Search

பள்ளி தேர்வை 2 பருவமாக குறைக்க குழு அறிக்கையில் பரிந்துரை

Saturday, 13 June 2020


சென்னை: கொரோனா பிரச்னை நீடிப்பதால், புதிய கல்வியாண்டில், பள்ளி பாடங்கள் மற்றும் தேர்வுகளை, மூன்று பருவங்களுக்கு பதில், இரண்டு பருவங்களாக மாற்ற, பள்ளி கல்வித்துறை முடிவு செய்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னையால், ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்படவில்லை; திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பிரச்னையை சமாளித்து, புதிய கல்வியாண்டில், கற்றல், கற்பித்தல் பணிகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்ய, அரசின் சார்பில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது.பள்ளிக்கல்வி கமிஷனர், சிஜி தாமஸ் தலைமையிலான குழுவினர், ஆசிரியர் சங்கங்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் கல்வித்துறை நிர்வாகிகளிடம் கருத்துகளை பெற்றனர்.முதல் கட்ட அறிக்கையை, தமிழக அரசிடம், குழுவின் தலைவர் சிஜி தாமஸ் சமர்ப்பித்துள்ளார்.அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: புதிய கல்வியாண்டில், அனைத்து பள்ளிகளிலும், கூடுதல் வகுப்பறைகள், கட்டடங்கள் ஏற்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு இடையே, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.அதற்கேற்ப, சில வகுப்புகளுக்கு முற்பகலிலும், சில வகுப்புகளுக்கு பிற்பகலிலும் பாடங்களை நடத்தலாம். அதன் வழியாக, 50 சதவீத மாணவர்கள் மட்டும், பள்ளிகளில் இருக்கும் வகையில், சமூக இடைவெளியை பின்பற்ற முடியும்.மாணவர்களுக்கு, சீருடையுடன் முக கவசம் கட்டாயம். அதேபோல, அனைத்து மாணவர்களும், பள்ளி இடைவேளை, மதிய உணவு நேரங்களில், கைகளை சோப்பால் சுத்தம் செய்வது அவசியம். அதற்கு ஏற்ற தண்ணீர் மற்றும் குழாய் வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.பள்ளிகளை மூன்று மாதம் தாமதமாக திறக்கும் போது, அதற்கேற்ப பாடச்சுமை குறைக்கப்பட வேண்டும். அடிப்படை கல்வி மாறாத வகையில், இந்த பாட குறைப்பு இருக்க வேண்டும்.மூன்று பருவ பாடங்கள் மற்றும் தேர்வுகளை, இரண்டு பருவங்களாக மாற்றலாம். அதற்கு ஏற்ப பாடங்களையும், வகுப்பு நாட்களையும், வகுப்பு நேரத்தையும் நிர்ணயிக்க வேண்டும்.'ஆன்லைன்' வகுப்புகள் மற்றும் ஆன்லைன் வழி, 'அசைன்மென்ட்'களை மாணவர்களுக்கு வழங்கலாம். கல்வி தொலைக்காட்சி வழியாகவும் பாடங்களை நடத்தலாம். ஆன்லைன் வசதி இல்லாத மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி, அவற்றை, 'சிடி'யாக வழங்கி, வீட்டில், 'டிவி'யில் போட்டு பார்த்து, படிக்க வைக்கலாம். இவ்வாறு, அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. முதற்கட்ட அறிக்கையில், சில பரிந்துரைகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றவை விரிவான அறிக்கையில் சமர்ப்பிக்கப்படலாம் என்றும், பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Read More »

ஆசிரியர்களுக்கு இதற்கெல்லாமா தமிழகத்தில் தடை? ஆசிரியர்கள் எதிர்ப்பு?

முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி இன்றி, பேட்டி கொடுக்கக் கூடாது' என, ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்வி துறையின் செயல்பாடுகள் குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மட்டுமே, ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். பள்ளி கல்வி முதன்மை செயலர் தீரஜ் குமாரும், தனியாக பேட்டி அளிப்பதில்லை.


இந்நிலையில், அமைச்சரின் சொந்த மாவட்டமான, ஈரோடு மாவட்டமுதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசின் கொள்கை சார்ந்த விஷயங்களில், தன்னிச்சையாக ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க கூடாது. முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி இன்றி, ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


இந்த சுற்றறிக்கைக்கு, ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. 'ஆசிரியர்கள், தங்களின் சங்கங்கள் சார்ந்து, அரசின் கொள்கை முடிவுகளை விமர்சிப்பதால், மாணவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. அதை தடுக்கும் வகையில், இந்த அறிவிப்பு உள்ளது' என, ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
Read More »

Neet online coaching trial class starts on Monday (15.6.3020).

Respected Sir/ Madam

Neet online  coaching trial class orientation session for govt and aided students  starts on Monday (15.6.3020).

In every district  approximately  100 students  not yet registered  ,
Now I send registration  link which will open till Monday 15.6.2020  Noon.

Please ask all govt  and aided school  HSS HMs to complete  registration  of the students  who applied for neet and not yet registered in Ebox link ( given below)

http://app.eboxcolleges.com/neetregister
Read More »

ஸ்மார்ட் போன் இல்லாத 56% மாணவர்கள்; ஆன்லைன் கல்வி குறித்து புதிய ஆய்வு

சுமார் 56 சதவீத மாணவர்களிடம் இணைய வழி கற்றலுக்குத் தேவைப்படும் ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப அணுகல் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் பொது முடக்கநிலை காலத்தில், சுமார் 56 சதவீத மாணவர்களிடம் இணைய வழி கற்றலுக்குத் தேவைப்படும் ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப அணுகல் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. நாட்டின் வெவ்வேறு பள்ளிகளில்பயிலும் 42,831 மாணவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியள்ளது.

தொழில்நுட்பத்திற்கான அணுகலை பகுப்பாய்வு செய்யும் நோக்கில், குழந்தை உரிமைகள் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஸ்மைல் அறக்கட்டளை ‘கோவிட்-19 தொடர்பான கள நிலைமைகளும், சாத்தியமான தீர்வுகளும்’ என்ற பெயரில் இந்த ஆய்வை மேற்கொண்டது.

கணக்கெடுக்கப்பட்ட குழந்தைகளில் 43.99 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன் தொழில் நுட்பத்தை அணுகுவதாகவும், 43.99 சதவீத மாணவர்கள் சாதாரண தொலைபேசிகள் அல்லது சாதாரண கைபேசிகள் அனுகுவதாகவும்,12.02 சதவீத மாணவர்கள் எந்தவித தொலைபேசியையும் பயன்படுத்தவில்லை என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தாத மாணவர்களின் எண்ணிக்கை 56.01 சதவீதமாக உள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தொலைக்காட்சியைப் பொறுத்தவரை, தொலைக்காட்சியை அணுகும் மாணவர்களின் எண்ணிக்கை 68.99 சதவிகிதமாக உள்ளது, ​​31.01 சதவிகித என்ற அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு தொலைக்காட்சி அணுகல் இல்லை. எனவே கற்றல் விளைவுகளை மேம்படுத்த ஸ்மார்ட்போன் தலையீடுகளைப் பயன்படுத்துவது ஒரே தீர்வாகாது,”என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

1 முதல் 5 வகுப்பு வரையிலான 19,576 முதன்மை கல்வி மாணவர்களும் ; 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான 12,277 மாணவர்களும்; 9 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான 5,537 உயர்நிலைப் பள்ளி மாணவர்களும்; 11 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான 3,216 மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் இந்த ஆய்வில் கணக்கெடுக்கப்பட்டனர்.

டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ஆந்திரா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட 23 மாநிலங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

மார்ச் மாதத்தில் நாடு தழுவிய கொரோனா பொது முடக்கநிலையை மத்திய அரசு அமல்படுத்திய பிறகு , பள்ளிகளும், கல்லூரிகளும் இணைய வழிக் கல்வியை முதன்மை படுத்தின. இருப்பினும், நாட்டில் நிலவும் டிஜிட்டல் டிவைட் சூழலில், முழுமையான இணைய வழிக் கல்வி என்பது நிறைவேறாத கனவாக உள்ளது என்று பல நிபுணர்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தினர்.

நாட்டில் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 35 கோடிக்கும் அதிகம் என்று அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. இருப்பினும், அவர்களில் எத்தனை பேரிடம் இணைய வழிக் கல்வியை உறுதி செய்யும் தொழில் நுட்பங்கள் உள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஸ்மைல் அறக்கட்டளையின் இணை நிறுவனர் சந்தானு மிஸ்ரா கூறுகையில், டிஜிட்டல் டிவைட் (ஏற்றத்தாழ்வுகள்) உண்மையான சவால் என்பதை ஆய்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன. மேலும், அனைத்து பிரிவு மாணவர்கள் கல்வி பயில வேண்டுமெனில், நமது அணுமுறைகள் பல மட்டங்களில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

” கொரோனா பொது முடக்கத்தால் பள்ளி காலவரையின்றி மூடப்பட்டது. குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்கப்படுவதை எவ்வாறு உறுதிப்படுத்துவது? என்ற கேள்வி முன்னெப்போதையும் விட தற்போது முக்கியதத்துவம் பெறுகிறது. இதன் மூலம், தொழில் நுட்பத்தை மாணவர்கள் அணுகிப் பயன்படுவத்துவது என்பது ஒரே நிலையில் இல்லாமல் வேறுபட்டு இருக்கும் என்ற யதார்த்த நிலையும் உருவாகும்” என்று தெரிவித்தார்.
Read More »

பள்ளி பாடங்கள் மற்றும் தேர்வுகளை, மூன்று பருவங்களுக்கு பதில், இரண்டு பருவங்களாக மாற்ற பள்ளி கல்வித்துறை முடிவு!


கொரோனா பிரச்னை நீடிப்பதால், புதிய கல்வியாண்டில், பள்ளி பாடங்கள் மற்றும் தேர்வுகளை, மூன்று பருவங்களுக்கு பதில், இரண்டு பருவங்களாக மாற்ற, பள்ளி கல்வித்துறை முடிவு செய்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னையால், ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்படவில்லை; திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பிரச்னையை சமாளித்து, புதிய கல்வியாண்டில், கற்றல், கற்பித்தல் பணிகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்ய, அரசின் சார்பில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது.

பள்ளிக்கல்வி கமிஷனர், சிஜி தாமஸ் தலைமையிலான குழுவினர், ஆசிரியர் சங்கங்கள்,தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் கல்வித்துறை நிர்வாகிகளிடம் கருத்துகளை பெற்றனர்.இதையடுத்து, முதல் கட்ட அறிக்கையை, தமிழக அரசிடம், குழுவின் தலைவர் சிஜி தாமஸ் சமர்ப்பித்துள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

புதிய கல்வியாண்டில், அனைத்து பள்ளிகளிலும், கூடுதல் வகுப்பறைகள், கட்டடங்கள் ஏற்படுத்த வேண்டும்மாணவர்களுக்கு இடையே, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.அதற்கேற்ப,சில வகுப்புகளுக்கு முற்பகலிலும், சில வகுப்புகளுக்கு பிற்பகலிலும் பாடங்களை நடத்தலாம். அதன் வழியாக, 50 சதவீத மாணவர்கள் மட்டும், பள்ளிகளில் இருக்கும் வகையில், சமூக இடைவெளியை பின்பற்ற முடியும்.மாணவர்களுக்கு, சீருடையுடன் முக கவசம் கட்டாயம். அதேபோல, அனைத்து மாணவர்களும், பள்ளி இடைவேளை, மதிய உணவு நேரங்களில், கைகளை சோப்பால் சுத்தம் செய்வது அவசியம். அதற்கு ஏற்ற தண்ணீர் மற்றும் குழாய் வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.பள்ளிகளை மூன்றுமாதம் தாமதமாக திறக்கும் போது, அதற்கேற்ப பாடச்சுமை குறைக்கப்பட வேண்டும்.அடிப்படை கல்வி மாறாத வகையில், இந்த பாட குறைப்பு இருக்க வேண்டும்.மூன்று பருவ பாடங்கள் மற்றும் தேர்வுகளை, இரண்டு பருவங்களாக மாற்றலாம். அதற்கு ஏற்ப பாடங்களையும், வகுப்பு நாட்களையும், வகுப்பு நேரத்தையும் நிர்ணயிக்க வேண்டும்.'ஆன்லைன்' வகுப்புகள் மற்றும் ஆன்லைன் வழி, 'அசைன்மென்ட்'களை மாணவர்களுக்கு வழங்கலாம். கல்விதொலைக்காட்சி வழியாகவும் பாடங்களை நடத்தலாம். ஆன்லைன் வசதி இல்லாத மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி, அவற்றை, 'சிடி'யாக வழங்கி, வீட்டில், 'டிவி'யில் போட்டு பார்த்து, படிக்க வைக்கலாம். இவ்வாறு, அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

முதற்கட்ட அறிக்கையில், சில பரிந்துரைகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றவை விரிவான அறிக்கையில் சமர்ப்பிக்கப்படலாம் என்றும், பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
Read More »

மே 31 ம் தேதி வரை பணியாற்றி ஒய்வு பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

மே 31 ம் தேதி வரை பணியாற்றி ஒய்வு - அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதிக்குள் ஓய்வூதிய பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆணை பிறப்பித்துள்ளார்.


Read More »

ஆன்லைன் வகுப்புகள் இதுக்குத்தானா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்..

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான பள்ளிகளில் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆன்லைன் வகுப்புகளுக்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது பெற்றோர்களிடமிருந்து கட்டணம் வாங்குவதற்காக தான் என்ற உண்மை தற்போது வெளிவந்துள்ளது.
குழந்தைகளின் கல்வி வீணாக கூடாதே என்ற எண்ணத்தில் ஆன்லைன் வகுப்புகளை தனியார் பள்ளிகள் நடத்துவதாக நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஆன்லைனில் கல்விக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என தனியார் பள்ளிகள் வலியுறுத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இதனை அடுத்து ஆன்லைன் நடத்தியது இந்த கல்வி கட்டணத்தை பெறுவதற்கு தானா? என்ற சந்தேகம் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது .அரசின் எச்சரிக்கையை மீறி அடாவடியாக சில தனியார் பள்ளிகள் கட்டண வசூலில் வருவதாக பெற்றோர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

பெற்றோர்களிடம் இருந்து பணம் வசூலிக்க வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் இந்த ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு எந்தவித பயனும் இல்லை என்றும் ஒரு சாரார் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்

ஆனால் இதுகுறித்து பள்ளிகள் தரப்பில் இருந்து கூறும்போது பள்ளிகள் திறக்கப்பட வில்லை என்றாலும் ஆசிரியர்கள் சம்பளம், மின்கட்டணம், ஓட்டுநர் சம்பளம் ஆகியவை வழங்கப்பட்டு வருவதாகவும் இதனை அடுத்து ஆன்லைனில் கட்டணம் செலுத்த வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்
Read More »

அரசுப்பள்ளி 11,12ம் வகுப்பு கணித ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆன்லைன் பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை!

சென்னை: தமிழகத்தில் கணித ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு கணித ஆசிரியர்களை திறன்மிக்கவர்களாக மாற்ற 10 நாள் ஆன்லைன் சிறப்பு பயிற்சிக்கு பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. முதுநிலை பட்டதாரி கணித ஆசிரியர்களுக்கு e - box நிறுவனம் சார்பில் ஆன்லைனில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கணித பாடத்தை மேலும் எளிதாக்கவும், ஆழமாக கற்பிக்கும் வகையிலும், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குக் கணிதம் குறித்த புரிதலை மேம்படுத்துவதற்காகவும் இ - பாக்ஸ் என்ற நிறுவனம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.ஜூன் 22 முதல், ஜூலை 1 வரை நடைபெறும் இந்த ஆன்லைன் பயிற்சியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என்றும் www.eboxcolleges.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயிற்சியை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் உரிய அறிவுறுத்தலை வழங்க பள்ளி கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பிலும் பன்னிரண்டாம் வகுப்பிலும் உள்ள கணிதப் பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றபோதும் , கணிதம் கற்பதன் நோக்கம் குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் மேலும் அறிந்து கொள்ள இப்பயிற்சி வழிவகுக்கும்.

இந்தப் பயிலரங்கு கணிதப் பாடத்தில் திறன்மிக்கவர்களாகவும் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் கணித ஆசிரியர்களை மேம்படுத்தச் செய்யும் . 10 நாள் பயிலரங்கு முடியும்போது , ஒவ்வொரு ஆசிரியரும் 100 நிகழ்நேரப் பயிற்சிகளுக்கு விடைகண்டு , திறமையான மாணவர்களை உருவாக்கும் திறன் பெற்றிருப்பார்கள் . ஒவ்வொரு ஆசிரியரின் பயில்தல் வளைகோடு குறித்துப் பயிலரங்கின் இறுதியில் விரிவான அறிக்கையை ஈபாக்ஸ் வழங்குவார்கள். நீட் பயிற்சியைத் தொடர்ந்து இந்தப் பயிற்சியையும் E - Box நிறுவனமே வழங்குவது குறிப்பிடத்தக்கது.
Read More »

கையெழுத்து பயிற்சி புத்தகம் மற்றும் சொற்களஞ்சியம்


Click here to download

4 STD தமிழ் கையெழுத்து பயிற்சி புத்தகம் மற்றும் சொற்களஞ்சியம் இரா,கோபிநாத் 
Read More »

பள்ளிக் கல்வித்துறை பணியாளர்கள், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் அரசின் கொள்கை முடிவு சார்ந்து தொலைக்காட்சி, பத்திரிகைகளில் பேட்டி அளிக்கக் கூடாது - ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலர்!


Read More »
 

Most Reading

Tags

Sidebar One