Search

நடப்பாண்டில் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை - நாளை ஆலோசனை.

Sunday, 12 July 2020

நாளை நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நீட் தேர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு.

அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு இறுதி செய்யப்படும் என தகவல்.

நடப்பாண்டில் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துவது குறித்து நாளை ஆலோசனை.
Read More »

Hr Sec Second Year Hall Ticket ( Re - Examination for Absentees )


12-ம் வகுப்பு மறுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கீழ் உள்ள இணைய இணைப்பில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  12-ம் வகுப்பு இறுதித்தேர்வில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு ஜூலை 27-ம் தேதி மறுதேர்வு நடைபெறும்.

Plus Two Re - Examination Hall Ticket - Download here...
Read More »

உங்களது வீட்டு கடன் வட்டி விகிதத்தை தற்பொழுது 6.8% வரை குறைக்க ஒரு அரிய வாய்ப்பு..

How to reduced Home Loan interest rate

நீங்கள் வாங்கிய பழைய வீட்டு கடன் வட்டி விகிதத்தை தற்பொழுது 6.8% வரை குறைக்க ஒரு அரிய வாய்ப்பு..

தோழமையுடன்
🖋️ தேவராஜன்,
       தஞ்சாவூர்

வட்டிவிகிதத்தை குறைப்பதன் மூலம் லட்சக்கணக்கில் லாபம் அடையலாம்..

01.10.2019-க்கு பிறகு வீட்டுகடன் வாங்கியவர்கள் கவலைப்பட வேண்டாம்.. அவர்கள் தற்பொழுதைய குறைந்த வட்டி விகிதத்தில் தான் இருப்பீர்கள்.. அவர்களின் loan EBLR-ல் link ஆகியிருக்கும்..


எனக்கு SBI வங்கியில் இரண்டு Home loan உள்ளது..

Reality loan (2013-ல் வாங்கியது)
& home loan (2015-ல் வாங்கியது)

இவை இரண்டும் கிட்டத்தட்ட 10% (base rate) வட்டியில் இருந்தது..

September 2019-ல் அந்த இரண்டு loan-ஐயும் Rs.2630-க்கு check கொடுத்து MCLR-க்கு மாற்றியதால்..

வட்டி 10% லிருந்து 8.6% ஆக குறைந்தது

The Reserve Bank of India introduced the MCLR methodology for fixing interest rates from 1 April 2016. It replaced the base rate structure, which had been in place since July 2010. Under the MCLR regime, banks are free to offer all categories of loans on fixed or floating interest rates.

(01.04.2016-ல் இருந்தே MCLR நடைமுறையில் இருந்துள்ளது, ஆனால் எனக்கு Sep 2019-ல் தான் இதைப்பற்றி தெரியும்)

All floating rate loans to Micro, Small & Medium Enterprises (MSMEs) have been linked to External Benchmark based Lending Rate (EBLR) by State Bank of India (SBI) w.e.f. 01.10. 2019. RBI's Repo Rate is considered as Benchmark Rate. Due to reduction in Repo Rate by 25 bps on 04.10.

பிறகு,
January 2020-ல் மீண்டும் வட்டி விகிதத்தை குறைக்க புதிதாக வந்த திட்டமான EBLR-க்கு Rs.5900 check கொடுத்து மாற்றியதால்

தற்பொழுது எனது வட்டி 6.8% வரை குறைந்துள்ளது..


10% லிருந்து தற்பொழுது 6.8% வரை குறைத்துள்ளேன்..

இதனால் எனக்கு பெரிய அளவில் வட்டியான குறைந்துள்ளது..

(கடன் வாங்கிய உடனே இதை செய்தால் பெருமளவில் நாம் லாபம் அடையலாம்)

நான் 2016-ல் MCLR நடைமுறைக்கு வந்த உடனேயும் , பிறகு 2019-லேயே EBLR-க்கும் மாற்றியிருந்தால் மிகப்பெரிய லாபம் அடைந்திருப்பேன்..
(தகவல் உடனே தெரியாததால் இழப்பு)


MCLR-ல் இருந்து  EBLR-க்கு மாற்றுவதால் கிடைக்கும் லாபத்தை அறிய கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்..

👇👇👇
https://youtu.be/PMb8dWJJdfI


2017-க்கு முன் வாங்கிய வீட்டு கடன் base rate-ல் தான் இருக்கும்..
இதன் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்..

SBI வங்கியில் எனது அனுபவத்தில் base rate 10%-ல் இருந்து MCLR-க்கு மாற்றிய பொழுது 8.6%-க்கு தான் குறைந்தது, ஆனால் EBLR-க்கு மாற்றிய பொழுது தான் தற்பொழுது நடைமுறையில் உள்ள புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்திற்கு இணையாக மாறுகிறது (Nationalised வங்கிகளுக்கும் இது பொருந்தும்)


கடன் தவணை முடிவடையும் காலம் நெருங்கிவிட்டால், பணம் கட்டி மாற்றினால் லாபம் இருக்குமா என்பதை கணக்கிட்ட பின் மாற்றிக்கொள்ளவும்..

Reality loan (plot with construction) பெற்று அதே இடத்தில் வீடு கட்டியிருந்தால் , Reality loan & home loan இரண்டிற்கும் வட்டியை குறைக்க இயலும்..

(தற்பொழுது வாங்குபவர்களுக்கு அந்த கவலை வேண்டாம் இரண்டையும் ஒரே loan-ஆக merge செய்துவிடுகிறார்கள், RS.5900 மட்டும் கட்டினால் போதும்)

பழைய loan என்றால் தனித்தனியாக இருக்கும், இரண்டு loan-க்கும் தனித்தனியாக பணம் கட்ட வேண்டும்..

MCLR வருடத்திற்கு ஒரு முறை வட்டி விகிதம் மாறும்.

EBLR மூன்று மாதத்திற்கு ஒருமுறை அல்லது ஆறு மாததிற்கு ஒரு முறை வட்டி விகிதம் மாறும்.

(இரண்டுமே Repo rate குறையும் பொழுது குறையும், ஏறும் பொழுது ஏறும்)


ஒரு சில வங்கியில் மட்டும் EBLR -ஐ விட MCLR லாபகரமானதாக இருக்கும். அதே போல் நீங்கள் வாங்கிய கடன் தொகைக்கு ஏற்ப வட்டி விகிதம் மாறும், அதை கீழே உள்ள லிங்க்கின் மூலம் எதில் லாபம் என்பதை தெரிந்துகொண்டு பிறகு மாற்றிக்கொள்ளவும்..
👇👇👇👇👇👇

https://youtu.be/qTxzwJJ9ad8


ஒருமுறை EBLR-க்கு மாற்றிவிட்டால் மீண்டும் MCLR-க்கு மாற்ற முடியாது

LIC -ல் வாங்கியிருந்தாலும் வட்டியை fixed amount 5,900 கட்டி குறைத்துக்கொள்ளலாம்..

இதற்கு முன் outstanding amount-ல் 0.35% கட்டி மாற்ற வேண்டிய சூழல் இருந்தது.. இது ஒருவருக்கு ஒருவர் மாறுபட்டது.. அதுமட்டுமல்லாமல் கட்டவேண்டிய தொகை அதிகமாக இருந்தது..

ஆனால், தற்பொழுது 5,900 கட்டினால் போதும்..

நமக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் பயன்பெற செய்வோம்..

மேலும் முழு விவரம் தெரிந்துகொள்ள நீங்கள் வீட்டுக் கடன் பெற்ற வங்கிகளை தொடர்பு கொள்ளவும்.

EBLR- External Benchmark Lending Rate
or
RLLR- Repo Linked Lending Rate
or
RRLL-Repo Rate Linked Loan, all are related to external benchmark of interest rate which is RBI's repo rate.

MCLR  is Marginal Cost of Lending Rate which depends on bank's own financial assets. ... Factual difference is interest rate.

The MCLR is determined by the current cost of funds, in contrast to the base rate , which is governed by the average cost of funds. The MCLR was introduced by the RBI because rates based on this system are more receptive to the changes in the policy rates
Read More »

தேசிய புலனாய்வு முகமையில் (NIA) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான, வேலைவாய்ப்பு அறிவிப்பு..


தேசிய புலனாய்வு முகமையில் (NIA) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான, வேலைவாய்ப்பு அறிவிப்பு..

மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய புலனாய்வு முகமையில் (NIA) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான, வேலைவாய்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

குறிப்பிட்ட பணிகளுக்கான தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன் அடையலாம்.

நிறுவனம் : தேசிய புலனாய்வு முகமை [ National Investigation Agency ]

பணிகள் :

ஆய்வாளர் - 17 காலிப்பணியிடங்கள்

உதவி ஆய்வாளர் - 43 காலிப்பணியிடங்கள்


கல்வித் தகுதி :

ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி இடங்கள் : கொல்கத்தா, சண்டிகர், மும்பை, கவுஹாத்தி, ராய்பூர், ஜம்மு, கொச்சி, லக்னோ, டெல்லி, ஹைதராபாத்

தேர்வு முறை :

நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25/07/2020

மேலும் இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ லிங்கான https://nia.gov.in/writereaddata/Portal/Recruitment/104_1_recruitment.pdf கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
Read More »

கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் அலைவரிசைகள் எவை?


9 மற்றும் 10-ஆம் வகுப்புப் பாடங்கள் கல்வித் தொலைக்காட்சியில் தினசரி ஒளிபரப்பப்படுவதையொட்டி இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத நிலை உள்ளது. இதனையடுத்து கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. மேலும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சில தனியார் தொலைக்காட்சிகள் மூலமும் பாடங்களை ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 

12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசாங்கத்தால் அவர்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப்புகளில் படங்களைப் பதிவேற்றச் செய்துத் தரும் நடவடிக்கை 15-ஆம் தேதி முதல் பள்ளிக்கல்வித்துறையால் துவக்கப்பட உள்ளது. 

9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சியில் தினசரி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை, 9-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்புப் பாடங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன.

இதனைக் கீழ்க்கண்ட அலைவரிசைகளில் தமிழ்நாடு முழுவதும் கண்டு மாணவர்கள் பயனடையலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

1. TACTV (தமிழ்நாடு அரசு கேபிளில்) - சேனல் 200
2. SCV - சேனல் 98
3. TCCL - சேனல் 200
4. VK DIGITAL - சேனல் 55
5. AKSHAYA CABLE - சேனல் 17

மேற்கண்ட அலைவரிசைகளில் கல்வித் தொலைக்காட்சியை மாணவர்கள் பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »

ஆசிரியர்களுக்கு டிப்ளமா படிப்பு NCERT அறிமுகம்!

ஆசிரியர்களுக்கு டிப்ளமா படிப்பு NCERT அறிமுகம்!

அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, 'டிப்ளமா' படிப்பை, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., அறிமுகம் செய்துள்ளது.

நாடு முழுதும் அனைத்து பள்ளி, கல்லுாரி பாடத் திட்டங்களிலும், ஆன்லைன் வழி வகுப்புகள் துவங்கி உள்ளன. இதற்காக, மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள், அறிவியல் பாடத்தை எளிமையாகவும், புரியும் வகையில் நடத்தவும், புதிய படிப்பு நடத்தப்பட உள்ளது.

இந்த ஆன்லைன் வழி டிப்ளமா பயிற்சி படிப்பை, என்.சி.இ.ஆர்.டி., அறிமுகம் செய்துள்ளது.இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.வரும், 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். உரிய தேதியில் விண்ணப்பிப்பவர்களுக்கு, ஆன்லைன் வழியில் பாடங்களை நடத்த உள்ளதாக, என்.சி.இ.ஆர்.டி., தெரிவித்துள்ளது.
Read More »

தபால் வடிவமைப்பு போட்டி..50000 பரிசு.. ஜூலை 27 க்குள் விண்ணப்பிக்க வாய்ப்பு..

தபால் வடிவமைப்பு போட்டி..50000 பரிசு.. ஜூலை 27 க்குள் விண்ணப்பிக்க வாய்ப்பு..

சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு தழுவிய தபால்தலை வடிவமைப்பு போட்டியை தபால்துறை நடத்துகிறது.'இந்தியாவிலுள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய களங்கள் (கலாசாரம்)' என்ற தலைப்பில் புகைப்படங்களை அனுப்ப வேண்டும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர், தலைப்பு சார்ந்து, ஒரு புகைப்படத்தை, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின், https://www.mygov.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பின்றி, அனைவரும் பங்கேற்கலாம். விண்ணப்பத்துடன், புகைப்படம் குறித்து, 50 முதல் 60 வார்த்தைகளில், சுருக்கமான விளக்கமும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.'அனுப்பப்பட்டுள்ள புகைப்படம் முற்றிலும் எனது சொந்த படைப்பு' என்பதற்கான, ஒப்புதல் கடிதத்தையும் இணைக்க வேண்டும்.சிறந்த முதல் மூன்று புகைப்படங்களுக்கு முறையே தலா, ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்படும்.
விண்ணப்பங்களை வரும், ஜூலை 27ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். போட்டி முடிவுகள், வரும் ஆக.,15ம் தேதி, www.indiapost.gov.in , postagestamps.gov.in ஆகிய தபால்துறை இணையதளங்களில் வெளியிடப்படும்.
Read More »

பிளஸ் 2 மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு


பிளஸ் 2 மறுதேர்வு எழுதும் மாண வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை (ஜூலை 13) வெளியிடப்பட உள்ளது.

ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 இறுதித்தேர்வில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு ஜூலை 27-ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட உள்ளது.

இதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை (ஹால் டிக்கெட்) மாணவர்கள் நாளை (ஜூலை 13) முதல் ஜூலை 17-ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இணையதள வசதி இல்லாத மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு மையங்களிலும் நேரடியாக சென்று பெற்றுக் கொள்ளலாம். மேலும், தேர்வு மையங்கள் மாணவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளிகளிலேயே அமைக்கப்பட உள்ளன.

கூடுதல் விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று தேர்வுத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது
Read More »

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை தொடங்குகிறது யூனிஃபை அகடாமி!

அன்பார்ந்த பெற்றோர்களே,

10th, 11th, 12thபோன்ற வகுப்புகளை  நாங்கள் ஆன்லைன் மூலம் zoom appயை பயன்படுத்தி எங்கள் யூனிஃபை அகடாமியில் செயல்படுத்த இருக்கின்றோம் ஆன்லைன் வகுப்புகளை கீழே குறிப்பிட்டுள்ள தினங்களில்  நல்ல முறையில், சிறந்த ஆசிரியர்களுடன் தங்கள்  பிள்ளைகளுக்கு நேரில் உள்ளவாரே கவனித்து கற்று தருகிறோம். எனவே தாங்கள் தங்கள் பிள்ளைகளுக்கு  சற்று அருகில் இருந்து அவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் நீங்கள் உதவ வேண்டும். தங்கள் பிள்ளைகளுக்கு  சிறந்த  கல்வியை எங்கள் யூனிஃபை அகாடமியின் மூலம் தர முடியும். எனவே வீட்டிலேயே இருந்து தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல தரமான கல்வியை எங்கள் கல்வி நிறுவனம் தரும் என்று நம்பிக்கையுடன் தேரிவித்துக் கொள்கிறேன்.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.
குறள் விளக்கம்:
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.

நன்றி வணக்கம்

த. விக்னேஷ், MBA., M.Com., M.Phil., Ph.D.,
யூனிஃபை அகடாமி,
சேலம்.
Call - 8489994445

Unify Academy is inviting you to a scheduled Zoom meeting.

Topic: 12 Maths CBSE Tuition Class
Time: Jul 15, 2020 10:00 AM India
        Every day, until Jul 21, 2020, 7 occurrence(s)
        Jul 15, 2020 10:00 AM
        Jul 16, 2020 10:00 AM
        Jul 17, 2020 10:00 AM
        Jul 18, 2020 10:00 AM
        Jul 19, 2020 10:00 AM
        Jul 20, 2020 10:00 AM
        Jul 21, 2020 10:00 AM
Please download and import the following iCalendar (.ics) files to your calendar system.

Daily:

https://us04web.zoom.us/meeting/upEuduGvqTgpHdfrRdGh-feDP6pLKiHzocGV/ics?icsToken=98tyKu6trToiHdOWsx6ER7YMA4j4We3wtnZegqdbji3hJCgeZAbSBrRSHpl2OMLf

Join Zoom Meeting

https://us04web.zoom.us/j/75318773373?pwd=ekJZYkY0YURuZmRSb1FLWUlHVXJZUT09

Meeting ID: 753 1877 3373
Password: 1z4L1a

For More Details contact us- 8489994445.

Thank you,
With best regard,

T. VIGNESH,
Meeting organizer,
Unify Academy,
Salem.
Read More »

9 , 10 ஆம் வகுப்புகளுக்கு கல்வித் தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிபரப்பப்படும் நேரம் அறிவிப்பு


தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கல்வித் தொலைக்காட்சியில் தினம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை பத்தாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு பாடங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன. இதனை கீழ்க்கண்ட அலைவரிசைகளில் தமிழ்நாடு முழுவதும் காணலாம்.

1. TACTV (தமிழ்நாடு அரசு கேபிளில்) - 200
2.SCV - 98
3. TCCL - 200
4. VK DIGITAL - 55
5. AKSHAYA CABLE - 17
6. Youtube - shorturl.at/pJKV0

இந்த வாய்ப்பினை மாணவர்கள்  நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Read More »

டிவி மூலம் பாடம் நடத்த புதிய சாப்ட்வேர் வழங்க திட்டம்

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டிவி மூலம் பாடங்கள் நடத்தும் திட்டம் தொடங்க உள்ளதால் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு லேப் டாப்பில் சாப்ட்வேர் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தற்போது ஊரடங்கு காரணமாக வீடுகளில் தங்கி இருக்கின்றனர். பள்ளிகள் எப்போது திறக்கும் என்று தெரியாத நிலையில் அவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டில் பாடங்களை நடத்துவதற்காக புதிய ஏற்பாடு ஒன்றை தமிழக பள்ளிக் கல்வித்துறை செய்துள்ளது. இதன்படி டிவி மூலம் மாணவர்களுக்கு பாடங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

இந்த திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 15ம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார். இயைதடுத்து, தமிழகத்தில் இயங்கும் 11 ஆயிரம் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் டிவி மூலம் பாடங்களை படிக்கலாம். பிளஸ் 2 மாணவர்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள லேப்டாப் மூலம் பாடங்களை படித்துக் கொள்ள வசதியாக அவர்களின் லேப்டாப்களில் புதிய சாப்ட்வேர் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது.
இந்த சாப்ட்வேர்கள் பொருத்தப்பட்ட பிறகு அவர்கள் வீடுகளில் இருந்தபடியே லேப்டாப்களை பயன்படுத்தி பாடங்களை படித்துக் கொள்ள முடியும். அதே நேரத்தில் 14ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியும் தொடங்குகிறது. இதனால் மாணவர்கள் பாடப்புத்தகங்களையும் படித்துக் கொள்ள முடியும். இது தவிர வீடுகளில் உள்ள மாணவர்கள் டிவிக்கள் மூலம் பாட வகுப்புகளை பார்த்துக் கொள்ள முடியும்
Read More »

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூலை 12 ) மேலும் 4,244 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  1,38,470 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,168   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

மதுரை - 319

செங்கல்பட்டு - 245

திருவள்ளூர் - 232

மாவட்ட வாரியான பாதிப்பு.( 12.07.2020 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 3,617

இன்றைய உயிரிழப்பு : 68
Read More »
 

Most Reading

Tags

Sidebar One