Search

அனைத்து ஆசிரிய பயிற்றுநர்களும் 5ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்து காலை 10.00 மணிக்குள் தகவல் தெரிவிக்க CEO உத்தரவு

Sunday, 15 March 2020

முக்கிய அறிவிப்பு.
    அனைத்து ஆசிரிய பயிற்றுநர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட Nursury Primary, Matric, CBSE ,ICSE பள்ளிகளில் நாளை 16-03-2020 திங்கள் முதல் மறு அறிவிப்பு வரும் வரை LKG ,UKG  முதல் V std வரை வகுப்புகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்து காலை 10.00 மணிக்குள் வட்டார வளமைய மேற்பார்வையாளரிடம் தகவல் தெரிவிக்குமாறும், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் தொகுத்து DPC MDO -விடம் வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
------------------ 
முதன்மைக் கல்வி அலுவலர் ,
திருச்சிராப்பள்ளி.
Read More »

கொரனோ விடுமுறை -பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் -Dated- 15.03.2020

Read More »

கொரனோ விடுமுறை -ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகைபுரிந்து கல்விப் பணிகள் மேற்கொள்ளுதல், கல்வி கட்டகங்கள் தயாரித்தல் மற்றும் அலுவலகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் -CEO செயல்முறைகள்

Read More »

கொரனோ விடுமுறை -ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வருகைத் தரவேண்டும்-தொடக்கக் கல்வி இயக்குநரகம்

Read More »

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.03.20

  • திருக்குறள்


அதிகாரம்:கல்லாமை

திருக்குறள்:406

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.

விளக்கம்:

படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர். ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாகக் கருதப்படுவர்.

பழமொழி

Youthful impression  last through life.

 இளமையில் கல்வி சிலையில் எழுத்து.

இரண்டொழுக்க பண்புகள்

1. மனிதர்கள் அனைவரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள்.  என் சக மனிதனை இகழ்ந்தால் கடவுளை இகழ்வதற்கு சமம்.

2. எனவே அனைவரையும் சரிசமமாக எண்ணி மதித்து நடப்பேன்.

பொன்மொழி

இடர்கள் வருமோ என ஒதுங்காமல் ,வந்தால் சமாளிக்கலாம் என்பதே வெற்றியின் முதல் படி.

______ சிவசங்கரி

பொது அறிவு

1.மிகவும் லேசான உலோகம் எது?

 லித்தியம்

2.நமது கையில் வைத்தாலே உருகும் உலோகம் எது?

 காலியம்

English words & meanings

Quarts - a measure of liquid. 1.14 litres. 1.14 லிட்டருக்கு சமமான திரவ அளவு

Quartz - a type of hard rock, used in making accurate clocks or watches. துல்லியமான கடிகாரங்கள் தயாரிக்க பயன்படும் பாறை.

ஆரோக்ய வாழ்வு

கொண்டைக்கடலையில் அதிக அளவு புரதச்சத்தும் நார்ச்சத்தும் உள்ளது 100 கிராம் கொண்டைக் கடலையில் கிட்டத்தட்ட 19 கிராம் நார்ச்சத்து உள்ளது.

Some important  abbreviations for students

Ac- alternate current

Hwy- highway

நீதிக்கதை

பழமொழி கதைகள்

மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

ராயன்பட்டு என்ற சிறிய கிராமத்தில் முரளி, ராமன், குமார், வைத்தி ஆகிய நான்கு நண்பர்கள் வசித்து வந்தனர். இவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் நான்கு பேரும் சமூக சிந்தனை உடையவர்கள்.

அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் என்பவன் குதர்க்கவாதியாகவும், யார் எதை சொன்னாலும் எதிர் வாதம் செய்து கொண்டு இருப்பான். ஒரு சமயம் அந்த ஊரில் இளம் பெண் ஒருத்தி மரணம் அடைந்து விட்டாள். அதனால் அந்த ஊர் மக்கள் மாலை 6 மணிக்கெல்லாம் வீட்டிற்குள் சென்று விடுவார்கள்.

இப்படி இருக்கையில் ஒரு நாள் அந்த நான்கு நண்பர்களும் பேயைப் பற்றி விவாதித்து கொண்டு இருந்தனர். அப்போது ஏட்டிக்கு போட்டியாக பேசும் ரமேஷ் அங்கு வந்தான். அவன் பேய் என்பதெல்லாம் பொய், நான் இரவு நேரங்களில் எங்கு வேண்டுமென்றாலும் செல்வேன், என்றான். இதற்கு எவ்வளவு பந்தயம் என்றான். அதற்கு அந்த நால்வரும் பந்தயமெல்லாம் வேண்டாம்  என்றனர்.

இதை ஏற்காத ரமேஷ் உங்களுக்கு தைரியம் இல்லையென்று சொல்லுங்கள். அதனால்தான் பின் வாங்குகிறீர்கள் என்றான். அதற்கு அவர்கள் விபரீதமான பந்தயம் எதுக்குன்னுதான் என்றனர். இப்படிபட்ட விவாதம் பெரியவர்கள் முன்னிலையில் பந்தயமாக முடிந்தது. ஊரே ரெண்டு பட்டது. ஒரு தரப்பினர் பேய் இருக்கு என்றனர், இன்னொரு தரப்பினர் பேய் இல்லை என்றனர். மேலும் சிலர் இரு தரப்பையும் தூண்டிவிட்டு குளிர் காய்ந்தனர்.

ஒரு நாள் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து ரமேஷிடம் அமாவாசை அன்று நள்ளிரவில் நீ மட்டும் தன்னந்தனியாக சுடுகாட்டிற்கு சென்று அந்த பெண்ணை புதைத்த இடத்தில் ஊர் மக்கள் கொடுக்கும் ஒரு குச்சியை அங்கு நாட்டி விட்டு வர வேண்டும் என்றனர். அப்படி நீ செய்துவிட்டால். நாங்கள் எல்லோரும் சேர்ந்து உனக்கு ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்றனர். அவனும் அதற்கு ஒப்புக்கொண்டான்.

அந்த நாளும் வந்தது நள்ளிரவில் ரமேஷ் ஒரு போர்வையை போர்த்திக் கொண்டு ஊர் மக்கள் கொடுத்த குச்சியை கையில் வாங்கிக் கொண்டு தனியாக சென்றான். அவனும் தைரியமாகச் அங்கு சென்று, அவர்கள் சொன்ன இடத்தில் அந்த குச்சியை எடுத்து, அந்த பெண்ணை புதைத்த இடத்தில் வைத்து அடித்தான். அவன் மனம் திக் திக் என அடித்துக் கொண்டது ஏதோ இனம் புரியாத பயம் அவன் மனதில் எழுந்தது.

மனதை திடப்படுத்திக் கொண்டு மீண்டும் ஊர் செல்லத் திரும்பினான். யாரோ அவனை பிடித்திழுப்பது போல் உணர்ந்தான். பயத்தில் ஐயோ என சப்தமிட்டு விழுந்தான். சென்றவனை காணவில்லையே என்று அஞ்சிய மக்கள் தீப்பந்தத்துடன் புறப்பட்டனர். ஆனால் அங்கே சென்று பார்த்தால் ரமேஷ் மயங்கி கிடந்தான். அவன் அடித்திருந்த குச்சியில் போர்வையும் சேர்ந்திருந்ததை அவன் கவனிக்க வில்லை.

மயங்கி விழுந்ததிருந்த ரமேஷை பார்த்த ஊர் மக்கள் அவன் முகத்தில் தண்ணீரைத் தெளித்து எழுப்பினர். அந்த சம்பவத்திற்கு பிறகு ரமேஷ் ஏட்டிக்கு போட்டியாக யாரிடமும் பேசுவதும் இல்லை சொல்வதும் இல்லை. அதன் பிறகு அவனும் நல்லவனாகவும் மாறிவிட்டான்.

திங்கள்
தூய தமிழ் சொற்கள் அறிவோம்

வருஷம்-ஆண்டு   வாகனம்-ஊர்தி       வாலிபர்-இளைஞர்  விவாகம்-திருமணம்    வீரம்-மறம்

இன்றைய செய்திகள்

16.03.20

◆கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை, தியேட்டர், ஷாப்பிங் மால்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

◆தூத்துக்குடி வல்லநாடு அருகே உள்ள கலியாவூர் பஞ்சாயத்து உழக்குடியில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

◆நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை வனவிலங்குகள் சரணாலயத்தில் உள்ள வனவிலங்குகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

◆தொடர முடியாத மற்றும் காலாவதியான அஞ்சலக ஆயுள் காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

◆லண்டனில் அம்பேத்கர் வசித்த வீடு நினைவகமானது.

◆ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்சி-யை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

◆சென்னை இருங்காட்டுக்கோட்டையில் எஃப்ஐஏ ஆசிய பசிபிக் பந்தய தொடக்கச் சுற்று மற்றும் தேசிய காா்பந்த சாம்பியன் போட்டிகள் 20 முதல் 22-ஆம் தேதி வரை திட்டமிட்டப்படி நடைபெறும் என மெட்ராஸ் மோட்டாா் ஸ்போா்ட்ஸ் கிளப் தெரிவித்துள்ளது.

Today's Headlines

🌸 To prevent the spread of   coronavirus , Tamil Nadu government has ordered  to close schools, theaters and shopping malls .

 🌸Older people's burial jar was  found out in the Kaliyavur panchayat at Vallanadu near Thoothukudi.  The people of that area have urged archaeologists to search the area for more items.

 🌸The Nagai district has begun the survey of wildlife in the Kodiyakarai Wildlife Sanctuary adjacent to the Vedaranyam.

 🌸Opportunities to renew postal life insurance policies that are expired and outdated are provided.

 🌸Ambedkar's residence in London became a  memorial.

🌸 In the final match of the ISL Football Series, Atletico de Kolkata won the championship for the 3rd time, beating Chennai FC by 3-1.

 🌸The Madras Motot Sports Club said the FIA ​​Asian Pacific Racing Championship first round and the National Football Championships will be held from as per schedule from 20th to 22nd at the Arankadakotte, Chennai.

Prepared by
Covai women ICT_போதிமரம்
Read More »

Flash News : புதுச்சேரியிலும் 5ஆம் வகுப்பு வரை மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை அறிவிப்பு.

கொரோனா அச்சத்தால் புதுச்சேரியிலும் எல்.கே.ஜி முதல் 5ஆம் வகுப்பு வரை நாளை முதல் மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை என அமைச்சர் கமலக்கண்ணன் அறிவிப்பு.
Read More »

ஜாக்டோ ஜியோ இன்று ( 15.03.2020 ) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்


ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று ( 15 . 03 . 2020 ) ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது . இக்கூட்டத்திற்கு திரு . க . மீனாட்சி சுந்தரம் , திரு . அ . மாயவன் , திரு . கு . வெங்கடேசன் ஆகியோர் கூட்டுத் தலைமையேற்றனர் . இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன .

1 ) கடந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற காலவரையற்றப் வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது 5068 ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்களின்மீது போராட்ட காலத்தில் போடப்பட்ட 17 ( பி ) குற்றக் குறிப்பாணைகள் , 1500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டது ஆகியவை இன்னும் நிலுவையில் உள்ளதால் பதவி உயர்வும் , பணி ஓய்வும் , பணி ஓய்வுக்குப் பின்னர் கிடைக்க வேண்டிய ஓய்வூதியப் பயன்களும் கிடைக்காமல் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர் . இந்த 17பி குற்றக் குறிப்பாணைகளை இரத்து செய்வது மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாகவும் மாண்புமிகு முதல்வர் , மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் துறைச் செயலாளர்களிடம் 16 . 03 . 2020 அன்று மனு அளித்தல்

2 ) 24 . 03 . 2020 அன்று மாண்புமிகு முதலமைச்சர் , மாண்புமிகு அமைச்சர்கள் ( பள்ளிக்கல்வி மற்றும் இளைஞர் நலம் , பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ) ஆகியோரைச் சந்தித்தல்

3 ) ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற விசாரணை குறித்து ஆலோசனைகளை வழங்குவதற்காக ஒருங்கிணைப்பாளர்கள் திரு . இரா . தாஸ் , திரு . மு . அன்பரசு , திரு . அ . மாயவன் , திரு . கு . வெங்கடேசன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது .

4 ) மாநில ஒருங்கிணைப்பாளர்களின் அடுத்த கூட்டம் எதிர்வரும் 11 . 04 . 2020 அன்று சென்னையில் நடைபெறும் .
Read More »

Flash News : தமிழகம் முழுவதும் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை - CM Press News Published!

கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகள், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை.

முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு.

CM Press Release -Corona  Virus - Date 15.03.2020 - Download here

நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை உண்டு.

ஆசிரியர்களின் நிலை பற்றி விரைவில் சுற்றறிக்கை வரும்
Read More »
 

Most Reading

Tags

Sidebar One