Search

E - Pass தேவையில்லை - பள்ளிக்கல்வித்துறை

Saturday, 23 May 2020

E - Pass தேவையில்லை - பள்ளிக்கல்வித்துறை

*விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு ID Card கட்டாயம்

*பேருந்து வசதி உண்டு

* கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் ஆசிரியர்களுக்கு விலக்கு
Read More »

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக ஏதேனும் சந்தேகமா?.. மிஸ்டு கால் கொடுக்கலாம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜுன் 15-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தேர்வு மையங்கள் தயார் செய்வதற்கான பணிகளும் தொடர்ச்சியாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 10-ம் வகுப்பு தேர்வு தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் மிஸ்டு கால் கொடுத்து விளக்கங்களை பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வானது வரும் ஜுன் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஊரடங்கு மற்றும் கொரோனா அச்சம் காரணமாக பொதுத்தேர்வு எழுதக்கூடிய மனநிலை என்னவாக இருக்கும் என கேள்வி எழுந்துள்ளது.


 மேலும் தேர்வுகளை மேலும் தள்ளிவைக்குமாறு கோரிக்கைகளும் எழுந்து வருகிறது. இந்த சூழலில் ஊரடங்கு மற்றும் கொரோனா அச்சம் காரணமாக 10-ம் மாணவர்களுக்கு தேவையான மனநல ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களை போக்குவதற்கு பள்ளிக்கலவித்துறை சார்பில் ஒரு நூதன முயற்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது மிஸ்டு கால் கொடுத்து பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் தங்களுக்கு தேவையான சந்தேகங்கள் மற்றும் குழப்பங்களை போக்கிக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

9266617888 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து 10-ம் வகுப்பு தேர்வு குறித்த விளக்கம் பெறலாம். கொரோனா அச்சமின்று எவ்வாறு தேற்றவை எழுதுவது என்பது குறித்து ஆடியோ ஒலிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »

பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விபரம் கோருதல் சார்பாக இணைஇயக்குநர் செயல்முறைகள்!



சென்னை பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி ) அவர்களின் செயல்முறைகள்

சென்னை ந.க.எண் .
052422 / C3 / இ 1 / 2019 நாள் .23 .05.2020

பொருள் : பள்ளிக் கல்வி - அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2020 அன்றைய நிலவரப்படி நிரப்பத்தகுந்த பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் விப்பணியிடங்கள் விவரங்கள் கோருதல் சார்பு .

மேற்காண் பொருள் சார்பாக அனைத்து வகை அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2020 அன்றைய நிலவரப்படி நிரப்பத்தகுந்த பட்டதாரி இன நிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 06.06.2020 அன்று மாலைக்குள் சி 3 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கும் c3sec.tndselanic.in முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட நகலொன்றினையும் அனுப்பிவைக்குமாறு அளைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .

மேலும் காலிப்பணியிட விவரங்களை அனுப்பும்போது 01.08.2019 பணியாளர் நிர்ணயத்தின்படி ஆசிரியரின்றி உபரி
 ( Surplus Post Without Person ) எனக் கண்டறிந்து இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்ட பணியிடங்களை எக்காரணத்தையும் கொண்டும் காலிப்பணியிடங்களாக கொண்டு வருதல் கூடாது என்றும் கூடுதல் தேவையுள்ள ( Addl . Need Post ) பள்ளிகளின் பெயர்களையும் காலிப்பணியிடங்களாக கருத கூடாது என்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவறுக்கப்படுகிறார்கள் .

மிக மிக அவசரம் ஒம் / -சு . நாகராஜமுருகன்
பள்ளிக் கல்வி இணை இயக்குநர்
 ( பணியாளர் தொகுதி )

பெறுநர் ( அனைத்து வகை முதன்மைக் கல்வி அலுவலர்கள்
Read More »

பள்ளிகள் திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை எப்போது? - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

பொதுத்தேர்வு முடிந்த பின், பள்ளிகள் திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை தேதி அறிவிக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபியில், அவர் கூறியதாவது:

தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணம் வசூலிப்பது குறித்து, கூர்ந்து கவனித்து வருகிறோம். தற்போதைய இக்கட்டான சூழலில், ஆதாரப்பூர்வமாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த பின், பள்ளிகள் திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை தேதி அறிவிக்கப்படும். அதன்பின், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு, செங்கோட்டையன் கூறினார்
Read More »
 

Most Reading

Tags

Sidebar One