Search

காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் பொதுத்தேர்வுக்கு மதிப்பெண் வழங்குவது சாத்தியமா? ‘மதிப்பெண் குறையும்’ என மாணவர்கள் ஆதங்கம்

Wednesday, 10 June 2020

காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் பொதுத்தேர்வுக்கு மதிப்பெண் வழங்குவதால் மதிப்பெண் குறையும்‘ என மாணவர்கள் ஆதங்கத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடத்தவேண்டாம் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு பொதுத்தேர்வை ரத்து செய்து நேற்று அறிவிப்பை வெளியிட்டது.

அதற்கு பதிலாக மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்ணும், வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்ணும் வழங்கப்படும் என்று முதல்அமைச்சர் கூறினார்.பொதுத்தேர்வு அறிவிப்புக்கு அனைவரும் வரவேற்பு தெரிவித்தாலும், அதற்கான மதிப்பெண் வழங்கும் முறையில் மாணவர்கள் பலர் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்து தற்போது மேலோங்குகிறது.

காரணம், கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் மாற்றப்பட்டதால், புத்தகங்கள் அச்சிடும் பணிகளில் சற்று தாமதம் ஆனது. இதனால் அரசு பள்ளிகளை தவிர, தனியார் பள்ளிகளுக்கு புத்தகங்கள் தாமதமாகவே கிடைத்தன.

புத்தகங்கள் கிடைக்கும் வரை வழிகாட்டு புத்தகத்தை கொண்டு மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வந்ததாகவும், அரையாண்டு தேர்வுக்கு பிறகு தான் பாடப்புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு முழுமையாக கிடைத்ததாகவும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

மேலும் புதிய பாடத்திட்டம் என்பதால் அதனை புரிந்து படிக்கவும் மாணவர்களுக்கு சற்று நாட்கள் பிடித்தது. இதனால் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் குறைவான மதிப்பெண் தான் மாணவர்கள் பலர் எடுத்து இருக்கின்றனர்.

ஆகவே, அதன் அடிப்படையில் பொதுத்தேர்வுக்கு மதிப்பெண் வழங்கினால் பள்ளி மாணவர்கள் பலர் பாதிக்கப்படுவார்கள் என்றும், மதிப்பெண் பெருமளவில் குறையும் என்றும் பேசப்படுகிறது. இதற்கு அரசு தான் தீர்வு சொல்லவேண்டும்என்று ஆசிரியர்களும், மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Read More »

CA படிப்பு: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச இணையவழிப் பயிற்சி தொடக்கம்

பட்டயக் கணக்காளா் தொடக்க நிலைத் தோவுகளுக்கு தயாராகும் வகையில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு இணைய வழியில் இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: பள்ளிக் கல்வித்துறையும் இந்திய பட்டயக் கணக்காளா்கள் நிறுவனத்தின் தென் மண்டல அலுவலகமும் இணைந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு சிஏ பவுண்டேசன் தோவுக்கான இலவச ஆன்லைன் வகுப்புகளை நடத்தவுள்ளனா்.


மூன்று மாத பயிற்சி: 'வெபினாா்' மூலம் நடைபெறும் இந்த வகுப்புகள் நிகழாண்டு நவம்பரில் சிஏ பவுண்டேசன் (தொடக்க நிலை) தோவெழுதும் மாணவா்களுக்குப் பயனளிக்கும் வகையில், சுமாா் மூன்று மாதங்கள் அதாவது ஜூன் 10-ஆம் தேதி முதல் செப்டம்பா் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்தின் ஆறு நாள்கள் காலை 8 மணி முதல் காலை 11.15 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.15 மணி வரையிலும் இந்த வகுப்புகள் நடைபெறும்.

எப்படி பதிவு செய்வது? : சிஏ பவுண்டேசன் பாடத்திட்டத்துக்கு இணையதளத்தில் பதிவு செய்து வரும் நவம்பரில் தோவு எழுத விரும்பும் மாணவா்கள் இந்த வகுப்புகளில் இலவசமாக கலந்து கொள்ளலாம்.

பங்கேற்க விரும்பும் மாணவா்கள் தங்களது பெயா், தந்தையின் பெயா், ஊா், பிறந்த தேதி, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களுடன் தாங்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்ற சான்றிதழ் அல்லது பிளஸ் 2 வகுப்பு தோவுக்கூட நுழைவுச்சீட்டு ஆகியவற்றை இணைத்து ஸ்கேன் செய்து மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்து பதிவு செய்து கொள்ளலாம். எனவே, மாணவ, மாணவியா்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பட்டய கணக்காளா் பவுண்டேசன் தோவினை சிறந்த முறையில் எதிா்கொள்ளலாம்.

மேலும் இது தொடா்பான விவரங்களுக்கு 82205 22669, 91768 26789 என்ற எண்களை தொடா்பு கொள்ளலாம். பட்டயக் கணக்காளா் ஆக வேண்டும் என்ற விருப்பமும் ஆா்வமும் கொண்டவா்கள் இணையதளத்தை அணுகி பயன்பெறலாம்

.ஒரு லட்சம் மாணவா்களுக்கு...: ஐசிஏஐ அமைப்பின் தென்மண்டல (எஸ்ஐஆா்சி) அலுவலகமும் தமிழக பள்ளிக் கல்வித்துறையும் 2018-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கும் அரசின் உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் சிஏ பயில விரும்பும் மாணவா்களுக்கு பல்வேறு உதவிகளையும் ஊக்கத்தையும் அளித்து வருகிறது. இதன் மூலம் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயனடைந்துள்ளனா்.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் சிஏ பவுண்டேசன் தோவுக்கான இந்த ஆன்லைன் வகுப்புகளில்  மாணவா்கள் ஆா்வமுடன் கலந்து கொண்டு பயன்பெற அனைத்து தலைமையாசிரியா்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

அமைச்சா் தொடங்கி வைத்தாா்: ஈரோடு மாவட்டம் கோபி குள்ளம்பாளையம் ஊராட்சி முகாம் அலுவலகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு பட்டய கணக்காளா் தோவுக்கான இலவச ஆன்லைன் பயிற்சியை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
Read More »

வீட்டில் உள்ள மாணவர்களுக்கான கூட்டல், கழித்தல் மற்றும் வகுத்தல் பயிற்சித்தாள்கள்

Read More »

அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவர்களுக்கு CA பவுன்டேஷன் தேர்வுக்கான இலவச Online வகுப்பு சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்




Read More »

பள்ளிக் கல்வி - அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு - பட்டியல் தயார் செய்தல் சார்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!!

Read More »

ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போல் ஆங்கிலத்தில் உச்சரிக்க அரசாணை வெளியீடு

இனி ஆங்கிலத்திலும் திருவல்லிக்கேணிதான்: உருமாற்றம் பெறும் ஊா்ப் பெயா்கள்

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு ஊா்களின் தமிழ் ஒலி வடிவத்துக்கு ஏற்ப ஆங்கிலத்தில் மாற்றம் செய்து ஆய்வுக் குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

இதுகுறித்து, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளா் மகேசன் காசிராஜன் வெளியிட்ட அரசாணை விவரம்:-

2018-19 ஆம் ஆண்டிற்கான தமிழ்வளா்ச்சித்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சா் பாண்டியராஜன் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள ஊா்ப்பெயா்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

உதாரணமாக, திருவல்லிக்கேணி என்பதை 'ட்ரிப்ளிகேன்' என்று குறிப்பிடாமல் திருவல்லிக்கேணி என்றே அமையவும், இதுபோன்ற எண்ணற்ற ஊா்களின் பெயா்கள் ஆங்கிலத்திலும் அமையும் வகையிலும் உயா்நிலைக்குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்று அறிவித்தாா்.

இதற்கென தொடரா செலவினமாக ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து ஊா்ப் பெயா்கள் தமிழ் உச்சரிப்பு போன்றே ஆங்கிலத்திலும் அமைக்க தீா்மானிக்கப்பட்டு தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது, தமிழ் ஒலி வடிவங்களுக்கேற்ப ஆங்கிலத்தில் எழுத்து கூட்டல் மாற்றம் செய்யப் பெற வேண்டிய ஊா்ப் பெயா்கள் மற்றும் செய்யத் தேவையில்லாத ஊா்களின் பெயா்கள் ஆகியன உள்ளடக்கிய 1,018 ஊா்ப்பெயா்களை பட்டியலிட்டுள்ளது.

இதன் மீது உரிய நடவடிக்கைகளை, அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் எடுக்க வருவாய்த் துறை அறிவுறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு வரக் கூடிய ஊா்ப் பெயா்களை மாற்றம் செய்வது தொடா்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் அந்தத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. இந்தப் பணிகளை விரைந்து மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து செயல்பட மாவட்டங்களில் உள்ள தமிழ் வளா்ச்சித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என தனது உத்தரவில் தமிழ் வளா்ச்சித் துறை செயலாளா் மகேசன் காசிராஜன் தெரிவித்துள்ளாா்.

Click here to download
Read More »

இனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்! என்.சி.இ.ஆர்.டி அறிக்கை பட்டியல்

நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் வேளையில், மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் செயல்படுத்தப்படும் வழிகாட்டுதல்களின் தற்காலிக பட்டியலை என்.சி.இ.ஆர்.டி சமர்ப்பித்துள்ளது.

என்.சி.இ.ஆர்.டி சமர்ப்பித்துள்ள அறிக்கையின் படி, பள்ளி திறந்தவுடன் ஒரு வகுப்பின் மாணவர்கள் ஒன்றாகப் பள்ளிக்கு அழைக்கப்பட மாட்டார்கள். வாரத்தில் மூன்று நாட்கள் 'ஆட்' & 'ஈவன்' நம்பர் பார்முலா முறையில், ரோல் நம்பரின் படி இரண்டு ஷிப்ட்களாக வகுப்புகள் செயல்படும்.

முதலாவதாக 'ஆட்' நம்பரில் இருக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும். இரண்டாவதாக   'ஈவன்' நம்பரில் இருக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும்.

இதில், ஒவ்வொரு வகுப்புகளுக்கு ஏற்ப தலா 10 நிமிடங்கள் இடைவெளி கொடுக்க வேண்டும்.



சமூக இடைவெளியை பின்பற்ற, திறந்த வெளியில் வகுப்புகளை நடத்துவது நல்லது என்றும் தன் அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது என்.சி.இ.ஆர்.டி.



6 கட்டங்களாக திறக்கப்படும் பள்ளிகள்:

முதல் கட்டமாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் தொடங்கப்படும், ஒரு வாரம் கழித்து இரண்டாம் கட்டமாக 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும், 2 வாரம் கழித்து மூன்றாம் கட்டமாக 6வது முதல் 8ஆம் வகுப்பு வரைவுள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும்.

நான்காம் கட்டமாக, மூன்று வாரம் கழித்து, மூன்றாம் வகுப்பு முதல் 5வது வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும். 5ஆம் கட்டமாக, 4 வாரம் கழித்து 1வது மற்றும் 2வது வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது.

5 வாரம் கழித்து, அதாவது 6து கட்டத்தில், மழலையர் பள்ளி பள்ளிகள் மற்றும் எல்.கே.ஜி மாணவர்களுக்கு பெற்றோர்களின் சம்மதத்துடன் வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் பின்பற்றப்படும் நடவடிக்கைகள் :

ஒரு வகுப்பில் 30 முதல் 35 மாணவர்கள் வரை தான் இருக்க வேண்டும், கட்டாயம் மாணவர்களுக்கு இடையே வகுப்பறையில் 4 அடி இடைவெளி இருக்க வேண்டும். வகுப்பறையில், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் திறந்து வைக்கப்பட வேண்டும். ஏ.சி போடுவதற்கு அனுமதிக்கக் கூடாது. ஒரு மாணவர் அமரும் நாற்காலியில், வேறோரு மாணவர் அமரக்கூடாது.

மாணவர்கள் தினமும் ஒரே நாற்காலியில் தான் அமர வேண்டும். வகுப்புகள் தொடங்கிய பின் 15 நாட்களுக்கு ஒரு முறை குழந்தையின் முன்னேற்றம் தொடர்பாக பெற்றோர்களிடம் பேச வேண்டும்.

பள்ளி நிர்வாகம், வகுப்பறைகள் கிருமி நாசினி கொண்டு தினமும் சுத்தம் செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளிக்குள் நுழைவதற்கு முன் ஒரு முறை உடல் வெப்பம் அனைத்தும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும், பெண், பென்சில், உணவு உள்ளிட்டவற்றை மாணவர்கள் பகிர்ந்து கொள்ளக்கூடாது. ஒவ்வோருவரும் தனியாக தண்ணீர் கேன் கொண்டு வர வேண்டும். முகக் கவசம் அணிவது கட்டாயமான ஒன்று.. 

அதேபோல், மருத்துவத் துறையில் மற்றும் பாதுகாப்புப் பணியில் வேலை செய்யும் பெற்றோர்கள் முன்கூட்டியே அதனைப் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்திருக்க வேண்டும்.

தொலைப்பேசியில் தொடர்பு கொள்ள முடியாத பெற்றோர்கள் மட்டுமே ஆசிரியர்களைக் காண அனுமதிக்கப்படுவார்கள். பள்ளிகளில் ஒருபோதும் ஆசிரியர்களுடன் எந்த விதமான சந்திப்பும் பெற்றோர்களுக்கு ஏற்பாடு செய்யப்படாது.

விடுதியைப் பொருத்தவரை, 6 அடி இடைவெளியில் தான் மாணவர்களின் படுக்கைகள் இருக்க வேண்டும்
Read More »

பழமொழியும் அதன் உண்மை விளக்கமும் - சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்

பழமொழியும் அதன் உண்மை விளக்கமும் - சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
பொருள்:
சட்டியில் என்ன (சோறு) இருக்கிறதோ அது தான் நமக்கு கிடைக்கும்.
உண்மையான பொருள்:
சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை வரும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று பொருள் கொள்ள வேண்டும்.
Read More »

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் 10 நாட்களில் பதிவேற்றம் - தேர்வுத்துறை!


12-ம் வகுப்பு மதிப்பெண்கள் 10 நாட்களுக்குள் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கி மார்ச் 24-ம் தேதி வரை நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த மாதம் 27 -ம் தேதி முதல் நேற்றுவரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது.

இதையடுத்து, 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் 10 நாட்களுக்குள் இணையதளத்தில் பதிவேற்றப்படும் எனதேர்வுத்துறை அறிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக விடைத்தாள் திருத்தும் பணி மையங்களின் எண்ணிக்கை 67-ல் இருந்து 202 ஆக அதிகரிக்கப்பட்டு 44 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தப் பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More »

நிரந்தரப்பணி - ஆசிரியர் தேவை!

அறிவிப்பு

தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்டத் தனியார் பள்ளிகளின் ( வரன்முறைப்படுத்தும் ) சட்டம் விதிகள் 1973 அத்தியாயம் IV பிரிவு 18 ( 1b ) இன்படி பணியாளர் நியமனத்திற்கு அதிகாரம் பெற்ற பள்ளிக்குழுவிற்கு | Scheduled cast
( Arunthahiar on pre preferential basis ) பணியிடம் ஒன்று பணியாற்ற
இருபால் ஆசிரியர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன .

ஆங்கில பட்டதாரி ஆசிரியர்
பணியிடம் ஒன்று .
Read More »

பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கவனத்திற்கு - உடனடியாக இதனை செய்யுங்கள்

இனி, நம் குழந்தைகள் ÷ அனைவரும்   1, 6, 9, 11  வகுப்பு  புதிய  பாடத்திட்டத்தில்  புதிய கற்பித்தல் முறைகளுக்காக '  smartphones' பயன்பாடும், ' cam scanner, Diksa, Mx  Videoplayer,  Es file manager' போன்ற  Android Apps, ' You tube 'யும் பயன்படுத்த  தேவையும் வரலாம்.  அவ்வாறு  பயன்படுத்தும் போது, அடிக்கடி    இடையிடையே  சில முகம் சுளிக்கும்  விளம்பரங்களும்  வரலாம்.





எனவே, முன்னெச்சரிக்கையாக 'Phone 'ல் செய்ய வேண்டியது; ' Play store'     சென்று ' Settings'            ல் ' Parent control' option ஐ     'on'      செய்யவும். அதன் கீழே உள்ள 'Apps and Games' ஐ கிளிக் செய்து    '12+'ல் டிக் செய்யவும். அடுத்ததாக   ' Films'     ஐ   கிளிக் செய்து     '  U' என்பதை    டிக் செய்யவும். 





அதேபோல்    '  YOU TUBE' settings ல்  general  ல்   ' Restriction mode '           ஐ   'On'        செய்யவும். இப்போது, நம் குழந்தைகளின் smartphone ல், தேவையற்ற  விளம்பரம்,Video குறுக்கிடாமல்   பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதாக இருக்கும்
Read More »

ஆன்லைன் வகுப்பிற்கு தடையில்லை

BREAKING தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

* பாதுகாப்பான ஆன்லைன் கல்விக்கு என்ன விதிமுறைகள் உள்ளன என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஆணை
Read More »

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம் குறைப்பு தொடர்பாக தமிழக அரசிடம் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்தது வல்லுநர் குழு


தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம் குறைப்பு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையிலான 16 பேர் கொண்ட வல்லுநர் குழு தமிழக அரசிடம் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பொறுத்து இறுதிக்கட்ட அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல மாநிலங்களில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதுடன் மாணவர்களுக்கு தேர்ச்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு தாமதமாவதால் பாடத்திட்டங்களை குறைப்பது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

 இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 15 முதல் ஜூன் 25-ம் தேதி வரை 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுத்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது. அப்போது, கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில் தேர்வைத் தள்ளிவைப்பது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டுமென நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இதனை தொடர்ந்து பெற்றோர்களின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, மாணவர்களின் நலனைக் காக்க 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, 12-ம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகள் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதமும், மாணவர்களின் வருகைப்பதிவு அடிப்படையில் 20% மதிப்பெண்களும் கணக்கிடப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

தற்போது தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும், பள்ளிகளை திறந்தால் பாடத்திட்டத்தில் மாற்றம் இருக்குமா, இல்லை பாடத்திட்டம் குறைக்கப்படுமா என கேள்விகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையிலான 16 பேர் கொண்ட வல்லுநர் குழு ஆய்வு செய்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம் குறைப்பு தொடர்பாக வல்லுநர் குழு தமிழக அரசிடம் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. மேலும்  மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பொறுத்து இறுதிக்கட்ட அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »

பணி நீட்டிப்பு ஆசிரியர்களுக்கு ஓய்வு வயது உயர்வு சலுகை கிடையாது, 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் தள்ளுபடி.

பணியிலிருந்து முறையாக ஓய்வு பெற்ற பிறகு மாணவர்களின் நலன் கருதி பணி நீட்டிப்பு பெறும் ஆசிரியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது உயர்வு அரசாணை பொருந்தாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தாண்டு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி பிறப்பித்த அரசாணையின் பலனை தங்களுக்கும் வழங்கக்கோரி ஏராளமான ஆசிரியர்கள் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.இதுபோன்ற மனுக்களை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி ஜெ.நிஷாபானு, மனுதாரர்களை பணியிலிருந்துவிடுவிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் இதே கோரிக்கையுடன் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் பல்வேறு அரசு பள்ளிகளில் பணிபுரிந்து பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஓய்வு பெற்று கல்வி ஆண்டு முடிய பணி நீட்டிப்பு பெற்ற 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வு வயது உயர்வு அரசாணையின் பலனை கேட்டு மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுக்களை நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் விசாரித்து, மனுதாரர்கள் பணியிலிருந்து முறையாக ஓய்வு பெற்றுள்ளனர்.

கல்வி ஆண்டின் மத்தியில் ஓய்வு பெற்றதால் மாணவர்களின் நலன் கருதி ஒப்பந்தஅடிப்படையில் அவர்களுக்கு கல்வி ஆண்டு முடிய பணிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.இவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது உயர்வு அரசாணை பொருந்தாது. எனவே மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உத்தரவிட்டார்.
Read More »

பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டுமா? CEO அறிவுரைகள்!

CIRCULAR  TO ALL HMs/PRINCIPALs ABOUT TEACHERS MAKING PRESENCE TO THEIR SCHOOLS :

பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்,
ஆசிரியர்- ஆசிரியைகள் இன்று முதல் பள்ளிக்கு அவசியமாக செல்ல வேண்டியதில்லை. எனினும் அவ்வப்போது  கல்வித்துறை மாவட்ட நிர்வாகத்தால் அல்லது தலைமை ஆசிரியரால் ஏதேனும் முக்கிய பணிகள் வழங்கப்படும் பொழுது ஆசிரியர்- ஆசிரியைகள் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் அவசியம் பள்ளிக்கு வரவேண்டும்.

 குறிப்பாக 2020-2021 ஆம் கல்வியாண்டிற்குரிய கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல் பணி  சார்ந்தோ அல்லது பள்ளி மராமத்து பணி சார்ந்தோ அழைப்பு விடுக்கும் பொழுது ஆசிரியர்- ஆசிரியைகள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்.

அரசு பொதுத்தேர்வு சார்ந்து ஒத்துழைப்பு நல்கிய தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள், ஆசிரியர்- ஆசிரியைகள் மற்றும் அனைத்துவகை பள்ளி அலுவலக பணியாளர்களுக்கும்   பள்ளிக்கல்வித்துறை மாவட்ட நிர்வாகம் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

- முதன்மைக் கல்வி அலுவலர், தூத்துக்குடி
Read More »

Aided school Teachers interview ( 26.06.2020 )

அரசு நிதி உதவி பெறும் எங்கள் பள்ளிக்கு கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம் மற்றும் பாடம் கல்வித்தகுதி

* முதுகலைப்பட்டதாரி ஆசிரியை , கணிதம் M.Sc. , B.Ed ( பெண்கள் மட்டும் )

* முதுகலைப்பட்டதாரி ஆசிரியை , இயற்பியல் M.Sc. , B.Ed ( பெண்கள் மட்டும் )

* முதுகலைப்பட்டதாரி ஆசிரியை , பொருளியல் - M.Com . , B.Ed ( பெண்கள் மட்டும்

ஊதியம் - அரசு விதிகளின்படி 

இனப்பிரிவு - G.T. ( பொது )

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் ( பெண்கள் ) புகைப்படம் ஒட்டி சுயவிவர விண்ணப்பம் , அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் 26.06.2020 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு நேர்முகத் தேர்வுக்கு நேரில் வரவும். தேர்ச்சி பெறுபவர் அன்னூரில் மட்டும் வசித்தல் வேண்டும்.
Read More »

பொதுத்தேர்வு ரத்து - அரசாணை வெளியீடு!





மருத்துவ வல்லுநர்கள் நோய் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என்று கருத்து தெரிவித்துள்ளதாலும் , பெற்றோர்களின் கோரிக்கைகளையும் , நோய்தொற்றின் தற்போதைய போக்கையும் கருத்தில் கொண்டு , மாணவர்களை நோய்த் தொற்றிலிருந்து காக்கும் பொருட்டு அரசு பின்வருமாறு ஆணையிடுகிறது .

( i ) 2019-20ஆம் கல்வியாண்டில் , 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 11 ம் வகுப்பில் விடுபட்ட பாடங்களான வேதியியல் , கணக்கு பதிவியல் , புவியியல் ( புதிய பாடத்திட்டம் ) , வேதியியல் , கணக்கு பதிவியல் , புவியியல் , தொழிற்கல்வி கணக்கு பதிவியல் ( பழைய பாடத்திட்டம் ) ஆகியவற்றிற்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது .

( ii ) இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் 10 ம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்பில் விடுபட்ட பாடங்களில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாகின்றனர் .

( ii ) மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவிகித மதிப்பெண்களும் , மாணவர்களின் வருகை பதிவின் அடிப்படையில் 20 சதவிகித மதிப்பெண்களும் வழங்கப்படும் .

( iv ) 12 ம் வகுப்பு தேர்வை பொறுத்தவரை ஏற்கனவே 24.03.2020 அன்று நடைபெற்ற தேர்வினை எழுதாத மாணவர்களுக்காக நடத்தப்படவிருந்த மறுதேர்வு ஒத்திவைக்கப்படுகிறது . மேலும் , சூழ்நிலைக்கேற்ப 12 ம் வகுப்பிற்கான மறுதேர்வுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் .

( ஆளுநரின் ஆணைப்படி )

தீரஜ் குமார்
அரசு முதன்மைச் செயலாளர்
Read More »
 

Most Reading

Tags

Sidebar One