பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.02.20
திருக்குறள்
அதிகாரம்:இறைமாட்சி
திருக்குறள்:381
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
விளக்கம்:
வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது.
பழமொழி
Trust not to a broken staff .
மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே
இரண்டொழுக்க பண்புகள்
1. என்னிடம் இருப்பவைகள் கடவுளின் கொடை எனவே பெருமை பட மாட்டேன்.
2. இல்லாதவற்றை கடவுள் ஒரு நாள் தருவார் எனவே இருப்பவரை பார்த்து பொறாமை கொள்ள மாட்டேன்.
பொன்மொழி
உயர்வான எண்ணங்களும்
விரிவான சிந்தனையும் நேர்மையான செயல்பாடு இருந்தால் உங்களை யாரும் வீழ்த்த முடியாது.
பொது அறிவு
1.மின் அடுப்பிலுள்ள சூடேற்றும் பொருள் எதனால் தயாரிக்கப்படுகிறது?
நிக்ரோம்.
2.கத்தரிக்காய் ஊதா நிறத்தில் இருக்கக் காரணமான நிறமி எது?
ஆன்தோசயனின்.
English words & meanings
Palynology – study of pollen. மகரந்ததூளியல்.
Pacific - peaceful in character. அமைதி வாய்ந்த பண்புள்ள
ஆரோக்ய வாழ்வு
இளநீர் முகப்பருக்கள் வருவதைத் தடுக்கும் சரும பாதிப்புகளை தடுக்கும். உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
Some important abbreviations for students
Rp - Repurposed sensor.
S - Static
நீதிக்கதை
திருக்குறள் நீதிக்கதைகள்
நரியை மிஞ்சிய அணில்
குறள் :
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
விளக்கம் :
தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.
கதை :
ஒரு காட்டில் ஒரு சிங்கம் எல்லா மிருகங்களுக்கும் சண்டைப் பயிற்சி அளித்து வந்தது. அதில் ஒரு நரி மிகவும் திறமை வாய்ந்தவன் என்று பட்டம் பெற்றது.
நரிக்கு பெருமையும், கர்வமும் தாங்க முடியாமல் போனது. என்னோடு சண்டை போட்டு ஜெயிப்பவர்கள் யார் என்று எல்லா மிருகங்களையும் வம்புக்கு இழுத்தது. நரியைக் கண்டாலே வெறுப்பாகும் அளவுக்கு எல்லா மிருகங்களும் ஒதுங்க ஆரம்பித்தன.
இந்த நரியின் கொட்டத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று சிறு அணில் ஆசைப்பட்டது. அது நரியுடன் சண்டையிடுவதற்கு தயார் என்று அறிவித்தது.
ஒரு சின்ன அணில் தன்னை வென்று விட முடியுமா என்று நினைத்த நரி பந்தயத்திற்கு ஒப்புக் கொண்டது. கண நேரத்தில் அந்த அணில் நரியின் மீது பாய்ந்து எத்தனை இடங்களில் கடிக்க முடியுமோ கடித்து விட்டு ஓடியது.
என்ன ஏது என்று புரிவதற்கு முன்பே நரியின் உடலில் ரத்த காயங்கள் ஏற்பட்டிருக்க வலி தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தது.
நீதி :
மற்றவர்களை இழிவாக நினைத்தால் துன்பம் நம்மையே வந்தடையும்.
இன்றைய செய்திகள்
14.02.20
★கொடைக்கானலில் வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல், குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் விற்பனையாகும் பிளாஸ்டிக் கேன்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
★அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் 6 நீரேற்று நிலையங்களுக்கான 48 பம்புகள் புனேயில் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
★மகாராஷ்டிர அரசு ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டத்தை முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு செயல்படுத்த உள்ளது.
★பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் மாற்றங்களை செய்து வருகிறார், இதில் நிதியமைச்சராக இந்திய வம்சாவளி அரசியல்வாதி ரிஷி சுனக்கை அவர் புதிய நிதியமைச்சராக நியமித்துள்ளார்.
★அமெரிக்காவில் நடைபெற்றுவரும் கேன்ஸ் கோப்பை செஸ் போட்டியில் 5-ஆவது சுற்று ஆட்டத்தில் இந்திய செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி வெற்றி பெற்றாா்.
★நெதா்லாந்தில் நடைபெற்றுவரும் ரோட்டா்டாம் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவில் காலிறுதிக்கு இந்தியாவின் ரோகன் போபண்ணா இணை முன்னேறியது.
Today's Headlines
🌸 The plastic cans which is used to sell drinking water and soft drinks are banned in Kodaikanal from April 1st.
🌸 or 6 Hydro Pumping Stations in Athikadavu - Avinasi 48 pumps are being made in Pune.
🌸 In Maharashtra the Uththav Thackeray government is going to fulfil the long standing wish of "only five working days per week".
🌸 Britain Prime Minister Boris Johnson is making changes in his cabinet. It includes the appointment of the Indian- origin politician Rishi Sunak as the new finance minister.
🌸 Koneru Thambi won the 5th round of the Cannes Cup Chess Tournament in the United States.
🌸 India's Rogan Bopanna advanced to the quarterfinals of the Rotateam Open Tennis Championship in the Netherlands.
Prepared by
Covai women ICT_போதிமரம்