தர்மபுரி மாவட்ட நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : நியாய விலைக் கடை
மேலாண்மை : தமிழக அரசு
பணியிடம் : தர்மபுரி
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :
விற்பனையாளர்
Packer
கல்வித் தகுதி : விற்பனையாளர் பணியிடத்திற்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்களும், Packer பணிக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
மொழித் திறன் : விண்ணப்பதாரர் தமிழ் மொழியில் எழுத, படிக்க போதுமான திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் குறைந்தது 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பதாரர், பிற்படுத்தப்பட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
பொது மற்றும் ஓபிசி உள்ளிட்ட இதர வகுப்பு விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் விண்ணப்பத்தைப் பெற்று அதனை பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 18.07.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.07.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மண்டல இணை பதிவாளர்/தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி - 636705.
தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு விளம்பரத்தைக் காணவும்