Search

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்!

Monday, 22 June 2020

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் , ' என , தகவல் உரிமை சட் டத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் பதில ளித்துள்ளது .

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இது வரை 26 மாநிலங்களைச் சேர்ந்த 33.33 லட்சம் ஊழியர்கள் , 17.89 லட்சம் மத் திய அரசு ஊழியர்கள் சேர்ந்துள்ளனர் .

அவர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்கு தொகையை சேர்த்து 1.51 லட்சம் கோடி ரூபாய் ஆணையத்திடம் உள்ளது . இந்த திட்டத்தில் மேற்குவங்கம் , திரிபுரா மாநிலங்கள் இணையவில்லை .

 தமிழகம் ஏப் . , செயல்படுத்தினாலும் , இதுவரை அரசு ஊழியர்களிடம் பிடித்த சந்தா மற்றும் அரசு பங்குத் தொகை ஆயிரம் கோடி ரூபாயை ஆணையத்திடம் செலுத்தவில்லை . இதனால் ஓய்வூதிய பணப்பலன் 2003 1 ல் 16 களை பெற முடியாமல் ஓய்வூதியர்கள் மற்றும் இறந்தோரின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர் .

இதுவரை 4,152 பேர் விண்ணப்பித்ததில் 1,752 பேருக்கு மட்டுமே பணப்பலன் கிடைத்துள்ளது . இந்நிலையில் திண்டுக்கல் ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் , ஓய்வூதிய நிதி ஒழுங் காற்று மற்றும் மேம்பாட்டு ஆணை யத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில கேள்விகளை கேட்டி ருந்தார் .

அதற்கு , ' புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேருவது குறித்து இதுவரை எந்த ஒப்பந்தமும் தமிழக அரசு செய் யவில்லை ; மேலும் அந்த திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்தான் , ' என ஆணையம் பதில ளித்துள்ளது . இதனால் ஏற்கனவே இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்து வதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை ; இதனை செயல்படுத்த வேண்டு மென , அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர் .
Read More »

காலாண்டு தேர்வை ரத்து - காலை மாலை என இரண்டு வேளை சுழற்சி முறையில் வகுப்புகள் - குழு பரிந்துரை!

chi095236

தமிழகத்தில் கொரனோ வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்தது இந்த நிலையில் ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் தற்போது ஜூன் மாதம் முடிவடையும் நிலையிலும் பள்ளிகள் இன்னும் திறக்கவில்லை. அதுமட்டுமின்றி இப்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்பதும் நிலைமை ஓரளவுக்கு சரியானால் ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது


இந்த நிலையில் கல்வித் துறை ஆணையர் பிஜி தாமஸ் தலைமையில் 18 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு அடுத்த ஆண்டு கல்வி ஆண்டு தொடங்குவது குறித்த பரிசீலனைகளை தமிழக அரசு கேட்டுள்ளது. இந்த நிலையில் இந்த குழு மாணவர் நலன் மற்றும் கற்றல் கற்பித்தல் ஆகியவைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை தயார் செய்து வைத்துள்ளது

அந்த அறிக்கையில் செப்டம்பர் மாதம் வழக்கமாக நடைபெறும் காலாண்டு தேர்வை ரத்து செய்து, காலை மாலை என இரண்டு வேளை சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவது, பாடத்திட்டங்களை குறைப்பது, ஆன்லைன் வகுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஆகிய பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்த கல்வியாண்டில் காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது
Read More »

சிலிண்டருக்கான மானியதொகை சரியாக வருகின்றதா - சரிபார்பது எப்படி?

LPG சப்சிடி பணம் சரியாக வருதா இல்லையா அது எப்படி தெரிந்து கொள்வது ?


கேஸ் சிலிண்டர் வாங்கினால் மானிய பணம் சரியான முறையில அக்கவுண்ட்ல வருதா எப்படி தெரிந்துகொள்வது


மத்திய அரசு மாதம் தோறும் நாம் வாங்கும் சிலிண்டருக்கு மானியம் வழங்குகிறது, அந்த பணம் நமது வங்கி கணக்கிற்க்கு தான் அந்த மானியம் வரும்.


ஆனால் நமது விரைவான வாழ்வில் நமது மானிய தொகை நம் வங்கி கணக்கிற்க்கு மாதம் தோறும் வருகின்றதா என்று பலரும் சரிவர கவனிப்பதில்லை


ஒரு சிலர் பணம் வரவில்லை என்று கேஸ்கம்பெனி வாசலில் காத்திருக்கின்றார்கள். ஆனால் அத்னை நீங்கள் எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தே மாதா மாதம் நம் மானிய தொகை சரியாக வந்துவிடுகின்றதா என்று சரிபார்த்துகொள்ளலாம். அதேபோல் மானிய தொகை வரவில்லை என்றால் அதற்க்கும் புகார் கொடுக்கலாம். எப்படி என்று பார்ப்போம்



 முதலில் நீங்கள் www.mylpg.in வெப்சைட்டில் செல்ல வேண்டும்,


அங்கு உங்களுக்கு 3 கேஸ் நிறுவனத்தின் பெயர் இருக்கும், அதில் உங்களின் கேஸ் கனெக்சன் பெயரை க்ளிக் செய்ய வேண்டும். அதில் நீங்கள் NEW USER சென்று உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள். பிறகு லாக் இன் செய்து உள் நுழையுங்கள்.


உள் நுழைந்த பிறகு LPG லிருந்து சம்பத்தப்பட்ட அனைத்து தகவல்களும் உங்களுக்கு கிடைத்து விடும், 


அதில்  TRACK YOUR REFILL என்று உள்ளதை கிளிக் செய்தால் நீங்கள் கேஸ் வாங்கியது ,அதற்க்கு  சப்சிடி தொகை வழங்கப்பட்டதும், எவ்வளவு தொகை வழங்கப்பட்டது என்ற தகவலை நீங்கள் பெறுவீர்கள்.

மேலும் அதில் நீங்கள் கேஸ் புக் செய்யலாம் அதற்க்கு ஆன்லைனில் பணம் கட்டிகொள்ளலாம். 


 மேலும் மானியம் தொகை உங்கள் அக்கவுண்ட் காட்டிலும் வேறு ஒருவரின் அக்கவுண்டில் போனால், அதன் புகாரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்,
மேலும் நீங்கள் 18002333555 என்ற எண்ணுக்குகால் செய்து நீங்கள் புகார் செய்யலாம்.

 இதுவரை நீங்கள் உங்கள் சிலிண்டருக்குண்டான மானியதொகை பெறவில்லை என்றால் சிலிண்டர் கனெக்‌ஷன் யார் பெயரில் உள்ளதோ அவர்கள் ஆதார்கார்டு, மற்றும் வங்கி கணக்கு புத்த்கம் இரண்டையும் உங்கள் கேஸ் கம்பெனிக்கு எடுத்து சென்று விண்ணப்பியுங்கள்
Read More »

1 TO 12 வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளம் அறிமுகம்-பள்ளிக் கல்வித்துறை

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளது.



அதனை பயன்படுத்தி மாணவர்கள் வீட்டிலிருந்து பாடங்களை வீடியோ மூலம் கற்கலாம். ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடங்கள் (தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இணைய முகவரி:
e-learn.tnschools.gov.in
Read More »

பாதியாக குறையும் பள்ளி நாட்கள் கல்விக் கட்டணம் 50 சதவீதம் வரை குறைக்கப் பெற்றோர்கள் எதிர்பார்ப்பு

பாதியாக குறையும் பள்ளி நாட்கள் கல்விக் கட்டணம் 50 சதவீதம் வரை குறைக்கப் பெற்றோர்கள் எதிர்பார்ப்புகொரோனா ஊரடங்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது நிலையில் பள்ளி வேலை நாட்களும் குறையும் என்பதால் கல்வி கட்டணங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் தமிழகத்தைப் பொறுத்தவரை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படும் ஆனால் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிக்கொண்டே போகிறது,,, (தொடர்ந்துப் படிக்கவும்)
Read More »

பாடப்புத்தகங்களை மாணவர்களிடம் நேரில் வழங்க நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Read More »

தலைமை ஆசிரியைக்கு கொரோனா!

அரூரில் திருமணத்தில் பங்கேற்ற தலைமையாசிரியை உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் திரு.வி.க.,நகரைச் சேர்ந்தவர் 53 வயது தலைமையாசிரியை. இவர் சென்னையிலிருந்து வந்து கடந்த, 10-ம் தேதி, கிருஷ்ணகிரியில் தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த திருமணத்தில், சென்னையில் இருந்து, தலைமையாசிரியரின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், தலைமையாசிரியை மற்றும் அவரது கணவர் ஆகியோருக்கு, மூன்று நாட்களுக்கு முன், உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், இருவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள், தருமபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, நேற்று முன்தினம், திருமணம் மற்றும் விருந்தில் பங்கேற்ற குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட, 15 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், தலைமையாசிரியையின் உறவினர்கள் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து திரு.வி.க., நகர் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. அரூர் பகுதியில் கடந்த, மூன்று மாதங்களாக கொரோனா தொற்று இல்லாமல் இருந்த நிலையில், இரண்டு நாட்களில், தலைமையாசிரியை உள்பட 10 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.


 மேலும், திருமணத்தில் பங்கேற்றவர்கள் மூலம், பலருக்கும் கொரோனா பரவ வாய்ப்புள்ளதால், அவர்களுடன் தொடர்புடையவர்களிடம் நடமாடும் வாகனம் மூலம் மாதிரிகள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து 3 மாதமாக தொற்று இல்லாத அரூரில் இவர்கள் மூலம் அதிகமாக பரவ வாய்ப்புள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
Read More »

கொரோனா தடுப்பு பணியில் 400 ஆசிரியர்கள் நியமனம்!



தனிமைப்படுத்தப்பட்ட வீடு களை கண்காணிக்க வார்டு அள வில் தன்னார்வலர்கள் , மாநகராட்சி அதிகாரிகள் , போலீஸார் நியமிக் கப்பட்டுள்ளனர். தன்னார்வலர்கள் முறையாக வீடுவீடாக சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின் றனாரா என களத்துக்கு சென்று ஆய்வு செய்யவும் , வார்டு அளவில் அனைத்து அலுவலர்களையும் ஒருங்கிணைக்கவும் மாநகராட்சி முழுவதும் உள்ள 200 வார்டுகளில் தலா 2 மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் வீதம் 400 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் , தங்கள் ஆய்வு விவரங்களை மாநகராட்சியின் கரோனா தொடர் பான இணையதளத்தில் தினமும் பதிவேற்றவும் மாநகராட்சி உத்தர விட்டுள்ளது.
Read More »

முப்பருவ பாடம், தேர்வு முறை ரத்து : பள்ளி கல்வித்துறை முடிவு

ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு, முப்பருவ பாடம் மற்றும்தேர்வு முறையை, நடப்பு கல்வி ஆண்டில் ரத்து செய்ய, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையால், மார்ச் முதல், பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் செயல்படவில்லை. ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.ஜூன் மாதம் நடைபெற வேண்டிய பள்ளிகள் திறப்பும், காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிகள் மட்டும், 'ஆன்லைன்' வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், பள்ளிகளை நடத்துவதற்கு போதிய நாட்கள் இல்லாததாலும், அனைத்து நாட்களும், மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த முடியாத நிலை உள்ளதாலும், பாடங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, பள்ளிக்கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையில், ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.அக்குழுவினர், முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இரண்டாம் கட்ட அறிக்கையை, இந்த வாரஇறுதியில் தாக்கல் செய்ய உள்ளனர்.அதில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு,முப்பருவ பாடம் மற்றும் தேர்வுகளை ரத்து செய்யும்படி, பரிந்துரைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, காலாண்டு அல்லது முதல் பருவம், ஆகஸ்டில் முடியும் என்பதால், அப்போது தான் பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளது. எனவே, முதல்பருவ பாடங்களை தனியாக நடத்த முடியாது.எனவே, பருவத் தேர்வு மற்றும் அதற்கான பாட முறையை ரத்து செய்து விட்டு, பொதுவாக முக்கிய பாடங்கள் மற்றும் அடிப்படை தேவைக்கான கல்வியை வழங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பழைய முறைப்படி, இறுதியாண்டு தேர்வில், அனைத்து பாடங்களில் இருந்தும் கேள்விகளை இடம் பெறச் செய்யலாம் என, ஆலோசிக்கப்பட்டுள்ளது
Read More »

10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கும் தமிழக அரசு வேலை!




திருப்பூர் மாவட்ட நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 113 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : நியாய விலைக் கடை

மேலாண்மை : தமிழக அரசு

பணியிடம் : திருப்பூர்

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :
விற்பனையாளர் - 90
Packer - 23

மொத்த காலிப் பணியிடம் : 113

கல்வித் தகுதி : விற்பனையாளர் பணியிடத்திற்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்களும், Packer பணிக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

மொழித் திறன் : விண்ணப்பதாரர் தமிழ் மொழியில் எழுத, படிக்க போதுமான திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :
விண்ணப்பதாரர் குறைந்தது 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பதாரர், பிற்படுத்தப்பட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
பொது மற்றும் ஓபிசி உள்ளிட்ட இதர வகுப்பு விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் விண்ணப்பத்தைப் பெற்று அதனை பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 20.07.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.07.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Read More »

IBPS Recruitment 2020: பொதுத் துறை வங்கியில் உதவியாளர் வேலை

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது பொதுத் துறை வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு பி.எஸ்சி, பிசிஏ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பொதுத்துறை வங்கிகள்

தேர்வு வாரியம் : வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : உதவியாளர்

கல்வித் தகுதி : பி.எஸ்சி கம்ப்யூட்டர் சையின்ஸ், பிசீஏ உள்ளிட்ட துறையில் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.ibps.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ibps.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.
Read More »

ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வாய்ப்பு

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பொது மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் 10 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிக்கு ரூ.1.20 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டிடு

பணி : பொது மேலாளர்

கல்வித் தகுதி : பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 47 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : மாதம் ரூ. 90,000 முதல் ரூ.1,20,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://chennaimetrorail.org என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 09.07.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : CHIEF GENERAL MANAGER (HR) CHENNAI METRO RAIL LIMITED CMRL DEPOT, ADMIN BUILDING, POONAMALLEE HIGH ROAD, KOYAMBEDU, CHENNAI - 600 107.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.07.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 300
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 50

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.chennaimetrorail.org அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.
Read More »

பள்ளிகளை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் எதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்?

எந்தப் பள்ளியும் பெற்றோர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதில்லை. எனவே, இருப்பவற்றில் சிறந்தவற்றை, தங்களுக்கு திருப்தியானவற்றை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

எனவே, ஒரு பள்ளியில் கட்டாயம் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்களைப் பட்டியலிட வேண்டும். அதில் மட்டும் சமரசம் செய்துகொள்ளவே முடியாது. அந்த முக்கிய அம்சங்களைப் பற்றிய ஒரு அலசல்.

பாடத்திட்ட தேர்வு

சில பெற்றோர்கள் தங்களின் குழந்தை CBSE பாடத்திட்டத்தில்தான் படிக்க வேண்டும் என்று விரும்புவர். ஏனெனில், அப்பள்ளிகள், நாடு முழுவதும் பரவலாக அதிக எண்ணிக்கையில் உள்ளன. மத்திய அரசுப் பணிகளில் உள்ள பெற்றோர்கள், அடிக்கடி மாறுதலுக்கு உள்ளாவார்கள்.எனவே, அவர்களுக்கு CBSE பள்ளியை மாற்றிக் கொள்வது மிகவும் எளிது.

ஏனெனில், CBSE பாடத்திட்டத்தில் பள்ளிக்கு பள்ளி நிறைய ஒற்றுமைகள் இருக்கும் என்பதால், தங்களின் பிள்ளைகளால், பள்ளி மாறினாலும், படிப்பில் எளிதாக ஒன்றிவிட முடியும் என்பது அவர்களின் முடிவுக்கு முக்கிய காரணம்.

அதேசமயம், வேறுசிலர், தங்களின் பிள்ளைகளை CBSE -ஐ விட ICSE பாடத்திட்டத்தில் சேர்க்க விரும்புவர். ஏனெனில், CBSE பாடத்திட்டத்தில், கணிதத்திற்கும், அறிவியலுக்கும் மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால், ICSE பாடத்திட்டத்தில் அனைத்து பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

பள்ளியின் சிறப்பு

எப்படிபட்டாவது, தங்களின் பிள்ளைகளை பெயர்பெற்ற பள்ளியில் சேர்த்துவிட வேண்டும் என்பது பல பெற்றோர்களின் ஆவலாக உள்ளது., புதிதாக தொடங்கியிருக்கும் பள்ளிகளை ஒப்பிடுகையில், பல ஆண்டுகளாக இயங்கிவரும் பெயர்பெற்ற பள்ளிகளின் கல்வித்தரம் சிறப்பாக உள்ளது என்பது பல பெற்றோர்களுக்கு நடைமுறை அனுபவமாக உள்ளது.

அதற்கு முக்கிய காரணம், அந்தப் பள்ளிகள் இத்தனை ஆண்டுகளாக பெற்ற அனுபவமே.

திறன்சார் நடவடிக்கைகள்

Extra Curricular Activities எனப்படும் திறன்சார் நடவடிக்கைகளுக்கு பல பெற்றோர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். படிப்பிற்கு சமமாக அவற்றை அவர்கள் எண்ணுகிறார்கள். எனவே, அத்தகைய பள்ளிகளை அவர்கள் தேடுகிறார்கள்.

விளையாட்டு நடவடிக்கைகள், குழு உணர்வை கற்றுக்கொள்ளல் இதர திறன்சார் போட்டிகளில் பங்கேற்று தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளல் உள்ளிட்டவை அவர்களுக்கு பிரதானம்.

உள்கட்டமைப்பு

பள்ளிகளை தேர்வு செய்கையில், சிலர், உள்கட்டமைப்பிற்கு பிரதான முக்கியத்துவம் கொடுப்பார்கள். வளாகத்தின் மொத்த அளவு, பள்ளி மைதானத்தின் அளவு மற்றும் அதிலுள்ள வசதிகள், வளாகத்தில் பராமரிக்கப்படும் சுத்தம் மற்றும் சுகாதாரம், கழிப்பறை வசதிகள், சிறந்த ஆய்வக வசதிகள், வகுப்பறை அமைப்புகள் மற்றும் அங்குள்ள வசதிகள் உள்ளிட்ட பலவிதமான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முதல் முக்கியத்துவம் தரும் பல பெற்றோர்கள் உண்டு.

ஆசிரியர்கள்

ஒரு ஆசிரியர் என்பவர் வழிகாட்டியாக செயல்பட்டு, குழந்தையின் உள்ளாற்றலை வெளிக்கொண்டு வருபவராக இருக்க வேண்டும். ஆசிரியர் குழந்தைகளுக்கு தேவையான வாய்ப்புகளை வழங்குபவராக இருத்தல் வேண்டும்.

தேவையான கல்வித்தகுதி, அறிவு, அனுபவம் மற்றும் தனிப்பட்ட அக்கறை ஆகியவை ஒரு சிறந்த ஆசிரியருக்கான அளவுகோல். எனவே, அத்தகைய ஆசிரியர்களை நிரம்ப பெற்றிருக்கும் ஒரு பள்ளியை, அதிக பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.

நல்ல உள்கட்டமைப்பு மற்றும் தரமான ஆசிரியர்கள் ஆகிய இரண்டு தகுதிகளையும் பெற்றிருக்கும் ஒரு பள்ளி, தமது வீடுகளிலிருந்து தூரமாக இருந்தாலும் சரி, அப்பள்ளிகளிலேயே பிள்ளைகளை சேர்ப்பது பெற்றோர்களின் விருப்பமாக உள்ளது.

அருகாமை

வீட்டுக்கு அருகாமையில் பள்ளி இருப்பது பலவித நன்மைகளைத் தருகிறது. கிளம்பும் நேரம், பயணம், அவசரகால தொடர்பு மற்றும் வீடு திரும்புதல் உள்ளிட்ட விஷயங்களில் நிறைய செளகரியங்கள் கிடைக்கின்றன.

சில சமயங்களில் குழந்தைகளுக்கு பள்ளியில் இருக்கும்போது ஏதேனும் எதிர்பாராத உடல்நலக்குறைவு ஏற்பட்டு விடலாம். அப்போது பள்ளியிலிருந்து பெற்றோருக்கு தகவல் தரப்படும். அந்த சமயத்தில் பள்ளி அருகில் இருந்தால் அங்கே சென்றடைந்து, குழந்தையை அழைத்து வருவது மிகவும் எளிது.ஆனால், பள்ளி தூரமாக இருந்து, பெற்றோர் சென்று சேர்வதற்குள், குழந்தையின் நிலை மோசமடைந்து, அதை மீண்டும் நீண்டதூர பயணத்தில் வீட்டிற்கு அழைத்து வருவது கடினமான காரியம்.

மேலும், சென்னை போன்ற நகரங்களில் சாலையெங்கும் நிறைந்திருக்கும் ஆபத்துக்கள், குழந்தைகள் நீண்டதூரம் பயணம் செய்து பள்ளிக்கு செல்வதை அதிக அபாயகரமானதாக ஆக்குகின்றன.
Read More »

உங்கள் குழந்தைகளின் Spelling திறன் மேம்பட - பெற்றோர்களுக்கான பயனுள்ள டிப்ஸ்

ஸ்பெல்லிங் எனப்படும் எழுத்துக்கள்தான் ஒரு வார்த்தையை உருவாக்குவதற்கான மூலாதாரங்கள். ஆனால், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால், படிப்பதற்கும், எழுதுவதற்கும் துணைபுரிய பல சாதனங்கள் வந்துவிட்டதால், ஸ்பெல்லிங் தொடர்பான பழக்கங்கள் குறைந்துவிட்டன.

U cn narrate stories n 2nds என்ற ஒரு வார்த்தை. இந்த வார்த்தையை, உங்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறதா? Gadgets ஆதிக்கம் செலுத்தும் இந்த உலகில், அதிகம் பாதிக்கப்பட்டது ஸ்பெல்லிங்தான்.

எண்ணங்களையும், சிந்தனைகளையும் செம்மையான முறையில் பகிர்ந்து கொள்வதில், எழுதுதலும், ஸ்பெல்லிங்கும் முக்கியப் பங்காற்றுகின்றன. பல பெரியவர்கள்கூட, எளிமையான வார்த்தைகளுக்கே, ஸ்பெல்லிங் தெரியாமல் திணறுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம், ஸ்பெல்லிங் தொடர்பாக நாம் கொடுக்கும் குறைந்தளவு முக்கியத்துவம்தான். தொடர்பான பயிற்சி, மிக இளம் வயதில், வீட்டிலிருந்தே தொடங்கப்பட வேண்டும்.

பள்ளிகளில், மாணவர்களின் ஸ்பெல்லிங் திறனை சிறப்பாக்கும் வகையில், சில பயிற்சிகள் வழங்கப்பட்டாலும், அந்த திறனை மேலும் சிறப்பாக்க, இந்தக் கட்டுரை சில பயனுள்ள வழிமுறைகளைப் பற்றி ஆய்கிறது. அந்த வழிமுறைகளை, குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், அவர்களின் ஸ்பெல்லிங் திறன் வளர்ச்சியடையும்.

WORD JEOPARDY

வார்த்தை இணைப்பு மற்றும் ஸ்பெல்லிங் ஆகியவை கலந்தது இந்த விளையாட்டு. இந்த விளையாட்டை குழுவாக விளையாடலாம். இந்த விளையாட்டில், ஒரு நபர், ஒரு வார்த்தையை சொல்ல, அந்த வார்த்தையோடு தொடர்புடைய இன்னொரு வார்த்தையை, எதிர் தரப்பு நபர் சொல்வார்.

உதாரணமாக, FARM என்ற வார்த்தை சொல்லப்பட்டால், அதற்கு தொடர்புடைய ANIMAL என்ற வார்த்தை எதிர்தரப்பால் சொல்லப்படும்.அதேசமயம், பயன்படுத்தப்படும் வார்த்தைகள், விளையாட்டில் பங்கேற்கும் குழந்தைகளின் அறிவுக்கும், சிந்தனைக்கும் ஏற்றதாக இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

SCRABBLE

குடும்ப அளவில், மிகவும் விரும்பப்படுகிற ஒரு விளையாட்டாக, இந்த விளையாட்டு கருதப்படுகிறது. பல்வேறு காரணங்களுக்காக, இந்த விளையாட்டு ரசிக்கப்படுகிறது. டென்சன் நிறைந்த உலகில், பல பழைய போரடிக்கும் விளையாட்டுக்கள், நடைமுறையிலிருந்து மறைந்து வருகின்றன.

இந்த விளையாட்டில், குழந்தைகளை ஈடுபடச் செய்து, சிறிதுகாலம் கழித்து, ஸ்பெல்லிங் விஷயத்தில் அவர்களின் செயல்பாட்டை கவனித்தால், முன்னேறியிருப்பதை அறியலாம்.

TRACING WORDS

பொதுவாக, ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ளும்போது, ஒரே வழிமுறையைவிட, பல வழிமுறைகள் பின்பற்றப்படும்போது, அதை, குழந்தைகள் எளிதாக கற்றுக்கொள்கிறார்கள்.இது ஒரு மிக எளிமையான, எப்போதும் விளையாடக்கூடிய விளையாட்டு.

குழந்தைகளுக்கு, உங்களின் முதுகில், அவர்களுக்கு பிடித்த வார்த்தைகளை எழுதச் சொல்லி, அது என்னவென்று நீங்கள் உணர்ந்து சொல்லலாம். இதன்மூலம் அவர்கள் உற்சாகம் பெறுவார்கள். மேலும், அவர்களது முதுகில், நீங்கள், சில வார்த்தைகளை எழுதி, அதை கண்டுபிடிக்கச் செய்து, அவர்களின் ஸ்பெல்லிங் திறனை வளர்க்கலாம்.

CROSSWORDS

மேற்குறிப்பிட்ட பயிற்சி, ஒருவரின் ஸ்பெல்லிங் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான சிறப்பான ஒரு உபாயம். இன்று, அதிகளவில் puzzle புத்தகங்கள் கிடைக்கின்றன மற்றும் வலைதளத்தில், crossword - creating உபகரணங்கள் கிடைக்கின்றன. இந்த விளையாட்டு விஷயத்தில், இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.

வார்த்தைகள், உங்களது குழந்தையின் அறிவு நிலைக்கேற்ப இருக்க வேண்டும். குழந்தைகளால் புரிந்துகொள்ள இயலாத கடின வார்த்தைகளாக இருப்பின், அவர்கள் அந்த விளையாட்டின் மீது, விரைவில் ஆர்வத்தை இழந்து விடுவர்.

SPELLING CHAIN

இதுவும் ஸ்பெல்லிங் திறன் மேம்பாட்டிற்கான ஒரு சிறந்த அம்சமாகும். வார்த்தைகளிலிருந்து, உங்களின் குழந்தை எளிதில் கண்டுபிடிக்க இயலாத, ஒரு பாடல் மற்றும் நடனத்தை வரிசைக்கிரமமாக உருவாக்கவும்.

உங்களால் முழு பாடலையும் பாட முடியாவிட்டாலும், beat -ஐ சேர்த்து, சிறிது ராகத்தோடு ஸ்பெல்லிங் சொல்லவும்.

தொழில்நுட்ப வசதிகள்

குழந்தைகளின் எளிய கற்றலுக்கு உதவும் வகையில், பலவிதமான எளிய உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள்(apps) இன்று கிடைக்கின்றன. அதை, உங்களது குழந்தையின் ஆர்வத்திற்கேற்ப வாங்கிப் பயன்படுத்தவும்.

FRIDGE MAGNETS

பல வண்ணங்களிலான, எழுத்து உருவங்களைக் கொண்ட காந்தங்களை வாங்கவும்.தினமும், ஏதேனும் ஒரு எழுத்தை, பிரிட்ஜில்(Fridge) வைத்துவிட்டு, அதை உங்களிடம் வந்து எடுத்துப் பார்க்க சொல்லுமாறு கூறி விளையாடலாம். இதன்மூலம், ஸ்பெல்லிங் தொடர்பாக குழந்தைகளின் ஆர்வம் அதிகரித்து, அது, அவர்களின் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது.

மேலும், அந்த எழுத்துக்களின் மூலம், ஏதேனும் வார்த்தையை ஒரு இடத்தில் உருவாக்கச் சொல்லிவிட்டு, அதை நீங்கள் சென்று பார்க்கும் விளையாட்டையும் மேற்கொள்ளலாம்.

கதை எழுதுதல்

குழந்தைகள், அபார கற்பனைத்திறன் மிக்கவர்கள். எனவே, அவர்களிடம் ஒரு சிறிய கதையை எழுதிக் காட்டுமாறு கூறலாம். உங்கள் குழந்தை எழுதும் கதை, பெரும்பாலும் அது எங்கேனும் கேட்டதாகவோ அல்லது படித்ததாகவோ இருக்கலாம்.

வேண்டுமானால், ஒரு சில குழந்தைகள், தங்களின் சொந்தக் கற்பனையில் கதை எழுதிக் காட்டலாம்.இப்படியாக, தொடர்ந்த பயிற்சியின் மூலமாக, குழந்தையின் ஸ்பெல்லிங் ஆற்றல் வளர்ச்சியடையும்.

குறிப்பு

மேற்கண்ட முறைகள் மட்டுமே குழந்தைகளின் ஸ்பெல்லிங் பயிற்சிக்கு சிறந்தவை என்றில்லை. உதாரணங்களுக்காக கொடுக்கப்பட்டவையே அவை. மற்றபடி, பெற்றோர்கள், தங்களின் சூழலுக்கு ஏற்ப, பெரிய வசதிகள் ஏதுமின்றியே, தங்களின் குழந்தைகளுக்கு சிறப்பான பயிற்சி கொடுக்கலாம்.

ஏனெனில், உலகின் மிகச்சிறந்த இலக்கியவாதிகள் மற்றும் மொழி வல்லுநர்களில் பலர், மிகச் சாதாரண பின்னணிகளிலிருந்து, மிகக் குறைந்த வசதிகளைப் பயன்படுத்தி பயிற்சி பெற்றவர்களே. சிலர், பள்ளிக்குக்கூட முறையாக செல்லாதவர்கள் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

எனவே, பெற்றோர்களின் இடைவிடாத அர்ப்பணிப்பே, ஒரு குழந்தையின் ஸ்பெல்லிங் திறன் மேம்பாட்டில் முக்கியப் பங்காற்றுகிறது
Read More »

1 To 5 - Daily One Diksha June All Weeks Collections



ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்றலை மேம்படுத்த Diksha பயன்படுத்துவதை எளிமையாக்கி தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறிமுகப்படுத்துவதில் ) பெருமிதம் கொள்கிறோம்.


1 To 5 - Daily One Diksha June 1st Week - T/M - Download Here

1 To 5 - Daily One Diksha June 1st Week - E/M - Download Here

1 To 5 - Daily One Diksha June 2nd Week - T/M - Download Here

1 To 5 - Daily One Diksha June 2nd Week - E/M - Download Here

1 To 5 - Daily One Diksha June 3rd Week - T/M - Download Here

1 To 5 - Daily One Diksha June 3rd Week - E/M - Download Here
Read More »

செலவின அறிக்கையினை கருவூல கணக்குடன் ஒத்திசைவு செய்து அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

தொடக்கக் கல்வி இயக்ககம் வாயிலாக 2019-2020ஆம் ஆண்டிற்கு வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டிற்கு கணக்குத் தலைப்பு வாரியாக சனவரி 2020 மாதம் முதல் மார்ச் 2020 மாதம் வரை செலவின அறிக்கையினை கருவூல கணக்குடன் ஒத்திசைவு செய்து , அதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து மறுநினைவூட்டலுக்கு இடமின்றி உடன் இவ்வியக்ககத்திற்கு ( aodeech@gmail.com ) என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அதன் நகலினை தபால் வாயிலாகவும் அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One