Search

பான் எண் மட்டும் அல்ல.. விரைவில் வாக்காளர் அடையாள அட்டையும் ஆதார் உடனுடன் இணைக்க வேண்டி வரலாம்..!

Wednesday, 19 February 2020

டெல்லி : தேர்தல் நடைமுறை சீர்திருத்தத்தின் முக்கிய முடிவாக வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணியை மத்திய அரசு கையில் எடுத்துள்ளமேலும் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சட்டப்பூர்வ அதிகாரத்தை, தேர்தல் ஆணையத்திற்கே வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கான தீர்மானத்தை தயார் செய்யும் பணியில் மத்திய சட்டத் துறை அமைச்சகம் இறங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
முக்கிய திருத்தம் கொண்டு வர முடிவு
மேலும் சட்டத்துறை அமைச்சகம் தீர்மானத்தை தயார் செய்த பிறகு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும் என்றும் கூறப்படுகிறது. இது தேர்தல் நடைமுறை சீர்திருத்தத்தில் மிக முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. மேலும் இவற்றில் உள்ள சிக்கலை தவிர்க்க ஆதார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


போலி அட்டைகளை நீக்க முடியும்

இவ்வாறு ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதால், போலியான வாக்காளர் அட்டைகளை அடையாளம் காண முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த திருத்தம் உள்நாட்டில் புலம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் இடத்தியிலேயே வாக்களிக்க இந்த சீர்திருத்தம் வழிவகை செய்யும் என்றும் கூறப்படுகிறது.
தேர்தல் ஆணையம் பரிசீலனை
இவ்வாறு ஆதார் எண் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு மூலம், பாதுகாப்பாக மின்னணு முறையில் ஓட்டளிப்பது சாதகமாக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இது தவிர உள்நாட்டு தொழிலாளர்கள், வேலைக்காக வெளிநாடு சென்றவர்கள், தங்களது ஓட்டை பதிவு செய்வதற்கு உதவும். அவர்களின் அடையாளம் உறுதி செய்த உடன், தொழில்நுட்ப வசதிகளுடன் ஓட்டளிப்பது குறித்த வாய்ப்புகளை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது



இணைக்கும் பணி கைவிடல்
கடந்த 2015ம் ஆண்டு தேசிய வாக்காளர் பட்டியல் சீர்திருத்த திட்டத்தின்படி, வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை அரசு துவக்கியது. ஆனால் 32 கோடி ஆதார் எண்களை இணைத்த நிலையில், ஆதார் பயன்பாட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றம் விதித்த கெடுபிடிகள் காரணமாக, பின்னர் அந்த பணியை கைவிட்டது.
அமைச்சரவை ஒப்புதல் கொடுக்குமா?



ஆனால் கடந்த ஆண்டு ஆதார் சட்டத்தில் திருத்தம் செய்து, ஆதார் எண்களை சேகரிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக சட்டத்துறை அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. இதனை கொள்கை அளவில் ஏற்று கொண்ட சட்டத்துறை அமைச்சகம், அமைச்சரவை ஒப்புதலுக்கு குறிப்பு அனுப்ப தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆக எப்படியேனும் விரைவில் இதுவும் அமலுக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போலி வாக்காளர் அட்டைகளை களைய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More »

மாணவா்களின் கற்றல் செயல்பாடுகளை செயலி மூலம் கண்காணிக்க திட்டம்

தமிழகம் முழுவதும் உள்ள நடுநிலைப் அரசுப் பள்ளிகளில் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க புதிய செல்லிடப்பேசி செயலியை அறிமுகப்படுத்த தமிழக கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு ஆசிரியா்கள் பாடங்கள் கற்பிக்கும் முறை மற்றும் மாணவா்கள் எவ்வாறு கவனம் செலுத்துகிறாா்கள் என்பதைச் சோதிப்பதற்காக இந்த செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


ஏற்கெனவே கடந்த அக்டோபா் மாதம் முதல்கட்டமாக சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சோந்த அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் 'அப்சா்வேஷன் மொபைல் ஆப்' அறிமுகப்படுத்தபடும் என்ற அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் இந்த திட்டம் கொண்டுவரப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஆசிரியா்கள் வகுப்பறைகளில் எவ்வாறு பாடம் நடத்துகிறாா்கள் மற்றும் மாணவா்கள் வகுப்பறையில் எவ்வாறு கவனம் செலுத்துகிறாா்கள் ஆகியவற்றை கண்காணிக்க கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மூலம் வகுப்பறையில் கற்பிக்கும் வழிமுறைகள், மாணவா்களின் கற்றல் திறன், மாணவா்கள் கேட்கும் கேள்விகள், சந்தேகங்களுக்கு விடையளித்தல், வகுப்பறை மேலாண்மை, பதிவேடு பராமரிப்பு, செயல்வழிக் கற்பித்தல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆசிரியா்கள் தினமும் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


அதை மாவட்ட கல்வி அதிகாரிகள் மதிப்பீடு செய்து பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு தெரியப்படுத்துவா். பள்ளி ஆய்வின்போது இந்தச் செயலியில் பதிவேற்றப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் ஆசிரியா்களின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்படும். முதல்கட்டமாக, சோதனை அடிப்படையில் சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Read More »

25 ஆண்டுகளாக பணியாற்றும் ஆசிரியா்களுக்கு வெகுமதி

அரசுப் பள்ளிகளில் 25 ஆண்டுகளாக சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வெகுமதி வழங்கப்படவுள்ளது.



அரசுப் பள்ளிகளில் சிறப்பான முறையில் பணியாற்றி வரும் ஆசிரியா்களை சிறப்பிக்கும் வகையில் கல்வித் துறை சாா்பில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி எந்தக் குற்றச்சாட்டுக்கும் இடமளிக்காமல் தொடா்ந்து 25 ஆண்டுகள் மாசற்ற முறையில் பணிபுரிந்த ஆசிரியா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்களின் விவரங்களை தலைமையாசிரியரின் பரிந்துரை கடிதத்துடன் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க அனைத்து தலைமை ஆசிரியா்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.



அவா்களுக்கு ரூ. 2 ஆயிரம் ரொக்கமும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. தகுதியான ஆசிரியா்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »

தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள்நேரடி நியமனம்: ஆசிரியா்கள் கடும் எதிா்ப்பு

அரசு தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியா்களை நேரடியாக நியமனம் செய்து கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இந்த அறிவிப்பு நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கு எதிரானதாக இருப்பதால், உடனடியாக அதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.



தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள் பணிமூப்பின் (சீனியாரிட்டி) அடிப்படையில்தான் நியமிக்கப்படுகின்றனா். இந்த நிலையில், அரசு தொடக்கப் பள்ளிகளில் 50 சதவீத தலைமை ஆசிரியா் பணியிடங்களை நேரடியாக அரசே நியமனம் செய்யலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது நீண்ட காலமாக பணியில் இருக்கும் ஆசிரியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த சங்கத்தின் மாநில பொதுச்செயலாளா் இரா.தாஸ் கூறியதாவது:



தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். ஆனால், மொத்தம் 1.2 லட்சம் ஆசிரியா்களே உள்ளனா். அதிலும் ஆசிரியா் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் காலியாக இருக்கின்றன. நேரடி தலைமை ஆசிரியா் நியமன முறையால் இடைநிலை ஆசிரியா்கள் பெரிதும் பாதிக்கப்படுவா். இடைநிலை ஆசிரியா்களுக்கு ஒரே ஒரு பதவி உயா்வான தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் பதவியும் பறிபோய்விடும்.



ஆசிரியா்கள் பெரும்பாலும் அதே ஊரைச் சோந்தவா்களாக உள்ளதால், மாணவா்களின் மனநிலை, பெற்றோா் மற்றும் அந்த ஊரின் சூழல் குறித்த புரிதல் இருக்கும். அதனால் தோவு நடத்தி தலைமை ஆசிரியா்களை நியமிக்காமல், பணிமூப்பு அடிப்படையில் பதவி உயா்வு வழங்கும் தற்போதைய நடைமுறையே தொடர வேண்டும் என்று கேரள மாநில அரசு வலியுறுத்தி இருக்கிறது. பஞ்சாப், பிகாா் உள்ளிட்ட மாநிலங்கள் தோவு முறையில் தலைமை ஆசிரியா்களை நியமிப்பதற்கான ஆரம்பப் பணிகளை தொடங்கிவிட்டன. எனவே, தமிழக அரசு நேரடி தலைமை ஆசிரியா் நியமன முறையைத் தவிா்க்க வேண்டும் என அவா் கூறியுள்ளாா்.
Read More »

33 சதவீத தமிழக நடுநிலைப் பள்ளிகளில் உரிய ஆசிரியர்கள் இல்லை. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் உள்ள 3ல் 1 பங்கு அரசு நடுநிலை பள்ளிகளில் பாட ஆசிரியர்கள் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 மத்திய அரசின் சர்வசிக்ஷ அபியான் திட்டத்தின் ஒப்புதல் குழு கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பாட ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

 அரசு பள்ளிகளுக்கான கல்வி தர நிர்ணய பட்டியலில் மொத்தம் 180 புள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் வெறும் 48 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளன.

நடுநிலை பள்ளிகளில் 33% அளவிற்கு பாட ஆசிரியர்கள் நியமிக்கப்படாததே இதற்கு காரணம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

 தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 6,966 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அதில் 8.46 லட்சம் மாணவர்கள் பயின்றுப வருகின்றனர். 

ஆனால் நடுநிலை பள்ளிகளில் 1 தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர் என்பது ஆசிரியர்களின் புகாராகும்.

5 பாடங்களையும் 3 ஆசிரியர்களே கையாள்வதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.

 கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் இயங்கும் நடுநிலைப் பள்ளிகளில் 2 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

 பள்ளிக்கல்வித் துறை ஆசிரியர்களை குறைத்து வருவதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

 31 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள் தேவை என்பது இவர்களின் கோரிக்கையாகும்.
Read More »

School Morning Prayer Activities 20.02.2020

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 732
அதிகாரம் : நாடு

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் 

 ஆற்ற விளைவது நாடு.
பொருள்:

பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

அனைத்து நட்புக்கு பின்னாலும் ஒரு சுயநலம் இருக்கிறது. சுயநலங்கள் இல்லாத நட்பு இல்லை. இது ஒரு மிகவும் கசப்பான உண்மை.
 -சாணக்யா
✡✡✡✡✡✡✡✡
பழமொழி  

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

Bend the twig , bend the tree
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Important  Words

Agriculture - வேளாண்மை

1. வயல் - Field
2. பயிர் - Crop
3. சாகுபடி - Cultivation
4. புன்செய் நிலம் - Dry land
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. வேலூர் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள முத்து மண்டபம் யாருடையது?

 விக்ரமராஜ சிங்

2. விழுப்புரம் மாவட்டத்தில் உப்பு  எங்கு அதிகம் விளைவிக்கப்படுகிறது ?

 மரக்காணம்
✡✡✡✡✡✡✡✡
Daily English
Tri-syllabic words

1. Civilian - ci-vil-ian
2. Consider - con-si-der
3. Continent - con-ti-nent
4. Criticism - crit-i-cism
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !

எருமை

🐃 எருமை பாலூட்டி விலங்குகளில் ஒன்றாகும்.

🐃 எருமையின் தாயகம் இந்தியா என பெரும்பான்மையான பரிணாம மரபியல் ஆய்வுகள் கூறுகின்றன.


🐃 எருமைகள் பாலுக்காகவும், உழவுக்கும் உதவிகரமாக உள்ளது. அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க உயிரியல் வகைப்பாடு இதற்கு இல்லை.

🐃இந்தியாவில் கர்நாடக மாநிலம் கம்பாலாவில் நடக்கும் எருமைப்போட்டி பிரசித்தி பெற்றது. தாய்லாந்து நாட்டிலும் எருமைப்போட்டி நடைபெறுகிறது.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

நல்லவர் கெட்டவர்

தோட்டத்து முட்செடி ஒன்றில் காயம்பட்ட சிறுவன் தந்தையிடம் சென்று அழகான செடியில் இருக்கும் முள் எதற்கு இருக்கிறது என்று கேட்டான். 


மகனே, நல்லவரிடையே கெட்டவர்களும் உள்ளனர். கெட்டவர்களுடன் சேரக் கூடாது. முன் எச்சரிக்கை வேண்டும். இதை நீ அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அந்த முள் இருக்கிறது என்று தந்தைக் கூறினார். 
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு...நி.பள்ளிகாட்டூர்திருவள்ளூர் மாவட்டம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.

🔮காவிரி டெல்டா - பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்புக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

🔮சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பின் துணைக் குழு பாகிஸ்தானை சாம்பல் பட்டியலில் தக்க வைத்துக் கொள்ள பரிந்துரைத்து உள்ளது.

🔮சீனாவில் இருந்து சென்னை வந்த கப்பலில் உள்ள 19 பேரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.

🔮டெல்லியை சேர்ந்த முதியர் ஒருவர் தனது 93 வயதிலும் முதுகலை பட்டம் பெற்று இளைஞர்களுக்கு உந்து சக்தியாக திகழ்கிறார்.

🔮புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான பெண்களுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது.

🔮ஆசிய மல்யுத்தம்: இந்திய வீரர் சுனில் குமார் தங்கம் வென்று சாதனை.


🔮டெல்லியில் நடைபெற்று வரும் கைவினைப் பொருள்காட்சிக்கு பிரதமர் மோடி திடீர் விசிட்: கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடி உணவருந்தினார்.
HEADLINES

🔮Collegium recommends transfer of Delhi HC’s Justice Muralidhar, 2 other HC judges.

🔮Supreme Court-appointed interlocutors visit Shaheen Bagh.

🔮Two crew members of Chinese ship under isolation in Tamil Nadu.

🔮Trump ambiguous on trade pact with India now, saving big deal for later.

🔮NF Railway builds India’s tallest pier bridge in Manipur.


🔮FOOTBALL:Champions League | Dortmund beat PSG 2-1 with sensational Haaland double.
Read More »

அரசு பொதுத் தேர்வு நடைபெறும் நாட்களில் பள்ளி முழு வேலைநாட்கள் எப்பொழுது?

அரசு பொதுத் தேர்வு நடைபெறும் நாட்களில் பள்ளி முழு வேலைநாட்கள் எப்பொழுது என கீழ்க்கண்ட பட்டியல் மூலம் அறியலாம்.

Read More »

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் பெயர் எதுவும் திருத்தங்கள் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் பெயர் எதுவும் திருத்தங்கள் இருந்தால் தலைமையாசிரியர்களே சரி செய்து கொள்ளலாம்.








Read More »

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்!

நிதித்துறையின் கீழ் செயல்படும் கருவூலக்கணக்குத்துறை மூலம் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தினை முழுமையாக செயல்படுத்த அரசால் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்பெறுகிறது .




வேலூர் மாவட்டத்தில் 01.03.2020 முதல் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்று கருவூலக்கணக்குத்துறை ஆணையர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது . இப்பொருள் தொடர்பாக பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு தொடர்ந்து கடிதங்கள் மூலமும் கூட்டங்கள் மூலமும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது . மாவட்ட கருவூலத்திலும் சார் கருவூலங்களிலும் பயிற்சி அளிக்கப்பட்டு வரப்படுகிறது.


















Read More »

IT - ஆசிரியர் கூட்டுறவு சங்கத்தில் பெறப்படும் கடன் மீதான தொகைக்கு காப்பீடு செய்யும் தொகையை வருமான வரி 80C-ன் கீழ் கழித்தம் செய்து கொள்ளலாமா?

ஆசிரியர் கூட்டுறவு சங்கத்தில் பெறப்படும் கடன் மீதான தொகைக்கு காப்பீடு செய்யும் தொகையை வருமான வரி 80C-ன் கீழ் கழித்தம் செய்து கொள்ளலாம் என்பதற்கான பதிவாளர்-சென்னை அவர்களின் சுற்றறிக்கை.
The above requests of the assoclation and the Joint Registrars werel analyzed in depth . Loans are granted by the employees Credit Societles only on personal surety without seeking any collateral security . In order to provide life insurance cover to the borrowing members of employees credit societies and to ensure 100 % loan repayment to the socleties and also to ensure that the legal heir of the borrower is not burdened with repayment of loans of the deceased borrower , the following instructions are issued.



Read More »

11,12ஆம் வகுப்பு தேர்வுக்கூட அனுமதி சீட்டுக்களை ( Hall Tickets ) 19.02.2020 முதல் பதிவிறக்கம் செய்யலாம் - வழிமுறைகள் வெளியீடு

நடைபெறவுள்ள மார்ச் 2020 , மேல்நிலை இரண்டாமாண்டு ( + 2 ) பொதுத் தேர்வுகள் தொடர்பாக , பள்ளி மாணாக்கரது தேர்வுக்கூட அனுமதி சீட்டுக்களை ( Hall Tickets ) பதிவிறக்கம் செய்தல் குறித்து தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் பின்வரும் அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் .

1 . பள்ளி தலைமையாசிரியர்கள் 19 . 02 . 2020 முதல் www . dge . tn . gov . in என்ற இணையதளத்திற்கு சென்று " online - portal ” என்ற வாசகத்தினை " Click ” செய்து “ HIGHER SECONDARY SECOND YEAR EXAM MARCH 2020 ” என தோன்றும் பக்கத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID , Password - ஐ கொண்டு தங்கள் பள்ளி மாணாக்கரது தேர்வுக்கூட அனுமதி சீட்டுக்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் .

2 . தற்போது , பள்ளியில் + 2 பயிலும் மாணாக்கர் , கடந்த மார்ச் 2019 / ஜூன் 2019 பருவங்களில் + 1 தேர்வெழுதி தேர்ச்சி பெறாத பாடங்கள் மற்றும் தற்போது + 2 தேர்வெழுதும் பாடங்கள் ஆகியவற்றினை தேர்வெழுதுவதற்கு ஒரே நுழைவுச்சீட்டு மட்டுமே வழங்கப்படும் .

3 . பள்ளி மாணாக்கரது தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளுடன் , தங்கள் பள்ளியில் + 1 பயின்று , மார்ச் 2019 , + 1 தேர்விற்குப் பின்னர் மாற்றுச் சான்றிதழ் பெற்று பள்ளி இடைநின்றவர்களது தேர்வுக்கூட அனுமதி சீட்டுக்களையும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் .

4 . பள்ளித் தலைமையாசிரியர்கள் அசல் பள்ளி மாற்றுச் சான்றிதழை ( T . C ) பள்ளியில் மீள ஒப்படைத்த தேர்வர்களுக்கு மட்டும் தேர்வுக்கூட அனுமதி சீட்டுக்களை வழங்க வேண்டும் . அசல் பள்ளி மாற்றுச் சான்றிதழை ( Original T . C ) ஒப்படைக்காதவர்களுக்கு தேர்வுக்கூட அனுமதி சீட்டுக்களை வழங்கக்கூடாது .

5 . அசல் பள்ளி மாற்றுச் சான்றிதழை ஒப்படைக்காத பள்ளி இடைநின்றவர்களை எக்காரணம் கொண்டும் தேர்வெழுத அனுமதிக்கக்கூடாது . அத்தேர்வர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர்கள் / தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் Attendance Sheet , Seating Plan ஆகியவற்றில் Absent என பதிவு செய்ய வேண்டும் .

முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் தவறாது பின்பற்ற வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்திடுமாறும் , இப்பொருள் சார்ந்து எவ்வித குழப்பமுமின்றி தேர்வுகளை சிறந்த முறையில் நடத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

Read More »

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் - CEO செயல்முறைகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் 2019 - 2020ஆம் ஆண்டு தலைப்பின்கீழ் கூடுதல் வகுப்பறைகள் , மராமத்துப் பணிகள் , ஆண்கள் கழிப்பறை , பெண்கள் கழிப்பறை மற்றும் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

இவற்றுள் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைத்தல் பணிகள் நீங்கலாக பிற பணிகள் நடைபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் 21 . 02 . 2020 ( வெள்ளி ) அன்று முற்பகல் 10 . 00 மணிக்கு திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெற உள்ளது .

இக்கூட்டத்தில் இணைப்பில் குறித்துள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்களை தவறாது கலந்து கொள்ளச் செய்யும்படி சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Read More »
 

Most Reading

Tags

Sidebar One