Search

BREAKING: தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தம்...!!

Sunday, 8 March 2020


கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி , உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் பயோமெட்ரிக் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பீதியில் தற்போது பயோமெட்ரிக் வருகை பதிவை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் தரப்பிலிருந்து அதற்கான உத்தரவு என்பது அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கடந்த வாரத்திலேயே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

மத்திய அரசு பணியாளர்களுக்கு இப்படியான ஒரு அறிவுறை வழங்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக பள்ளிக்கல்வித் துறையிலும் பயோ மெட்ரிக்முறையை பயன்படுத்த வேண்டாமென்று அறிவுறுத்தப்படுள்ளது.

தமிழகத்தில் பயோமெட்ரிக் முறை எந்தெந்த வகையிலெல்லாம் இருக்கிறதோ , ஒரு சில பள்ளிகளில் மாணவர்களுக்கும் இந்த முறை பின்பற்றப்படுகிறது. தனியார் பள்ளிகள் அரசு அலுவலகங்கள், பள்ளிக்கல்வித் துறை அலுவலகங்கள் என பயோமெட்ரிக் முறை எப்படி இருந்தாலும் மார்ச் 31ஆம் தேதி வரைக்கும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்திருக்கிறார்கள். அதற்குப் பதிலாக வருகை பதிவேடு மூலமாக வருகை பதிவேடு கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
Read More »

பள்ளிகளில், திறந்தவெளியில் சத்துணவு பரிமாறக்கூடாது - பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை!

பள்ளிகளில், திறந்தவெளியில் சத்துணவு பரிமாறக்கூடாது' என, இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ -- மாணவியருக்கு, தமிழக அரசின் சார்பில், மதிய உணவு வழங்கப்படுகிறது. இதற்காக சத்துணவு கூடங்கள் அமைக்கப்பட்டு, பள்ளி வளாகத்திலேயே, உணவு தயாரித்து வினியோகம் செய்யப்படுகிறது.பள்ளி மாணவர்களை, பள்ளி வளாகத்தில் திறந்தவெளியிலும், நடை பாதைகளிலும் அமரவைத்து, மதிய உணவு பரிமாறுவதாக, புகார் எழுந்துள்ளது.இந்நிலையில், பள்ளி வகுப்பறை கட்டடங்களில் வைத்து, உணவுபரிமாறும்படி, பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், 'பள்ளிகளில் பயன்படுத்தப்படாமல் உள்ள வகுப்பறை கட்டடங்கள் அல்லது சேதம் அடைந்த வகுப்பறை கட்டடங்களை செப்பனிட்டு, அவற்றில் வைத்து மாணவர்களுக்கு சத்துணவு பரிமாற வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
Read More »

Term 3 - 5th Standard - March 2nd Week - Science Lesson Plan

Read More »

NMMS Exam - MAT Answer Keys 2019 - Objections and Explanations!

NMMS Exam - MAT Answer Keys 2019 - Objections and Explanations! 
Prepared by Mr. P. Saravanan.

Read More »

தமிழக அரசுப் பள்ளிகளில் நாளை முதல் Bio - Metric வருகைப் பதிவு தற்காலிக ரத்து செய்ய கோரிக்கை!

தமிழக அரசுப் பள்ளிகளில் Bio - Metric வருகைப் பதிவு தற்காலிக ரத்து செய்ய கோரிக்கை!  







Read More »

1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஏப்.1-ல் இறுதி பருவத்தேர்வு கல்வித்துறை அறிவிப்பு

சென்னையில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 1-ல் தொடங்கி 20-ம் தேதி வரை இறுதி பருவத்தேர்வு நடக்கும் என கல்வித் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அனிதா, அனைத்து பள்ளிகளுக் கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:

சென்னை மாவட்ட எல்லைக்குட்பட்ட அனைத்து வகை பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இறுதி பருவத் தேர்வுகள் ஏப்ரல் 1-ல் தொடங்கி 20-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதன்படி 1, 3, 5-ம் வகுப்புகளுக்கு காலையும், 2, 4-ம் வகுப்புகளுக்கு மதியமும் தேர்வுகள் நடைபெற உள்ளன.

இதற்கான விரிவான தேர்வுக்கால அட்டவணை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் எவ்வித மாற்றமும் இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், இதர மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கான தேர்வுக்கால அட்டவணையை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவிப்பார்கள் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Read More »

பொதுத்தேர்வில் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் குறித்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள் / துறை அலுவலர்கள் / அறைக் கண்காணிப்பாளர்கள் / பறக்கும்படை உறுப்பினர்களுக்கு அறிவுரைகள் வழங்கி CEO உத்தரவு

Read More »

கொரனா நோய்த்தொற்றிலிருந்து தப்பிக்க பயோமெட்ரிக் வருகைப்பதிவுக்குத் தற்காலிகமாக விடைகொடுக்குமா தமிழக அரசு?

அண்மைக்காலமாக சீனா உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பெரும் பாதிப்பையும் அச்சுறுத்தலையும் உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வரும் கொரனா வைரஸ் தாக்குதல் தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கொடிய தொற்று பல வல்லரசு நாடுகளின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டுள்ளது என்றே கூறவேண்டும். 

இந்தியாவில் இதன் தாக்குதல் எதிரொலியாக, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லி மாநில அரசு தொற்று நோய்களால் அதிகம் பாதிக்கப்படும் பச்சிளம் குழந்தைகளின் நலன் கருதி தொடக்கப் பள்ளிகளுக்கு நீண்ட விடுமுறை அறிவித்துள்ளது அறிந்த ஒன்று. மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொடுஉணர் வருகையை உறுதிப்படுத்தும் பயோமெட்ரிக் முறையைத் தற்காலிகமாக ஒத்திவைத்து கொரனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.

அதுபோல், மத்திய அரசு தம் அனைத்து அலுவலகங்களிலும் கைகள் மூலம் இந்நோய்த்தொற்று உடனடியாகப் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் மறு உத்தரவு வரும் வரை தொடுவுணர் கருவியைப் பயன்படுத்தி வருகையை உறுதிசெய்வதைக் கைவிட்டு, ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த வருகைப்பதிவேட்டு முறையினைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் நிலவும் காலநிலையில் இந்தக் கொடும் தொற்று பரவ வாய்ப்பில்லை என்று அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் ஏதுமற்ற செய்தியானது உதவி வந்த சூழ்நிலையில் தற்போது ஓமன் நாட்டிலிருந்து வந்த நடுத்தர வயது மனிதருக்கு நோய்த்தொற்று இருப்பது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பே தமிழக அரசு, அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களும் ஊழியர்களும் கொரனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்ததும் அரசு எந்திரத்தை முடுக்கி விட்டதும் குறிப்பிடத்தக்கது. 

அனைத்து வகைப் பள்ளிகளிலும் இந்த நோய் குறித்த விழிப்புணர்வை மற்றும் முன்தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை உரிய நேரத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமாக விரைந்து எடுக்கப்பட்ட நிகழ்வுகள் பாராட்டத்தக்கவை. இதன் ஒரு பகுதியாக, அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களுக்குத் தக்க கிருமிநாசினி திரவத்தைப் பயன்படுத்திக் கை கழுவும் வழிமுறைகள் குறித்து செயல் விளக்கம் கற்றுத்தரப்பட்டன. மேலும், டெட்டால் போன்ற தொற்றுநோய்த் தடுப்புத் திரவங்களால் வகுப்பறைகள் அனைத்தும் தூய்மை செய்யப்பட்ட நிகழ்வும் நடந்தேறியது.

எனினும், கொரனா குறித்த அச்சம் இன்னும் உலகம் முழுவதும் குறைந்தபாடில்லை. இந்நிலையில், தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளைத் தவிர ஏனைய பள்ளிகளிலும் அரசு அலுவலகங்களிலும் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஆதார் அடிப்படையிலான தொடுவுணர் கருவி கைரேகை வருகைப் பதிவினை மத்திய மற்றும் டெல்லி மாநில அரசுகளைப் பின்பற்றி, தற்காலிகமாக நிறுத்தி வைக்க தக்க ஆணை பிறப்பித்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாநில அரசு முன்வரவேண்டும் என்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் விருப்பமாக உள்ளது. அதுவரைக்கும் பழைய முறையிலான பதிவேடு வருகையை இவர்கள் மேற்கொண்டு வர தக்க உத்தரவிட்டு உதவிட வேண்டும் என்பது காலத்தில் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
Read More »

09/03/2020 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

அருள்மிகு சந்திரசூடேஸ்வரர் ஆலயம் தேர்திருவிழா நடைபெறவுள்ள
 09 . 03 . 2020 - ம் தேதியன்று ஒசூர் , சூளகிரி , தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி / கல்லூரிகளுக்கு ( சார் ஆட்சியர் அலுவலகம் உட்பட ) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சு . பிரபாகர் இ . ஆ . ப . , அவர்கள் தகவல்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒஞர் அருள்மிகு சந்திரசூடோப்வார் ஆலயம் தேர்திருவிழா நடைபெறவுள்ள 09 . 03 . 2020 - ம் தேதியன்று ஒசூர் , சூளகிரி , தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி / கல்லூரிகளுக்கு ( சார் ஆட்சியர் அலுவலகம் உட்பட ) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது .

இதனை ஈடுகட்டும் வகையில்
21 . 03 . 2020 ( சனிக்கிழமையன்று ) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது .
மேலும் 09 . 03 . 2020 அன்று நடை பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் வழக்கம் போல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது .

இந்த உள்ளூர் விடுமுறை நாள் செல்வாணி முறிச்சட்டம் 1881 ( Under Negotiable Instruments Act , 1881 ) - ன் கீழ் அறிவிக்கப்படவில்லை சான்பதால் , உள்ளூர் விடுமுறை நாளன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும் , சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சு . பிரபாகர் இ . ஆ . ப . , அவர்கள் தெரிவித்துள்ளார் .

 செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் , கிருஷ்ணகிரி
Read More »

ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் MGNREGS திட்டத்தின் கீழ் சுற்றுச்சுவர் கட்டுதல் - மாவட்ட வாரியான பள்ளிகளின் விவரங்கள் அனுப்புதல்-சார்பு

DEE PROCEEDINGS-தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டங்களிலுள்ள அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் MGNREGS திட்டத்தின் கீழ் சுற்றுச்சுவர் கட்டுதல் - மாவட்ட வாரியான பள்ளிகளின் விவரங்கள் அனுப்புதல்-சார்பு

Read More »

DEE - 17(பி) பெற்ற ஆசிரியர்கள் மீது தொடர்‌ நடவடிக்கை - இரண்டு வாரங்களில் விசாரணை அறிக்கை அளிக்க உத்தரவு - Director Proceedings

தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, சென்னை - 6.
ந.க.எண்‌.3690 / E1/ 2020 நாள்‌.0603.2020
தொடக்கக்கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு துவக்க / நடுநிலைப் பள்ளிகளில்‌ பரியும்‌ ஆசிரியர்கள்‌ மீது தமிழ்நாடு குடிமைப்பணி விதிகளில்‌ விதி 17(பி)-ன்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவர்கள்‌ விவரம்‌ கோருதல்‌ - மேலும்‌ தொடர்‌ நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துதல்‌ - சார்ந்து. 
Read More »

பள்ளி வளர்ச்சி நிதி முறையாக பயன்படுத்தப் படுகிறதா? கண்காணிக்க கோரிக்கை.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 56லட்சத்து 55ஆயிரத்து 628 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். மாவட்ட வாரியாக தொடக்கப் பள்ளிகளில் 25லட்சத்து ஆயிரத்து 483 மாணவர்களும், 24லட்சத்து 67ஆயிரத்து 455 மாணவிகளும் பயின்று வருகின்றனர்.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 42லட்சத்து 86ஆயிரத்து 450 மாணவர்களும், 41 லட்சத்து 9ஆயிரத்து 752 மாணவிகளும் பயின்று வருகின்றனர். இப்படி பலலட்சக்கணக்கான மாணவர்கள் அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர். என்று தமிழக அரசின் கணக்கீட்டின் படி தெரியவந்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்காக பள்ளிகளின் மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து பள்ளிகளின் வளர்ச்சி நிதியாக அரசு தொடக்க பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி, நலத்துறை பள்ளிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதில் 1 முதல் 15 மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு ரூ.12,500ம், 16 முதல் 100 மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு ரூ.25ஆயிரமும், 101 முதல் 250 மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு ரூ.50ஆயிரமும், 251 முதல் 1,000 மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு ரூ.75ஆயிரமும், 1,000க்கு மேல் மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு ரூ.1 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதில் 10 சதவீதம் நிதியை முழு சுகாதாரத்திற்கு பயன்படுத்த வேண்டும். 
இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மொத்தம் சுமார் ரூ.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இந்த நிதியினைக்கொண்டு பள்ளி வகுப்பறை, வளாகத்தை தூய்மை செய்தல், கழிவறை தூய்மை செய்தல், தூய்மையான குடிநீர் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
மேலும் பள்ளிகளில் இயங்காத நிலையில் உள்ள கற்றல் உபகரணங்கள் மாற்றவும், பள்ளியில் ஏற்படும் சிறு தொடர் செலவினங்களான நாளிதழ்கள், மின்கட்டணம், இணையதள வசதி, ஆய்வக உபகரணம் வாங்கவும் பயன்படுத்த வேண்டும்.
இந்த நிதியை பயன்படுத்துவதற்கு முன்பு பள்ளி மேலாண்மை குழுவினர்களுடனும், ஆசிரியர்களுடனும் கலந்து ஆலோசனை செய்து இந்த ஆண்டு எந்தெந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். 
பின்னர் அதனை தீர்மானமாக பள்ளி மேலாண்மை குழு தீர்மான பதிவேட்டில் முறையாக பதிவு செய்ய வேண்டும். பின்பு தான் அந்த நிதியை கொண்டு செலவுகள் மேற்கொள்ள வேண்டும். 
மேலும் இந்த நிதியின் மூலம் கொள்முதல் செய்யும் பொருட்கள் தரமானதாக வாங்க வேண்டும். இதனை மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆய்வுக்கு செல்லும்போது முறையாக நிதி செலவிடப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்ய வேண்டும். 
இந்த விதிமுறைகள் காகித வடிவில் மட்டுமே உள்ளதாக நேர்மையான ஆசிரியர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் இருந்து புகார்கள் எழுந்துள்ளது. பள்ளி வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதியினை முறையாக செலவு செய்வதில்லை. மாறாக குறைந்த விலையிலான உபகரணங்கள் வாங்கி அதிக தொகைக்கு பில் வைப்பதாகவும், சில பள்ளிகளில் எந்தவிதமான செலவும் செய்யாமல் பில் மட்டும் வைத்து கணக்கு காட்டி விடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
அதோடு, பள்ளி மேலாண்மை குழுவில் உள்ள உறுப்பினர்களை கைக்குள் போட்டுக்கொண்டு பள்ளி வளர்ச்சிக்காக ஒதுக்கிய ரூ.93 கோடி நிதியில் பெருமளவு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனை ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகளும் ஆய்வுக்கு செல்கிறார்களா? சென்றாலும் உரிய முறையில் நிதி செலவிடப்பட்டுள்ளதா? என்று சரியான முறையில் ஆய்வு செய்கிறார்களா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இப்படியாக அரசு பள்ளிகளுக்கான வளர்ச்சி நிதி பெரும்பாலும் கொள்ளையடிக்கப் படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே அரசு சார்பில் ஒதுக்கிய நிதி சரியான முறையில் செலவு செய்யப்படுகிறதா? என்பதை கழுகுப்பார்வை கொண்டு ஆய்வு செய்து, விதிமீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேர்மையான ஆசிரியர்களே கோரிக்கை வைத்துள்ளனர். 
எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களும், பள்ளி வளர்ச்சி நிதி செலவிடப்பட்டுள்ளதா? முறைகேடுகள் நடந்துள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது
Read More »

1 TO 5th Std - Term 3 April 2020 Exam Time Table - CEO Proceedings

சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஆளுகைக்குட்பட்ட அரசு அரசு உதவிபெறும் சென்னைப் பள்ளிகள் மெட்ரிக்குலேஷன் ஆங்கிலோ இந்தியன் ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள் சிறப்புப் பள்ளிகள் மற்றும் Truncated பள்ளிகளுக்கான 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது .
இதில் எவ்வித மாற்றமும் இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அனைத்து வகைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Read More »

மதிய சத்துணவு உட்கொள்வதற்கு அறைவசதி ஏற்படுத்த தொடர்பான பள்ளிகளின் விவரங்கள்கோரி இயக்குநர் உத்தரவு.

பள்ளிக் கல்வி- சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை-புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் – அரசு/அரசு நிதியுதவி பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்கள் – பயனாளிகளுக்கு மதிய சத்துணவு உட்கொள்வதற்கு அறைவசதி ஏற்படுத்த தொடர்பான விவரங்கள் கோருதல் சார்பு.
புரட்சித் தலைவர் எம் . ஜி . ஆர் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவ / மாணவிகள் சுகாதார மூறையில் மதிய உணவு உட்கொள்ளும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் காலியாக / பயன்படுத்தப்படாமல் உள்ள வகுப்பறைகளை மாற்றி சீரமைத்து உணவு அருந்தும் கூடங்கள் அமைப்பது தொடர்பாக 04.03.2020 அன்று சமூக நல ஆணையர் அவர்களின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது .
அச்சமயம் ஒன்யறித்திற்கு ஒரு பள்ளி வீதம் உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளி வீதம் தேர்வுத் செய்யும்போது அப்பள்ளிளில் கல்வி பயன்பாட்டிற்காக பயன்படாத வகுப்பறையினை மாற்றி சீரமைத்து மாணவர்களின் உணவருந்தும் கூடங்களாக அமைத்துத்தர ஏதுவாக உள்ள பள்ளிகளின் பெயர் பட்டியல் மற்றும் முழு முகவரியுடனும் இத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தில் இவ்வியக்ககத்திற்கு இச்செயல்முறைகளை கண்ட அன்றே இவ்வியக்ககத்தின் idssedanic.in இமெயில் மூலமாக அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார் .
படிவம்

Read More »

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ஆசிரியர்களை நியமித்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ஆசிரியர்களை நியமித்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!


Read More »
 

Most Reading

Tags

Sidebar One