Search

அறிவித்தது மத்திய அரசு- கொரொனா பேரிடராக அறிவிப்பு

Saturday, 14 March 2020

அறிவித்தது மத்திய அரசு- கொரொனா பேரிடராக அறிவிப்பு


Read More »

Third Term And Annual Exam April 2020 - 6,7,8,9 Std Time Table - CEO Proceedings

விழுப்புரம் மாவட்ட அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் 6 , 7 , 8 , 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வினாத்தாள் கட்டுகளை தேர்வு நடைபெறும் ஒவ்வொரு நாளன்று காலை 08 . 00 மணி முதல் பொறுப்பான ஆசிரியர் / பணியாளரை அனுப்பி ஏற்கனவே தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகிர்வு மையங்களிலிருந்து பெற்று தங்களது கட்டுப்பாட்டில் வைத்து காலஅட்டவணையைப் பின்பற்றி தேர்வுகள் நடத்திட தலைமை ஆசிரியர்கள் , முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விழுப்புரம் மாவட்ட அனைத்து வட்டாரங்களிலுள்ள நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 6 , 7 , 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வினாத்தாள் உறைகளையும் பெற்று சம்மந்தப்பட்ட நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக ஒவ்வொரு தேர்வு நாளன்று காலை 08 . 00 மணி முதல் வழங்கிடவும் கால அட்டவணையைப் பின்பற்றி தேர்வுகள் நடத்திடவும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . தேர்வுகள் இல்லாத நாட்களில் அன்றைய பாடத்திற்கேற்ப மாணவர்களுக்கு பயிற்சிகள் மேற்கொள்ள பாட ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Read More »

கொரனோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9ஆம் வகுப்புவரை விடுமுறை அளிக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை!


1 . கொரனோ வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனிதர்களை கொன்று குவிக்கிறது . இவ்வைரஸ் இந்தியாவில் பல மாநிலங்களில் மிக விரைவாக பரவி வருகிறது . தமிழகத்திற்கு அருகே உள்ள கேரளா , கர்நாடகா மற்றும் பல மாநிலங்களில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது .

2. மருத்துவர்களின் ஆலோசனைப்படி மனிதர்கள் கூட்டமாக வசித்தால் இத்தொற்றுநோய் மிக விரைவில் பரவுகிறது .

3. பள்ளி என்ற பொது அமைப்பும் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக படிக்கக்கூடிய செயல் இந்நோய் பள்ளி மாணவர்களை எக்காரணத்தைக் கொண்டும் பாதிக்காமல் இருப்பதற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தையும் விடுமுறை விட்டு மாணவர்களின் உயிரைக் காக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

4 . 12 , 11 , 10 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளைத் தவிர ( 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ) தேர்வுகளை இரத்து செய்து பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் .

5. அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணை வைத்து முழு ஆண்டு தேர்ச்சி வழங்க வேண்டும் ( ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் வரை ) .
Read More »

March 3rd Week Lesson Plan for 5th Std

5th Standard  - Lesson Plan

Term 3

March 3rd Week 5th Std Lesson Plan - T/M - Download here
Read More »

கொரனோ முன்னெச்சரிக்கை விடுமுறை ரத்து -LKG,UKG, 1-5 வகுப்புகள் வழக்கம் போல் செயல்படும் -CEO PROCEEDINGS

Read More »

200 ACTION WORDS COLLECTIONS WITH TAMIL MEANING


எனது வகுப்பு  மாணவர்களுக்காக தயார் செய்துள்ளேன் தங்களுக்கும் பயன்படும் எனில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்...

Click here to download pdf



*இரா.கோபிநாத்*
*இடைநிலை ஆசிரியர்*
*ஊ.ஒ.தொ.பள்ளி ஒண்டிக்குப்பம்*
*கடம்பத்தூர் ஒன்றியம்*
*திருவள்ளூர் மாவட்டம்*
Read More »

எந்தெந்த சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் - RTI Reply

Read More »

மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை வெளியீடு!!

Read More »

EMIS இணையதளத்தில் IFHRMS கீழ் பெற்ற ஊதியப் பட்டியலை 16.03.2020க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

IFHRMS ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் கீழ் ஜனவரி 2020 ஊதியப் பட்டியல்களில் DDOS உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் Dus & Deduction பதிவுகள் 11-03-2020 அன்றைய நிலையில் பதிவேற்றம் செய்யப்பட்ட எண்ணிக்கை விவரத்தினை சார்நிலை அலுவலகம் மற்றும் பள்ளிகள் சார்ந்து EMIS இணையதளத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் / தலைமையாசிரியர்கள் login ID பயன்படுத்தி 16.03.2020க்குள் உள்ளீடு ( Employe Datas Completed in IFHRMS ) செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது
Read More »

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல்

Read More »

"4,282 அரசுப் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்"

"4,282 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்"
"அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்"
"தமிழகத்தில் 25 புதிய துவக்கப் பள்ளிகள் தொடங்கப்படும்"
பேரவை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு
ரூ.23 கோடியில் தீ தடுப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும்- முதலமைச்சர்
"10 பொறியியல் கல்லூரிகள், 45 பல்வகை கல்லூரிகளின் பராமரிப்பு செலவுக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு"

Read More »

அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் உத்தரவு - DSE PROCEEDINGS






Read More »

DGE - 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு , புதிய பாடத்திட்டம் / பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதும் தேர்வர்களுக்கு வழங்கப்படும் முதன்மை விடைத்தாள் குறித்த அறிவுரைகள் :





நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2020 இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வுக்கு , புதிய பாடத்திட்டம் / பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதும் தேர்வர்களுக்கு வழங்கப்படும் முதன்மை விடைத்தாள் குறித்து இத்துடன் இணைத்து அனுப்பப்படும் அறிவுரைகளை தங்கள் மாவட்டத்தில் உள்ள பத்தாம் வகுப்பு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு , ( தேவையான எண்ணிக்கையில் நகலெடுத்து ) வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . மேலும் , முதன்மைக் கல்வி அலுவலர்கள் இப்பொருள் தொடர்பாக தனி கவனம் செலுத்தி முதன்மைக் கண்காணிப்பாளர் / துறை அலுவலர் கூட்டத்தில் உரிய அறிவுரைகளை வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது .








Read More »

மாணவா்கள் கை கழுவ சோப்பு வழங்க வேண்டும்: தலைமையாசிரியா்களுக்கு உத்தரவு

பள்ளி மாணவா்கள் அடிக்கடி சோப்பினை கொண்டு கைகளை சுத்தம் செய்வதை தலைமை ஆசிரியா் உறுதிப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் வெள்ளிக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவா்கள் தங்கள் கைகளை கழுவி சுத்தம் செய்ய ஏதுவாக அவா்களுக்குத் தேவையான சோப்புக் கட்டிகளை பள்ளி சிறப்பு நிதி அல்லது பெற்றோா் ஆசிரியா் கழக நிதியில் இருந்து தலைமையாசிரியா்கள் வாங்கித் தர வேண்டும். 

அடிக்கடி சோப்பினால் கை கழுவுவதால் மாணவா்கள் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் என விளங்கும் வண்ணம் ஆசிரியா்கள் எடுத்துக்கூற வேண்டும். மேலும், மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும்போது மாணவா்கள் சோப்பினால் கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனரா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Read More »

ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 10 மாத மாற்று மொழிப் பணியிடைப் பயிற்சி

மத்திய அரசு நடத்தும் இந்திய மொழியியல் நிறுவனம் ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பணியிடைப் பயிற்சியாக 10 மாத மாற்று மொழிப் பயிற்சியை வழங்குகிறது. 2020-21ஆம் ஆண்டுக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


Click here to download pdf
Read More »

வீட்டுக் கடன் லட்ச லட்சமாக வாங்கிவிட்டு கடனை விட இரண்டு மடங்காக வட்டிகட்டி ஆயுள் முழுக்க EMI ல் தத்தளிப்பவர்களுக்கு ... சுலபமாக திரும்பச் செலுத்த 3 வழிகள்!

லட்சக்கணக்கான தொகையை மொத்தமாக புரட்டி வீடு வாங்க முடியாது என்பதாலும், திரும்பக்கட்டும் மாதத் தவணைக்கு வட்டி மற்றும் அசலில் வரிச் சலுகை கிடைக்கிறது என்பதாலும் பலர் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்கவே பலரும் விரும்புகிறார்கள்.

இந்தியாவில் 15, ஆண்டுகள், 20 ஆண்டுகளுக்கு என வீட்டுக் கடன் வாங்கி இருந்தாலும் அதனை சராசரியாக எட்டு ஆண்டுகளில் கட்டி முடித்துவிடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வீட்டுக் கடனை தேர்ந்தெடுத்த காலம் வரை கட்டினால், கட்டும் வட்டி அதிகமாக இருக்கும். இதனை ஓர் உதாரணம் மூலம் பார்க்கலாம்.

* கடன் தொகை ரூ. 25 லட்சம்

* திரும்பக் கட்டும் காலம் 30 ஆண்டுகள் (360 மாதங்கள்)

* வட்டி: 10%

* மாதத் தவணை ரூ. 21,939

இங்கே வாங்கும் கடனோ ரூ.25 லட்சம் தான். ஆனால், அதற்கு கட்டும் வட்டியோ ஏறக்குறைய ரூ.54 லட்சம்.

 (பார்க்க: அட்டவணை 1)

இப்படி கடைசி வரைக்கும் கடனைக் கட்டுவதற்கு பதில் சில உத்திகளைப் பின்பற்றி வட்டியைக் கணிசமாக மிச்சப்படுத்தலாம். அவை பற்றி...

(1) மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை அதிகரித்துக் கட்டுதல்!

மாதத் தவணை ரூ.21,939 என்பதற்கு பதில் கூடுதலாக மாதம் ரூ.3,061 அதிகரித்து ரூ.25,000 ஆக கட்டி வந்தால், வீட்டுக் கடன் 360 மாதங்களுக்கு பதிலாக 216-வது மாதத்திலே முடிந்துவிடும். இங்கே வட்டிக்காக செல்லும் தொகை ரூ.29 லட்சம்தான். அதாவது, மாதம் ரூ.3,061 அதிகரித்து கட்டுவதன் மூலம் வட்டியில் ரூ.25 லட்சம் மிச்சமாகும்.

(பார்க்க : அட்டவணை 2)

(2) ஆண்டு தோறும் தவணை அதிகரித்து கட்டுதல்!

முதல் ஆண்டு மட்டும் ஆரம்பத்தில் கட்டும் வீட்டுக் கடனுக்கு உரிய தவணையை கட்டி விட்டு, அதன்பிறகு ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை அதிகரித்து வரும்பட்சத்தில் வட்டி கணிசமாக மிச்சமாகும். அதாவது, முதல் ஆண்டு தவிர, அடுத்து வரும் ஆண்டுகளில் தவணையை மாதம் ரூ.5,000 வீதம் அதிகரித்து கட்டி வந்தால், வீட்டுக் கடன் 360 மாதங்களுக்கு பதில் 103 மாதங்களிலேயே முடிந்துவிடும். இங்கே வட்டிக்கு செல்லும் தொகை சுமார் ரூ.15 லட்சம்தான். வட்டியில் சுமார் ரூ.38.5 லட்சம் மிச்சமாகும்.

(பார்க்க : அட்டவணை 3)

(3) ஆண்டுதோறும் கூடுதல் தொகை கட்டுதல்!

வீட்டுக் கடன் தவணை தொகையை அப்படியே கட்டிவரும் நிலையில் இரண்டாம் ஆண்டு முதல் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை அதிகரித்து வருவது மூலமும் வீட்டுக் கடனுக்கான வட்டியில் கணிசமாக ஒரு தொகையை மிச்சப்படுத்த முடியும். உதாரணமாக ஒருவர், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கூடுதலாக அசலைக் கட்டி வருகிறார் என்றால், அவரது கடன் 159-வது மாதத்தில் முடிந்துவிடும். இங்கே வட்டிக்கு செல்லும் தொகை ரூ.19.21 லட்சம்தான். வட்டியில் சுமார் ரூ.34.77 லட்சம் மிச்சமாகும்.

(பார்க்க : அட்டவணை 4)

உங்களுக்கு ஏற்ற வழிமுறைகளை பின்பற்றி வீட்டுக் கடனை விரைந்து அடைக்க முயலுங்கள்!

அட்டவணைகள் பார்க்க ....
Read More »

Flash News: பள்ளிகளுக்கான விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைப்பு

கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக மழலையர் பள்ளிகள் மற்றும் ஏழு மாவட்டங்களில் தொடக்கநிலை வகுப்புகளுக்கு விடுமுறை விடுவதாக நேற்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.பள்ளிக்கல்வி ஆணையர் பெயரில் வெளியான அறிக்கை நிறுத்தி வைக்கப்படுவதாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும்,  மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை குறித்த  அறிவிப்பை பள்ளிகளுக்கு தெரியப்படுத்த வேண்டாம் எனவும் கூறப்பட்டுளௌளது.



Thanthi TV link - Watch Now...

Read More »
 

Most Reading

Tags

Sidebar One