Search

10ம் வகுப்பு தேர்வு -அமைச்சர் செங்கோட்டையன் இன்று முக்கிய ஆலோசனை!

Sunday, 7 June 2020


10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என பல்​வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன், முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். தலைமை செயலகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர தனி இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரம், அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் பயிற்சி அளிப்பது ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. அதனை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அமைச்சர் செங்கோட்டையன் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வரும் 15ஆம் தேதி முதல் நீட் தேர்வு குறித்து ஆன்-லைன் வழியில் பயிற்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More »

இன்று பள்ளி செல்ல வேண்டுமா? - தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் கவனத்திற்கு

அன்புள்ளம் கொண்ட ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம். நாளை ஊராட்சி ஒன்றிய தொடக்க/ நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டியதில்லை. குறிப்பாக நடுநிலைப் பள்ளிகளில் தேர்வு மையம் ஏற்படுத்தி இருந்தால் அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு செல்லவேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களை தொலைபேசியில் கேட்டு அறிந்துள்ளேன் ஆகவே ஆசிரியர்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. ஒருசில முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனைத்து நிலை ஆசிரியர்களும் பள்ளிக்கு சென்று ஆசிரியர் வருகை பதிவேட்டில் கையொப்பம் இட்டு வாட்ஸ் அப்பில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர் இது முற்றிலும் தவறான செய்தியாகும் தேர்வு மையம் உள்ள பள்ளி மட்டும் ஒத்துழைப்பு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

ந.ரெங்கராஜன்
பொது செயலாளர்
தமிழ்நாடு. தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி .
Read More »

பழமொழியும் அதன் உண்மை விளக்கமும் - போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை

போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை.
பொருள்:
என்ன வேலைக்கு போவது என தெரியாமல் நிற்பவன் தான் போலிஸ் வேலைக்கு போவான்; வேறு வேலைக்கு போக வழி தெரியாதவன் வாத்தியார் வேலைக்கு போவான்.
உண்மையான பொருள்:
மற்றவருக்கு போக்கு கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை;
வாக்கு கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பது சரியான பொருள்.
Read More »

பொதுத் தேர்வு அறைகண்காணிப்பாளர் அறிவுரை

கட்டுப்பாட்டு அறையில்.

1. மையத்திற்கு 8.30 am.      வருகை புரிதல்

செல்போனை அணைத்து
ஒப்படைத்தல்..பேட்ஜ் அணிதல்

2. வருகை கையொப்பம்

3. குலுக்கல் முறையில்
    அறை தேர்வு



4.அறைஉறை பெறுதல்

5. உறை யுள்ளே
     a. விடைத்தாள் கொண்ட ஸ்பெஷல் உறை
     b. தேர்வர்                                வருகைப்பதிவு படிவம்
      c. ஹால்டிக்கெட்
      d.கூடுதல் விடைத்தாள்
      f. சிறு கத்தி                      
           (சிலதேர்விற்கு.             .                          லாக்புக் etc)6. விடைத்தாள் முகப்புத்தாளில் மு.கண்காணிப்பாளர் பேசிமலி..
விடைத்தாள் உறையில்
ஒட்டப்பட்ட படிவம்..தேர்வர் வருகை தாள்கள்.. விடைத்தாட்கள் ஒப்பிட்டு
சரிபார்ப்பு.

7. விடைத்தாளின் part.A வின் வலப்புறம் மேல் பகுதியில் உரிய இடத்தில்
Verified என எழுதி சுருக்கொப்பம்.

8. அறைக்கு செல்ல தயார்படுத்திக் கொள்ளல்

9. 9.40am க்கு வினாத்தாள்
 உறை மற்றும் அறை உறை ,blue pen.. red pen
எடுத்து கொண்டு அறைக்கு செல்லுதல்.
தேர்வறையில்*

1. அறையில் இருக்கை அமர்வு,காற்றோட்டம்,
வெளிச்ச வசதி ஏற்பாடு

2. தேர்வரை சோதிட்டு உரிய இடத்தில்
அமரச்செய்தல்.
( மிதியடி..பெல்ட் வெளியே)

 ஹால்டிக்கெட் வழங்குதல்.

3.  9.55am வினாத்தாள் உறை பாதுகாப்பு தன்மை விளக்கி இருதேர்வரிடம் கையொப்பம் பெற்று cut செய்தல்.
10.00am வினாத்தாள் வழங்கல்..( ய - வடிவமுறை
அனைத்து பாடங்களுக்கும்
பின்பற்றவும்)

10.10 வரை தேர்வரை வினாத்தாள் மட்டுமே பார்க்க அனுமதித்தல்.
பதிவு எண் எழுதச் சொல்லுதல்.
10.10am விடைத்தாள்
வழங்கல். முகப்புச் சீட்டில்
உள்ள விவரம் தங்களுடையதுதானா என சோதிக்க... விடைத்தாள் மொத்த பக்கமும் சோதிக்க
அறிவுறுத்தல் கையோப்பம்
பெறுதல்.
10.15 am "start writing" என
கூறுதல்

4. வருகை பதிவுத்தாளில்
தேர்வர் கையொப்பம்.
விடைத்தாளில் blue டிக் செய்து கண்காணிப்பாளர்
கையொப்பம்.

5. அறைக்கு வரும் பதிவேட்டில் வராதோர் எண் எழுதி கையொப்பம்.
விடைத்தாள் உறையில்blue pen கொண்டு P/ red pen கொண்டு ABSENT எழுதுதல்

6. 10.30 am வராதோர் விடைத்தாளின் முகப்புச் சீட்டில் red tick மற்றும் கையொப்பம்.
ஹால் டிக்கெட் ல் சுருக்கொப்பம்.

7. வராதோர் வினாத்தாள்- விடைத்தாள் ஒப்படைப்பு.

8.கண்காணிப்பு
தேவைப்படின்  வருகை படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் பெற்று கூடுதல் விடைத்தாள் வழங்கல்
1.10 pm ஹால்டிக்கெட் சேகரித்து உறையில் வைத்தல் 1.15 pm stop writing and Stand up  நிகழ்த்தி எழுதாத பக்கங்கள் அனைத்திலும் பேனாவால்
குறுக்குக் கோடிட அறிவுறுத்துதல். வரிசையாக விடைத்தாள் பெற்று உறையிலிடுதல்
 அறை சோதித்து தேர்வர்களை செல்ல அனுமதித்து( விளக்கு பேன் நிறுத்தி.)தாமும்
கட்டுப்பாட்டு அறைக்கு
விரைதல்.

 *கட்டுப்பாட்டு அறையில்*

1. கவனமாக fc
(விடைத்தாள் மேல் பகுதியில் பக்கங்கள் சந்திப்பு பகுதியில்) இடல்.
விடை முடிவுறும் இடத்திலும் முத்திரை இடல்.

 2. Part - A பிரிப்பு.
Part-A எண்ணிக்கை விடைத்தாள் எண்ணிக்கை
சரிபார்ப்பு. ( டிக் மார்க் கையொப்பங்கள் பேசிமலி)

3.மு.கண்காணிப்பாளர்/ துறையலுவலர் முன் விடைத்தாள் உறையில் ஒட்டப்பட்டுள்ள படிவத்தில்
எண்களை வாசித்து part- A
சரிபார்த்து பின் செய்து
Part-time A வழங்குதல்
விடைத்தாளை வரிசை மாற்றி உறையிலிட்டு ஒட்டி
ஒப்பமிடுதல். (A,B வினாத்தாள் வழங்கிய பாடங்களுக்கு. வரிசை மாற்றிA வை மேலே B யை கீழே)

4.CSD பூர்த்தி செய்தல்

5.அறை உறை யில் உள்ள
எஞ்சிய பொருட்களை ஒப்படைத்தல்

 6. கட்டுகள் தயார் செய்வதை பார்வையிடல்

7. அனுமதி   பெற்று இன்றைய பணி சிறப்பாக அமைந்ததை எண்ணி மகிழ்வுடன் செல்லுதல்
Read More »

'ஆன்லைன்' வகுப்பால் விபரீதமா? பாதுகாப்பு வழிமுறை வெளியீடு!

ஆன்லைன் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள், சைபர் குற்றங்களில் சிக்காமல், எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்திஉள்ளது.ஏழு கோடி பேர்கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, பள்ளிகளை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஜூன், 1 முதல், 'ஆன்லைனில்' வகுப்புகள் துவங்கியுள்ளன. பல பள்ளிகள், ஆன்லைன் வகுப்புகளை, தினமும் நடத்தி வருகின்றன.இந்தியாவில் தற்போதைய நிலையில், ஐந்து முதல் ஏழு வயதுக்கு உட்பட்டவர்கள், ஏழு கோடி பேர், ஆன்லைனில் பாடங்களை படிக்க, மொபைல் போன்களை பயன்படுத்துவதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக, சிறுவர் - சிறுமியர், சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகளுக்கு ஆளாகி விடாமல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.கையேடுஇதற்காக, மத்திய அரசின் சார்பில், ஆன்லைன் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

இதன் டிஜிட்டல் பிரதியை, www.ncert.nic.in/ என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
Read More »

செப்டம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்: மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தகவல்

செப்டம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு இருந்ததால், மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகை கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
Read More »

தேர்வு மையங்களில் தூய்மை பணி தீவிரம்: தூய்மைப்படுத்தும் பணி துவக்கம்


உடுமலை:உடுமலை கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு மையங்கள் துாய்மைப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன.பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள், ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடக்கிறது. தேர்வுக்கு மாணவர்கள் பாதுகாப்பான முறையில் வந்து செல்வதற்கும், துாய்மையான சூழலில் தேர்வு எழுதுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.


பத்தாம்  வகுப்புகள் செயல்படும் அனைத்து, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் முழுவதையும் தேர்வுக்கு தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டது. தேர்வு நடக்கும் மையங்களில், மாணவர் எண்ணிக்கைக்கு போதுமான அளவு தேர்வறைகள் இருப்பதும், தேர்வுக்கு வரும் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்குவதற்கான விடுதிகள் துாய்மையாக இருப்பதையும், மாணவர்கள் ஜூன் 11ம் தேதியில் விடுதிக்கு வந்திருப்பதையும், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கண்காணித்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கான பணிகளை, உடுமலை கல்வி மாவட்டத்தில் துவங்கியுள்ளனர்.அரசு  ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் உட்பட அனைத்து மையங்களிலும், சுகாதாரப்பணிகள் துவங்கியுள்ளன.தேர்வறைகளில் முதற்கட்டமாக கிருமிநாசினிகள் தெளிக்கப்படுகிறது. தேர்வுக்கு முன்பும், தொடர்ந்து தேர்வு நாட்களிலும், கிருமி நாசினிகள் தெளிக்க ஏற்பாடு செய்வதற்கும் தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.தொடர்ந்து, விடைத்தாள்கள், ஒவ்வொரு தேர்வறைகளுக்கும் தனிதனியாக பிரித்து வைப்பது, அவற்றை தேர்வுக்கு தயார்படுத்தும் பணிகளையும் அந்தந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் துவங்கியுள்ளனர்
Read More »

தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு பொதுத்தேர்வில் என்ன பணி? - CEO செயல்முறைகள்!(திருச்சி)


திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு இடைநிலை பொது தேர்வுகள் மற்றும் 11 - ம் / 12 ஆம் வகுப்புகளுக்கான விடுப்பட்ட பொதுத் தேர்வுகள் 15.06.2020 முதல் 25.06.2020 வரை நடைபெறவுள்ளது.

மேற்படி நாட்களில் தேர்வு எழுத வருகை தரும் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி கண்டறியும் பொருட்டு அனைத்து பள்ளிகளுக்கும் வெப்பம் கண்டறியும் கருவி ( Thermal Scanner ) வழங்கப்படுகிறது.

மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வருகை தந்த உடன் , சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள கை கழுவும் திரவம் ( Hand sanitizer ) கொண்டு கைகளை சுத்தப்படுத்திக் கொண்ட பின்னரே வெப்பம் கண்டறியும் கருவி ( Thermal Scanner ) அமைக்கப்பட்டுள்ள அறைக்கு அனுமதிக்கப்பட வேண்டும். மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வெப்பம் கண்டறியும் கருவி ( Thermal Scanner ) யினை பயன்படுத்தி மாணவாகளை சோதனை செய்யும் பணியினை மேற்கொள்ளும் பொருட்டு ஒரு பள்ளிக்கு இரண்டு தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களை ( இரண்டு கருவிகள்வழங்கப்படும் நிலையில் 3 ஆசிரியர்கள் ) நியமனம் செய்து , நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்திற்கு வருகை தந்து பணியினை மேற்கொள்ளத் தக்க வகையில் உரிய பணி ஆணை வழங்கி அதன் விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் தெரிவிக்கப்படுகிறார்கள் .
Read More »
 

Most Reading

Tags

Sidebar One