Search
ஓய்வூதியர்கள் அனைவரும் வருடாந்திர நேர்காணல் செய்வதிலிருந்து விலக்கு!
கிருஷ்ணகிரி மாவட்ட அலகில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள் அனைவருக்கும் பார்வையில் காணும் அரசு ஆணையின் படி COVID 19 காரணமாக , 2020 ஆம் ஆண்டின் வருடாந்திர நேர்காணல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளின் கண்கள் பாதிப்புகளும் அதனை தடுக்கும் வழிமுறைகளும்!
சீனாவில் இருந்து உலகமெங்கும் பரவியுள்ள கோவிட் 19 எனும் கொரோனா தொற்று வைரஸ் பாதிப்பால் இதுவரை உலகம் முழுவதும் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா பாதிப்பால் இதுவரை 6 லட்சத்திற்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஊரடங்கு ஜூன் முப்பதாம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ச மீபத்தில், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களை ஆல் பாஸ் செய்து மாநில அரசுகள் உத்தரவிட்டது, இந்நிலையில், ஜூன் மாதம் துவங்க வேண்டிய கல்வி நிலையங்கள், பள்ளி கூடங்கள், நிலையங்கள் இன்னும் திறக்கப்படுவதற்கில்லை, ஆனால் பள்ளிகளில் ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் வழியே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் கர்நாடக மாநில அரசு அம்மாநில அரசு ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைன் வழி பாடம் நடத்த தடைவிதித்தது. ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை அனுமதி வழங்கியுள்ளது.
அதேபோல் தமிழகத்தில் ஆன்லைன் வழி எல்.கே.ஜி முதல் பன்பனிரெண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்த நிலையில்,
சென்னை உயர் நீதிமன்றத்தில் எல்.கே.ஜி முதல் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆன்லைன் வழி பாடம் நடத்தக்கூடாது குழந்தைகளுக்கு கண் பாதிப்பு ஏற்படும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆண்டிராய்ட் மொபைல், போன், ஐபேட்,. லேப்டாப், கூகுள் ஹேங் அவுட்,கூகுள் மீட், வீடியோ மீட்டிங் ஆப்கள், ஜூம், கேட்ஜெட் போன்றவற்றின் மூலம் ஆன்லைன் வகுப்புகளால் இடையிடையே, வலைதளங்கள் வந்து அவர்களின் கவனத்தைச் சிதறடிப்பதாகவும், குழந்தைகளின் கண்களைப் பாதிக்கப்படுவதாகவும், கண்சிமிட்டாமல் ஆன்லைன் வெளிச்சத்தைப் பார்ப்பதால் விழிப்படலம் பாதிப்படைய வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.
இந்தக் கொரோனா காலத்தில் பள்ளிகள் எப்போது துவங்கும் என உறுதியான தகவல் வெளியாகாத நிலையில், ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதனால் மாணவர்கள் கேட்ஜெட்டை தொடர்ந்து பார்க்காமல் பதினைந்து நிமிடத்திற்கொருமுறை செல்போன், கம்பியூட்டர், கேட்ஜெட் டிஸ்பிளேவை விட்டு ஜன்னலையும் அதன் வழியே தூரத்து காட்சிகளையும் பார்க்க வேண்டும்.அப்போதுதான் விழியில் ஈரப்பதம் வற்றாமல், அரிப்பு ஏற்படாமல், பார்வைக்கு பாதிப்படையாமல் இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகளின் கண்களுக்கு ஆரோக்கயமளிக்கும் கேரட், மீன்,
திராட்சை,பப்பாளியை, கீரை போன்றவைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
Read More »

விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வை நடத்தி முடித்த பின்னரே,பிளஸ் 2, 'ரிசல்ட்'
தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு, இப்போதைக்கு இல்லை' என, திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து, எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், தொற்று பரவல் குறைந்த பின், மருத்துவ நிபுணர்கள் மற்றும் முதல்வருடன் கலந்து ஆலோசித்த பிறகே, இவ்விஷயத்தில் முடிவெடுக்கப்படும் என்றும், பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 24ல் முடிவடைந்தன. இந்த தேர்வை, 8.5 லட்சம் பேர் எழுதினர். கொரோனா பரவலை தடுக்க, மார்ச், 24ல், திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், அன்று நடந்த தேர்வில் மட்டும், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவில்லை.ஆனாலும், மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி, மே, 27ல் துவங்கியது; ஜூன் இரண்டாவது வாரத்தில் விடைத்தாள்கள் திருத்தம் முடிந்தது.
'ரிசல்ட்' தயார்
இதையடுத்து, பாடவாரியாக மாணவர்களின் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, தேர்வு மையம் வாரியாக, இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலும், மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், தேர்வு முடிவை வெளியிடுவதற்கான ஆயத்த பணிகள் துவங்கின. வரும், 6ம் தேதி தேர்வு முடிவை வெளியிடலாம் என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில், அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.'மார்ச், 24ம் தேதி தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு, அவர்கள் தேர்வு எழுதிய பாடங்களுக்கு மட்டும், முடிவுகள் வெளியிடலாம். மற்ற மாணவர்களுக்கு, அனைத்து பாடங்களுக்கும் முடிவை அறிவிக்கலாம்' என, தேர்வுத் துறை அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்திருந்தனர். ஆனால்,அதை ஏற்க, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்து விட்டார். விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வை நடத்தி முடித்த பின்னரே,பிளஸ் 2, 'ரிசல்ட்' வெளியிடப்படும் என, திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பேட்டி
இது தொடர்பாக, ஈரோடு மாவட்டம், நம்பியூரில், அவர் அளித்தபேட்டி:'ஆன்லைன்' வகுப்பு குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. நீதிபதிகள், துறை ரீதியாக சில விளக்கங்கள் கேட்டுள்ளனர். நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பொறுத்தவரை, சில சிக்கல்கள் உள்ளன. மார்ச், 24ம் தேதி நடந்த பாடத் தேர்வில், 34 ஆயிரத்து, 682 பேர் பங்கேற்கவில்லை. அவர்களில் தற்போது, 718 பேர் மட்டுமே, தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர்.இவர்களுக்கு, எப்போது தேர்வு நடத்தலாம் என்பது குறித்து, முதல்வருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும். அதன்பின் தான், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும்.
திறப்பு எப்போது?
தமிழகத்தில், தற்போதைய கொரோனா பரவல் சூழல், நமக்கு சாதகமாக இல்லை. பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பதை, நம்மால் யோசிக்க இயலாது. இயல்பு நிலை திரும்பிய பின், மருத்துவ குழு, வருவாய் துறை, பள்ளி கல்வித் துறையினர் ஆலோசித்து, முதல்வர் தலைமையிலான கமிட்டியில் முடிவு செய்யப்பட்டு, பள்ளி திறப்பு குறித்து, முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
பெற்றோர் அதிருப்தி
பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் பேர் எழுதிய நிலையில், ஒரு பாடத்தில் மட்டும் தேர்வு எழுதாத மாணவர்களுக்காக, ஒட்டு மொத்தமாக முடிவு வெளியீட்டை நிறுத்தி வைப்பதா என,பெற்றோரும், ஆசிரியர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.
இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:
மாணவர்கள் எந்தெந்த பாடங்களுக்கு தேர்வு எழுதியுள்ளார்களோ, அதற்கு மட்டும் முடிவை அறிவிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. முடிவை விரைவாக அறிவித்தால், மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை தெரிந்து, அதன் அடிப்படையில், உயர் கல்வியில் சேர்வது குறித்து, முடிவு எடுக்க அவகாசம் கிடைக்கும்.மாறாக, தேர்வு முடிவை தாமதப்படுத்தினால், அவசர அவசரமாக உயர் கல்வி குறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:
educational news
தொடக்க நிலையில் மாணவர்களுடைய கையெழுத்து சரியாக அமைய வரையப் பயிற்சி கையேடு
தொடக்க நிலையில் மாணவர்களுடையகையெழுத்து சரியாக அமைய நேர்கோடுவளைகோடு களில் படங்கள் வரையப் பயிற்சிகொடுக்க வேண்டும். அதற்கு இந்தக்கையேட்டை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஒருவருக்கு தீடீரென மாரடைப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
மாரடைப்பு என்பது திடீரென ஏற்படும் உடல் நல பிரச்சினை ஆகும். இந்த பாதிப்பால் நிறைய பேர்கள் உயிரிழக்கிறார்கள். மாரடைப்பு ஏற்பட்டவருக்கு சரியான நேரத்தில் நாம் முதலுதவி செய்தால் அவர்களின் உயிரை நாம் காப்பாற்ற முடியும்.
ஒரு உயிரை காப்பது தான் இருக்கிறதிலயே தலைசிறந்த செயல். அதையும் நாம் சரியான நேரத்தில் செய்தால் அதைவிட பெரிய விஷயம் கிடையாது. அந்தவகையில் சரியான நேரத்தில் செய்யப்படும் முதலுதவியின் மூலம் நிறைய உயிர்களை காப்பாற்ற நம்மால் முடியும்.
முதலுதவி என்பது ஆபத்தான நிலையில் உள்ளவருக்கு உடனே விரைவாக சரியான முறையில் செய்யப்படும் மருத்துவ உதவியாகும். விபத்து ஏற்பட்டவருக்கு, நீரில் மூழ்கியவருக்கு மற்றும் ஹார்ட் அட்டாக் போன்ற பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கு முதலுதவி அவசியம்.
திடீர் மாரடைப்பு
ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் அவர்க்கு எந்த மாதிரியான உதவிகளை பண்ண வேண்டும் என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் இதனால் உயிருக்கு ஆபத்தாகி விடுகிறது. எனவே மாரடைப்புக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 17.9 மில்லியன் மக்கள் இருதய நோய்களால் இறக்கின்றனர், இது உலகளவில் இறப்புகளில் 31% ஆகும். உண்மையில், அனைத்து இறப்புகளிலும் 85% மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
இது குறித்து இருதய நிபுணர் கூறுகையில் மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு உடனடியாக நீங்கள் முதலுதவி சிகிச்சை அளித்தால் அவர் உயிர் பிழைக்க நிறையவே வாய்ப்பு உள்ளது என்கிறார்.
எனவே ஒருவருக்கு ஏற்படும் மாரடைப்பின் அறிகுறிகளை வைத்து அவருக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை நாங்கள் கூறுகிறோம்.
மாரடைப்பின் அறிகுறிகள்
இதயத்தில் வரும் பிரச்சினைகளை பொருத்த வரை இரண்டு விஷயங்கள் உள்ளன.
1. மாரடைப்பு மற்றொன்று மார்பு வலி இந்த இரண்டுக்கும் இடையே சில வித்தியாசங்கள் உள்ளது.
மார்பு வலி ஒருவருக்கு ஏற்பட்டால் அது 15-20 நிமிடங்களுக்கும் குறைவாக நீடிக்கும். இந்த வலியால் இதய தசைகளுக்கு எந்த பாதிப்பும் நேராது.
இதுவே மாரடைப்பு ஏற்பட்டால் 20-30 நிமிடங்கள் வலி நீடிக்கும். இதய தசைகளுக்கும் பெரிய சேதத்தை உண்டாக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மார்பில் 20 நிமிடங்களுக்கு மேல் வலி நீடித்தல்
தாடைக்கு வலி பரவுதல்
தலைசுற்றல்
வியர்வை
மூச்சு விட சிரமம்
ஏற்படும். மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனே இந்த 6 முதலுதவி விஷயங்களை செய்யுங்கள்.
பாதிக்கப்பட்ட நபரை வசதியாக அமர வையுங்கள்
மாரடைப்பு அறிகுறிகள் இருக்கும் நபர் படுத்துக் கொள்ள விரும்பினால் அவர் படுத்துக் கொள்ளட்டும். அவரை வசதியாக இருக்க விடுங்கள்.
மூச்சுவிட வசதி
அந்த நபர் நல்ல காற்றை சுவாசிக்க ஏதுவாக காற்றோட்டமாக விடுங்கள். புதிய காற்றை சுவாசிக்கட்டும். அவர்களைச் சுற்றி மற்றவர்கள் நிற்காதீர்கள். அவருக்கு காற்று வர இடம் வருமாறு செய்யுங்கள்.
இறுக்கமான ஆடைகளை அவிழ்த்து விடுங்கள்
அந்த நபர் இறுக்கமாக ஆடை அணிந்து இருந்தால் அதை அவிழ்த்து விடுங்கள். இது அவர் மேலும் நன்றாக சுவாசிக்க உதவியாக இருக்கும்.
அஸ்பிரின் மருந்து கொடுங்கள்
குறிப்பாக உடலில் செல்கின்ற இரத்தம் உறைவதால் மாரடைப்பு ஏற்படுகிறது. இரத்தம் இதயத்தை அடைவது தடுக்கப்படுகிறது. எனவே அஸ்பிரின் மாத்திரையை எப்பொழுதும் வீட்டிலேயே வைத்திருங்கள். இந்த மாத்திரை உங்களுக்கு அடிக்கடி பயன்படா விட்டாலும் ஆபத்தான சூழ்நிலையில் பயன்படும். இது இரத்தம் உறைந்ததை சரி செய்து இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை பாய்ச்சும்.
அவசர எண்ணை அழைக்கவும்
குடிக்க சிறிது தண்ணீர் கொடுங்கள்
அவர் குடிக்க ஒரு கிளாஸ் குளிர்ந்த நீரை குடித்து ரிலாக்ஸ் செய்யுங்கள்.
அவசர எண்ணை அழைக்கவும்
சில நேரங்களில் ஆம்புலன்ஸ் வர சிறிது நேரம் ஆகலாம். ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்க வேண்டாம். உடனடியாக அந்த நபரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.
மேலும் அவசர எண் 102 யை உங்க மொபைல் போனில் எப்பொழுதும் பதிந்து வைத்துக் கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட நபரை பார்த்து பீதியடைய வேண்டாம்.
அதே நேரத்தில் இது போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் அருகில் எந்த மருத்துவமனை வசதி என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும். அதே மாதிரி உங்க வீட்டைச் சுற்றி உள்ள மருத்துவமனையின் தொடர்பு விவரங்களையும் நீங்கள் அறிந்து வைத்து இருக்க வேண்டும். ஏனெனில் அவசர நேரத்தில் கூகுலில் தேட நேரம் இருக்காது. எனவே அவசர காலங்களில் உங்களுக்குத் தேவைப்படும் அனைத்து விவரங்களையும் அறிந்து சேகரித்து வைத்து இருங்கள்.
மேற்கண்ட முதலுதவி விஷயங்களை நீங்கள் சரியாக பின்பற்றினால் உயிருக்கு போராடும் ஒருவரின் உயிரை உங்களாலும் காப்பாற்ற முடியும்
வீட்டில் வாஸ்து குறைபாட்டால் தேவையற்ற பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கின்றதா?
ஒருவருக்கு வீட்டில் வாஸ்து சரியாக இல்லை என்றால், கட்டாயம் அவர்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடும் என்று சொல்கிறது ஜோதிடம். வாடகை வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும், சொந்த வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும், முடிந்தவரை வீட்டின் அமைப்பு, குடும்பத் தலைவரின் ஜாதகத்திற்கு ஏற்ப அமைவது தான் நல்லது. அதாவது குடும்பத் தலைவருக்கு ஏற்ற திசையிலாவது அவரவர் வசிக்கும் வீட்டை பார்த்துக்கொள்ள வேண்டும். சரி. அப்படி முடியாதபட்சத்தில் என்ன செய்வது? எல்லோராலும் வாடகை வீட்டை, தங்களுடைய ஜாதக கட்ட படி தேர்ந்தெடுத்துக் கொள்வது என்பது சாத்தியம் இல்லை. சொந்த வீடாக இருந்தாலும் 100 சதவிகிதம் வாஸ்து சரியாகத்தான் அமைத்திருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது.
எடுத்துக்காட்டுக்கு, உங்களுடைய வீட்டு வாசல் காலை எடுத்துக் கொள்வோம். வாசல்கால், செங்குத்தாக நேராகத் தான் அமைந்திருக்க வேண்டும். அதாவது நம்முடைய நில வாசல் வாசப்படி, முன்வாசல் வாசல் சட்டம் எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். உங்களுடைய அந்த நில வாசல்கால் ஆனது, வீட்டின் உள் பக்கமுபம் சாய்ந்து இருக்கக்கூடாது. வீட்டின் வெளி பக்கமும் சாய்ந்து இருக்கக் கூடாது. இதை பார்க்கும் போது நமக்கு தெரியாது.

அந்த வாசல் காலை பொருத்தும் போது, சில சமயம் அது உள்பக்கம் லேசாக சாய்ந்து இருக்கவும். அல்லது வெளிப்பக்கம் லேசாக சாய்ந்து இருக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. பல பேர் வீடுகளில், ஆசாரிகளுக்கு தெரியாமலேயே அப்படி அமைந்துவிடும். வாசல் கால் சரியாகப் பொருத்தப்படாத பட்சத்திலும் வீட்டில் பிரச்சனைகள் அதிகரிக்கும். குறிப்பாக கணவன்-மனைவிக்குள்!
ஆனால் வாசல் காலினால் தான், பிரச்சனை என்று நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. இதனால் வீட்டில் பிரச்சினை என்று பல பரிகாரங்களை செய்து கொண்டு வருவோம். பிரச்சனை தீர்ந்த பாடாக இருக்காது. வீட்டில் நிம்மதியான மகிழ்ச்சியான, வாழ்க்கையும் அமையாது. இப்படி உங்கள் வீட்டில் இருக்கும் சின்ன சின்ன குறைபாடுகள் கூட, பெரிய பெரிய அளவில் தாக்கங்களை உங்களுக்கு கொடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் உச்சரிக்கப்பட வேண்டிய ஒரு மந்திரம் உள்ளது.
இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டால் வாஸ்து தோஷம் எல்லாம், சரியாகிவிடும் என்று கூறிவிடமுடியாது. உங்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறைக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கான மந்திரம் இதோ!
மந்திரம்:
‘ஓம் ரீம் ஆம்’
இதை சொல்லி விட்டால் எல்லாம் சரியாகி விடுமா? என்ற எண்ணத்தோடு உச்சரித்தால் இது கட்டாயம் பலிக்காது. சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து, வாஸ்து பகவானை மனதார நினைத்து, சம்மணம் போட்டு ஒரு பாறையின் மீது அமர்ந்து, 108 முறை தொடர்ந்து 48 நாட்கள் உச்சரித்து பாருங்கள். நல்ல முன்னேற்றம் இருப்பது போல, உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டும், தொடர்ந்து வழிபாட்டை செய்யுங்கள்.
எதையுமே நம்பிக்கையோடு செய்யும் பட்சத்தில் உங்கள் கையில் ஒரு பிடி மண்ணை எடுத்தால் கூட, அது பொன்னாக மாறிவிடும். இல்லை என்றால், நீங்கள் எடுக்கும் பொன் கூட மண்ணாய், மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. நம்பிக்கை தான் வாழ்க்கை! என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.
Subscribe to:
Posts (Atom)