Search

Employment News : 2020 ஆண்டிற்க்கான "அஞ்சல்துறை" தேர்வுகளின் புதிய தற்காலிக கால அட்டவணை

Monday, 1 June 2020

2020 ஆண்டிற்க்கான #அஞ்சல்துறை தேர்வுகளின் தற்காலிக கால அட்டவணைப்படி அஞ்சல் இயக்குனரகம் 23.07.2020 அன்று மாதிரி POSTMEN/MAILGUARD/MTS/GDS to PA/SA தேர்வு அறிவிக்கை வெளியிடும்.

மாநில நிர்வாகங்கள் 28.07.2020க்குள் POSTMEN/MAILGUARD/MTS/GDS to PA/SA தேர்வு அறிவிக்கை வெளியிடும்.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்:- 17.08.2020.


POSTMEN/MAILGUARD/MTS/GDS to PA/SA

தேர்வு நடைபெறும் நாள் 06.09.2020 .

05.11. 2020 அன்று உத்தேச POSTMEN/MAILGUARD/MTS/GDS to PA/SA தேர்வு முடிவு வெளியிடும் காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது
Read More »

பயமில்லாமல் பரீட்சைக்கு வாங்க! மாணவர்களை ஊக்குவிக்கும் கல்வித்துறை

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், அச்சமின்றி தேர்வெழுதலாம்'' என, கலெக்டர் கூறினார்.திருப்பூர் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும், 15ம் தேதி முதல், 25ம் தேதி வரை நடக்கிறது. விடுபட்ட பிளஸ் 1 தேர்வு, 16ம் தேதியும், பிளஸ் 2 தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு, 18ம் தேதியும் நடக்க உள்ளது.பிளஸ் 1 தேர்வில், 25 ஆயிரத்து 911 மாணவர்களும், 181 தனித்தேர்வர்களும் பங்கேற்கின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 349 பள்ளிகளில் பயிலும், 29 ஆயிரத்து 746 மாணவர்கள், 856 தனித்தேர்வர்கள் சேர்த்து, 30 ஆயிரத்து 602 பேர் எழுதுகின்றனர்.தேர்வுக்குழு கூட்டம், கலெக்டர் தலைமையில் நேற்று நடந்தது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர், மாநகர போலீஸ் கமிஷனர், தாராபுரம் திட்ட இயக்குனர், ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனர், அரசு தேர்வுகள் உதவி இயக்குனர், மின்வாரிய செயற்பொறியாளர், அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் ஆகியோர் அடங்கிய தேர்வு குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் கூறியதாவது;மாவட்டத்தில், 6 இடங்களில் வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதன்மை கண்காணிப்பாளர்களாக, 349 தலைமை ஆசிரியர்கள், துறை அலுவலர்களாக, 349 பேர், அறை கண்காணிப்பாளர்களாக, 2,985 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்வு மையங்களை கண்காணிக்க, 200 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும்படை உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள், எந்நேரத்திலும் மையங்களுக்கு திடீர் 'விசிட்' செய்வர். தேர்வு மையங்களில் அனைத்து பாதுகாப்பு நட வடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன,'' என்றார்.பயம் வேண்டாம்கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறுகையில், ''மாணவர்கள் பயின்ற பள்ளியிலே தேர்வு எழுதலாம்.

வகுப்பறைக்கு, 10 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்வு மையங்கள் காலை, மாலை, இருவேளையும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும். மாணவர்களுக்கு முக கவசம், கை கழுவ, 'சானிடைசர்' வழங்கப்படும். பயமின்றி, மாணவர்கள் தேர்வு எழுத வரலாம்,'' என்றார்
Read More »

பழமொழியும் அதன் உண்மையான விளக்கமும் - கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.

பொருள்:

கழுதைக்கு கற்பூர வாசம் தெரியாது.
உண்மையான பொருள்:
'கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை'.
கழு என்பது ஒரு வகை கோரைப்புல். அதில் பாய் தைத்து படுத்து பார்த்தால் கற்பூர வாசனை தெரியும் என்பதே சரியான விளக்கம்
Read More »

ஐந்தாம் வகுப்பு குறைந்தபட்சக் கற்றல் கையேடு -Pdf


ஐந்தாம் வகுப்பு குறைந்தபட்சக் கற்றல் கையேடு -Pdf

Click here Tamil

Click here English

Click here Maths

Click here science

Click here Social
Read More »

பள்ளியை திறப்பது குறித்து தமிழக அரசு எடுத்துள்ள முடிவால் மாணவர்கள் மகிழ்ச்சி

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் நாடு முழுவதும் மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வு அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டு கல்விநிலையங்கள் மூடப்பட்டன. தமிழகத்திலும் இதே நிலை தொடர்ந்ததால் இங்கும் பொத்துத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

ஜூன் 15ஆம் தேதி தேர்வு:

தமிழக அரசு பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு ( ஒரு தேர்வு) 
மாணவர்களுக்கான தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்ட போது எல்லாம் எதிர்க் கட்சியான திமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தேர்வை தள்ளிவைக்க வேண்டும்.


இப்போதைய சூழ்நிலையில் தேர்வு வேண்டாம் என்றெல்லாம் சொல்லி வந்தன. தமிழக அரசும் பொதுத் தேர்வு தேதியை தள்ளி வைத்தது. அதன்படி ஜூன் 15ம் தேதி முதல் 25-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற இருக்கின்றன.


கருத்து கேட்பு:

இதனிடையே தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கும் என்ற கேள்வி எழுந்த போதெல்லாம் அதற்கான முடிவு தற்போது எடுக்கப்படவில்லை என்று பள்ளிக் கல்வித்துறையும், தமிழக அரசும் தெரிவித்து வந்தது. இந்த நிலையில்தான் தமிழக அரசு பள்ளியை திறப்பது குறித்து ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. அந்த குழு கொடுக்கும் பரிந்துரைப்படி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தனியார் பள்ளி நிர்வாகத்திடமும் கருத்து கேட்கப்பட்டது.


பெற்றோர்கள் முடிவு:

இந்த சூழ்நிலையில் தற்போது பள்ளி திறப்பது குறித்து பெற்றோர்களிடமும் கருத்துக்களை கேட்க தமிழக அரசு முன்வந்துள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் பள்ளி எப்போது திறக்கலாம் ? பள்ளியை திறந்தால் மாணவர்களை பயமின்றி பெற்றோர்கள் அனுப்புவார்களா ? போன்ற விஷயங்களை எல்லாம் பெற்றோர்களிடம் கேட்டதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.




குஷியான மாணவர்கள்:

தமிழக அரசின் இந்த முடிவால் மாணவர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் பெற்றோரின் மனநிலையை தங்களது குழந்தையை பள்ளிக்கு அனுப்பும் நிலையில் இருக்காது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக ஆயிரத்துக்கும் மேல் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, அதேபோல உயிரிழப்பும் கடந்த 2 நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் பதிவாகியிருப்பது பெற்றோர்களுக்கு கூடுதல் பீதியை ஏற்படுத்தி இருக்கும். எனவே எந்த ஒரு பெற்றோரும் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அனுமதி கொடுக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை
Read More »

பள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கும் டாஸ்க்குகள்..!

ஆசிரியருக்கு நூறு முகங்கள் வேண்டும்,
வகுப்பறைக்கோ நூற்றுக்கணக்கான கண்கள் வேண்டும்”

என்பார் கல்வியாளர் மாடசாமி. அந்த வரிகள் இனி வருங்கால வகுப்பறைக்கு மிகவும் பொருந்தக்கூடியதாய் உள்ளன.


கொரொனாவும் லாக்டெளனும் மற்றவர்களுக்கு எப்படியாயினும் மாணவர்களுக்கு களிப்பூட்டும் விதத்தில் அமைந்தது. ஆனால், அதிக விடுமுறையும் அவர்களுக்கு திகட்டிவிட்டது. தேர்வு இல்லை, வீட்டுப்பாடம் இல்லை என கட்டற்ற சுதந்திரத்தை அனுபவித்தாலும், அவர்களின் அறிவுத்திறனை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு இன்றைய ஆசிரியர்களுக்கு சவாலாக இருக்கும்.

தற்போது வீட்டுப்பாடம் செய்யும்போது, எண்களைக் கூறினால் எழுதுவதில்லை. எழுத்துக்களை மறந்துவிட்டார்கள். நினைவு மொத்தமும் அலைபேசி விளையாட்டும், சினிமா மோகமும் அவர்களைச் சூழந்துள்ளது பட்டவர்த்தனமாய் தெரிகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்தவுடன் பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பு வருவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். பள்ளி திறந்தவுடன் என்னென்ன முன்னேற்பாடுகள் இருக்கலாம்...

பள்ளி திறந்தவுடன்...


சீனாவில் பள்ளிக்குச் செல்லும் குழந்தை, சானிடைஸரை கைக்கு மட்டும் தெளிக்காது அவர் கால்களுக்கும் தெளித்து சுத்தம் செய்து பள்ளிக்குள் அனுப்புவார்கள். அதுபோல், கிருமிநாசினி தெளித்து நாமும் பள்ளிக்குள் அனுப்பலாம். மேலும், காய்ச்சல் இருக்கிறதா என்பதை கருவி மூலம் பரிசோதித்த பின்பே பள்ளியினுள் நுழைய அனுமதிக்க வேண்டும். முகக்கவசமின்றி கட்டாயம் அனுமதிக்கக் கூடாது.

கல்வியாளர்கள் சொல்வதுபோல், காலை மாலை என வகுப்புகள் இருந்தால் குழந்தைகளை அழைத்து வருவதிலும் அழைத்துச் செல்வதிலும் இடர்பாடுகள் இருக்கும். எனவே திங்கள், புதன், வெள்ளி 1,3,5 வகுப்புகளும், செவ்வாய், வியாழன், சனி 2,4 மற்றும் 5-ம் வகுப்பினரை வரவைக்கலாம்.

பள்ளி அளவிலான இறைவணக்கத்தைத் தவிர்த்து, வகுப்பளவில் நடத்தலாம். அடுத்து உள்ள முக்கியமான சவால், சிறுநீர் இடைவேளை. இதில் அனைத்து மாணவர்களையும் ஒரே நேரத்தில் அனுப்பாமல், வகுப்பு வாரியாக மாணவர்களை கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பலாம். மதிய உணவு இடைவேளையின்போது, இவ்வாறு தனிமைப்படுத்தி உணவு உண்பதை கண்காணிக்க வேண்டும். மாலை வேளையில், மணி அடிக்காது இடைவெளி விட்டு, வரிசையில் நின்று அனுப்ப வேண்டும். பள்ளி விட்டால் அங்குமிங்கும் நிற்காது வீட்டுக்குச் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.


வகுப்பறையில்

"கற்றுத்தரும் கலையின் ஒரு பகுதி என்பது கற்பவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கற்பிப்பதுதான்."

மேமாதம் விடுமுறை முடிந்து வரும்போது புதிய புத்தக வாசனை, நண்பர்களைச் சந்திப்பது என உற்சாகத்துடன் குழந்தைகள் வருவர். ஒரு மாத விடுமுறை என்பதால், முதல் இருவாரங்கள் அடிப்படை கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் நடக்கும். தற்போது ஊரடங்கு முடிந்து பள்ளி திறக்க தாமதமாவதால், அடிப்படை கணிதத்திலும் மொழிப் பாட வாசிப்புப் பயிற்சியிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். தேர்வு நேரத்­தில் அமர்வதுபோல கூடு­தல் இடை­வெளி விட்டு மாண­வர்­கள் வகுப்பில் அமரவைக்க வேண்டும்.

மாணவர்களிடம் காணும் அலட்சியப் போக்கை கவனமுடன் கையாளுதல் அவசியம். ஷிஃப்ட் முறையில் நடப்பதால், அனைத்து ஆசிரியர்களும் அனைத்து வகுப்பு மாணவர்களையும் கையாளும் நிலைவரும். அன்றைய வீட்டுப்பாடங்களை தெளிவுற சொல்லிக்கொடுத்து, மறுநாள் செய்துவரச் செய்யலாம். பாடம் தொடர்பான வீடியோக்களை ஒளிபரப்பி, கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்தலாம். அடிப்படை பயிற்சிகள் முடித்தவுடன், சிறுசிறு பயிற்சிகளும் பயிற்சித்தாள்களும் அளிக்கலாம். தேர்வுக்குத் தயார் செய்யும்பொருட்டு ஒட்டுமொத்த அழுத்தத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்துவதைத் தவிர்க்கலாம்


பள்ளிகளில்

*குழந்தைகளிடம் நாள்தோறும் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு குறித்து பேசவேண்டும்.

*குழுவாக விளையாடுவதோ, குழுக்கலற்றலோ பார்த்துக்கொள்ள வேண்டும்.
*இருமும்போதும், தும்மும் போதும் கட்டாயம் கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும்.

*காய்ச்சிய குடிநீரை குடிக்கவும், கொரொனா முடியும்வரை கடைகளில் தின்பண்டம் வாங்குவதை கட்டாயம் தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.

*வைட்டமின் D நிறைந்த சூரிய ஒளி பட தனிநபர் விளையாட்டுகள் விளையாடலாம் ஆசிரியர்கள் மேற்பார்வையில்

*ஆரோக்யமான பழங்கள், காய்கறிகள், சுண்டல் முதலிய எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவுபொருள் சாப்பிட சொல்ல வேண்டும்.

*பேருந்துகளில் கும்பலாக ஏற்றாமல், அதிக முறை (trip)சென்றுவர தனியார் பள்ளிகள் ஏற்பாடு செய்யலாம்.


*சானிடைஸரை தினசரி காலை, மதியம், மாலை என உபயோகிக்கலாம் அல்லது அவர்களுக்கென பிரத்யேக சோப்பை உபயோகிக்க அறிவுறுத்தலாம்.

*காய்ச்சல் அறிகுறி யாரேனும் ஒரிவருக்கு தென்பட்டால்கூட உடனே
பெற்றோர்க்கு தகவல் சொல்லி அனுப்பிவைக்க வேண்டும்.
*விளையாட்டுப் பாட வேளைகளைத் தவிர்க்கலாம்.

*யாரும் யாருடைய முகக்கவசத்தையும் மாற்றக்கூடாது. அதேபோல், தொடர்ந்து ஒரே முகக்கவசம் அணிவதையும் தவிர்க்கவும்.

*நிலவேம்புக் கசாயம் போல் கபசுரக் குடிநீர் வழங்கலாம்.

*மாதந்தோறும் மருத்துவக்குழு அனைத்துக் குழந்தைகளையும் பரிசோதனை செய்ய வேண்டும்.

#பெற்றோர்கள்
பேருந்துகளில் அனுப்பாமல் முடிந்தவரை தாமே பள்ளிக்கு அழைத்து வரலாம். எல்லாவற்றையும் மறந்துவிட்டாயே என திட்டாமல் கற்றலுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். குழந்தைகள் மொபைல் பயன்பாட்டை குறைத்து, பாடங்களில் கவனம் செலுத்த உதவ வேண்டும்.
வாய்ப்பு உள்ள பெற்றோர்கள், புத்தகத்தில் உள்ள QR code பாடங்களைக் காண்பிக்கலாம். மழலையர் வகுப்புக் குழந்தைகள் எந்தப் பொருளையும் வாயில் வைக்கக் கூடாதெனக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தம் மகன் பள்ளியில் பாதுகாப்புடன் இருக்கிறான் என்பதை முழுமையாக நம்ப வேண்டும். அடிக்கடி குழந்தைகள் இடம்பெயர்தல், பள்ளி மாறுவதைத் தவிர்க்கலாம்.

#வருங்கால நம்பிக்கை 


பழங்கால மாலுமி எனும் கதையில் வரும் வரிகளை ஜான் ஹோல்ட் மேற்கோள் சொல்லியிருப்பார்.

"தன்னந்தனி காட்டுவழியில் ஒருவன்
பயமும் திகிலும் கொண்டு நடப்பான்
கடந்த பாதையை திரும்பிப் பார்க்கத்
தலையைக்கூட திருப்ப மாட்டான்"

ஏனெனில், யாரோ ஒருவர் பின்தொடர்கிறார் என சிறுவன் நினைப்பான். ஆனால், பின் ஒருவரும் இல்லாதுகண்டு மகிழ்வுடன் முன்னேறுவான். அதுபோல், கடந்த காலம் பற்றி கவலை கொள்ளாது எதிர்காலம் நோக்கி முன்னேறுவோம். ஏனெனில் கல்வி ஒன்றே நம் முன்னேற்றத்திற்கான உன்னத ஆயுதம்
Read More »

பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோருடன் ஆலோசித்து அறிக்கை அனுப்ப வேண்டும் மத்திய அரசு உத்தரவு

பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோருடன் ஆலோசித்து அறிக்கை அனுப்ப வேண்டும் மத்திய அரசு உத்தரவு 

பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து கல்வி நிறுவனங்கள், பெற்றோருடன் ஆலோசித்து அறிக்கையை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு, மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். 

பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் தள்ளிவைக்கப்பட்டு இருந்த பொதுத்தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து, ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா நோய் தொற்று காரணமாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு தற்போதும் நடைமுறையில் இருக்கிறது. 

இதனால் பள்ளிகள் திறப்பு குறித்து ஜூலை மாதம் முடிவு செய்யப்படும் என்று ஊரடங்கு தளர்வு குறித்து மத்திய அரசு வெளியிட்டு இருந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

அதன் அடிப்படையில் சில முடிவுகளை எடுக்க, அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியிருக்கிறார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

கருத்துகளை அனுப்ப வேண்டும் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து, ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அந்தந்த மாநிலத்தின் கல்வி நிறுவனங்கள், பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனத்தை சார்ந்த அமைப்புகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும். 

 அவ்வாறு நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் உருவான கருத்துகளை அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் கருத்துகளை கொண்டு கல்வி நிறுவனங்களை சரியான நேரத்தில் திறப்பது குறித்து முடிவு எடுக்க முடியும்.
Read More »

SPD - சிறப்புப்பயிற்றுநர்கள் மற்றும் தெரப்பிஸ்டுகளுக்கு ஏப்ரல் 2020 முதல் அனைத்து மாதங்களுக்கும் ஊதியத்தை வழங்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , உள்ளடக்கிய கல்விக் கூறில் பணிபுரியும் சிறப்புப் பயிற்றுநர்கள் மற்றும் தெரப்பிஸ்டுகளுக்கு ஏப்ரல் 2019 முதல் ஊதியம் ரூ.18,000 / - வீதம் ( போக்குவரத்துப்படி உட்பட ) வழங்கப்பட்டு வருகிறது.

ஏப்ரல் மாதம் முதல் COVID - 19 ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் சிறப்புப்பயிற்றுநர்கள் மற்றும் தெரப்பிஸ்டுகளுக்கு ஊதியத்தை அதாவது ரூ.18,000 /- வீதம் ( ஏப்ரல் 2020 முதல் ) அனைத்து மாதங்களுக்கும் வழங்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
Read More »

Teachers Wanted!

TEACHERS WANTED

Trained and Well Experienced Teachers with Good Communication in English are invited for the following posts

U.G Assistant in - Tamil, English, Maths, Physics, Chemistry, Botany, Zoology, History(Social Science), Hindi, Computer Science

P.G Assistant in - Tamil, English, Maths, Physics, Chemistry, Botany, Zoology, Commerce, Accountancy Economics, Computer Science

P.E.T (Male/Female)

Hostel Warden (Male/Female)

Office Staff (Female Only)

Notes : Apply within 5 days by Mail Freshers can also Apply English Fluency is must Salary based on Experience and Efficiency • Preference will be given to Residential Teachers.


Read More »

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்வு: எவற்றிற்கெல்லாம் தடை? எவற்றிற்கெல்லாம் அனுமதி? விரிவான முழு விவரம்.

தமிழகத்தில் 33 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் நீங்குவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அப்பகுதியினரின் அன்றாட நடவடிக்கைகள் அனைத்துக்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டு உள்ளது. பஸ், ஆட்டோ, டாக்சி, சலுான் என அனைத்தும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கூட்டம் கூடுவதற்கு மட்டும் தடை தொடர்கிறது.

தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவை தளர்த்தி மாநில அரசு நேற்று உத்தரவிட்டது.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 நள்ளிரவு 12:00 மணி வரை சில தளர்வுகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. 144 தடையுத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்.

தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். அனைத்து தொழில்

மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து பணிபுரிய ஊக்குவிக்க வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க

வேண்டும்.

‌ இவற்றுக்கு தடை தொடரும் ‌

* வழிபாட்டு தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்தக்கூடாது

* ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு சுற்றுலா தலங்களுக்கு வெளியூர் சுற்றுலா பயணியர் செல்லக்கூடாது

* தங்கும் வசதிடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் பிற விருந்தோம்பல் சேவைகள் கிடையாது; இதில் தனிமைப்படுத்தும் பணிகளுக்கு மட்டும் விலக்கு

* வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி இல்லை. இந்நிறுவனங்கள் இணையவழி கல்வி கற்றலை தொடர்வதுடன் அதை ஊக்கப்படுத்தலாம்

* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்

* மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை கூடங்கள், பார்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்களுக்கு தடை தொடரும்

* அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுது போக்கு, கலாசார நிகழ்வுகள், சமய, கல்வி விழாக்கள் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் கிடையாது

* இந்த கட்டுப்பாடுகள் தொற்றின் தன்மைக்கேற்றவாறு படிப்படியாக தளர்த்தப்படும்

* இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது. திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது

‌ இன்று முதல் இதற்கு அனுமதி ‌

சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் இன்று முதல் சில பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவற்றின் விபரம்:

* தொழில் நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ௧௦௦ சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். முடிந்த வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்

* வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். ஒரே நேரத்தில் ஐந்து வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். 'ஏசி' இயக்கப்படக்கூடாது

* டீக்கடைகள் உணவு விடுதிகள் காய்கறி கடைகள் மளிகை கடைகள் காலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கலாம். 'டாஸ்மாக்' உள்ளிட்ட இதர கடைகள் காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை செயல்படலாம்

* வரும் 8ம் தேதி முதல் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் 50 சதவீத இருக்கைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கலாம்; 'ஏசி' இயக்கப்படக்கூடாது.

* ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அனைத்து பொருட்களையும் விநியோகிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

* வாடகை டாக்சியில் டிரைவர் தவிர்த்து மூன்று பயணியர்; ஆட்டோக்களில் இரண்டு பயணியர் பயணிக்கலாம். சைக்கிள் ரிக் ஷாவும் இயங்கலாம்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

‌ இ ~ பாஸ் முறை ‌

மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு 'இ~ ~ பாஸ்'தேவையில்லை. பஸ்களில் பயணிக்கவும் 'இ~ ~ பாஸ்' அவசியமில்லை.மண்டலங்களுக்கு இடையிலும் மாநிலங்களுக்கு இடையிலும் பஸ் போக்குவரத்துக்கான தடை தொடர்கிறது.அனைத்து வகையான வாகனங்களும் மண்டலங்களுக்குள் இயக்க அனுமதிக்கப்படுகிறது. அவைகளுக்கு இ~ ~ பாஸ் தேவையில்லை.

வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும் அங்கிருந்து வரவும் மண்டலங்களுக்கு இடையில் சென்று வரவும் 'இ~ ~ பாஸ்' முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
Read More »

ஒரு மாத பணி நீட்டிப்பு பெற்றவர்களை 01.06.2020 - ல் பணியேற்க அனுமதிக்க கூடாது - CEO உத்தரவு.


தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத் தொலைபேசிச் செய்தியின்படி , திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து 30.04.2020 ல் ஓய்வு பெற்ற ஆசிரியர்களில் , 01.05.2020 முதல் 31.05.2020 வரை ஒரு மாத பணி நீட்டிப்பு பெற்று பணிபுரிந்திருப்பின் அவர்களுக்கு 31.05.2020 - ல் பணி விடுவிப்பு ஆணை வழங்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் , மேற்படி ஒரு மாத பணி நீட்டிப்பு ( 01.05.2020 முதல் 31.05.2020 வரை ) பெற்றவர்களை 01.06.2020 - ல் பணியேற்க அனுமதிக்க கூடாது என திட்டவட்டமாக அறிவுறுத்தப்படுகிறது
Read More »
 

Most Reading

Tags

Sidebar One