Search

COVID-19 இணைய வழிக்கல்வியும் !! கல்வி வளர்ச்சி நாளும்

Friday, 10 July 2020

கல்வித் தந்தை காமராஜர் அய்யா அவர்களின்
பிறந்த தினமான ஜுலை 15 ம் நாளினை நாம் 
கல்வி வளர்ச்சி நாளாக 
போற்றிப் பாதுகாத்து வளர்க்கிறோம்! 

மனிதனின் வாழ்விற்கு கல்வியின் அவசியத்தினை, பங்களிப்பினை பெற்றோருக்கும் ,குழந்தைகளுக்கும் 
சென்று சேரும்படி நல்ல திட்டங்களை  தந்து கல்வி வழிகாட்டி மாணவர்களின் வாழ்க்கையில் 
வெளிச்சம் தந்த கல்வித் தந்தை
உயர்திரு காமராஜர் அய்யா அவர்கள் !

அவர்களது பிறந்த நன்னாளில் 
இந்த  இணைய வழிகற்றலில்
மாணவர்களை படிக்கச் செய்து ,
பங்களிக்க வைத்து நாட்டின் வளர்ச்சி மற்றும்
சுயமனிதனின் மகிழ்வான வாழ்க்கைக்கு 
உதவிடும் வண்ணம் ஒரு முயற்சி !


படிக்காத செல்வந்தர்  பலருண்டு !
படித்த தரித்திரன் நிறைய உண்டு! ஆனாலும் கல்வி அத்தியாவசியம்
கல்வி தன்னம்பிக்கை தரும் !
கல்வி வாழும் வழி அறியும்!


எண்ணும் எழுத்தும் ஒருவரின் கண்களாகும் !
கண்ணால் பார்த்து நிறைவடைய முடியாது !

காதால்  கேட்டு நிறைவடைய முடியாது
சிந்தனைக்கு எல்லையே கிடையாது ! ஆம் 
கல்விக்கு முடிவேயில்லை.!
கற்றலுக்கு எல்லையில்லை !

காண்பதுவும்,கேட்பதுவும் ,சிந்திப்பதுவும் 
ஒரு தனி மனிதனை மனிதநேயமுள்ள
 மனிதனாய் மாற்றும்  !!

மாணவப்பருவத்திலே நிறைய 
தெரிந்து, அறிந்து ,உணர்ந்து ,விரிவு செய்து ,
தன்னால் ஆன பங்களிப்பை தந்து 
தாய் நாட்டின் வளர்ச்சிக்கும் 
சக மனிதர்களிடம் சகோதரத்துடனும், சாமர்த்தியத்துடனும் மகிழ்வுடனும்  வாழ கல்வி அவசியம் !

இதற்கு பெரும் பங்காற்றிட்ட காமராஜர் அய்யா                         அவர்கட்கு 
கோடான கோடி நன்றிகள் !!
Dr.J.komalalakshmi
Read More »

அடுத்த வாரத்தில் பாடப் புத்தகங்கள் விநியோகம்: கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கு அடுத்த வாரத்தில் பாடப் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இதையொட்டி, பள்ளிகளுக்கு வரும் மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, தலைமைச் செயலாளா் கே.சண்முகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு விவரம்:-

பாடப் புத்தகங்கள் மற்றும் இதர கல்வி சாா்ந்த உபகரணங்களை விநியோகிக்கும் போது எந்த நேரத்தில் வாங்க பள்ளிக்கு வர வேண்டுமென்பதை மாணவா்களுக்கும், அவா்களின் பெற்றோா்களுக்கும் முன்பே தெரிவிக்க வேண்டும். ஒரு மணி நேரத்தில் 20-க்கும் குறைவான மாணவா்கள் அல்லது பெற்றோா்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டு நீண்ட வரிசையில் கூட்டம் கூட அனுமதிக்கக் கூடாது.
கட்டுப்பாட்டுப் பகுதிகளிலோ அல்லது தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலோ அவா்கள் பள்ளிக்கு வர வேண்டாம். தனிமைப்படுத்தப்பட்ட காலம் நிறைவடைந்து இயல்பான நிலை திரும்பிய பிறகே பாடப் புத்தகங்கள் வாங்குவதற்கு வர வேண்டும். வரிசையில் நிற்கும் மாணவா்களும், பெற்றோா்களும் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் தரையில் குறிப்பிட்ட இடைவெளிகளில் குறியீடுகளை இட வேண்டும். பாடப்புத்தகங்கள் வாங்க வரும் மாணவா்களும், பெற்றோா்களும் கண்டிப்பாக முகக் கவசங்களை அணிந்து வர வேண்டும்.
பள்ளிகளுக்கு வெளியே மாணவா்களை நிற்க வைக்காமல் புத்தகங்களை வழங்கிட வேண்டும். கல்வி தொடா்பான விடியோ கருத்தரங்குகளை பிளஸ் 2 மாணவா்கள் தங்களது மடிக்கணினிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு பதிவிறக்கம் செய்யும் போது மாணவா்கள் யாரையும் கணினி ஆய்வகங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது. மாணவா்களின் மடிக்கணினிகளை சம்பந்தப்பட்ட ஆசிரியா்களே பெற்று பதிவிறக்கம் செய்து கொடுக்க வேண்டும்.
புத்தகங்களை விநியோகம் செய்யும் போது ஆசிரியா்கள் தங்களது கைகளில் கையுறை அணிந்திருக்க வேண்டும். மாணவா்களும், பெற்றோா்களும் நீண்ட வரிசையில் நிற்காமல் அவா்களை காத்திருப்பு அறைகளில் அமரச் செய்யலாம். இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு அறைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பாடப்புத்தகங்கள் மற்றும் இதர கல்வி சாா்ந்த உபகரணங்களை விநியோகம் செய்வதற்கு முன்பாக பள்ளிகளில் உள்ள கதவு, ஜன்னல், மரச்சாமான்கள் ஆகியவற்றில் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் பாடப் புத்தகங்களை விநியோகம் செய்வதற்கு முன்பாக இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும்.
மாணவா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட அனைவரும் பள்ளி அறைகளுக்கு வரும் முன்பாக வாயில் பகுதிகளிலேயே கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். கிருமி நாசினி திரவமும் வைக்கப்பட்டிருக்க வேண்டும். பாடப் புத்தகங்களை விநியோகம் செய்யும் ஆசிரியா்கள் தங்களது கைகளை அடிக்கடி கிருமி நாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
முகக் கவசங்கள்: பள்ளி வளாகங்களில் இருக்கும் அனைவரும் முகக் கவசங்களை அணிந்திருக்க வேண்டும். எந்தப் பகுதிகளிலும் எச்சில் துப்பக் கூடாது. பள்ளிகளுக்கு வரும் ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பிற பணியாளா்கள் அனைவரும் அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும். பள்ளிகளில் மிகப்பெரிய அளவுக்கு கூட்டம் சேர விடாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் கே.சண்முகம் தெரிவித்துள்ளாா்.
Read More »

தமிழக பாடத்திட்டத்தில் பாடங்களை குறைப்பது குறித்து திங்கட்கிழமை முடிவு - அமைச்சர் செங்கோட்டையன்


நீட் தேர்வுக்காக மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக பாடத்திட்டத்தில் பாடங்களை குறைப்பது குறித்து திங்கட்கிழமை முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
Read More »

ஓய்வூதியம் பெறுவோர், கருவூல அலுவலர் முன், நேரில் ஆஜராவதில் இருந்து இந்த ஆண்டு விலக்கு!

ஓய்வூதியம் பெறுவோர், கருவூல அலுவலர் முன், நேரில் ஆஜராவதில் இருந்து, இந்த ஆண்டு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

ஓய்வூதியம் பெறுவோர், ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதம் வாழ்நாள் சான்றிதழ் அளிக்க வேண்டும். ஓய்வூதியம் பெறும், கருவூல அலுவலகத்தின் அலுவலர் முன், ஒரு முறை நேரில் ஆஜராக வேண்டும். இந்த ஆண்டு, கொரோனா ஊரடங்கு காரணமாக, வாழ்நாள் சான்றிதழ் அளிப்பதில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது, நேரில் ஆஜராவதற்கும், விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, நிதித்துறை செயலர் கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்
Read More »

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு புத்தகம், கல்வி உபகரணங்கள் வழங்கும்போது பின்பற்றவேண்டிய நடைமுறை அரசாணை வெளியீடு


பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு விலை இல்லா புத்தகம், கல்வி உபகரணங்கள் வழங்கும்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் என்ன? என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச்செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21 கல்வி ஆண்டு பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவர்கள், கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் வீட்டில் இருந்தப்படியே படிப்பதற்கு உதவி செய்யும் வகையில் விலை இல்லா புத்தகம் மற்றும் வீடியோ வடிவிலான பாடத்திட்டம் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விலை இல்லா புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கும்போது பின்பற்றவேண்டிய நிலையான இயக்க நடைமுறைகளை அரசு விதித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:

* பாடப்புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் மாணவர்கள் அல்லது அவர்களுடைய பெற்றோரிடம் வழங்கும்போது நீண்ட வரிசை ஏற்பட்டுவிடாமல் இருக்க முன்கூட்டியே குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயம் செய்யவேண்டும். குறிப்பிட்ட 1 மணி நேரத்துக்குள் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அல்லது அவர்களுடைய பெற்றோர் அழைக்கப்படக்கூடாது.

* கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மாணவர்கள், தனிமைப்படுத்துதல் முடிந்த பின்னரோ அல்லது நோய் தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்னரோ பள்ளிக்கு வந்து வாங்கிக்கொள்ள அறிவுறுத்தவேண்டும்.

* கல்வி உபகரணங்கள் வழங்கும்போது சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் தரையில் வட்டம் வரையவேண்டும்.

* மாணவர்கள் அல்லது அவர்களுடைய பெற்றோர் புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்களை வாங்க வரும்போது கட்டாயம் முககவசம் அணியவேண்டும்.

* பிளஸ்-2 மாணவர்களின் லேப்டாப்பில் கல்வி வீடியோ பதிவிறக்கம் செய்யும்போது மாணவர்களோ, அவர்களுடைய பெற்றோரோ நவீன பரிசோதனை கூடத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். பிரத்யேக அதிகாரி ஒருவர் லேப்டாப்பை வாங்கிக்கொண்டு, அவர்களை உள்ளே அழைத்துச்சென்றுவிட்டு பின்னர் வெளியே அழைத்து வருவார்.

* மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோருக்காக 2 வகுப்பறைகள் சமூக இடைவெளி உடன் காத்திருப்போர் அறைகளாக பயன்படுத்தவேண்டும்.

* புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வினியோகிப்பதற்கு முன்பு பள்ளி வளாகம், மேஜை, நாற்காலி, பெஞ்ச் உள்ளிட்ட மரச்சாமான்கள், கதவுகள், ஜன்னல்கள் உள்பட பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கவேண்டும். இந்த நடைமுறை கல்வி உபகரணங்கள் வழங்குவதற்கு முன்பு தினந்தோறும் பயன்படுத்தப்படவேண்டும்.

* கை கழுவும் வகையில் சோப்பு மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தியிருக்கவேண்டும். மேலும் கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் கிருமிநாசினி வழங்கப்படவேண்டும்.

* ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கைகளை சோப்பால் கழுவிய பின்னரே வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். கைகளை கழுவுவதற்கு வசதியாக கிருமிநாசினி மற்றும் சோப்பு உள்ளிட்டவை பள்ளியின் நுழைவு மற்றும் வெளியேறும் வாசல்களில் வைக்கவேண்டும்.

கிருமிநாசினி தெளிக்கவேண்டும்

* கை கழுவும் பகுதிகள், கழிவறைகள் உள்பட அதிகம் பயன்படுத்தப்படும் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கவேண்டும்.

* ஒவ்வொரு பள்ளிகளின் நிர்வாகம் தான் தங்கள் பள்ளிகளில் நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றுவதற்கு பொறுப்பு.

* ஆசிரியர்கள், மாணவர் கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் சுத்தமான முககவசம் அணிவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்யவேண்டும். முககவசத்தை தொடுவதை குறைக்கவேண்டும். முகம் அல்லது முகத்தின் எந்த பகுதியையும் தொடுவதை தவிர்க்கவேண்டும்.

* மேஜை, நாற்காலி உள்ளிட்ட மரச்சாமான்கள், படிகளின் பக்கவாட்டில் உள்ள கைப்பிடி, லிப்ட் உள்பட பிற தரை தளங்களை தொடுவதை தவிர்க்கவேண்டும்.

* பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் அடையாள அட்டையை எல்லா நேரத்திலும் அணிந்திருக்கவேண்டும். பள்ளி வளாகத்தில் கூட்டம் சேர்க்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Read More »

2020 -21 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா பாடநூல்கள் மாணவர்களுக்கு வழங்குதல் - கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் தொடர்பான அரசாணை வெளியீடு

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2020 -21 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா பாடநூல்கள் வழங்குதல்- கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் தொடர்பான அரசாணை வெளியீடு.


10 மற்றும் 12ம் வகுப்பு படிக்க உள்ள மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும்-தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு.

ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்களை வரவழைத்து பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்க வேண்டும்.

ORDER: In the G.Os 1st to 5th read above, the Government have issued orders with regard to the guidelines to be followed during the lock down period in adherence to the notifications issued by Ministry of Home Affairs, Government of India from time to time.

2. The Government has decided to distribute the cost free textbooks and educational items such as soft copy of video lessons etc, to students studying in Standards 12 and 10 initially for the Academic Year 2020-21 in Government and Government aided schools to help them to learn their lessons from their homes during this lockdown period due to COVID-19.

3. The Government accordingly issue the following Standard Operating Procedure (SOP) for distribution of textbooks and educational items to students in all schools in Tamil Nadu. I Social Distancing norms Textbooks and educational items shall be issued to students/parents in their schools according to pre-assigned time slots to avoid queuing. Not more than 20 students/parents should be asked to come during a slot of one hour.


Read More »

தனியார் பள்ளி ஆசிரியர்கள் இன்று போராட்டம்

தமிழகத்தில் தனியார் சுயநிதியில் இயங்கும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன், மேனிலை பள்ளிகள் என 12 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. கொரோனாவால் கடந்த மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எனவே மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க முடியவில்லை. இதனால், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழக அரசு அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கேட்டு வருகின்றனர்.

இதையடுத்து, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 10ம் தேதி ஆசிரியர்கள், பணியாளர்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு அமர்ந்து பட்டினிப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன், மேனிலைப் பள்ளிகள் சங்கத்தின் சமார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை முதல் இந்த பட்டினிப் போராட்டம் தொடங்கி மாலை வரை நடக்கிறது. இது குறித்து மேற்கண்ட சங்கத்தின் பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறுகையில், தமிழகம்  முழுவதும் நடக்கும் இந்தப் பட்டினிப் போராட்டத்தில் 5 லட்சம் ஆசிரியர்கள், 5 லட்சம் பணியாளர்கள் தங்கள் வீடுகள் முன்பு அமர்ந்து பட்டினிப் போராட்டம் நடத்துகின்றனர் என்றார்.
Read More »

ஆசிரியர் மற்றும் பள்ளி அலுவலக பணியாளர்கள் தேவை அறிவிப்பு.

பாரதி வித்யாலயா மேல் நிலைப்பள்ளியில் கீழ்க்கண்ட காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது விண்ணப்பங்களை 15-07-2020 அன்று தலைமை ஆசிரியரிடம் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதற்கான நேர்காணல் 20.07.2020 திங்கள்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் பள்ளி வளாகத்தில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் அசல் கல்வி சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளவேண்டும்.

( பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது )

Read More »

அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள்; ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நீட்டிப்பு


மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை செப்டம்பருக்கு ஒத்திவைத்து மத்திய அரசு அறிவித்துள்ளதை அடுத்து தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகளை ஆகஸ்ட் இறுதி வரை நீட்டிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து மார்ச் 25 முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு, பதினொன்றாம் வகுப்பு வரை தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பிளஸ்டூ-வில் கடைசித்தேர்வு எழுதப்படவில்லை. அதே போன்று பல்கலைகழகத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் ஜூலை 26 அன்று நீட் நுழைவுத்தேர்வு என அறிவிக்கப்பட்டது. மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை எழுத அரசுப்பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

2000 அரசுப்பள்ளி மாணவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து நீட் பயிற்சி பெற்று வந்தனர். ஜூலை 26 நுழைவுத்தேர்வு என்பதால் இந்த மாதம் இரண்டாம் வாரத்தில் பயிற்சி நிறைவு பெறுவதாக இருந்தது.

இந்நிலையில் ஜூலை 26-ஆம் தேதி நடைபெற இருந்த மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு,செப்டம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதையடுத்து, நீட் தேர்வு எழுத உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் நீட் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

நீட் தேர்வினை எழுதும் மாணவர்களுக்கு e-box என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் ஆன்-லைன் வழியில் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது . இந்த மாதம் இரண்டாவது வாரம் வரை நடைபெற இருந்த பயிற்சி வகுப்புகள் , ஆகஸ்ட் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Read More »

Flash News : மாநில நல்லாசிரியர் விருது 2020 - நெறிமுறைகள் பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியீடு.


முன்னாள் " குடியரசுத் தலைவர் டாக்டர்.இராதாகிருஷ்ணன் " அவர்களின் பிறந்த நாள் செப்டம்பர் திங்கள் 5 ஆம் நாள் பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக ஆசிரியர் தினவிழாவாகக் கொண்டாடப்பட்டு , அவ்விழாவில் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாகப் பணிபுரியும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதான " டாக்டர் . இராதாகிருஷ்ணன் விருது " வழங்கப்பட்டு வருகின்றது.

2020 ஆம் ஆண்டிற்கான டாக்டர் . இராதாகிருஷ்ணன்விருது வழங்கும் விழா 05.09.2020 அன்று ஆசிரியர் தினவிழாவாக நடைபெற உள்ளது.
 அரசாணையில் தெரிவித்துள்ளவாறு , பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் , சிறப்பாகப் பணிபுரியும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து மாநில நல்லாசிரியர் விருதிற்குப் பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நேர்வில் , மாவட்ட அளவில் குழு அமைத்து வருங்காலங்களில் எவ்வித புகார்களுக்கும் , இடமளிக்காவண்ணம் பார்வையில் காணும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி , ஆசிரியர்களைத் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்து , அவர்களின் விவரங்களையும் மற்றும் கருத்துருக்களையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் சரியாகப் பூர்த்தி செய்து 14.08.2020 க்குள் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( இடைநிலைக் கல்வி ) அவர்களது பெயரிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

State Teachers Award 2020 - Instructions Download here...
Read More »

சிறப்பாக பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பூதியம் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு.


சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகள் / ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் (Honorarium) கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் இரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே மதிப்பூதியம் வழங்கியிருந்தாலும் திரும்பப் பெறப்படும் - நிதித்துறை அரசாணை வெளியீடு.

GO NO : 291 , Date : 08.07.2010 - Download here...
Read More »

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சியில் பாடம்!: வரும் 14ம் தேதி முதலமைச்சர் துவங்கி வைக்க திட்டம்!


அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்தும் திட்டம் வருகின்ற 14ம் தேதி துவக்கி வைக்கப்படவுள்ளது. கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறப்பது காலதாமதமாகி வருகிறது. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தி வருகின்றன. ஆனால் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு என்று ஒன்று கிடையாது. இதனால் அவர்கள் கல்வி கற்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

இந்நிலையில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்துவதால் அதேபோல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் பாடம் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. இதில் குளறுபடிகள் ஏற்படும் என்பதால் தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தை வருகின்ற 14ம் தேதி முதலமைச்சர் திறந்து வைக்கப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வகுப்பு வாரியாக பிரித்து 3 தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளன. ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சிகள் மற்றும் நேரம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் இன்னும் போய் சேராத நிலையில், தொலைக்காட்சிகளில் பாடம் நடத்த துவங்க இருப்பதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாவது, அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு கிடையாது, தொலைக்காட்சி வழியாக மட்டுமே பாடம் நடத்தப்படும். இதை வரும் 14ம் தேதி  முதல்வர் தொடங்கி வைக்கிறார். பள்ளி கல்வித்துறை தொடர்பாக யார் கருத்து கூறினாலும் அரசு ஏற்கும் என தெரிவித்தார்.
Read More »

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூலை 10 ) மேலும் 3,680 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் ( 10.07.2020 ) இன்று 3,680 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  1,30,261 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,205   பேருக்கு கொரோனா. 


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 4163

இன்றைய உயிரிழப்பு : 64
சுகாதாரத்துறை..
CLICK HERE TO DOWNLOAD
Read More »

DGE - Plus Two Re-Exam New Instructions


அரசுத் தேர்வுகள் இயக்ககம் - 24.03.2020 அன்று தேர்வு எழுத முடியாத +2 மாணவர்களுக்கு 27.07.2020 அன்று மறுதேர்வு நடத்துதல் சார்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!! - நாள்: 10.07.2020.

DGE - Plus Two Re-Exam New Instructions - Download here...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One