Search
8 மாவட்டங்களுக்கு இன்று கன மழை வாய்ப்பு !!
- திருவண்ணாமலை,
- சேலம்,
- தர்மபுரி,
- கிருஷ்ணகிரி,
- வேலுார்,
- நீலகிரி,
- கோவை,
- தேனி
மாவட்டங்களில் இன்று(ஜூன் 29) ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை பெய்யும்.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், விழுப்புரம், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும். ஜூலை 2 வரை, மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம், என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பகுதி நேரஆசிரியா்களை நிா்வாகப் பணிகளில் ஈடுபடுத்த அறிவுறுத்தல்
பொது முடக்கம் அமலில் உள்ள சூழலில் பகுதி நேர ஆசிரியா்களை பள்ளிகள் திறக்கப்படும் வரை நிா்வாகப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பகுதி நேர ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். மாணவா்களுக்கு ஓவியம், கலை, தையல் உள்பட சிறப்புப் பாடங்களை கற்றுத் தருகின்றனா். மேலும், அலுவலகப் பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவா்.இதற்கிடையே பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. அதனால், பகுதி நேர ஆசிரியா்களுக்கு கற்பித்தல் பணியில்லாத சூழல் நிலவுகிறது. எனினும், வாழ்வாதாரம் கருதி ஆசிரியா்களுக்கான ஊதியம் பிடித்தமின்றி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பள்ளிகள் திறக்கப்படும் வரை பகுதிநேர ஆசிரியா்களை நிா்வாகப் பணிகளில் பயன்படுத்திக் கொள்ள தலைமையாசிரியா்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது
Read More »
Tags:
Part time teachers
ஆன்லைன் கல்விக்கான PRAGYATA திட்டம்: நீடித்த பயனைப் பெற நெறிமுறைகளை வகுத்தது மத்திய அரசு...
கொரோனோ ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன இதன் காரணமாக மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகள் நடத்தி வருகின்றன இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்த நெறிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வடிவமைத்துள்ளது
இதில் ஆன்லைன் கல்விக்கான அறிமுகம் மற்றும் ஆன்லைன் முறை கல்வி என்றால் என்ன? மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கான ஆன்லைன் கல்வி குறித்த விளக்கங்கள் ஆன்லைன் கல்வி முறையை பின்பற்றும் மாணவர்கள் உடல் நலனை எவ்வாறு பேண வேண்டும்? என்கிற வழிமுறைகள்
ஆன்லைன் கல்வி முறையை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தான வழிமுறைகள் ஆகியவை இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆன்லைன் கல்விக்கான வழிமுறைகளை கொண்டு அந்தந்த மாநிலங்கள் தங்களின் வசதிகளுக்கேற்ப வழிமுறைகளை வகுத்து கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
PRAGYATA
மேலும் மாநில மற்றும் தேசிய அளவில் கொரோனா ஊரடங்கிற்கு பின்பும் ஆன்லைன் கல்வி முறையை நீடித்த ஒரு திட்டமாக கொண்டு செல்வதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் கல்வி அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் மத்திய அரசின் இந்த வழிகாட்டு நெறிமுறையில் வலியுறுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
பிளஸ் 1, பத்தாம் வகுப்பு வருகைப்பதிவு: புகாருக்கு இடமின்றி பதிவேற்ற உத்தரவு
பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களின் வருகைப் பதிவை எந்தவித புகாருக்கும் இடமின்றி இணையதளத்தில் கவனமாக பதிவேற்ற வேண்டும் என பள்ளிகளுக்கு அரசுத் தோவுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக அரசு தோவுகள் இயக்குநா் மு.பழனிச்சாமி அனைத்து முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாவட்ட கல்வி அலுவலகங்கள் அரசு தோவுத்துறையின் இணையதளத்தில் இருந்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுடைய முகப்பு தாளை திங்கள்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள மாணவா்களுடைய வருகைப் பதிவேட்டை சரிபாா்த்து பள்ளி நாள்கள் எத்தனை? மாணவா்கள் வருகை தந்த நாள்கள் எத்தனை? என்பதை அதில் குறிப்பிட வேண்டும்.
அதன்பின்னா் செவ்வாய்க்கிழமை முதல் அரசு தோவுத்துறையின் இணையதளத்தில் வருகைப் பதிவேடு விவரங்களைப் பதிவேற்றம் செய்யவேண்டும். வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீதம் மதிப்பெண், காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீதம் என மொத்தம் 100 சதவீதத்துக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.
இந்தப் பணிகள் யாவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் என்பதால், ரகசியம் காத்து செயல்பட வேண்டும். இந்தப் பணிகளில் எவ்வித புகாருக்கும் இடம் கொடுக்காமல் கவனமாக செயல்படவேண்டும். மாவட்ட கல்வி அலுவலா்கள் தலைமையில் நடைபெறும் இந்த முகாமை, முதன்மை கல்வி அலுவலா்கள் தவறாது பாா்வையிட்டு, அரசு தோவுகள் இயக்குநருக்கு அறிக்கை அனுப்பவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய வரி நடைமுறையில் ஊழியர்களின்பயணப் படிக்கு வரிவிலக்கு சலுகை அறிவிப்பு.
பட்ஜெட்டில் புதிய வரி நடை முறையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார். இந்தப் புதிய வரி நடைமுறை யானது குறைந்த வரி விதிப்பு நடைமுறையாக அறிமுகப்படுத் தப்பட்டது. ஆனால், இந்தப் புதிய வரி நடைமுறையில் முன்பு வழங் கப்பட்டு வந்த பல வரி விலக்கு சலுகைகள் நீக்கப்பட்டன.தற்போது பயணப்படிக்கான வரி சலுகை அனுமதிக்கப்பட்டுள் ளது. அதன்படி ஊழியர்களுக்கு வழங்கப்படும் பயணச் செலவு களுக்கான படி, சுற்றுலா பயணத் துக்கான செலவுகள், பணியிட மாறுதலுக்கான பயண செலவுகள், வேலை நிமித்தமான பயணச் செலவுகள் போன்றவற்றுக்கு வரி விலக்கு கோரலாம் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.
மேலும் பயணங் களின் போது ஆகும் இதர செலவு களும் நிறுவனம் வழங்கும்பட்சத் தில் அதற்கும் வரிவிலக்கு கோர லாம்.ஆனால், அலுவலகத்தில் இல வச உணவு, தேநீர் போன்ற பானங் களுக்கான செலவுகள் இதில் சேர்க் கப்பட மாட்டாது எனவும்அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்வையற்றோர், காது கேளாதோர் மற்றும் பிற மாற்றுத் திறனாளி ஊழியர்கள் கூடுதலாக மாதம் ரூ.3,200 வரை வரி விலக்குப் பெற முடியும்.
Read More »
மேலும் பயணங் களின் போது ஆகும் இதர செலவு களும் நிறுவனம் வழங்கும்பட்சத் தில் அதற்கும் வரிவிலக்கு கோர லாம்.ஆனால், அலுவலகத்தில் இல வச உணவு, தேநீர் போன்ற பானங் களுக்கான செலவுகள் இதில் சேர்க் கப்பட மாட்டாது எனவும்அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்வையற்றோர், காது கேளாதோர் மற்றும் பிற மாற்றுத் திறனாளி ஊழியர்கள் கூடுதலாக மாதம் ரூ.3,200 வரை வரி விலக்குப் பெற முடியும்.
மாணவர்கள் வங்கி கணக்கில் சத்துணவு திட்டத்திற்கான பணம்: அரசு முடிவு
பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் வங்கி கணக்கில் பணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான விபரங்களை அனுப்பும்படி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது.ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் உணவுக்கு வழியின்றி சிரமப்படுகிறார்கள்.
சத்துணவுக்கான பணத்தை மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தினால் மாணவர்களும்,அவர்களது குடும்பங்களும் பயன் பெறும். இதனை கருத்தில் கொண்டு சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் வங்கி கணக்கு விபரங்களை சேகரித்து உடனடியாக அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
Read More »
இதற்கான விபரங்களை அனுப்பும்படி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது.ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் உணவுக்கு வழியின்றி சிரமப்படுகிறார்கள்.
சத்துணவுக்கான பணத்தை மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தினால் மாணவர்களும்,அவர்களது குடும்பங்களும் பயன் பெறும். இதனை கருத்தில் கொண்டு சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் வங்கி கணக்கு விபரங்களை சேகரித்து உடனடியாக அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்!
10ஆம் வகுப்பு சமூக அறிவியல் புதிய பாடப்புத்தகம்
1.இரண்டு தொகுதியாக இருந்த பாடப்புத்தகம் ஒரே தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது.
2.வரலாறு பாடப்பகுதியில் இருந்த அனைத்து தலைப்பின்கீழ் வினாக்களும் நீக்கப்பட்டுள்ளன.
3. 53 சரியான விடை நீக்கப்பட்டுள்ளது.
வரலாறு 17 , புவியியல் 12 , குடிமையியல் 11 , பொருளியல்13.
4 . 37 கோடிட்ட இடங்கள் நீக்கப்பட்டுள்ளது.
வரலாறு 17, புவியியல் 2, குடிமையியல் 3, பொருளியல்15.
5. 47 இரண்டு மதிப்பெண் வினாக்கள் நீக்கப்பட்டுள்ளது.
வரலாறு 22, புவியியல் 7, குடிமையியல் 4, பொருளியல் 14.
6. 23 ஐந்து மதிப்பெண் வினாக்கள் நீக்கப்பட்டுள்ளது.
வரலாறு 4, புவியியல் 7, குடிமையியல் 3, பொருளியல் 9.
7.சரியானகூற்று 17 நீக்கப்பட்டுள்ளது.
8.பொருத்துக 5 நீக்கப்பட்டுள்ளது
புவியியல் 4 ஆம் பாடத்தில்
9. வேறுபடுத்துக 4 நீக்கப்பட்டுள்ளது.
10.காரணம் கூறுக 2 நீக்கப்பட்டுள்ளது.
11.காவிரி - தாமிரபரணி வேறுபடுத்துக புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது.
RTI - அரசுப் பணியில் சேருவதற்கு முன்பு உயர்கல்வி பயின்று தோல்வியுற்ற நிலையில் அரசுப் பணியில் சேர்ந்த பிறகு அதனை எழுதி தேர்ச்சி பெற தடையின்மை சான்று வாங்க வேண்டுமா ?
ஒரு ஆசிரியர் அரசுப் பணியில் சேருவதற்கு முன்பு உயர்கல்வி பயின்று தோல்வியுற்ற நிலையில் அரசுப் பணியில் சேர்ந்த பிறகு அதனை எழுதி தேர்ச்சி பெற தடையின்மை சான்று வாங்க வேண்டியது இல்லை தேர்வுகள் எழுத சிறு விடுப்புக்கு விண்ணப்பித்து விட்டு எழுதலாம். பொது தகவல் அலுவலர், இணை இயக்குனர் அலுவலகம், பள்ளிக்கல்வித்துறை, சென்னை
Read More »
வகுப்பு வாரியாக மாணவர்களுக்கு Whatsapp குழுக்களை அமைத்திட ஆசிரியர்களுக்கு உத்தரவு - CEO Proceedings
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்குரிய பாடங்களை வீட்டிலிருந்து வீடியோ மூலம் கற்க e-learn.tnschools.gov.in என்ற இணையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ்விணையத்தை மாணவர்கள் பயன்படுத்திட எதுவாக பள்ளிகள் மூலம் தகவல் தெரிவித்திடல் வேண்டும். இது சார்ந்து உரிய வழிகாட்டுதலை மாணவர்களுக்கு வழங்கிட ஏதுவாக வகுப்பு வாரியாக மாணவர்களின் அலைபேசி எண்களைக் கொண்டு Whatsapp குழுக்களை அமைத்திடவும் , அதன் வாயிலாக மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி தொடர்நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களையும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- CEO, ஈரோடு
Read More »
இவ்விணையத்தை மாணவர்கள் பயன்படுத்திட எதுவாக பள்ளிகள் மூலம் தகவல் தெரிவித்திடல் வேண்டும். இது சார்ந்து உரிய வழிகாட்டுதலை மாணவர்களுக்கு வழங்கிட ஏதுவாக வகுப்பு வாரியாக மாணவர்களின் அலைபேசி எண்களைக் கொண்டு Whatsapp குழுக்களை அமைத்திடவும் , அதன் வாயிலாக மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி தொடர்நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களையும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- CEO, ஈரோடு
Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூன் 28 ) மேலும் 3,940 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் ( 28.06.2020 ) இன்று 3,940 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 82,275 ஆக அதிகரிப்பு.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,992 பேருக்கு கொரோனா தொற்று.
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
மதுரை - 284
வேலூர் - 84
செங்கல்பட்டு - 183
திருவள்ளூர் - 100
மாவட்ட வாரியான பாதிப்பு.( 28.06.2020 )
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள : 1,443 ( 45,537 )
இன்றைய உயிரிழப்பு : 54 ( 1,079 )
Subscribe to:
Posts (Atom)