Search

10ம் தேதி பட்டினி போராட்டம் தனியார் பள்ளிகள் சங்கம் முடிவு.

Wednesday, 1 July 2020

ஆசிரியர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் சார்பில், வரும், 10ம் தேதி, பட்டினி போராட்டம் நடத்தப்படும்' என, தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார் அறிக்கை:

தனியார் பள்ளிகளை திறக்காமல், மாணவர் சேர்க்கைநடத்தாமல், புதிய, பழைய கட்டணத்தை வசூலிக்காமல், ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியவில்லை. பள்ளி நிர்வாகிகள், வாங்கிய கடனுக்கு, வட்டி கட்ட முடியாமல், தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர்.தனியார் பள்ளிகள், 2018 - 19ம் ஆண்டு, இலவச கட்டாய கல்வி சட்டத்தில் சேர்த்த, 25 சதவீத மாணவர்களுக்கு, கல்வி கட்டணம், 40 சதவீதம் நிலுவையில் உள்ளது. 2019 - 20ம் ஆண்டு கல்வி கட்டண பாக்கி, முழுமையாக நிலுவையில் உள்ளது. இதை, அரசு உடனடியாக வழங்கினால் கூட, தனியார் பள்ளிகள் சமாளிக்க முடியும். இத்துடன் பள்ளி வாகனங்களுக்கு வரி ரத்து, தொடர் அங்கீகாரத்தை நிபந்தனை இல்லாமல் புதுப்பித்தல், ஓராண்டுக்கு, இ.பி.எப்., - இ.எஸ்.ஐ., சொத்து வரியிலிருந்து விலக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, மத்திய, மாநில அரசுகளிடம் பலமுறை வலியுறுத்தி உள்ளோம்.

தமிழகத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியரல்லாத ஊழியர், டிரைவர் என, ஐந்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளோம். இதை உணர்த்த, வரும், 10ம் தேதி காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை, அவரவர் வீடுகளுக்கு முன், சமூக இடைவெளியில், பட்டினி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
Read More »

E - PASS நடைமுறையில் மாற்றம்

தமிழகத்தில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, 'இ -- பாஸ்'நடைமுறை தொடரும் என, அரசு அறிவித்திருப்பது, பொது மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதில், பல்வேறு குளறுபடிகள் நிலவுவதால், 'இ- - பாஸ்' நடைமுறையை மாற்ற வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

இன்று முதல், ஒரு மாவட்டத்திலிருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு செல்லவும், வெளி மாநிலங்களுக்கு செல்லவும், 'இ- - பாஸ்' அவசியம் என, அரசு அறிவித்துள்ளது.

'இறப்புக்கு செல்ல விரும்புவோர், இறந்தவரின் ரத்த சொந்தமாக இருக்க வேண்டும். இறந்தவரின் இறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். 'திருமணத்திற்கு செல்பவரும், திருமணம் செய்து கொள்ளும் குடும்பத்தினரின், ரத்த சம்பந்த உறவாக இருக்க வேண்டும்'என, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

சிலர் தங்களின் திருமணத்தில், ரத்த சம்பந்தம் இல்லாதவர்கள் பங்கேற்க வேண்டும் என, விரும்புகின்றனர்.அதுபோன்ற நபர்கள், 'இ -- பாஸ்' கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.

மேலும், அவசர தேவைக்கு செல்ல விரும்புவோரும், 'இ -- பாஸ்' கிடைக்காததால், விதியை மீறி செல்கின்றனர். அதனால், நோய் பரவுவதாக கூறப்படுகிறது.இதைதடுக்க, 'இ -- பாஸ்' வழங்கும் நடைமுறையில், அரசு மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.இது குறித்து, அதிகாரிகள் சிலர் கூறியதாவது:அரசு வழங்கும், 'இ -- பாஸ்'களில், 'கியூஆர் கோடு' உள்ளது. எனவே, வெளி மாவட்டம் செல்ல விரும்பும் அனைவருக்கும், எவ்வித நிபந்தனையுமின்றி, 'இ -- பாஸ்' வழங்கலாம்.மாவட்ட எல்லையில், 'இ -- பாஸ்' வைத்திருந்தால் மட்டுமே, உள்ளே அனுமதிக்க வேண்டும்.

'கியூ ஆர் கோடை ஸ்கேன்' செய்யும் போதே, அவர் மாவட்டத்திற்கு வந்தது உறுதிப்படுத்தப்பட்டு, அனைத்து துறையினருக்கும், தெரிவிக்கப்பட வேண்டும்.அவர் எங்கு செல்கிறாரோ, அங்கு அவரை பரிசோதனை செய்வதுடன், தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம்; இது எளிதாக இருக்கும்.தற்போது, 'இ -- பாஸ்' வழங்க மறுப்பதால், பெரும் பாலானோர், இரு சக்கர வாகனம் உட்பட ஏதேனும் வாகனத்தில் செல்கின்றனர்.போலீஸ் சோதனை சாவடிகள் எங்கு உள்ளதோ, அதற்கான மாற்று வழியில் சென்று விடுகின்றனர்.இதுபோல் வருவோரை, மாவட்ட நிர்வாகத்தால், கண்காணிக்க முடிவதில்லை. இதுபோன்ற நபர்கள், நோய் தொற்றுடன் வந்தால், அவர் செல்லும் பகுதியில், நோய் பரவல் ஏற்படுகிறது.

எனவே, அரசு, 'இ -- பாஸ்'வழங்கும் நிபந்தனைகளை தளர்த்தி, அனைவரையும் அனுமதித்து, அவர்களை தனிமைப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால், நோய் பரவலை தடுக்கலாம்.திருட்டுத்தனமாக மாவட்டங்களுக்குள் நுழைவது, போலி, 'இ -- பாஸ்' தயாரிப்பது, விற்பது போன்ற முறைகேடுகளையும் தடுக்கலாம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Read More »

ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை? - பள்ளிக்கல்வித்துறை

பத்தாம் வகுப்பு காலாண்டு மற்றும் அரையாண்டுதேர்வுகளை எழுதாத  மாணவர்களை எப்படி தேர்ச்சி அடைய செய்வது  கேள்வி எழுப்பிய தலைமை ஆசிரியர் சங்க தலைவர் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய நோட்டீசில்,  17b பிரிவின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என பள்ளிக்கல்வித்துறை கேள்வி எழுப்பியுள்ளார். இது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More »

பள்ளிகள் திறப்பு , தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.



இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் முதல் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதுடன் மாணவர்களுக்கு தேர்ச்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இதனைபோல், தமிழகத்திலும், முதலில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் அனவைரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு நடத்த தீவிரமாக ஈடுபட்ட நிலையில், கொரோனா தாக்கம் அதிகரித்தால், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், 11-ம் வகுப்பு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.

 இருப்பினும், கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஜூன் மாதத்தில் திறக்க வேண்டிய பள்ளிகள் ஜூலை மாதம் பிறந்தப் பின்னும் திறக்கப்படவில்லை. மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பது தாமதமாகி வருகிறது. இருப்பினும், பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பதற்காக நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.  12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தற்போது வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதிய பிறகே முடிவுகளை வெளியிட முடியும். மீண்டும் பேருந்து இயக்கினால் மட்டுமே மாணவர்களை தேர்வு எழுத வைக்க முடியும் என்றார். ஜூலை முதல் வாரத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் என ஏற்கனவே கூறியிருந்தார். முதல்வரிடம் ஆலோசித்த பிறகே 12-ம் வகுப்பு தேர்வு முடிவு பற்றி அறிவிக்கப்படும் என்று தற்போது கூறியுள்ளார்.

மேலும், அனதை்து துறை ஆலோசனைக்கு பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார். மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பெற்றோர்களிடம் கருத்துக் கேட்ட பின்பே பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். நிலைமை சரியான பின்பே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்; பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம். தற்போதைக்கு பள்ளிகளை திறப்பதற்கான சூழல் இல்லை என்றும் தெரிவித்தார்.
Read More »

IFHRMS மூலம் ஜூலை மாத ஊதியப் பட்டியல் தயார் செய்து கருவூலகங்களில் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

பள்ளிக் கல்வி - பெரம்பலூர், நாமக்கல், தருமபுரி, திண்டுக்கல், தூத்துக்குடி மற்றும் கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் IFHRMS மூலம்  ஜூலை மாத ஊதியப் பட்டியல் தயார் செய்து கருவூலகங்களில் சமர்ப்பித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

பள்ளிக் கல்வித்துறையின் கீழுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் / பள்ளிகளிலும் IFHRMS மூலம் சம்பளம் மற்றும் இதர பட்டியல்கள் கருவூலத்திற்கு சமர்ப்பிக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. மதுரை , திருநெல்வேலி , திருவாரூர் , ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஜுன் 2020 மாத சம்பள பட்டியல் IFHRMS மூலம் கருவூலகங்களில் சமர்ப்பிக்கப்பட்டது. பெரம்பலூர் , நாமக்கல் , தருமபுரி , திண்டுகல் , தூத்துகுடி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இம்மாதம் இப்பணியினை முடிக்க கருவூலகத்துறை திட்டமிடப்பட்டுள்ளது எனவே மேற்கண்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் / அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியார்களின் விவரங்களை IFHRMS மென்பொருளில் பதிவு செய்து , ஜுலை 2020 மாத ஊதிய பட்டியலை IFHRMS மூலம் கருவூலகங்களுக்கு சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவ்வாறு சமர்ப்பித்தப்பிறகு அவ்விவரங்களை இணைக்கப்பட்ட படிவத்தில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . இவற்றில் ஏதேனும் ஐயப்பாடுகள் இருப்பின் சார்ந்த கருவூலகத்தினை தொடர்பு கொண்டு அவற்றை நிவர்த்தி செய்து நிலுவை ஏதுமின்றி சமர்ப்பித்திட அறிவுறுத்தப்படுகிறார்கள். எனவே அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகங்களின் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் ( DDO ) உரிய பணியினை முடிக்க அறிவுறுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One