Search

கிரெடிட் கார்டு / டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள் இன்றுமுதல் அமல்!

Monday, 16 March 2020



கிரெடிட் கார்டு / டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் வாடிக்கையாளர்களுக்கு இக்கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மோசடிகளை தடுக்க நடவடிக்கை

*வங்கிகளில் அதிகரித்து வரும் நிதி மோசடிகளைக் கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமாகவும், ஆன்லைன் பரிவர்த்தனைகளிலும் நடைபெறும் மோசடிகளைக் கட்டுப்படுத்த சில கடுமையான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது. முன்பு கார்டுகளைக் கொண்டு எந்தவிதமான பணப் பரிவர்த்தனைகளையும் எளிதாக மேற்கொள்ளும் வசதி இருந்த நிலையில், இனி அதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு பணப் பரிவர்த்தனைகளை மட்டுமே

*அதாவது இனி புதிதாக வழங்கப்படும் கிரெடிட், டெபிட் கார்டுகளைக் கொண்டு உள்நாட்டு பணப் பரிவர்த்தனைகளை மட்டுமே மேற்கொள்ள முடியும். அதுவும் ஏடிஎம், ஸ்வைப்பிங் மெஷின்களில் மட்டுமே இந்தப் பரிவர்த்தனைகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

*சர்வதேசப் பரிவர்த்தனைகளுக்கும், ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கும், கார்டுகள் இல்லாத இதர பரிவர்த்தனைகளுக்கும் வாடிக்கையாளர்கள் தனியாக அதற்கான வசதியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*மொபைல் செயலி மூலமாகவோ, இண்டர்நெட் பேங்கிங் மூலமாகவோ, ஏடிஎம்களிலோ அல்லது வாய்ஸ் ரெஸ்பான்ஸ் வசதியின் மூலமாகவோ இந்தச் சேவைகளை வாடிக்கையாளர்கள் சேர்த்துக்கொள்ள முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஏற்கெனவே இருக்கும் கார்டுகளை என்ன செய்வது?

*ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள ஏடிஎம் கார்களுகளுக்கு வாடிக்கையாளர்கள் மேற்கூறிய சேவைகளில் ஏதேனும் ஒன்றை முடக்கலாமா என்பதை தீர்மானிக்க முடியும்.

*மொபைல் வங்கியியல், நிகர வங்கி விருப்பத்தை வரம்பை இயக்குவதற்கும், சேவையை 24 மணி நேரமும், வாரத்தில் ஏழு நாட்களும் செயல்படுத்தவும் முடக்கவும் ரிசர்வ் வங்கி கேட்டுள்ளது.

*கார்டுகளின் நிலையில் வாடிக்கையாளர் ஏதேனும் மாற்றங்களைச் செய்தால், வங்கி வாடிக்கையாளரை SMS / மின்னஞ்சல் மூலம் எச்சரித்து வங்கிகள் தகவல்களை அனுப்பும்.

*எந்தவொரு பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படாத கார்டுகளில், சர்வதேசப் பரிவர்த்தனைகள், ஆன்லைன் பரிவர்த்தனைகள், கார்டுகள் இல்லாத பரிவர்த்தனைகள் தானாகவே ரத்து செய்யப்பட்டுவிடும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

*இதன் மூலமாக வங்கிப் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பு அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Read More »

நாடு முழுவதும் மார்ச் 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

நாடு முழுவதும் மார்ச் 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு
Read More »

மாணவர் இல்லா வகுப்பறையில் ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள்:

கொரேனோ தொற்றுநோய்க்கான  விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை

16.3.2020 முதல் 31.3.2020 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

மாணவர் இல்லா வகுப்பறையில் ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள்

*நடுநிலைப் பள்ளிகளில் உள்ள மற்ற வகுப்புகளை கவனிக்கலாம்

*தேர்வு பணிக்கு தயார் செய்யலாம் வினாத்தாள் தயாரிக்கலாம்

*விடுப்பு எடுத்துள்ள ஆசிரியர்கள் வகுப்பை கவனிக்கலாம்

*31.3 2020 க்குள் சென்சஸ் கணக்கெடுத்து கொடுக்கலாம்

*அடுத்த ஆண்டு பள்ளி வயது குழந்தைகளை சேர்க்க பெற்றோர் சந்திப்பு இயக்கம் மேற்கொள்ளலாம்

*நாளது தேதிவரை உள்ள CCE பதிவுகளை முடிக்கலாம்

*புதிய பாடப் பகுதிகளுக்கு TLM தயார் செய்யலாம்

*EMIS பதிவுகளை சரிபார்க்கலாம் Online TC சரிபார்த்தல் பணிகளை மேற்கொள்ளலாம்

*மக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு சேவைப் பணிகளைச் செய்யலாம்

*திரள்பதிவேடு  பூர்த்தி  செய்யலாம்

*ஆசிரியர்கள் குழுவாக இணைந்து TNTP க்கு தேவையான பாடப் பதிவுகளை மேற்கொள்ளலாம்

*த. ஆ SSA கணக்கு வரவு செலவு பணிகளை முடிக்கலாம் SSA வரவு செலவு பயன்பாட்டு சான்றுகள் மற்றும் ஆடிட் பணிகளை முடிக்கலாம்
Read More »

1 முதல் 5ம் வகுப்புகளுக்கு எந்த தேர்வும் நடத்தக்கூடாது - கல்வி அதிகாரி அறிவிப்பு.

அனைத்து வகை பள்ளி களில் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரையில் , இன்று முதல் வரும் 31ம் தேதி வரை விடு முறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள் ளது . மேலும் , இந்த காலக்கட்டத்தில் , ஒ ருங்கிணைந்த வேலுார் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்புக ளுக்கு எந்த தேர்வுக ளும் நடத்தக் கூடாது என்று முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ் தெரிவித்துள்ளார் .

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது . இது , தமிழகத் திலும் பரவாமல் தடுக்கும் வகையில் , பல முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது . இதில் ஒன்றாக , தமி ழகத்தில் அனைத்து வகை பள்ளிகளில் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரைக் கும் , இன்று முதல் வரும் 31ம் தேதி வரை விடு முறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது . இதற்கிடையே , ஒருங் கிணைந்த வேலுார் மாவட் டத்தில் பல தனியார் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்புக்கான தேர்வு களை , வரும் 20ம் தேதி முதல் ஏப்ரல் முதல் வாரம் வரையில் நடத்துவதற்கு திட்டமிட்டு , கால அட்ட வணையையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளது .

இந்நிலையில் , தமிழக அரசின் உத்தரவின்படி விடுமுறை அறிவிப்பு குறித்த எந்த தகவலையும் , தனியார் பள்ளிகள் தரப் பில் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை . இதனால் , தனியார் பள் ளிகள் குறிப்பிட்ட தேதி களில் . தேர்வுகள் நடக்குமா , நடக்காதா என்று விவரம் தெரியாமல் பெற்றோர்கள் குழப்பத் தில் ஆழ்ந்துள்ளனர் .

இதுகுறித்து , முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸிடம் கேட்டபோது அவர் கூறியதாவது : அரசு , அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் , நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி கள் , தனியார் மெட்ரிக் பள்ளிகள் , சிபிஎஸ்இ , ஐசிஎஸ்இ பள்ளிகள் என்று அனைத்து வகை பள்ளிகளிலும் எல்கேஜி ( ப்ரிகேஜி உட்பட ) முதல் 5ம் வகுப்பு வரையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 250 பள்ளிக ளுக்கு விடுமுறை அளிக் கப்பட்டுள்ளது .

தனியார் பள்ளிகள் தரப் பில் , 1 முதல் 5ம் வகுப் புக்கு தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டிருந்தாலும் , தமிழக அரசின் அறிவிப்பின்படி விடுமுறை அளிக்கப்பட்ட காலத்தில் எந்த தேர்வினையும் நடத்தக் கூடாது . இதுகுறித்து , தனியார் பள் ளிகளுக்கு சுற்றறிக்கை - அனுப்பப்படும் . இவ்வாறு அவர் தெரிவித்தார் .
Read More »

Flash News : அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு.


தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு.

அனைத்து அரசு அலுவலங்களும் வழக்கம்போல் செயல்படும்.

_*⭕கொரோனா எதிரொலி: தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட உத்தரவு

_*⭕அங்கன்வாடி மையங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு

_*⭕10, +1 ,+2 அரசுத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

_*⭕மருத்துவ மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும்- முதல்வர் பழனிசாமி

_*⭕கொரோனா எதிரொலி காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள் அனைத்தையும் மார்ச் 31 வரை மூட உத்தரவு

_*⭕திருமண மண்டபங்களில் திட்டமிட்ட நிகழ்வுகளை தவிர புதிய நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தல்

அனைத்து உத்தரவுகளும் நாளை முதல் அமல் - தமிழக அரசு

ALL SCHOOL LEAVE -CM - Corona - Date 16.03.2020 - Download here
Read More »
 

Most Reading

Tags

Sidebar One