபட்ட பள்ளிகள் 25.07.2020க்குள் இணையதளத்தில் பதிவு செய்து தற்போதைய நடவடிக்கைகளை உள்ளீடு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்

மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் Fit India Movement சார்பாக www.fitindia.gov.in எனும் இணையதளம் உருவாக்கப்பட்டு , மேற்கண்ட இணையதள முகவரியில் இப்பொருள் சார்பாக அனைத்து பள்ளிகளும் Fit India School Certificate , Fit India Flag , Schools with either 3 Star or 5 Star Rating போன்ற விவரங்களை உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து , உள்ளீடு செய்வதற்குண்டான விவரங்களின் வழிமுறைகளும் அதன் பொருட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு 24.01.2020 நாளிட்ட கடிதத்தில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் , நாளது வரை குறைந்த அளவிலான பள்ளிகள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருப்பது ஏற்புடையது அல்ல.எனவே இதுவரை மேற்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் , உடன் பதிவேற்றம் செய்திடும் பொருட்டு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் இப்பணி குறித்து அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கி தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளும் www.fitindia.gov.inஎன்ற இணையதளத்தில் 25.07.2020 – க்குள் பதிவு செய்துள்ளதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் , இது சார்ந்து , அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தமைக்கு உடன் ஒப்புதல் கடிதம் அளிக்குமாறும் , அனைத்துப் பள்ளிகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததை உறுதி செய்து அதன் அறிக்கையினை 25.07.2020 அன்று மாலை 3 மணிக்குள் இவ்வியக்கக மின்னஞ்சல் முகவரிக்கு ( jdnsed@nic.in ) அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

DSE – Fit India Movement Dir Proceedings – Download here…

Read More »

NMMS Exam 2020 – Results Download!

பள்ளிக் கல்வி – மத்திய கல்வி உதவித் தொகைத் திட்டம் – தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வு (NMMS)- 2020-2021 – தேர்வு நாள்: 15.12.2019- தேர்வு முடிவுகள் வெளியீடு- பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்கான மத்திய கல்வி உதவித் தொகைத் திட்டமான தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வு ( NMMSS Exam ) கடந்த 15.12.2019 அன்று எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு நடைபெற்றது . தேர்வில் பங்குபெற்று , கல்வி உதவித்தொகை பெற தகுதியான 6695 மாணவர்களின் தேர்வுப் பட்டியல் மாவட்டம் வாரியாக பெறப்பட்டுள்ளது . இத்தேர்வுப்பட்டியல் தகவலுக்காகவும் , தக்க நடவடிக்கைக்காகவும் இக்கடிதத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பலாகிறது . மேலும் , இத்தேர்வில் தகுதி பெற்றுள்ள தேர்வர்கள் 9 – ஆம் வகுப்பு முதல் 12 – ஆம் வகுப்பு வரை அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வியை தொடரும் பொருட்டு அவர்களுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை பெற்று வழங்குவதற்கான அனைத்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தலாகிறது.

 இணைப்பு : கல்வி உதவித்தொகை பெற தகுதியான 6695 மாணவர்களின் தேர்வுப்பட்டியல்…NMMS Exam 2020 – District wise Selected Students List – Download here…

Read More »
 

Most Reading

Tags

Sidebar One