
பொதுமக்கள் தங்கள் வீடுகளின் மின்கட்டணவிவரத்தை இணையதளத்தில்தெரிந்துகொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. www.tangedco.gov.in என்ற இணையதளபகுதியில் பில் ஸ்டேடஸ் என்ற பகுதியில்அறியலாம் என மின் வாரியம்அறிவித்துள்ளது
பொதுமக்கள் தங்கள் வீடுகளின் மின்கட்டணவிவரத்தை இணையதளத்தில்தெரிந்துகொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. www.tangedco.gov.in என்ற இணையதளபகுதியில் பில் ஸ்டேடஸ் என்ற பகுதியில்அறியலாம் என மின் வாரியம்அறிவித்துள்ளது
இதுகுறித்த உத்தரவை பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை அண்மையில் வெளியிட்டது. அதன் விவரம்:-
அரசுத் துறைகளில் குறைந்த நிலையிலான பணிகளைச் சோந்த ஊழியா்களுக்கு அவ்வப்போது ஊதிய உயா்வுகள் அளிக்கப்படும்
இந்த ஊதிய உயா்வுகள் சில நேரங்களில் அவா்கள் ஓய்வு பெறும் நாளுக்குப் பிந்தைய தினத்தில் கிடைக்கும்படி அமைந்து விடுகிறது. இதனை எப்படி திரும்பப் பெறுவது என்பது தொடா்பாக கருவூலம் மற்றும் கணக்குத் துறையானது கேள்வி எழுப்பி இருந்தது.
இதுகுறித்து, தீவிரமாக ஆராய்ந்த தமிழக அரசு இந்தத் தொகையை திரும்பப் பெற கால அளவு எதையும் நிா்ணயிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளது. அதேசமயம், ஓய்வு பெற்றவா்களுக்கு கூடுதலான தொகைகள் ஏதேனும் வழங்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அதனை அவா்களுக்கான ஓய்வூதிய பணப்பலன்களில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தனது உத்தரவில் பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை தெரிவித்துள்ளது
ஒன்பதாம் வகுப்பு வரையிலான பாடங்களை விடியோ பதிவு செய்ய தகுந்த ஆசிரியா்களைத் தோவு செய்து, பணிகளை மேற்கொள்ளுமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அண்மையில் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:
பள்ளிக் கல்வித் துறையில், மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக ஏற்கெனவே பிளஸ் 2 வகுப்பு பாடங்களுக்கான விடியோ படப் பதிவு மேற்கொள்ளப்பட்டு, மின் பாடப் பொருளாக மாற்றப்பட்டு, பள்ளிகளில் உள்ள உயா் தொழில்நுட்ப ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதைத் தொடா்ந்து பிளஸ் 1 வகுப்பு அனைத்து பாடங்களுக்கான விடியோ பதிவு மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான பாடப் பொருள்களுக்கான விடியோ படப் பதிவும் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா்கள் கலந்து ஆலோசித்து, கருத்தாளா்களைத் தெரிவு செய்து, படப்பதிவு மேற்கொள்ள ஆவன செய்யுமாறு, முதன்மைக் கல்வி அலுவலா்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
மேலும் குறிப்பிட்ட ஒரு ஆசிரியரை அனைத்து அலகுகளுக்கான படப் பதிவினை மேற்கொள்ளச் செய்யாமல், வெவ்வேறு ஆசிரியா்களை பயன்படுத்துதல் வேண்டும். இதற்கு உரிய பாட ஆசிரியா்களைத் தெரிவு செய்வதுடன், அவா்களுக்குத் தலைமை ஆசிரியா்கள் வாயிலாக தகவலளித்து, மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொள்ளும் படப்பிடிப்பில் பங்கேற்க ஆசிரியா்களை அனுப்பி வைத்து, பணிகள் தொய்வின்றி நடைபெற அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா்கள் ஒருங்கிணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்திலுள்ள கலை, அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில் அதற்காக 38 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 16 ஆம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியானது. முதல் முறையாக கலை, அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
கலை, அறிவியல் படிப்புகளில் சேர www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்ற இணையதளங்களில் ஜூலை 20 ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர www.tngptc.in மற்றும் www.tngptc.com என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். மேலும் இதுகுறித்த சந்தேங்கள் இருந்தால் 044-22351014 மற்றும் 044-223510115 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்திலுள்ள கலை, அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு 38 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயிலும் 100 பழங்குடியின மாணவ / மாணவியர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி பெற்றவுடன் , அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் கல்வியியல் பட்டயப்படிப்பில் ( D.T.Ed. , ) சேர்த்து அவர்கள் அப்பட்டயப்படிப்பை முடித்த பின் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் ( Tamil Nadu Teachers Eligibility Test ) வெற்றி பெற தனியார் பயிற்சி நிலையங்களில் சேர்த்து , அத்தகுதித் தேர்வில் வெற்றி பெறும் பழங்குடியின இடைநிலை ஆசிரியர்கள் தர வரிசை அடிப்படையில் இத்துறையின் கீழ் இயங்கும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடத் தொடக்கப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது , என இத்திட்டத்தின் கீழ் 100 மாணாக்கர் கல்வியியல் பட்டயப் படிப்பு பயில்வதற்கு ஆகும் கல்விக் கட்டணம் , புத்தகக் கட்டணம் , விடுதிக் கட்டணம் , சீருடைக் கட்டணம் , இதரச் செலவினங்கள் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற தனியார் பயிற்சி நிலையங்களில் ஏற்படும் செலவினங்கள் முழுவதையும் அரசே ஏற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2019-2020 ஆம் ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதால் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர் / மாணவியர்களுக்கு பெறப்பட்ட தொகுப்பு மதிப்பெண் பட்டியலின் ( Consolidated Mark Statement ) அடிப்படையில் மேற்கண்ட திட்டத்தின் விவரங்களை தங்கள் மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பழங்குடியினர் மாணவர்களுக்கு தெரிவித்தும் மற்றும் பள்ளியின் விளம்பர பலகையில் அறிவிப்பு செய்யுமாறும் , விருப்பமுள்ள பழங்குடியினர் மாணவர்களிடமிருந்து விருப்ப கடிதம் ( Willingness ) பெற்று இம்மாத 31.07.2020 குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு பிரச்சினையால் ஐஐடி மாணவர் சேர்க்கை விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் அதாவது ஐஐடிக்களில் மாணவர்கள் படிக்க வேண்டுமெனில், கூட்டு சேர்க்கை வாரியம் எனப்படும் ஜேஏபி நடத்தும் JEE மேம்படுத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, முதல் 20 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருப்பது போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு பிரச்சினையால் ஏராளமான மாநிலங்களில் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு அவசியமில்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
ரமேஷ் பொக்ரியால் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ”இந்தியா முழுவதும் ஏராளமான கல்வி வாரியங்கள் தங்களின் 12-ஆம் வகுப்புத் தேர்வைப் பகுதியளவு ரத்து செய்துள்ளன. இந்நிலையில், IIT மாணவர்கள் சேர்க்கைக்கான விதிமுறைகளை இந்த ஆண்டில் ஜேஏபி தளர்த்தியுள்ளது. JEE மேம்படுத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறும் தகுதிவாய்ந்த மாணவர்கள், 12-ம் வகுப்பில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் பிரச்சினையில்லை. அவர்கள் IIT-இல் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அச்சம் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்ட JEE மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரையிலும், JEE மேம்படுத்தப்பட்ட தேர்வு செப்டம்பர் 27-ம் தேதியும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
12 ஆம் வகுப்பிற்கு 27 ஆம் தேதி நடைபெறும் மறுத்தேர்வின் முடிவுகள் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் தாசப்பகவுண்டன்புதூர் பள்ளியில் சத்துணவுக்காக அரிசி, பருப்புகள் மற்றும் பர்னிச்சர்களையும் விளங்கோம்பை பகுதி பழங்குடியின மாணவர்கள் 19 பேருக்கு சாதிச்சான்றுகளையும் அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனியார் பள்ளிகளின் உரிமம் புதுப்பிப்புக் காலம், ஊரடங்கை கருத்தில் கொண்டு ஓராண்டில் இருந்து 2 ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
தமிழகத்தில் 6 ஆயிரத்து 19 பள்ளிகளில் இலவச கணினிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் செல்போன் மற்றும் கணினி வழியாக பாடங்களை பதிவிறக்கம் செய்து மாணவர்கள் படிக்கும் நிலை 2 ஆண்டுகளில் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார்
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு 2020-2021 ஆம் கல்வியாண்டில் வழங்கப்பட்ட விலையில்லா பாடநூல்களின் எண்ணிக்கை விவரத்தினை,
படிவம் 1 ல் குறிப்பிட்டுள்ளவாறு தலைமையாசிரியர்களிடமிருந்து பெற்று அதனை தொகுத்து படிவம் 2 ல் பூர்த்தி செய்து படிவம் 2 -னை மட்டும் முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் esec.tndse@nic.in மற்றும் dsetamilnadu@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு 22.07.2020 புதன் கிழமை பிற்பகல் 2.00 மணிக்குள் அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள் .
பள்ளிக்கல்வி இயக்குநர்
Pdf
Touch Here