Search

NEET, JEE மாணவர்களுக்கு தேசிய டெஸ்ட் அபியாஸ் செயலி; 65 லட்சம் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பயிற்சி

Thursday, 11 June 2020


கொவிட்-19 பரவும் இந்தச் சிக்கலான சூழலில், ஆன்லைன் பயிற்சி வசதியை அளிக்கும் வகையில், செயலியை என்டிஏ தொடங்கியுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார். சுமார் 65 லட்சம் மாணவர்கள் ஏற்கனவே இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து, ஆன்லைன் தேர்வுக்குப் பயிற்சி பெற்று வருகின்றனர்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் இன்று இந்தியா தரவரிசை 2020 என்னும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். பல்வேறு பிரிவுகளிலும், ஐந்து விரிவான அம்சங்களில், அந்த நிறுவனங்களின் திறன் அடிப்படையில், இது வெளியிடப்பட்டுள்ளது.
மனித வள மேம்பாட்டு இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே முன்னிலையில் 10 பிரிவுகள் அடிப்படையில் அமைச்சர் வெளியிட்டார்.

2020 இந்தியா தரவரிசைக்கு, மொத்தம் 3771 தனித்துவ நிறுவனங்கள் தானாகவே முன்வந்து விண்ணப்பித்தன. ஒட்டுமொத்தம், குறிப்பிட்ட பிரிவு, பிராந்திய அடிப்படையில் அவை விண்ணப்பித்திருந்தன. தரவரிசைக்கு வந்திருந்த 5805 விண்ணப்பங்களில், இந்த 3771 தனித்துவ விண்ணப்ப நிறுவனங்கள் பல்வேறு பிரிவுகள், பிராந்தியங்களின் கீழ், ஏற்கப்பட்டன.

இதில், 294 பல்கலைக்கழகங்கள், 1071 பொறியியல் கல்வி நிறுவனங்கள், 630 மேலாண்மை கல்வி நிறுவனங்கள், 334 மருந்துவத் துறை நிறுவனங்கள், 97 சட்டக்கல்வி நிறுவனங்கள், 118 மருத்துவக் கல்வி நிறுவனங்கள், 48 கட்டடக்கலை கல்வி நிறுவனங்கள், 1659 பொதுப் பட்டப்படிப்புக் கல்லூரிகள் அடங்கும். இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க அளவுக்கு தரவரிசையில் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்றிருப்பது, இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்கள் நியாயமான, வெளிப்படையான முறையில் தரவரிசை மதிப்பீடு இருப்பதை உறுதி செய்கிறது.

2019-இல் 3127 ஆக இருந்த தரவரிசைக்கான தனித்துவ விண்ணப்பங்கள், 2020-இல் 3771 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் பல்வேறு பிரிவுகளுக்கான மொத்த விண்ணப்பங்கள் 2019-இல் 4873-ல் இருந்து 2020-இல் 5805 ஆக உயர்ந்துள்ளது. தனித்துவ நிறுவனங்களில் 644-ம், மொத்த விண்ணப்பங்களில் 932-ம் அதிகரித்துள்ளன.
நடைமுறையில், பொறியியல் கல்வியில் 200 நிறுவனங்களும், ஒட்டுமொத்தமாகவும், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி பிரிவிலும் 100 நிறுவனங்களும், மேலாண்மை மற்றும் மருந்துத் துறையில் தலா 75 நிறுவனங்களும், மருத்துவத்தில் 40 நிறுவனங்களும், கட்டடக்கலை மற்றும் சட்டக்கல்வியில் தலா 20 நிறுவனங்களும், 30 நிறுவனங்கள் முதன்முறையாக பல் மருத்துவப் பிரிவிலும் எடுத்துக்கொள்ளப்பட்டன.

உரிய முறையில் கோர்க்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு கூடுதல் தரம் வழங்கப்பட்டு வருகிறது. தர வரிசை நிறுவனங்களின் தரவுகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, பொருத்தமற்றவை, முரண்பாடுகள் உள்ளிட்டவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அடையாளம் காணப்படுகின்றன. இந்த நடைமுறைகளுக்கு விடாமுயற்சியும், பொறுமையும், நிறுவனங்களைக் கையாளும் உத்தியும் மிகவும் அவசியமாகும்.

தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.2020-இல் ஒன்பது தரவரிசையில், கூடுதலாக '' பல் மருத்துவம்'' முதல் முறையாக சேர்க்கப்பட்டு மொத்தம் 10 பிரிவுகளில் இது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், இந்தத் தரவரிசை சில வகை அளவுகோல்கள் அடிப்படையில் பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்ய மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழும் என்றார். பல்கலைக் கழகங்களுக்கு, பல்வேறு தர அம்சங்கள் மற்றும் அளவுகோல்களில் தங்கள் திறனை முன்னேற்றிக்கொள்ளவும், ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றம் தேவைப்படும் பிரிவுகளை அடையாளம் காணவும் இது பயன்படும் என்று அவர் கூறினார்.

மேலும், தேசிய அளவிலான நிறுவனங்களின் இந்தத் தரவரிசை, அவற்றுக்கு இடையே போட்டி உணர்வை ஊக்குவித்து, மிகச் சிறப்பாக செயல்பட்டு, சர்வதேச அளவில் உயரிய இடத்தைப் பிடிக்கவும் உதவும் என்று அவர் தெரிவித்தார்.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பை உருவாக்க முக்கிய முன்முயற்சியை எடுத்துள்ளதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளாக உயர்கல்வி பல்வேறு பிரிவுகள் மற்றும் அறிவுக் களங்கள் அடிப்படையில் இது பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், நம் அனைவருக்கும் இது ஊக்குவிப்பு ஆதாரமாக உள்ளது என்றும் பொக்கிரியால் தெரிவித்தார்.

இந்த நடைமுறை, நிறுவனங்கள் தரவுகளை அமைத்துக்கொள்ளும் பழக்கத்தை உருவாக்கியுள்ளதுடன், இந்த நிறுவனங்கள் தங்களுக்குள் மேலும் முன்னேறவேண்டும் என்ற போட்டியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பில் அடையாளம் காணப்பட்ட அகன்ற அளவுகோல்கள் , உயர் கல்வி நிறுவனங்களில் கற்பித்தல், கற்றல், ஆதாரங்கள், ஆராய்ச்சி, தொழில்முறைப் பயிற்சி, பட்ட முடிவுகள் போன்ற அனைத்து முக்கிய அம்சங்களையும் வெற்றிகரமாக கையாள வழிவகுத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் கூறினார்.

இந்தியச் சூழலுக்கு பொருத்தமான பிராந்திய பன்முகத்தன்மை, களப்பணி, பாலியல் சமத்துவம், சமூகத்தின் பின்தங்கிய பிரிவுகளை உள்ளடக்குதல் ஆகிய நாடு சார்ந்த அளவுருக்கள் தரவரிசை முறையில் சேர்க்கப்பட்டுள் மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் தெரிவித்தார். அனைத்து அளவுருக்கள் மற்றும் உப அளவுருக்கள், நிறுவனத்தின் அளவு, பழமை ஆகியவற்றைப் பார்க்காமல் இயல்பாக்கப்பட்டுள்ளதன் மூலம், பெரிய மற்றும் பழமையான நிறுவனங்கள் தேவையற்ற ஆதாயம் அடையமுடியாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது.

கொவிட்-19 பரவும் இந்தச் சிக்கலான சூழலில், ஆன்லைன் பயிற்சி வசதியை அளிக்கும் வகையில், ஜேஇஇ , நீட் மாணவர்களுக்கு தேசிய டெஸ்ட் அபியாஸ் என்னும் செயலியை என்டிஏ தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். சுமார் 65 லட்சம் மாணவர்கள் ஏற்கெனவே இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து, ஆன்லைன் தேர்வுக்குப் பயிற்சி பெற்று வருகின்றனர் எனக் கூறினார்
Read More »

PAN எண் பெற புதிய திட்டம் பத்தே நிமிடத்தில் இலவசமாக இணைய வழியில் பெறலாம் இந்த சேவையை பெறுவது எப்படி?

வருமான வரித்துறையின் இணையவழி வரித்தாக்கல் இணையதளத்திற்கு சென்று “Get New PAN” என்ற தெரிவை சொடுக்கிவிட்டு, உங்களது ஆதார் எண்ணை பதிவு செய்யுங்கள்.

அடுத்தடுத்த படிநிலைகளில், ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்டுள்ள அலைபேசி எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும். அதை சரியாக பூர்த்தி செய்ததும், உங்களது ஆதாரில் உள்ள தனிப்பட்ட விவரங்கள் திரையில் காட்டப்படும்.

அந்த விவரங்களுக்கு நீங்கள் ஒப்புதல் தெரிவித்ததும், அடுத்த படிநிலையில் விருப்பம் இருப்பின் மின்னஞ்சல் முகவரியை பதிவிட்டு அதை உறுதி செய்து கொள்ளலாம்.

இந்த செயல்முறை முடிந்ததும், 15 இலக்க ஒப்புதல் எண் (Acknowledgment number) ஒன்று விண்ணப்பிப்பவருக்கு தரப்படும். இந்த எண்ணை பயன்படுத்தி இ-பான் கார்டை அதே தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் அல்லது விண்ணப்பத்தின் நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். ஆதார் அட்டையுடன் மின்னஞ்சல் முகவரி இணைக்கப்பட்டிருந்தால், மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பதாரருக்கு இ-பான் அனுப்பப்படும்.

கீழுள்ள இணைப்பில் உடனடி PAN எண் ஜெனரேட் செய்து PDF-ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...

 https://www.incometaxindiaefiling.gov.in/e-PAN/index.html?lang=eng
Read More »

பல்கலைக்கழகங்களுக்கான தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் வெளியீடு தமிழக அரசு கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து பின்னடைவு  

சென்னை ஐஐடி இந்த ஆண்டும் முதலிடம் பிடித்தது தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலில் தமிழக அரசு பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், ஒட்டுமொத்த உயர் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறு வனங்களுக்கான தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. 

இதற் காக தேசிய நிறுவன தரவரிசை கட்ட மைப்பு (என்ஐஆர்எப்) என்ற அமைப்பு உரு வாக்கப்பட்டது. மாணவர் தேர்ச்சி விகிதம், கற்பித்தல், கற்றல், வளங்கள், ஆராய்ச்சி, தொழில்முறை பயிற்சி உள்ளிட்ட 11 அம்சங் களை கொண்டு தரவரிசை உருவாக்கப்படும். 

அதன்படி, 2020-ம் ஆண்டுக்காக உயர் கல்வி தரவரிசை போட்டிக்காக தமிழகத்தில் இருந்து 260 உட்பட நாடு முழுவதும் 1,667 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. இந் நிலையில், தரவரிசை பட்டியலை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று வெளியிட்டார். 

அதில் ஒட்டுமொத்த உயர் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. அடுத்த இடத்தில் பெங்களூரு இந்திய அறிவியல் கழகமும், டெல்லி ஐஐடி மூன்றாம் இடமும் பிடித்துள்ளன. 2019-ம் ஆண்டுக்கான தரவரி சையிலும் சென்னை ஐஐடிதான் முதலிடத் தில் இருந்தது. 2018-ல் 10-வது இடத்தில் இருந்த அண்ணா பல்கலை. 2019-ல் 14-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 

இந்நிலையில், மீண்டும் பின்தங்கி தற்போது 20-வது இடத்தில் உள்ளது. பல்கலைக்கழக தர வரிசையில் 7-வது இடத்தில் இருந்து 12-வது இடத்துக்கும், பொறியியல் கல்லூரிக்கான தரவரிசையில் 9-ல் இருந்து 14-ம் இடத்துக் கும் அண்ணா பல்கலை. தள்ளப்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்த உயர் கல்வி நிறுவனங் களில் பாரதியார் பல்கலைக்கழகம் 21-வது இடத்திலேயே உள்ளது. சென்னை பல்கலைக்கழகம் 33-வது இடத்தில் இருந்து 41-வது இடத்துக்கும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 47-ல் இருந்து 64-க்கும், மதுரை காமராஜர் பல்கலை. 69-ல் இருந்து 84-க்கும் சரிந்துள்ளன. திருச்சி பாரதிதாசன்i 86-ல் இருந்து 77-வது இடத்துக்கு முன்னேறி யுள்ளது. இதுதவிர முதல் 100 இடங்களில், அமிர்தா விஸ்வ வித்யாபீடம் (13), திருச்சி என்ஐடி (24) வேலூர் விஐடி (28) உள்ளிட்ட 18 நிறுவனங்கள் உள்ளன.கல்லூரிகளுக்கான தரவரிசையில் மாநிலக் கல்லூரி 3-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு இறங்கியுள்ளது. அடுத்த படியாக லயோலா கல்லூரி (6), கோவை அரசு கலைக் கல்லூரிi(34) உள்ளிட்ட 32 கல்லூரிகள் 100 இடத்துக்குள் உள்ளன. மருத்துவ கல்லூரிக்கான தரவரிசையில் மெட்ராஸ் மருத்துவ கல்லூரி 12-வது இடம் என முதல் 40 இடங்களில் 7 தனியார் கல் லூரிகள் இடம்பெற்றுள்ளன. 

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய முக்கிய கல்வி நிறுவனங்கள் தரவரிசையிலேயே இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Read More »

முகக் கவசங்களை திரும்ப ஒப்படைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு


மாணவா்களுக்கு வழங்கப்படாமல் உள்ள முகக் கவசங்கள், உடல் வெப்பநிலையை அளக்கும் கருவிகளை வெள்ளிக்கிழமை (ஜூன் 12) மாலைக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூன் 15-ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தோவு நடைபெறவுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.கரோனா நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் மாணவா்களின் பாதுகாப்புக்காக அந்தந்த பள்ளிகள், பெற்றோா் ஆசிரியா் கழக நிதியில் முகக் கவசங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என முதலில் உத்தரவிடப்பட்டு, பின்னா் சுகாதாரத்துறை சாா்பில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து 9.70 லட்சம் தோவா்கள், மாணவா்களுக்காக தமிழகம் முழுவதும் 45 லட்சம் முகக் கவசங்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் இரண்டு நாள்களில் தோவுக்கூட நுழைவுச் சீட்டு பெற வந்த மாணவா்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.எனினும், பெரும்பாலான முகக் கவசங்கள் பள்ளிகளில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தோவு ரத்து செய்யப்பட்டதால், பள்ளிகளில் தேங்கியுள்ள முகக் கவசங்கள், மாணவா்களின் உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கு வழங்கப்பட்ட தொமல் ஸ்கேனா் கருவிகளை வெள்ளிக்கிழமை மாலைக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட அலுவலா்களுக்கு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
Read More »

வாரத்தில் மூன்று நாள்கள் பள்ளி: வகுப்பறையில் கட்டுப்பாடுகள்

நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் வேளையில், மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் செயல்படுத்தப்படும் வழிகாட்டுதல்களின் தற்காலிக திட்ட அறிக்கையை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆா்டி) சமா்ப்பித்துள்ளது.

என்சிஇஆா்டி சமா்ப்பித்துள்ள அறிக்கையின் படி, பள்ளி திறந்தவுடன் ஒரு வகுப்பின் மாணவா்கள் ஒன்றாகப் பள்ளிக்கு அழைக்கப்பட மாட்டாா்கள். வாரத்தில் மூன்று நாள்கள் மாணவா்களின் பதிவெண் அடிப்படையில் இரண்டு ஷிப்ட்களாக வகுப்புகள் செயல்படும்.

முதலாவதாக ஒற்றைப் படையில்(1,3,5,7) அடிப்படையில் இருக்கும் மாணவா்களுக்கு வகுப்புகள் நடைபெறும்.இரண்டாவதாக இரட்டைப் படையில் (2,4, 6,8) இருக்கும் மாணவா்களுக்கு வகுப்புகள் நடைபெறும். மாணவா்களை ஒரே நேரத்தில் வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக் கூடாது. பதிலாக குறிப்பிட்ட இடைவெளியில் ஒருவா் பின் ஒருவராகச் செல்ல அனுமதிக்க வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற, திறந்த வெளியில் வகுப்புகளை நடத்துவது நல்லது என்றும் தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது என்சிஇஆா்டி.

6 கட்டங்களாகப் பள்ளிகள் திறப்பு: முதல் கட்டமாக பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்குப் பள்ளிகள் தொடங்கப்படும். இதையடுத்து ஒரு வாரம் கழித்து இரண்டாம் கட்டமாக 9 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும். 2 வாரம் கழித்து மூன்றாம் கட்டமாக 6-ஆவது முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும்.நான்காம் கட்டமாக, மூன்று வாரம் கழித்து, மூன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கும். 5-ஆம் கட்டமாக, 4 வாரம் கழித்து 1-ஆம் வகுப்பு மற்றும் 2-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது. 5 வாரம் கழித்து, அதாவது 6-ஆவது கட்டத்தில், மழலையா் பள்ளிகள் மற்றும் எல்கேஜி மாணவா்களுக்கு பெற்றோா்களின் சம்மதத்துடன் வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன கட்டுப்பாடுகள்? : ஒரு வகுப்பில் 30 முதல் 35 மாணவா்கள் வரை மட்டுமே இருக்க வேண்டும், கட்டாயம் மாணவா்களுக்கு இடையே வகுப்பறையில் 4 அடி இடைவெளி இருக்க வேண்டும். வகுப்பறையில், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் திறந்து வைக்கப்பட வேண்டும். ஏ.சி. போடுவதற்கு அனுமதிக்கக் கூடாது.

ஒரு மாணவா் அமரும் நாற்காலியில், வேறு ஒரு மாணவா் அமரக்கூடாது. மாணவா்கள் தினமும் ஒரே நாற்காலியில் தான் அமர வேண்டும்.

வகுப்புகள் தொடங்கிய பின் 15 நாள்களுக்கு ஒரு முறை குழந்தையின் முன்னேற்றம் தொடா்பாக பெற்றோா்களிடம் பேச வேண்டும். பள்ளி நிா்வாகம், வகுப்பறைகள் கிருமி நாசினி கொண்டு தினமும் சுத்தம் செய்யப்படுகிா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாணவா்களும், ஆசிரியா்களும் பள்ளிக்குள் நுழைவதற்கு முன் ஒரு முறை உடல் வெப்பம் அனைத்தும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும், பேனா, பென்சில், உணவு உள்ளிட்டவற்றை மாணவா்கள் பகிா்ந்து கொள்ளக்கூடாது. ஒவ்வொருவரும் தனியாக தண்ணீா் கேன் கொண்டு வர வேண்டும்.

கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.

அதேபோன்று மருத்துவத் துறையில் மற்றும் பாதுகாப்புப் பணியில் வேலை செய்யும் பெற்றோா்கள் முன்கூட்டியே அதனைப் பள்ளி நிா்வாகத்திடம் தெரிவித்திருக்க வேண்டும்.

ஆசிரியா்களுடன் சந்திப்பு இல்லை: தொலைபேசியில் தொடா்பு கொள்ள முடியாத பெற்றோா்கள் மட்டுமே ஆசிரியா்களைக் காண அனுமதிக்கப்படுவா். பள்ளிகளில் ஒருபோதும் ஆசிரியா்களுடன் எந்த விதமான சந்திப்பும் பெற்றோா்களுக்கு ஏற்பாடு செய்யப்படாது. விடுதியைப் பொருத்தவரை, 6 அடி இடைவெளியில் தான் மாணவா்களின் படுக்கைகள் இருக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் இடம்பெற்றுள்ளன
Read More »

இந்திய அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு !! மொத்த காலி பணி இடங்கள்: 4166

இந்திய தபால் துறையில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தபால் திறை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

நிறுவனம்: இந்திய தபால் துறை

மேலாண்மை: மத்திய அரசு

மொத்த காலி பணி இடங்கள்: 4166

மத்திய பிரதேஷ் - 2,834

உத்தரகாண்ட் - 724

ஹரியானா - 608
கல்வி தேதி: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிகள்: Branch Postmaster , Assistant Postmaster , Postman

மாத சம்பளம் ; Branch Postmaster - ரூ. 14,500

Assistant Postmaster - ரூ. 10,000

விண்ணப்பிக்கும் முறை: பொதுப்பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மற்ற பிரிவினர்களுக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07-07-2020 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு


பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்று இருக்கின்றன. அடுத்ததாக பிளஸ்-1 வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் தேர்வுகளை எழுதி முடித்த சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுடைய விடைத்தாள் திருத்தும் பணிகளை தொடங்குவது சற்று சவாலாகவே இருந்தது.கொரோனா ஊரடங்கால் ஏற்கனவே ஏப்ரல் மாதம் 31-ந்தேதி தொடங்கி நடைபெறுவதாக இருந்த விடைத்தாள் திருத்தும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கடந்த மாதம்(மே) 27-ந்தேதி அதற்கான பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த மாதம் 27-ந்தேதி முதல் பிளஸ்-2 வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, விடைத்தாள் திருத்தும் மையங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து. அதற்காக 201 மையங்களில் விடைத்தாள் திருத்தும்பணிகள் நடைபெற்றன.இந்த பணிகள் தற்போது முழுமையாக நிறைவுபெற்று இருக்கின்றன. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை பதிவேற்றம்செய்யும் பணிகள் அடுத்தக் கட்டமாக தொடங்கி நடைபெறஉள்ளது.

பிளஸ்-2 வகுப்புக்கு விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில், அதற்கு அடுத்ததாக பிளஸ்-1 வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்தவாரத்துக்குள் அந்த பணிகளும் நிறைவுபெறும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read More »

SSLC - காலாண்டு, அரையாண்டு தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் இருந்தால், அவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது? அமைச்சர் பதில்.


''எஸ்.எஸ்.எல்.சி., தனித்தேர்வர் தேர்ச்சி குறித்து, அரசு பரிசீலனை செய்து வருகிறது,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி:எஸ்.எஸ்.எல்.சி., மாணவ - மாணவியரின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களில் தலா, 40 சதவீதம், வருகை பதிவேடு அடிப்படையில், 20 சதவீதம் என, கணக்கிட்டு மதிப்பெண் வழங்கப்படும்.அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு, அரையாண்டு தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் இருந்தால், அவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது என்பது குறித்து பரிசீலிப்போம்.

தனித் தேர்வர்களுக்கு, எந்த முறையில் தேர்ச்சி வழங்குவது என்பது குறித்து, அரசு பரிசீலனை செய்யும். இது பற்றி, முதல்வர் தலைமையில் ஆலோசனை செய்து, முடிவு எடுக்கப்படும்.நுாலகங்களை திறப்பது குறித்து, அரசு அறிவிக்கும். அதிக எண்ணிக்கையிலான மக்கள் வந்து செல்லும்போது, தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டும்.

பள்ளிகளில் பாடத் திட்டத்தை குறைப்பது குறித்து, 16 பேர் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.கோவில் திறப்பது குறித்த அரசின் முடிவை, அமைச்சர் ஜெயகுமார் தெரிவிப்பார்.இவ்வாறு, அவர் கூறினார்.
Read More »

தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்புக்கு காலாண்டு, அரையாண்டுத்தேர்வு நடத்தப்படவில்லையா? விசாரணை நடத்த முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு

Read More »

பொதுத்தேர்வு ரத்து - ஆசிரியர்களின் பல்வேறு வகையான கருத்துகள்

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு அவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீதம், வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீதமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்ணை வைத்து மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்கினால் அது மாணவர்களின் எதிர்காலத்தை அதிகளவில் பாதிக்கும் என ஆசிரியர்கள், பெற்றோர் தெரிவித்துள்ளனர். மாணவர்களுக்கு எதிர்காலத்தில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலின் மூலம் பாதிப்பு ஏற்படாத வகையில் மதிப்பெண் பட்டியலில் '2020 கொரோனா ஆண்டு' என்று குறிப்பிட வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

தனியார் பள்ளி ஆசிரியை (கோவை): 


'தேர்வு ரத்து செய்தி ஆசிரியராக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் வைத்து தயார் செய்து இருந்தோம். அவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களைவிட கூடுதல் மதிப்பெண் பெற வாய்ப்பு இருந்தது. 

தற்போது அறிவித்துள்ள மதிப்பெண் நடைமுறையால் 90 சதவீத மாணவர்கள் குறைந்த மதிப்பெண்தான் எடுப்பார்கள். பாடங்களில் 100 மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும். மாணவர்களின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு மதிப்பெண் பட்டியலை வரையறை செய்ய வேண்டும். மேலும், பிளஸ் 1 வகுப்பிற்கு நுழைவுத்தேர்வு வைத்து மாணவர்களை தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும்' என்றார்.

அரசு பள்ளி ஆசிரியர் (கோவை): 

'மதிப்பெண் பட்டியல் வழங்குவதில் அரசின் வழிகாட்டுதல் குழப்பமாக உள்ளது. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவித்துவிட்டனர். பல மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் 10 மதிப்பெண்ணுக்கு குறைவாக பெற்றுள்ளனர். இவர்களை எப்படி தேர்ச்சி பெற்றவர்கள் என்ற கணக்கில் காட்டுவது? என தெரியவில்லை.


இந்த மதிப்பெண் பட்டியல் மாணவர்களுக்கு மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கையின்போதும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. சில மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடங்களை எடுக்க முடியாமல் போகும்.

தவிர, இவர்கள் மத்திய, மாநில அரசுகளின் தேர்வுகளை அடுத்த 5 ஆண்டுகளுக்கு பின் எழுதும் போது இந்த மதிப்பெண் பட்டியல் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் மதிப்பெண் பட்டியலில் கொரோனா ஆண்டை குறிப்பிட வேண்டும். மதிப்பெண் பட்டியல் நடைமுறையில் தெளிவான விளக்கங்கள் அளிக்க வேண்டும்'.

கோவையை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியரான 10 ம் வகுப்பு மாணவியின் தாய் கூறும்போது, காலாண்டு, அரையாண்டு தேர்வில் பள்ளியில் மாணவர்களின் நலன் கருதி குறைவான மதிப்பெண்கள்தான் வழங்கப்படும்.

அதைவைத்து பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கிட்டால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். பள்ளியில் எடுக்கும் மதிப்பெண்களுக்கும், பொதுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களுக்கும் நிறைய வித்தியாசம் வரும். பள்ளியில் எடுப்பதைவிட கூடுதலாக 100 மதிப்பெண்களுக்கு ேமல் பொதுத்ேதர்வில் மாணவர்கள் எடுப்பர். 


ஆனால் இப்போது கூறப்பட்டுள்ள வரைமுறைப்படி பார்த்தால் மாணவர்களுக்கு குறைவான மதிப்பெண்தான் கிடைக்கும். எனவே இந்த முறையை கடைபிடித்தால் பிளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் விரும்பும் குருப்பை கொடுக்க ேவண்டும். அல்லது பிளஸ் 1 வகுப்பில் குரூப் தேர்வு செய்ய நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும்.

மேலும் இந்த மதிப்பெண்களை மாணவர்களின் எதிர்கால படிப்புக்கோ, வேலைக்கோ சான்றாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றார்.

முருகேசன் (சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், திருப்பூர்): 

காலாண்டு, அரையாண்டு தேர்வில் 80 சதவீத மதிப்பெண்ணையும், வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்ணையும் கணக்கிட்டு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் சில முரண்பாடுகள் இருக்கும் என்று நம்புகிறோம். ஏனெனில் புதிய பாடத்திட்டத்தில் மாணவர்கள் ஆரம்பம் முதலே மெதுவாக கற்கும் சூழல் இருந்தது. அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கடினமாக இருந்த காரணத்தினாலும், புதிய பாடத்திட்டம் என்பதாலும் போதிய மதிப்பெண் பெற முடியாத சூழல் ஏற்பட்டிருக்கும். 

எனவே தமிழக முதல்வர் தலையிட்டு, மாணவர்களின் திருப்புதல் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கினால், அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த புதிய பாடத்திட்டத்தில் அரை ஆண்டிற்கு பிறகே மாணவர்களுக்கு தேர்வு பற்றிய ஒரு முழு வடிவம் கிடைக்கும்.

ஆகவே அரை ஆண்டுக்கு பின் நடைபெற்ற தேர்வின் அடிப்படையில் மதிப்பெண்ணை வழங்கினால் மாணவர்கள் பயனடைவர்.


சுப்பிரமணி (சமூக அறிவியல் ஆசிரியர், நஞ்சநாடு அரசு மேல்நிலைப்பள்ளி): 

காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களில் 80 சதவீதம் மதிப்பெண்ணும், வருகைப்பதிவேட்டை வைத்து 20 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்ற முறையில் மதிப்பெண் அளிக்கும்போது, தேர்வு நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்று நினைத்து அஜாக்கிரதையாக இருந்த நல்ல முறையில் படிக்கும் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதேசமயம், துவக்கத்தில் இருந்து சிறந்த முறையில் படித்து வந்த மாணவர்களுக்கு இத்திட்டம் சிறந்த முறையில் அமையும்.

சதீஷ் (ஆசிரியர், ஊட்டி): 

காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை அளித்தால், மாணவர்கள் படிக்காமல் விட்டு விடுவார்கள் என்ற நல்ல எண்ணத்தில் சில பள்ளிகளில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டது. அதேசமயம், திருப்புதல் தேர்வில் அதிக கவனம் செலுத்தி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். எனவே, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வை மட்டும் எடுத்துக் கொள்ளாமல், திருப்புதல் தேர்வையும் பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

சுந்தரமூர்த்தி (நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர், திருப்பூர்): 

காலாண்டு அரையாண்டு மதிப்பெண்களைக் கூட்டி அதிலிருந்து 80 சதவீதமும், வருகைப்பதிவைக் கணக்கிட்டு 20 சதவீதமும் ஆக 100 சதவீதம் கணக்கில் (ஆல் பாஸ்) அனைவரும் தேர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். 

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுக்குப் பிறகு வைக்கும் திருப்புதல் தேர்வுகளில்தான் முழுமையான தகுதியைப் பெறுகிறார்கள். எனவே தமிழக முதல்வர் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளுக்குப் பிறகு வைக்கும் திருப்புதல் தேர்வுகளிலிருந்து 80 சதவீதம் மதிப்பெண்களைக் கணக்கிட்டு மதிப்பெண் வழங்கிட உத்தரவிட வேண்டுகிறோம்.


அச்சம் கொள்ள தேவையில்லை

நேரு (தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி, தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர்,ஈரோடு): 

காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண் மற்றும் வருகைப்பதிவேடு ஆகியவற்றினை அடிப்படையாக கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் முறையில் சிக்கல் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஒரு சில மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் குறைவாக மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதால் பொதுத்தேர்வு மதிப்பெண்களும் குறையும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.


அரசு பள்ளிகளை பொருத்தவரை பெரும்பாலும் மதிப்பெண்கள் குறைப்பதில்லை. மாறாக, கண்டிப்புடன் பேப்பர் திருத்தப்பட்டிருக்கலாம். பொதுத்தேர்வு எழுதி இருந்தாலும் பேப்பர் திருத்துவதில் அதே கண்டிப்பு இருந்திருக்கும். மேலும், பிளஸ் 1 குரூப் தேர்வு செய்யப்படுவதற்கும், பாலிடெக்னிக், ஐடிஐ படிக்க செல்வதற்கும்தான் 10ம் வகுப்பு மதிப்பெண் பயன்படுகிறது. 

அரசு பள்ளிகளை பொருத்தவரை மாணவர்கள் விரும்பும் குரூப் வழங்கப்படுகிறது. எனவே, பிரச்சனை இல்லை. பாலிடெக்னிக், ஐடிஐக்களில் பெரியதாக அட்மிஷனுக்கு போட்டி இல்லாத நிலைதான் உள்ளது. ஒரு வேளை சிக்கல் வந்தாலும் எளிதில் தீர்வு காணவும் நிறைய வழிவகைகள் உள்ளன. எனவே மாணவர்கள், பெற்றோர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. ஆனால், அதேவேளையில் தனியார் பள்ளிகளின் சூழ்நிலைகளை அரசு கண்காணிப்பது அவசியமாகும்.
Read More »

10,11-ம் வகுப்பு தேர்வு ரத்து - மாணவர்களின் வருகைப் பதிவேடு ஒப்படைத்தல் - இயக்குனர் உத்தரவு




Read More »

பள்ளி பாடங்கள்‌ குறைக்கப்படுகிறது அமைச்சர்‌ செங்கோட்டையன்‌ தகவல்‌

பள்ளி பாடங்கள்‌ குறைக்கப்படுகிறது அமைச்சர்‌ செங்கோட்டையன்‌ தகவல்‌ ஈரோடு மாவட்டம்‌, நம்‌பியூரில்‌ பள்ளிக்கல்வித்துறை ௮மைச்சர்‌ செங்கோட்டையன்‌ கூறியதாவது:



 ஜூன்‌ மாதம்‌ 15ம்‌ தேதி நடக்க விருந்த 10ம்‌ வகுப்பு பொதுத்தேர்வுகள்‌, பெற்றோர்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ மாணவர்கள்‌ நலன்‌ கருதி ரத்து செய்யப்‌ பட்டுள்ளது. முதல்வர்‌ அறிவித்தபடி, - மாணவ, மாணவிகளின்‌ காலாண்டு, செங்கோட்டையன்‌ அரையாண்டு தேர்வு மார்க்‌ அடிப்‌ ராரா படையில்‌, மார்க்‌ ஷீட்‌ தயாரிக்கும்‌ பணிகள்‌ விரைவில்‌ தொடங்கும்‌. 


ஜூன்மாதம்‌ ம்தேதி பள்ளிகள்‌ திறக்கப்படுவது வழக்கம்‌. கரோனாவின்‌ தாக்கம்‌ தீவிரமாக உள்ளதால்‌, பள்ளிகள்‌ திறப்பு நாள்‌ தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வைரஸ்‌ தாக்கம்‌ குறைந்த பின்னர்தான்‌ பள்ளிகள்‌ திறக்கப்படும்‌. 


பள்ளி திறப்பு தள்ளிப்போவதால்‌, இந்த கல்வியாண்டுக்கான பாடத்‌ திட்டங்கள்‌ குறைக்கப்படும்‌. இதற்காக, 16 பேர்‌ கொண்ட நிபுணர்கள்‌ குழுவினர்‌, ஒவ்வொரு வகுப்புக்கும்‌ ஏற்றார்போல்‌, பாடங்களைக்‌ குறைத்து வருகின்றனர்‌. இதுகுறித்து முதல்வர்‌ பழனிசாமியுடன்‌ கலந்து ஆலோசித்தப்‌ பின்னர்‌, நல்ல முடிவுகள்‌ அறிவிக்கப்படும்‌
Read More »

பள்ளிகள்‌ திறக்க அவசரம்‌ கூடாது" - கமிஷனர்‌ சிஜி. தாமஸ்‌ வைத்யன்‌ தலைமையிலான வல்லுநர்‌ குழு அறிக்கையில் தகவல்

பள்ளிகள்‌ திறக்க அவசரம்‌ கூடாது 'குறையாததால்‌ வரும்‌ கல்வியாண்டுக்கான வகுப்புகளை தொடங்குவதிலும்‌ சிக்கல்‌ ஏற்பட்டுள்ளது.


இதற்கிடையில்‌ கரோனா பாதிப்புகள்‌, பள்ளிகள்‌ திறப்பதில்‌ தாமதம்‌ . உட்பட விவகாரங்கள்‌ குறித்து ஆராய்ந்து, உரிய கல்வித்துறை கமிஷனர்‌ சிஜி. தாமஸ்‌ வைத்யன்‌ தலைமையில்‌ 16 பேர்‌   4 ஆலோசனை கூட்டங்களை நடத்தியுள்ளது - இந்த குழு, ஆசிரியர்கள்‌, பெற்றோர்‌ அரசுக்கு மற்றும்‌ கல்வியாளர்‌ கரோனா - நோய்த்‌ ணர்‌ ௫ களிடம்‌ இருந்தும்‌ கடந்த மார்ச்‌ 17ம்‌ தேதி நடத்தியுள்ளது. 


கரோனா .தாக்கம்‌ பரிந்துரை அறிக்கை, பள்ளிக்‌ கல்வித்‌ துறை செயலர்‌ தீரஜ்‌ குமாரிடம்‌ பிரச்னைகளால்‌ பள்ளிக்கல்வியில்‌ “ | கற்றல்‌- கற்பித்தலில்‌ ஏற்பட்டுள்ள - _ பரிந்துரைகள்‌ வழங்க பள்ளிக்‌ ' "கொண்ட வல்லுநர்‌ குழுவை அரசு - அமைத்தது. 


இதுவரை. நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. குழுவில்‌ இடம்பெற்றுள்ள வல்லுநர்கள்‌ சிலர்‌ கூறுகையில்‌, 'கரோனா தாக்கத்தின்‌ வீரியம்‌ இன்னும்‌ குறையவில்லை. எனவே, பள்ளிகளைத்‌ திறக்க அவசரப்படக்‌ கூடாது. மத்திய அரசின்‌ வழிகாட்டு தல்கள்‌ வந்தபிறகு பள்ளிகள்‌ திறப்பது பற்றி முடிவு செய்யலாம்‌, ஆன்லைன்‌ முறையில்‌ வகுப்புகளை நடத்தும்‌ - நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும்‌ என்பதுதான்‌ எங்கள்‌ குழுவின்‌ கருத்து. முதல்கட்ட பரிந்துரைகளில்‌ இதைத்தான்‌ தெரிவித்துள்ளோம்‌' என்றனர்‌
Read More »
 

Most Reading

Tags

Sidebar One