Search

Teachers Wanted!

Tuesday, 30 June 2020

Read More »

வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு: வங்கி பணியாளர்கள் தேர்வு நிறுவனம் (IBPS) அறிவிப்பு

வங்கியில் அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி 2020 தேர்வு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வங்கி ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு தன்னாட்சி அமைப்பான இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐபிபிஎஸ்), பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கான அதிகாரிகள், (ஆர்ஆர்பி) அலுவலர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விவரங்களை வெளியிட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் நாளை தொடங்கி ஜூலை 21 வரை ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.ஐபிபிஎஸ் அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் பல்வேறு நிலை தேர்வுகள் மூலம் தேர்வு செய்கிறது.இது பல்வேறு இடஒதுக்கீட்டுக்கான பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு முன் தேர்வுப் பயிற்சியையும் நடத்துகிறது. ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி ஆட்சேர்ப்புக்கான முன் தேர்வு பயிற்சி ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 29 வரை நடைபெறும். இருப்பினும், இது தேர்வுக்கு முந்தைய பயிற்சியை ரத்து செய்யலாம் என்று அறிவித்துள்ளது. COVID-19 தொற்றுநோய் காரணமாக, தேர்வர்களின் பாதுகாப்பிற்காக, இந்த காலகட்டத்தில் பயிற்சி நடத்தப்படாமல் போகலாம் என்று ஐபிபிஎஸ் தெரிவித்துள்ளது.முதல்நிலை தேர்வானது செப்டம்பர் / அக்டோபரில் நடைபெறும். ஆனால் தேர்வு தேதிகளை ஐ.பி.பி.எஸ் முடிவு செய்யவில்லை. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். இந்த ஆட்சேர்ப்பில் 43 பிராந்திய கிராமப்புற வங்கிகள் பங்கேற்கின்றன.
Read More »

CPS - புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் - RTI Reply!


புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் என தகவல் உரிமை சட்டத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் பதில ளித்துள்ளது.புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இது வரை 26 மாநிலங்களைச் சேர்ந்த 33.33 லட்சம் ஊழியர்கள் , 17.89 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் சேர்ந்துள்ளனர்.

அவர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்கு தொகையை சேர்த்து 1.51 லட்சம் கோடி ரூபாய் ஆணையத்திடம் உள்ளது. இந்த திட்டத்தில் மேற்குவங்கம் , திரிபுரா மாநிலங்கள் இணையவில்லை . தமிழகம் ஏப் . , 1 ல் செயல்படுத்தினாலும் , இதுவரை அரசு ஊழியர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்குத் தொகை ஆயிரம் கோடி ரூபாயை ஆணையத்திடம் செலுத்தவில்லை.

இதனால் ஓய்வூதிய பணப்பலன்களை பெற முடியாமல் ஓய்வூதியர்கள் மற்றும் இறந்தோரின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இதுவரை 4,152 பேர் விண்ணப்பித்ததில் 1,752 பேருக்கு மட்டுமே பணப்பலன் கிடைத்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் , ஓய்வூதிய நிதி ஒழுங் காற்று மற்றும் மேம்பாட்டு ஆணை யத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேருவது குறித்து இதுவரை எந்த ஒப்பந்தமும் தமிழக அரசு செய்யவில்லை மேலும் அந்த திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்தான் , ' ' என ஆணையம் பதில் ளித்துள்ளது. இதனால் ஏற்கனவே இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்து வதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை இதனை செயல்படுத்த வேண்டு மென , அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்
Read More »

உபரி ஆசிரியர் விபரம் தாக்கல் செய்ய பள்ளிகளுக்கு கெடு!

பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை விகிதத்துக்கு அதிகமாக உள்ள ஆசிரியர்களின் பட்டியலை, வரும், 5ம் தேதிக்குள் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்ட விதிகளின் படி, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றும், ஒரு பாடத்துக்கு ஒரு ஆசிரியர்என்றும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதில், மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் பணியாற்றும் கூடுதல் ஆசிரியர்களை, மாணவர்கள் அதிகம் உள்ள பள்ளிகளுக்கு மாற்ற, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.இந்த நடவடிக்கையை மேற்கொள்ள, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், மாணவர் விகிதத்தை கணக்கிட்டு, பட்டியல் சேகரிக்கப்படுகிறது.இதில், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் மட்டும், கூடுதலாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் பட்டியலை, பள்ளிகள் தாக்கல் செய்யவில்லை.

எனவே, வரும், 5ம் தேதிக்குள் உபரி ஆசிரியர் பணியிடங்களை தாக்கல் செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு,சம்பளம் வழங்கப்படாது என, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்
Read More »
 

Most Reading

Tags

Sidebar One