Search

'வீட்டிலும் பாதுகாப்புடன் இருங்கள்!' மாணவ, மணவியருக்கு சி.இ.ஓ., 'அட்வைஸ்

Monday, 8 June 2020

திருப்பூர்:திருப்பூரில் பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு, முக கவசத்துடன், 'ஹால் டிக்கெட்' நேற்று வழங்கப்பட்டது.பத்தாம் வகுப்பு தேர்வு, ஜூன் 15ல் துவங்கி, 25 வரை நடக்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் கட்டாயம் சமூக இடைவெளி கடைபிடிக்கும் நோக்கில், 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர்.

 பாதுகாப்புக்காக, கட்டாயம், முக கவசம் அணிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூரில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் நேற்று ஹால்டிக்கெட் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு தலா, 2 முக கவசங்களும் வழங்கப்பட்டது.

ஜெய்வாபாய் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ்குமார், ஹால்டிக்கெட் வழங்கினார்.மாணவியர் மத்தியில் அவர் பேசியதாவது:ஹால்டிக்கெட்டில் தேர்வு அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளன.

 சந்தேகம் இருந்தால், அதில் குறிப்பிட்டுள்ள, 5 தொலைபேசி எண்களில் ஏதேனும் ஒன்றிற்கு தொடர்பு கொள்ளலாம்.உங்களின் பாதுகாப்புக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்துள்ளோம்.

முக கவசங்கள் தண்ணீரில் நன்றாக அலசி, தேர்வுக்கு வரும் முன் கட்டாயம் அணிந்து வர வேண்டும். இனிவரும் நாளில் கூடுதல் முக கவசமும் வழங்குவோம். வீட்டிலும், உடல் நலத்திற்குரிய பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்
Read More »

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பே அரசுக்கு முக்கியம்: ரமேஷ் பொக்ரியால்


நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பே அரசுக்கு முக்கியம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு காலத்துக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி செயலாளர் அனிதா கார்வல் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமாரும் கலந்துகொண்டு, மாநில அரசின் சார்பில் கருத்துகளை முன்வைத்தார்.


ஊரடங்குக்குப் பிறகான பள்ளிகள் திறப்பு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு, பள்ளிகளில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தேர்வுகளை நடத்துதல், ஆன்லைன் வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு கருத்துகள் பெறப்பட்டதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பே அரசுக்கு முக்கியம் என்று தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பொக்ரியால், மாநில அரசுகள் முன்வைத்த கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை மத்திய சுகாதாரத்துறைக்கு அனுப்பி உள்ளதாகவும், அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வுகளை நடத்துவது தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
Read More »

கரோனா காலத்தில் கட்டணம் வசூல்; தனியாா் பள்ளிகள் குறித்து விசாரணை: அமைச்சா் செங்கோட்டையன்

சென்னை: கரோனா காலத்தில் தனியாா் பள்ளிகள் கட்டணம் கேட்டு பெற்றோா்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக புகாா் எழுந்துள்ள நிலையில், தொடா்புடைய பள்ளிகளில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்தாா்.

மேலும் அரசின் உத்தரவை மீறி செயல்படும் தனியாா் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் எச்சரிக்கை விடுத்தாா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் அனைத்து வகையான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. கல்விக் கட்டணம் வசூலிப்பதில் பெற்றோருக்கு நிா்பந்தம் கொடுக்கக் கூடாது என தனியாா் பள்ளிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை பள்ளிக் கல்வித்துறை வழங்கியது. அதேவேளையில் மாணவா்களின் எதிா்கால நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தநிலையில் மத்திய, மாநில அரசுகளின் உத்தரவை மீறும் வகையில் 2020-2021-ஆம் கல்வியாண்டுக்கான கல்விக் கட்டணத்தை வசூலிப்பதில் பெரும்பாலான தனியாா் பள்ளிகள் தங்களுக்கு நெருக்கடி அளிப்பதாக பெற்றோா்கள் தெரிவிக்கின்றனா். அவ்வாறு கட்டணத்தைச் செலுத்த மறுக்கும் பெற்றோரின் பிள்ளைகளை ஆன்லைன் வகுப்புகளிலிருந்து நீக்குதல் போன்ற நடவடிக்கைகளில் பள்ளிகள் ஈடுபட்டதாக புகாா் எழுந்துள்ளது.
தனியாா் பள்ளிகளின் இந்த நடவடிக்கைகள் பெற்றோா் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வரும் நிலையில், கடந்த கல்வியாண்டின் இறுதி பருவம், நிகழ் கல்வியாண்டின் தொடக்கப் பருவம் ஆகியவற்றுக்கான கட்டணத்தை வரும் ஜூன் 15-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என பெற்றோருக்கு பள்ளிகள் நிா்பந்தம் அளித்ததாக கூறப்படுகிறது.

கோவை- சென்னையில்...: இந்த விவகாரம் தொடா்பாக கோவையில் ஒரு பள்ளி, சென்னையில் 3 பள்ளிகள் இது போன்ற கட்டண வசூலை இலக்காக கொண்டு செயல்படுவது பற்றி புகாா்கள் எழுந்தன. இது குறித்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கரோனா காலத்தில் தனியாா் பள்ளிகளில் கல்விக் கட்டணம் கேட்டு பெற்றோருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையனிடம் கேட்டபோது, 'புகாா் வந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்விக் கட்டணம் கேட்டு பெற்றோருக்கு தனியாா் பள்ளிகள் நெருக்கடி தரக் கூடாது. அரசின் உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது' என்றாா்.
கையடக்க கணினிகள் விற்கும் தனியாா் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளில் மாணவா்களை தொடா்ந்து ஈடுபடுத்துவதற்காக பள்ளிகளே கையடக்கணினி ('டேப்லெட்') போன்ற தகவல் தொடா்பு சாதனங்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளன.

பொது முடக்க தளா்வுகள் அதிகரிக்கப்பட்டு வரும் சூழலில் கடந்த சில நாள்களாக குழந்தைகளின் பெற்றோா் பணிக்குச் சென்று விடுகின்றனா். இதனால் அவா்கள் தங்களது அறிதிறன் பேசிகளையும் (ஸ்மாா்ட் போன்) உடன் எடுத்துச் சென்று விடுகின்றனா். இதனால் மாணவா்கள் இணையவழி வகுப்புகளில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்ட தனியாா் பள்ளி நிா்வாகங்கள் குழந்தைகள் இணையவழி வகுப்புகளில் பங்கேற்க அவா்களுக்கு தனியாக அறிதிறன் பேசிகள் (ஸ்மாா்ட் போன்) வாங்கித் தருமாறு பெற்றோருக்கு குறுஞ்செய்திகள் மூலம் தொடா்ந்து அழுத்தம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, 'தங்கள் பள்ளியிலேயே பிரபல நிறுவனங்களின் கையடக்க கணினிகள் ('டேப்லெட்') சந்தை விலையைக் காட்டிலும் குறைவான விலையில் விற்கப்படுகின்றன.அவை கல்வி சாா்ந்த பயன்பாடுகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளன. துல்லியமாக காட்சிகள் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதோடு, மிகுந்த பாதுகாப்பு வசதிகள் கொண்டது. தேவைப்படும் பெற்றோா் பள்ளி அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்' என அனைத்து பெற்றோா்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றன.

இணையவழிக் கல்விக்கு அரசுப் பள்ளி ஆசிரியா்கள், கல்வியாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்து வரும் சூழலில் அதை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளில் தனியாா் பள்ளிகள் ஈடுபட்டு வருவதாக பெற்றோா்கள் தெரிவிக்கின்றனா்
Read More »

சிறப்பு வகுப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் தனியார் பள்ளி சங்க கூட்டமைப்பு கோரிக்கை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அந்தந்த பள்ளி களில் 'சிறப்பு வகுப்பு' நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் துளசி விடுத்துள்ள அறிக்கை:கொரோனா ஊரடங்கினால், கடந்த மார்ச் 19ம் தேதி முதல் 80 நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் மாணவர்கள் மன உளைச்சலில் உள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராக இருந்த மாணவர்கள் 80 நாட்களாக பாட புத்தகத்தை படிக்கும் மனநிலையில் இல்லை.இந்நிலையில் வரும் 15ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உளளது.ஏற்கெனவே இருந்த தேர்வு மையங்களை மாற்றி, மாணவர் கள் படித்த பள்ளிகளையே தேர்வு மையங்களாக மாற் றப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வாக, 'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு' அமைகிறது.

எனவே நீண்டா நாட்களாக ஆசிரியர்களிடம் இருந்தும், பாடத்திட்டத்தில் இருந்தும் விலகி நிற்கும் மாணவ - மாணவிகளுக்கு தேர்வு பயத்தை போக்கி, அவர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயார்படுத்த வேண்டியது மிக அவசியமாகும்.எனவே மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ - மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளில் 'சிறப்பு வகுப்புகள்' நடத்த அரசு உடன் அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Read More »

10ம் வகுப்பு தேர்வு, பள்ளிகள் திறப்பு குறித்து -கல்வித்துறை அமைச்சர் முதல்வருடன் இன்று ஆலோசனை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், முதல்வர் இ.பி.எஸ்., இன்று(ஜூன் 9) ஆலோசனை நடத்த உள்ளார்.வரும், 15ம் தேதி முதல், பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளை, அரசு செய்து வருகிறது. நோய் பரவல் உள்ள நிலையில், தேர்வு நடத்தக்கூடாது என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, வரும், 11ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இன்று பகல், 12:00 மணிக்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் இரு துறை உயர் அதிகாரிகளுடன், முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.இக்கூட்டத்தில், பத்தாம் வகுப்பு தேர்வு வழக்கு குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும், முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது
Read More »

பழமொழியும் அதன் உண்மை விளக்கமும் - விருந்தும் மருந்தும் மூன்று நாள்

விருந்தும் மருந்தும் மூன்று நாள்.
பொருள்:
விருந்துக்கு சென்றால், மூன்று நாட்களுக்கு மேல் இருக்க கூடாது. மருந்து உட்கொண்டாலும் மூன்று நாட்களுக்கு மேல் உண்ண கூடாது. அது எந்த ஒரு தனி மனிதனையும் பாதிக்கும்.
உண்மையான பொருள்:
ஒரு வாரத்தில் ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய குளிர் நாட்களில் நன்றாக உணவு உட்கொள்ள வேண்டும். செவ்வாய், வெள்ளி, வியாழன் ஆகிய தினங்களில் உணவை குறைவாய் உட்கொண்டு  மருந்து உண்ண வேண்டும்.
Read More »

நிரந்தரப்பணி - முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேவை!


ஆசிரியர்கள் தேவை

கே.ஜி.பெண்கள்
மேனிலைப்பள்ளி , அன்னூர் .


அரசு நிதி உதவி பெறும்
எங்கள் பள்ளக்கு கீழ்க்கண்ட
பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .


பணியிடம் மற்றும் பாடம்
கல்வித்தகுதி

முதுகலைப்பட்டதாரி ஆசிரியை , கணிதம் M.Sc. , B.Ed
( பெண்கள் மட்டும் )


முதுகலைப்பட்டதாரி ஆசிரியை , இயற்பியல் - M.Sc. , B.Ed
( பெண்கள் மட்டும் )

முதுகலைப்பட்டதாரி ஆசிரியை , பொருளியல் - M.Com . , B.Ed
( பெண்கள் மட்டும் ஊதியம்-


அரசு விதிகளின்படி இனப்பிரிவு-
G.T. ( பொது ) தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் ( பெண்கள் ) புகைப்படம் ஒட்டி சுயவிவர விண்ணப்பம் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் 26.06.2020 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு நேர்முகத் தேர்வுக்கு நேரில் வரவும் . தேர்ச்சி பெறுபவர் அன்னூரில் மட்டும் வசித்தல் வேண்டும் .
Read More »

தமிழகத்தில் இன்று (08.6.2020) கொரோனா பாதித்தவர்கள் விவரம் மாவட்ட வாரியாக

Read More »

பள்ளிக்கல்வித்துறை சார்பாக TNTP இணைய தளத்தை சிறப்பாக பயன்படுத்தும் மற்றும் பங்களிப்பை வழங்கும் ஆசிரியர்களுக்கு பாராட்டு முத்திரைகள்



TNTP இணைய தளம் கடந்த 2019 -ம் ஆண்டு ஜூலை மாதம் 7 -ம் தேதி அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டு, தனது முதல் ஆண்டு பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய உள்ளது.

இதன் பொருட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பாக TNTP இணைய தளத்தை சிறப்பாக பயன்படுத்தும் மற்றும் பங்களிப்பை வழங்கும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக  தொடங்கப்பட்ட பாராட்டு முத்திரைகள் வழங்கும் திட்டத்தின் முதல் நிகழ்வாக இதுவரை தானாக முன் வந்து தங்களை பயனர்களாக இணைத்துக் கொண்ட 2.6 இலட்சம் ஆசிரியர்களுக்கு சிறப்பான தொடக்கத்திற்கான முத்திரை வழங்கப்பட்டுள்ளது.

இதனை ஆசிரியர்கள் பலர் வரவேற்க்கும் விதமாக சமுகவலைதளங்களில் பதிவிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளனர்.

இதுவரை தங்களை இணைத்துக்கொள்ளாத ஆசிரியர்கள் உடனடியாக தங்களை இணைத்துக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Read More »

Breaking News: பத்தாம் வகுப்பில் ஆல்பாஸ் - தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு!



#BREAKING | தெலுங்கானாவில் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி.

தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு
Read More »

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வழக்கு ஜூன் 11க்கு ஒத்திவைப்பு; அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு!

10-ம் வகுப்பு தேர்வு வழக்கில் தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணையை ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தேர்வு நடைபெற இருப்பதால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறியும், மேலும் 2 மாதகாலத்திற்கு ஒத்திவைக்கவேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது.

 தேர்வினை ரத்து செய்யவேண்டும் எனவும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் இன்று நீதிபதி வினித் கோத்தாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த, வழக்கை இன்று காலை விசாரித்த நிலையில், மதியம் வழக்கு ஒத்திவைக்கப்பட்டநிலையில்,  தற்போது விசாரணை மீண்டும் தொடங்கியது. உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி வாதிட்டார். அப்போது, வரும் நாள்களில் கொரோனா தொற்று அதிகமாகும் வாய்ப்பு இருப்பதால் தேர்வு நடத்த இதுவே சரியான தருணம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நிபுணர்களின் கருத்துப்படி தமிழகத்தில் 2 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.  மற்ற மாநிலங்களில் 10ம் வகுப்பு தேர்வை நடத்தி முடித்து விட்டன.

மத்திய அரசு தேர்வை நடத்த அனுமதி அளித்துள்ளது என்றும் தமிழகத்தை தேர்வை நடத்த ஐகோர்ட் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. அதற்கு பதில் அளித்த நீதிபதிகள் 9 லட்சம் மாணவர்கள், 2 லட்சம் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் குறித்து அரசுக்கு கவலை இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளனர். மாணவர் உயிரிழந்தால் இழப்பீடு வழங்குவதை தவிர வேறு என்ன உத்தரவாதம்?. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை உடனே நடத்துவதில் எந்த லாஜிக்கும் இல்லை என கேள்வி எழுப்பினர். இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பான வழக்கு ஜூன் 11-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தமிழக அரசு கூடுதல் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பான பிற வழக்குகளுடன் சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க முடியுமா என அரசு பரிசீலிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தேர்வை தள்ளிவைப்பது உகந்ததா என பெற்றோர்களும் சிந்திக்க வேண்டும்
Read More »
 

Most Reading

Tags

Sidebar One