Search
தொடக்கக் கல்வி -உதவி பெறும் பள்ளிகள் -பட்டதாரிக் கல்வித்தகுதியுடன் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் நிர்வாகத்தால் 11.07.1995 முதல் 19.051998 முடிய நியமனம் செய்யப்பட்டவர்களில் சில ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் ஒப்புதல் கோரி வழக்குகள் தொடரப்பட்டது சார்ந்து -இயக்குநரின் செயல்முறைகள்
Monday, 24 February 2020
Tags:
DIRECTOR PROCEEDINGS
ஆசிரியருக்கான பெருமை இன்னும் குறையவில்லை கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நெகிழ்ச்சி
ஆசிரியர்களுக்கான பெருமை, தமிழகத்தில் இன்னும் குறையவில்லை என திருப்பூரில் நடந்த ‘அன்பாசிரியர்’ விருது வழங்கும் விழா வில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச் சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ராம்ராஜ் காட்டன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் ‘அன்பாசிரியர் விருது’ வழங் கும் விழா திருப்பூரில் நேற்று விமரிசையாக நடைபெற்றது.
மாணவர்களுக்கு தனித்துவமான கல்வியை அளிப்பதோடு நின்றுவிடாமல், திறமை, சமூக அக்கறை, நற்பண்புகளை ஊட்டி, பள்ளியையும் மேம்படுத்திவரும் ஆசிரியர்கள் பலர் பொதுவெளியில் இன்னும் அறியப்படாமல் உள்ளனர். அத்தகைய ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘அன்பாசிரியர்’ என்ற விருதை வழங்குகிறது.
இவ்விருதுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் தங்களின் செயல்பாடுகள் பற்றிய விவரத்தொகுப்பை ஆன்லைன் மூலமாகவும், தபால் மூலமாகவும் அனுப்பியிருந்தனர். மூத்த கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழு, விவரத் தொகுப்புகளைப் பரிசீலனை செய்தது. இதையடுத்து தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒருவர், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 38 பேர் அன்பாசிரியர் விருதுக்கு தேர்வாகினர்.
இவர்களுக்கு விருது வழங்கும் விழா, திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. சிபாரிசுக்கு இடமில்லை ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் கே.அசோகன் தலைமை வகித்து பேசும்போது, ‘‘ஆசிரியர் சமூகம் என்பது அன்பு நிறைந்ததுதான். ஆகவேதான் ‘அன்பாசிரியர்’ என்ற பெயரில் விருது வழங்குகிறோம். அன்பாசிரியர் விருதை மனத்தூய்மை, நேர்மையோடு நடுவர்கள் வைத்து, எவ்வித சிபாரிசுக்கும் இடமின்றி தகுதியான ஆசிரியர்களை தேர்வுக் குழு வினர் தேர்வு செய்துள்ளனர்.
வகுப் பறையை கலகலப்பாகவும், மகிழ்ச்சியாக வும் மாற்றியவர்கள்தான் அன்பாசிரியர்கள். இந்த விருதை அரசுப் பள்ளி ஆசிரியர் களுக்கு வழங்குவதில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பெருமை கொள்கிறது” என்றார். சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆசிரியர் களுக்கு விருதுகளை வழங்கினர். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: மாணவர்களிடம் அன்போடு பணி செய்தால் மட்டுமே அனைவரது அன் பையும் பெற முடியும் என்பதை, இங்கு விருது பெற்ற ஆசிரியர்கள் நிரூபித்துள்ள னர்.
விருது பெற்ற அரசுப் பள்ளி ஆசிரி யர்களின் சிறப்புகளை பார்த்தபோது வியந்து போனேன். கிராமப் பகுதிகளில் பள்ளிகளை ஆசிரியர்கள் வழிநடத்தி செல்வதை காணும்போது உண்மையில் உளப்பூர்வ மாக ஆசிரியர்களுக்கான பெருமை, தமிழ கத்தில் இன்னும் குறையவில்லை என்பதை உணர முடிகிறது. மாற்றுத் திறனாளி ஆசிரியை ஒருவர் செய்துள்ள பணியை பார்க்கும்போது, ஆசிரியர்கள் எல்லோராலும் எல்லாம் செ`ய்ய இயலும். வகுப்பறை கட்ட நிதி விருது பெற்ற ஆசிரியர் ஒருவர், பள்ளி யில் வகுப்பறைகள் தேவை என்றார். விரைவில் வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கப் படும்.
சிறந்த ஆசிரியர்கள் தங்களது பணி களை செய்ய, இதுபோன்ற குறைபாடுகள் வரக் கூடாது. ஆசிரியர்களுக்கு இந்த அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகே வெளிப் படையாக பணிமாறுதல் நடைபெறுகிறது. ஆசிரியர் தேர்வாணையத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது. ஆசிரியர்களுக்கு நன்மை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு உறு துணையாக இருப்பேன்.
ஆசிரியர்கள், சமு தாய வளர்ச்சிக்கு வித்திடுபவர்கள். சமூகம் மட்டுமல்ல, நாட்டையும், நாட்டின் பொருளா தாரத்தையும் மேம்படுத்துவதில் ஆசிரியர் களின் பங்களிப்புக்கு இடம் உண்டு.இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் பேசும் போது, “தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் களுக்கு பல்வேறு விருதுகளை வழங்கி உள்ளோம். 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்களை அழைத்து பாராட்டினோம்.
இன்றைக்கு ‘இந்து தமிழ் திசை’ அன்பாசிரியர் விருது வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது. இதுபோன்ற நல்ல நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ள ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு வாழ்த்துகள்” என்றார். விழாவில், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், எம்எல்ஏக்கள் ஏ.நடராஜன், எஸ்.குணசேகரன், கே.என்.விஜயகுமார், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன், லட்சுமி செராமிக்ஸ் நிர்வாக இயக்குநர் முத்துராமன், எஸ்.எம். சில்க்ஸ் உரிமையாளர் மனோகர், சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாகி அருண், ‘இந்து தமிழ் திசை’ பொது மேலாளர் ராஜ்குமார், வணிகப் பிரிவு தலைவர் சங்கர் சுப்பிரமணி யன், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயலாளர் எக்ஸ்லான் கி.ராமசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் ரமேஷ், திருப்பூர் மாவட்ட கல்வி அலு வலர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
நூல் வெளியீடு ‘இந்து தமிழ் திசை’ யின் இணையதளப் பிரிவு முதுநிலை உதவி ஆசிரியர் க.சே.ரமணி பிரபாதேவி எழுதிய, ‘அன்பாசிரியர்’ புத்தகத்தை, அமைச்சர்கள் வெளியிட்டனர். இதையடுத்து இணையதள தொடரில் எழுதிய முன்னோடி ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சங்க இலக்கியத் தமிழ்ப் பாடல்களை நவீன முறையில் இசையமைத்து ஜேம்ஸ் வசந்தன் தன் குழுவினருடன் அரங்கேற்றிய சேர்ந்திசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை லட்சுமி செராமிக்ஸ், எஸ்.எம். சில்க்ஸ், சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி, கல்யாண் ஜூவல்லர்ஸ், நியூஸ் 7ஆகியவை இணைந்து வழங்கின.
Read More »

ANBASIRIYAR VIRUTHU
பொதுத் தேர்வு நேரம் என்ன? மாணவர்களுக்கு விளக்க உத்தரவு
பொதுத் தேர்வு நடத்தப்படும் நேரம் குறித்து, மாணவ - மாணவியருக்கு தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களை, கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதில், தேர்வு எழுதும் நேரத்தை, இரண்டரை மணி நேரத்தில் இருந்து, மூன்று மணி நேரமாக அதிகரிக்க, பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, மூன்று மணி நேரமாக, தேர்வு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.வினாத்தாளை வாசித்து பார்க்க, காலை, 10:00 முதல், 10:10 மணி வரை, 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும். விண்ணப்பதாரர்களின் விபரங்களை, தேர்வறை கண்காணிப்பாளர்கள் சரிபார்க்க, 10:10 முதல், ஐந்து நிமிடங்கள் ஒதுக்கப்படும். அதன் பின், 10:15 முதல், பகல், 1:15 மணி வரை, மூன்று மணி நேரம், தேர்வு எழுதுவதற்கான நேரம் ஒதுக்கப்படும். இந்த தகவலை, அனைத்து மாணவ - மாணவியருக்கும் ஆசிரியர்கள் தெளிவாக விளக்க வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசு பணியில் சேர்ந்த பிறகு மேற்படி உயர்கல்வி தொடர முன்அனுமதி பெற வேண்டுமா? CM CELL Reply
அரசு பணியில் சேருவதற்கு முன்னர் தொலைதூர வழியில் உயர்கல்வி பயின்றமைக்கு துறை அனுமதி பெற தேவை இல்லை . ஆனால் அரசு பணியில் சேர்ந்த பிறகு மேற்படி உயர்கல்வி தொடந்து பயின்று முடிக்க வேண்டும் என்ற நிலையில் தொலைதுர வழியில் கல்வி பயின்று முடிக்க சார்ந்த தலைமை ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும் ( பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ( ப . தொ ) செயல்முறைகள் ந . க . எண் 40565 / C5 / இ5 / 2019 நாள் 22 . 08 . 2019 )
EMIS இணையத்தில் UDISE PLUS படிவ விவரங்களை எவ்வாறு பதிவேற்றம் செய்வது? எளிய வழிமுறைகளுக்கான வீடியோ இணைப்பு!
அனைத்து வகைப் பள்ளிகளிலும் UDISE PLUS படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
UDISE PLUS DCF படிவத்தை பூர்த்தி செய்து தயாராக வைக்க வேண்டும் .அவ்வாறு பூர்த்தி செய்த படிவத்தை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வசதி ஏற்படுத்திய உடனே பதிவேற்றம் செய்திட வேண்டும் .
UDISE PLUS DCF படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட தகவலுக்கும் , EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தகவலுக்கும் எவ்வித முரண்பாடும் ஏற்படாவண்ணம் கவனத்துடன் பதிவேற்றம் செய்திட வேண்டும்
EMIS UDISE PLUS HOW TO ENTER THE DETAILS IN EMIS WEBSITE STEP BY STEP EXPLANATIONS
# ஒவ்வொரு ஆசிரியர்பயிற்றுநரும் தங்களுக்குகீழ் உள்ள பள்ளிகளில் பூர்த்தி செய்யப்பட்ட DCF படிவமும் , EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட தகவலும் சரியானது என சான்று அளிக்க வேண்டும் .
# வட்டார கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களுக்குகீழ் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளின் சரியான தகவல் பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதி செய்து அதற்குரிய சான்றை பெற்று முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்
காலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள் - 25-02-2020 - T.தென்னரசு
காலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள்
25-02-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 39
அதிகாரம் :அறன் வலியுறுத்தல்
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
பொருள்:
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
ஏழ்மை என்ற நோய் அகல வேண்டுமானால், உழைப்பு என்ற மருந்தைக் கொடு.
- எமர்சன்
✡✡✡✡✡✡✡✡
பழமொழி
பழமொழி
இன்று குடிக்கத் தண்ணீர் இல்லை , ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
Important Words
Planets - கோள்கள்
1. Sun - சூரியன்
2. Mercury - புதன்
3. Venus - வெள்ளி
4. Mars - செவ்வாய்
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
பொதுஅறிவு
1. தமிழ்நாட்டில் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் ஊர் எது ?
சிவகாசி
2. தனுஸ்கோடியையும், மெட்ராஸையும் இணைத்த இரயிலின் பெயர் என்ன?
போர்ட்மெயில்
✡✡✡✡✡✡✡✡
Daily English
Daily English
Poly syllabic words
1. acceleration - ac-cel-e-ra-tion
2. administrator - ad-min-is-tra-tor
3. curiosity - cu-ri-os-i-ty
4. electricity - e-lec-tri-ci-ty
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !
புறா
🐦 புறா முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறக்கும் பறவையினத்தைச் சேர்ந்த, தானிய வகைகளை உணவாக உண்ணும் பயிறுண்ணிப் பறவை ஆகும்.
🐦 இது விதைகள், பழங்கள், செடிகள் போன்றவற்றையும் உட்கொள்ளுகின்றது. புறாக்கள் உலகெங்கிலும் அதிகமாகக் காணப்படுகின்றன என்றாலும், சகாரா பாலைவனம், ஆர்டிக், அண்டார்டிக் பகுதிகளில் இவை காணப்படுவதில்லை.
🐦 புறாக்கள் பல்வேறுபட்ட அளவுகளில் காணப்படுகின்றன. நியூகினியாவைச் சேர்ந்த க்ரோண்ட் புறாக்கள் அளவில் பெரியவை. இரண்டு முதல் நான்கு கிலோ எடையுடையவை.
🐦 மிகச் சிறிய புறாக்கள் ஜெனஸ் கொலம்பினா இனத்தைச் சார்ந்தவை. ஆகும். இவை சுமார் 22 கிராம் எடை உடையவை.
🐦மன்னர்கள் காலத்தில் கடிதப் போக்குவரத்திற்காக புறாக்களை பழக்கப்படுத்தினர். தற்போது வீட்டில் செல்லப் பறவையாக வளர்க்கப்படுகிறது.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
இன்றையகதை
வேலையை ரசித்து செய்
ஒரு தாயும் மகனும் மட்டும் வசித்த வீடு அது. ஏழைக்குடும்பம். வீட்டுத்தலைவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இப்போது தாய்க்கும் உடல் நிலை சரியில்லை. மரணத்தருவாயில் இருந்த தாயிடம் அம்மா நீயும் என்னைவிட்டுப் போய்விடாதே. நீயும் போய்விட்டால் நான் அனாதையாக ஆகிவிடுவேனே? என அவளது கையைப் பிடித்து அழுதான் அவளது பதினைந்து வயது மகன்.
தாய் சொன்னாள். மகனே, எந்தச் சூழ்நிலையிலும் கலக்கம் கூடாது. ஜப்பானிலுள்ள ஹிரோஷிமாவும் நாகசாகியும் எத்தனை அனாதைகளை உருவாக்கியது தெரியுமா? அவர்களெல்லாம் வாழாமல் போய்விட்டார்களா? ஒன்றை மட்டும் புரிந்துகொள். உன் தந்தை அடிக்கடி என்னிடம் ஒரு விஷயத்தை சொல்வார். அதையே உனக்கு சொல்கிறேன் என்ற தாயிடம் அந்த துயரமான சூழ்நிலையையும் மறந்து அவள் சொல்வதைக் கேட்க ஆர்வமானான் மகன்.
மகனே நீ ஒரு கலைஞனாகி விடு பிழைத்துக் கொள்வாய். அதற்காக பெரிய கலைஞன் ஆக வேண்டும் என சொல்லவில்லை. உனக்கு கழிவறை சுத்தம் செய்யும் பணி கிடைத்தால் கூட அதையும் பாக்கியமாக கருதி ரசித்து செய். நீ சுத்தம் செய்வது போல வேறு யாரும் அதை சுத்தம் செய்ய முடியாதபடி இருக்கவேண்டும். உன் வேலையில் ஒரு தனித்துவம் வெளிப்பட வேண்டும் என்றாள். ஆம் உங்கள் வேலையை ரசித்து செய்யுங்கள். ரசித்து செய்யும் வேலையில் தான் சுகமும் திருப்தியும் இருக்கிறது.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.

செய்திச்சுருக்கம்.
🔮ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
🔮உத்தரபிரதேச அரசு வழங்கிய 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம் ஏற்றுக்கொண்டது.
🔮வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா மிகவும் கடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக, டிரம்ப், சமீப காலங்களில் 2-வது முறையாக கூறியுள்ளார்.
🔮வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்டுள்ள நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று டெல்லி ஆளுநர் அனில் பைஜால் தெரிவித்துள்ளார்.
🔮மலேசியாவில் நிலவி வரும் அரசியல் நெருக்கடி காரணமாக பிரதமர் மகாதீர் முகமது தனது ராஜினாமா கடிதத்தை அரசருக்கு அனுப்பியுள்ளார்.
🔮கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 2,592 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதித்த சீனாவுக்கு விமான போக்குவரத்து சேவையை வரும் மார்ச் 15ந்தேதி வரை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.
🔮இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.
🔮தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 6 மருத்துவக்கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்தது அரசு; 600 சீட் கிடைக்க வாய்ப்பு.
HEADLINES
🔮India, US to sign chopper deals worth USD 3 billion: Trump at Motera.
🔮Twitterati surprised over Donald Trump not mentioning Mahatma Gandhi in visitors' book.
🔮Sunni Waqf Board to accept alternative land near Ayodhya offered by UP government.
🔮4,000-year-old crafts village unearthed near Varanasi.
🔮New Zealand beats India by 10 wickets in series-opening test.
🔮Poonam Yadav grabs three wickets as India beat Bangladesh by 18 runs in Women's T20 World Cup.
கிடப்பில் போடப்பட்ட ஓய்வூதியம் தொடர்பான வல்லுநர் குழு அறிக்கை - ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிருப்தி!
பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்த வல்லுநர் குழு அரசுக்கு அறிக்கை கொடுத்து ஓராண்டுக்கு மேலாகியும் நட வடிக்கை இல்லாதததால் 5 . 5 லட்சம் அரசு ஊழியர்கள் அதிருப் தியடைந்துள்ளனர் . தமிழகத்தில் 2003 ஏப் . 1 முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் செயல் படுத்தப்பட்டது .
இதில் 5 . 5 லட்சம் ஊழியர்கள் இணைந்துள்ளனர் . இத்திட்டத்தில் அரசு ஊழி யர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்த தொகையை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்த வேண்டும் . ஆனால் , ஆணையத்திடம் இதுவரை ஒரு ரூபாய்கூட செலுத்தவில்லை . இதன்காரணமாக ஓய்வு பெற் றோருக்கும் , பணியில் இறந் தவர்களின் குடும்பங்களுக்கும் முறையாகப் பணப்பலன்கள் கிடைக்கவில்லை . இதனால் ,அதிருப்தி அடைந்த ஊழியர்கள் , ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தினர் . இதையடுத்து பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல் படுத்துவது குறித்து ஆராய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலாநாயர் தலைமையில் 2016 - ல் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது .
இக்குழு இறுதியாக ஐஏஎஸ் ஸ்ரீதர் தலைமையில் செயல்பட்டது . 2018 - ல் இக்குழு அரசிடம் அறிக்கை அளித்தது . ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை . இதனால் , ஓய்வு பெற்ற ஊழியர்கள் , ஆசிரியர் கள் அதிருப்தியில் உள்ளனர் . புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்த திண்டுக்கல் ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியது : புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர் களிடம் பிடித்த தொகை , அரசின் பங்குத்தொகை என ரூ . 35 ஆயிரம் கோடி அரசிடமே உள்ளது . புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணியில் சேர்ந்தவர்களில் ஓய்வு பெற்றோர் , பணியில் இறந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் . இதில் பாதிக்கும் குறைவானவர்களே ஓய்வூதியத் தொகையைப் பெற்றுள்ளனர் .
புதிய ஓய்வூதியத் திட்டப்படி மத்திய அரசு , பிற மாநில அரசுகள் பணிக்கொடை அளிக்கின்றன . ஆனால் , தமிழகத்தில் ஓய்வு பெறுவோருக்கு பணிக்கொடை கொடுப்பதில்லை . மேலும் பிடித்த தொகையில் 60 சதவீத பணத்தை வழங்க வேண்டும் . மீதியுள்ள 40 சதவீதத்தில் ரூ . 1 லட்சத்துக்கு ஆண்டுக்கு ரூ . 6 , 500 ஓய்வூதியமாக வழங்க வேண்டும் . பணியின்போது இறந்தோரின் குடும்பத்துக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் . ஆனால் , அதை தரவில்லை . பிற மாநிலங் களில் ஊழியர்களிடம் பிடிக்கும் 10 சதவீத தொகையுடன் , அரசு கள் 14 சதவீத தொகையைச் செலுத்து கின்றன . ஆனால் தமிழக அரசு 10 சதவீதமே செலுத்துகிறது . வல்லுநர் குழு அறிக்கை மீது நட வடிக்கை எடுத்து பழைய ஓய் வூதியத் திட்டத்தையே செயல் படுத்த வேண்டும் , என்று கூறினார் .

அனைத்து வகைப் பள்ளிகளிலும் UDISE PLUS படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு.
அனைத்து வகைப் பள்ளிகளிலும் UDISE PLUS படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வசதிகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள UDISE PLUS DCF படிவத்தை பூர்த்தி செய்து தயாராக வைக்க வேண்டும் .
Read More »
அவ்வாறு பூர்த்தி செய்த படிவத்தை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வசதி ஏற்படுத்திய உடனே பதிவேற்றம் செய்திட வேண்டும் . UDISE PLUS DCF படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட தகவலுக்கும் , EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தகவலுக்கும் எவ்வித முரண்பாடும் ஏற்படாவண்ணம் கவனத்துடன் பதிவேற்றம் செய்திட வேண்டும் என அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது . ஒவ்வொரு ஆசிரியர்பயிற்றுநரும் தங்களுக்குகீழ் உள்ள பள்ளிகளில் பூர்த்தி செய்யப்பட்ட DCF படிவமும் , EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட தகவலும் சரியானது என சான்று அளிக்க வேண்டும் .
வட்டார கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களுக்குகீழ் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளின் சரியான தகவல் பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதி செய்து அதற்குரிய சான்றை பெற்று முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் .
எங்களையும் காப்பாற்றுங்கள்...அமைச்சருக்கு ஆசிரியர்கள் வேண்டுகோள்!
கடந்த ஆகஸ்ட் 2010க்குப் பிறகு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி , முறையான ஒப்புதலுடன் தமிழகத்தில் அரசுஉதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணி நியமனம் பெற்று , அவர்களது பணிக்கான தகுதி காண் பருவ ஆண்டுகளையும் கடந்து 9 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணியாற்றி வரும் 1747 ஆசிரியர்களின் பரிதாப நிலையை விவரிக்கிறது இக்கட்டுரை . . . . தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான நோடல் ஏஜென்சி எங்களையும் கா அமைப்பது தொடர்பான தமிழக அரசின் அரசாணை எண் : 181 , நவம்பர் 2011 மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறைகள் குறித்த அரசாணை எண் . 90 மார்ச் 2012 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டன .
ஆனால் தமிழகத்தில் ஜுலை 2012ம் நாள் தான் முதன் முதலாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது . அதன் முடிவுகள் ஆகஸ்ட் 2012 ல் வெளியானது . எனவே தமிழகத்தில் ஆகஸ்ட் 2012 வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் யாருமே இல்லாத ஒரு சூழல் , நியமிக்கப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய 2013ல் வெளியான அரசு உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 2013ம் நாள் தீர்ப்பு வழங்கியது . அதன் பிறகு உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் பல்வேறு மேல்முறையீடுகள் செய்யப்பட்டன . ஒவ்வொரு கட்டத்திலும் நீதிமன்ற ஆணைகள் மூலமே இந்த 1747 ஆசிரியர்களும் காப்பாற்றப்பட்டு வருகின்றனர் . இன்று வரை இது தொடர்கிறது .
தற்போது இவர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஒரு பெண் ஐ . ஏ . எஸ் . அதிகாரி இயக்குநர்களை முடுக்கி விட்டுள்ளாராம் . இதனால் தங்களது பணிக்கு மீண்டும் ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சிக் கிடக்கிறார்கள் ஆசிரியர்கள் .

Subscribe to:
Posts (Atom)