Search

பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து 2.30 லட்சம் பெற்றோர் மத்திய அரசுக்கு மனு!

Tuesday, 2 June 2020

கொரோனாதாக்கம் குறையும் வரையிலோ அல்லது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையிலோ பள்ளி , கல்லூரிகளை திறக்ககூடாது என்று 2.30 லட்சம் பெற்றோர் மனுவில் கையெழுத்திட்டு மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர்.

கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நாட்டில் உள்ள பள்ளி , கல்லூரிகள் கடத்த மார்ச் மாதம் 16 ம் தேதியுடன் மூடப்பட்டன. அனைத்து மாநில அரசுகளும் தேர்வு நடத்தாமலே 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து இருப்பினும் , நாட்டில் கொரோனா தாக்கம் நாள் தோறும் அதிகரித்து வருகிறது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக் கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 7 வது இடத்துக்கு முன்னேறி உள்ளது . இதனிடையே , மாநிலங்கள்  , யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசித்த பின்னரே பள்ளி , கல்லூ ரிகளை ஜூலை மாதம் திறப்பது குறித்து அரசு முடிவு எடுக்கும்.

கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களுடன் இதுகுறித்து கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநில தலைமைச்செயலாளர்களுக்கு எழுதிய கடிதத் தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்திலையில் , 20 லட்சம் பெற்றோர் கையெழுத் திட்டு மத்திய அரசுக்கு அனுப்பிய மனுவில் கூறப் பட்டுள்ளதாவது: பள்ளி , கல்லூரிகளை ஜூலை மாதம் திறக்க அரசு எடுத்திருக் கும் முடிவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் . இது பெற்றோர்கள் தீயே கட்டுப்படுத்த முழு முயற்சிகள் மேற்கொண் டிருக்கும் போது அரசு தீயுடன் விளையாடுவது போன்றது.

கல்வி நிறுவனங்கள் காணொலி மூலம் திறம்பட வகுப்புகள் நடத்துவதாக கூறும் நிலையில் , ஆன்லைன் மூலம் பாடம் நடத்துவதை இந்த கல்வி ஆண்டில் தொடர வேண்டும். கொரோனாவின் தாக்கம் குறையும் வரையிலோ அல்லது அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையிலோ பள்ளி , கல்லூரிகளை திறக்ககூடாது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Read More »

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து CEO வின் அறிவுரைகள் - நாள்:02.06.2020.

Read More »

பழமொழிகளும் அதன் உண்மை விளக்கமும் - ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்.

ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்.
பொருள்:
ஆயிரம் மக்களை (நோயாளிகளை) கொன்றவன் பாதி வைத்தியன்.
உண்மையான பொருள்:
ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன் ஆவான்.
நோயை போக்க ஆயிரம் வேரை கொண்டு மருந்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான்
Read More »

பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு CBSE முக்கிய அறிவிப்பு.

ஜூலை 1 முதல் 15 வரை நடைபெறும் CBSE பொதுத்தேர்வை, மாற்றுத்திறன் உடைய மாணவர்களால் எழுத முடியாமல் போனால், அவர்களுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும். - CBSE அறிவிப்பு

ஊரடங்கால் வேறு மாவட்டம்/ மாநிலத்துக்கு இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்புத் தேர்வு மையம் அமைக்கப்படும்.

இடம்பெயர்ந்த மாணவர்கள், தேர்வு மையத்தை தங்கள் பள்ளியின் வாயிலாக மாற்றிக் கொள்ளலாம். - CBSE அறிவிப்பு.




Read More »

இலவச நீட் பயிற்சி அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவர்களுக்கு அழைப்பு.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் தமிழ் வழி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகளை ஜூன் 3-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி  ஸூம் செயலி மூலமாக இலவசமாக வழங்கவுள்ளது.

இதற்காக தமிழ் வழியில் நீட் எழுதும் மாணவர்களுக்கு மிகத் தரமான மாதிரி வினாத்தாள்களை ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி நிபுணர் குழுவினர் உருவாக்கியுள்ளனர். இந்தப் பயிற்சியில் குறிப்பிட்ட அளவிலான மாணவர்களை மட்டுமே சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் NEET TAMIL  என TYPE செய்து தங்களது முழு முகவரியுடன் 75501 51584 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் ஆப் மூலமாக ஜூன் 2-ஆம் தேதிக்குள் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இது குறித்து மேலும் தகவல் பெற 79044 48456, 75501 51584 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அந்த அகாதெமி தெரிவித்துள்ளது
Read More »

12 நாளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு; 70 நாட்களாக புத்தகத்தை புரட்டாதவர்கள் எதிர்கொள்வது எப்படி?.. ஆசிரியர்கள் முக்கிய அறிவுரை


10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்க 12 நாட்களே உள்ள நிலையில் கிராமப்புற மாணவர்கள் மட்டுமின்றி, நகர்ப்புற மாணவர்களும் 70 நாட்களுக்கு மேலாக பயிற்சி பெறாததால் தேர்வை எப்படி சந்திப்பார்கள் என்ற கவலையில் பெற்றோர்கள் ஆழ்ந்துள்ளனர். மாணவர்களை தயார்படுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். தமிழகத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு ஏப்ரலில் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா தொற்று பரவுவதன் காரணமாக தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. தொற்று பரவல் வேகமாக இருந்ததால் 2வதாக அறிவிக்கப்பட்ட தேர்வு தேதியும் ரத்து செய்யப்பட்டது.


 இப்போது வருகிற 15ம் தேதியிலிருந்து தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் இருந்தாலும் ஜூன் 15ம் தேதி முதல் புதிய அட்டவணைப்படி 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு விடுபட்ட தேர்வும், பிளஸ் 2 தேர்வின் கடைசி தேர்வை எழுத வராத சுமார் 24 ஆயிரம் மாணவர்களுக்கும் தேர்வு எழுத மேலும் ஒரு வாய்ப்பும் வழங்கி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான பணிகளை அரசுத் தேர்வுத்துறை துரிதப்படுத்தியுள்ளது. ஒரு வகுப்பு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தொற்று பாதிப்பு பகுதியில் உள்ள மாணவர்களுக்கு தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள்களை வைப்பதற்கு கூடுதல் கவர்கள் அனுப்பப்பட்டுள்ளன. மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளியிலேயே தேர்வு எழுதும் வகையில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறுவது உறுதியாகி விட்ட நிலையில் மாணவர்கள் பற்றிய கவலை பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 70 நாட்களாக வீட்டிலேயே இருக்கும் மாணவர்கள் பாடப்புத்தகங்களை புரட்டிப் பார்க்க நேரம் ஒதுக்கவில்லை. சில மாணவர்கள் சொற்ப நேரமே வீட்டில் இருந்து படிக்கின்றனர். இதனால் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து அரசு பள்ளி மற்றும் தலைமை ஆசிரியர்கள் கருத்துக் கூறுகையில், ‘‘தொடர் விடுமுறையால் மாணவர்களுக்கு அதிக கவனசிதறல் ஏற்பட்டுள்ளது உண்மை.

நகர்ப்புற மாணவர்கள் பொழுது போக்கிலும், கிராமப்புறங்களில் விவசாயப் பணிகளில் பெற்றோருக்கு உதவியாக இருப்பதிலும் காலத்தை கடத்திவிட்டனர். இருப்பினும் பொதுத்தேர்வு குறித்து எந்த அச்சமும் கொள்ள வேண்டாம். இனி வரும் நாட்களில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினாலே போதும். பெற்றோரும் அவர்களை வேறு வேலை பார்க்காமல் இருக்கவும், கவன சிதறல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு படிக்கும் போது ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் தொலைபேசி மூலம் ஆசிரியர்களை எந்த நேரமும் தொடர்புகொண்டு தெளிவு பெறலாம்.

கல்வி தொலைக்காட்சியிலும் கவனித்து படிக்கவேண்டும். மாணவர்களை உற்சாகப்படுத்த ஆசிரியர்கள் தயாராக உள்ளனர். எனவே ஆசிரியர்களின் சேவைகளை தொலைபேசி மூலம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு முககவசம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. எனவே அச்சமின்றி தேர்வு எழுத வாருங்கள்’’ என்றனர்.
Read More »

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்கள் ( தருமபுரி மாவட்டம் )


தருமபுரி மாவட்டம் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் காலிபணியிடம் விவரம்..

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிபணியிடம்

1. வத்தல்மலை பெரியூர்
2 அதகபாடி
3  கடகத்தூர்
4. மாட்லாம்பட்டி ஆண்கள்
5.அரூர் ஆண்கள்
6. எம் தொட்டம்பட்டி
7. கோட்டப்பட்டி
8. புட்டிரெட்டிபட்டி

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலி பணியிடம்

1. ஔவை நகர்
2.பத்திரெட்டி அள்ளி
3. பாப்பிசெட்டிபட்டி
4. பொப்பிடி

முதுகலை ஆசிரியர் காலிபணியிடம்

1. தொப்பூர்-ஆங்கிலம்
2. இலக்கியம்பட்டி-ஆங்கிலம்
3. அதியமான் கோட்டை ஆண்கள்-இயற்பியல்
4. நவலை -விலங்கியல்
5.இண்டூர்-உயிரியல்
6. மல்லாபுரம்-உயிரியல்

தகவல்
சி.முருகேசன்
மாவட்ட தலைவர்
TNPPGTA
தருமபுரி
Read More »

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.08.2020 முதல் IFHRMS முறையில் ஊதியம் வழங்கும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த ஆட்சியர் உத்தரவு.


தமிழக அரசின் கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் மூலமாக ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதை தொடர்ந்து 01.08.2020 முதல் இராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்படி திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது.

எனவே , இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களும் கீழ்காணும் விவரங்களை தங்களது அலுவலக ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்ட மென்பொருளில் ( IFHRMS ) எவ்வித விடுதலுமின்றி சரியாக இருக்குமாறு உறுதி செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Read More »
 

Most Reading

Tags

Sidebar One