BE, B.SC பயின்றவர்களுக்குமத்திய அரசு வேலை.. கடைசி தேதிஜூலை 31..மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Rashtriya Chemicals and Fertilizers Limited (RCF) நிறுவனத்தில் காலியாக உள்ள சந்தைப்படுத்தல் அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 10 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.இ, பி.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.1.40 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.நிர்வாகம் : Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL)மேலாண்மை : மத்திய அரசுபணி : சந்தைப்படுத்தல் அதிகாரிமொத்த காலிப் பணியிடங்கள் : 10கல்வித் தகுதி : B.Sc Agriculture, B.E, B.Tech துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.40,000 முதல் ரூ.1.40,000 வரையில்அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.rcfltd.com/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.07.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பக் கட்டணம் :பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ.700மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.rcfltd.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்