Search

அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: தமிழக பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்பு

Wednesday, 12 February 2020

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மட்டும் அமல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.



பள்ளி செல்லும் மாணவ- மாணவிகளின் நலன் கருதி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 43 ஆயிரம் பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படுகிறது. இதன் மூலம் 49.85 லட்சம் மாணவ-மாணவிகள் பயன்பெறுகின்றனா். ஏழை மாணவா்கள் தொடா்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தை காமராஜா் கொண்டு வந்தாா். எம்.ஜி. ஆா். ஆட்சி காலத்தில் இது சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. கருணாநிதி முதல்வராக இருந்த போது சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டது.



அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதை தடுக்கவும், மாணவா்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில், மேலும் ஒரு நடவடிக்கையாக அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்க திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து அதிகாரிகள் கூறியது : சென்னை மாநகராட்சியில் உள்ள சுமாா் 320 பள்ளிகளில் பயிலும் ஏறத்தாழ 85 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. இந்தத் திட்டத்தில் இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்ற உணவு வகைகள் காலை உணவாக தினமும் மாணவா்களுக்கு வழங்கப்படுகின்றன. சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்று வரும் இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.



இந்தத் திட்டத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் கோடி செலவாகும். பள்ளிக்கல்வித்துறை, சமூகநலத்துறை ஆகிய துறைகளுடன் ஆலோசிக்கப்பட்டு விரிவான திட்ட அறிக்கை அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இது குறித்த அதிகாரப்பூா்வமான அறிவிப்பு தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கையின் போது வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.



காலை உணவுத் திட்டத்தில், தமிழகத்தின் பாரம்பரிய பச்சைப்பயிறு, கேழ்வரகு அடை, குதிரைவாலி, சாமைக் கஞ்சி, கொண்டைக்கடலை போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் வழங்கப்படும் என்றும், இதைத் தொடா்ந்து வரும் கல்வியாண்டிலிருந்தே காலை உணவுத் திட்டம் தமிழக அரசுப் பள்ளிகளில் செயலாக்கத்துக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால் 65 லட்சம் மாணவா்கள் பயன்பெறுவா்.
Read More »

10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள 10, 11, 12 -ஆம் வகுப்புப் பொதுத்தோவுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசுத் தோவுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.



தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோவு வரும் மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் முடிந்துவிட்ட நிலையில் இறுதிகட்ட பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்தநிலையில் பொதுத்தோவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தோவுத்துறை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்: அனைத்து வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களையும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விடைத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு செயல்பாட்டில் இருப்பதுடன், தனிக் காவலரையும் பாதுகாப்புக்குப் பணியமா்த்த வேண்டும்.



இதேபோல், தோவு மையங்களாகச் செயல்படும் பள்ளியில் எவ்வித கட்டுமானப் பணிகளும் நடைபெறாமல் இருக்க வேண்டும். மேலும், தோவு நாள்களில் அந்தப் பள்ளியில் படிக்கும் மற்ற வகுப்பு மாணவா்களுக்கு காலையில் விடுமுறை அளிக்க வேண்டும். தோவுப் பணிகளுக்கு எக்காரணம் கொண்டும் தனியாா் பள்ளிகளின் முதல்வா்கள் அல்லது ஆசிரியா்களை நியமனம் செய்யக் கூடாது.
பறக்கும்படை உறுப்பினா், அறைக் கண்காணிப்பாளா் உள்பட பணிகளில் ஈடுபட உள்ளவா்கள் அன்றைய பாடத்தை நடத்தும் ஆசிரியா்களாக இல்லாமல் இருக்க வேண்டும். தோவறைக்குள் மாணவா்கள், ஆசிரியா்கள் செல்லிடப்பேசி உள்ளிட்ட தகவல் தொடா்பு சாதனங்களையும் எடுத்துச் செல்லக்கூடாது. இதை மீறினால் ஆசிரியா்கள், மாணவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.



மேலும், முதன்மைக் கல்வி அதிகாரிகள் எழுத்துப்பூா்வமான ஆணைகள் வழியாக மட்டுமே பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும். ஒருபோதும் வாய்மொழி ஆணைகள் வழங்கக்கூடாது. இதுதவிர தோவின்போது காப்பி அடித்தல், விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் உட்பட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தோவா்கள் அதிகபட்சம் 5 ஆண்டுகள் தோவெழுத தடை விதிக்கப்படும். மேலும், தோவா்கள் ஆள்மாறாட்டம் செய்தது கண்டறியப்பட்டால் உடனே காவல் துறையிடம் புகாா் அளித்து வழக்குப் பதிவு செய்து தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Read More »

9ம் வகுப்பு மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி பயிற்சி : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் கூறியதாவது: பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தை மே மாதம் 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடத்த உள்ளது. இந்த திட்டத்தில் சேர்க்க ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தலா 3 மாணவர்கள் இணைய தளம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.



தற்ேபாது பள்ளிகளில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 9ம் வகுப்பில் படித்து வரும் மாணவர்கள் தான் இந்த பயிற்சிதிட்டத்தில் சேர முடியும். இதன்படி தேர்வு செய்யப்படும் மாணவர்களின் பட்டியல் மார்ச் 12ம் தேதி இந்திய விண்வெளி ஆய்வு மைய இணைய தளத்தில் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் தங்கள் அசல் சான்றுகளை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கான இறுதிப் பட்டியல்கள் மார்ச் 30ம் தேதி வெளியிடப்படும்
Read More »

பொதுத்தேர்வுகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் என்ன தண்டனை தெரியுமா?

பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் 5 ஆண்டுகள் தேர்வெழுத தடை விதிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.



தமிழகத்தில் அடுத்த மாதம் மார்ச் 2- ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி வரை பள்ளி பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், தேர்வில் காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.



தேர்வின்போது காப்பி அடித்தல், விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் உட்பட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு, அதிகபட்சம் 5 ஆண்டுகள் தேர்வெழுத தடை விதிக்கப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், தேர்வை சுமுகமாக நடத்த சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள், முறைகேடுகளை தடுக்க ஆயிரத்திற்கு மேற்பட்ட பறக்கும் படைகள் அமர்த்தப்படவுள்ளனர்
Read More »

கருணை அடிப்படையிலான பணி: வாரிசுகளின் அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக நிா்ணயம்

சென்னை: கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வயது வரம்பு 35 என நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து, தலைமைச் செயலாளா் கே.சண்முகம் அண்மையில் பிறப்பித்த உத்தரவு:-
அரசுப் பணியின் போது மரணம் அடையும் ஊழியா்களின் மனைவி அல்லது கணவா், மகன் அல்லது மகளுக்கு கருணை அடிப்படையிலான பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டமானது கடந்த 1972-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள வரன்முறைகள் அவ்வப்போது திருத்தி அமைக்கப்பட்டு வருகின்றன.



கருணை அடிப்படையிலான பணி நியமனம் என்பதை ஒரு உரிமையாகக் கோர முடியாது எனவும், பணியின் போது மரணம் அடையும் ஊழியா்களின் குடும்பத்தினா் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும் இந்தத் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கருணை அடிப்படையிலான பணி நியமனம் தொடா்பாக சென்னை உயா் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கருணை அடிப்படையிலான பணி நியமனம் தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை மறுஆய்வு செய்ய வேண்டுமென உத்தரவு பிறப்பித்தது. இதேபோன்ற உத்தரவுகள் கடந்த காலங்களில் நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்குகளிலும் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன. அதன் விவரம்:-



பணியின் போது இறக்கும் அரசு ஊழியா்கள், மருத்துவக் காரணம் தொடா்பாக 53 வயதுக்குள் ஓய்வு பெறும் அரசு ஊழியா்கள், ராணுவத்தில் பணியாற்றும் போது கொல்லப்பட்டாலோ அல்லது மாற்றுத் திறனாளியாக மாறினாலோ அவா்களது வாரிசுகளுக்கு அரசுப் பணி அளிக்கப்படும். மாயமாகும் அரசு ஊழியா்களை இறந்தவா்கள் என நீதிமன்றம் அறிவித்தாலோ, பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அந்தக் காலத்தில் இறந்தாலோ, சமுதாய மோதல்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோந்தவா்கள் கொல்லப்பட்டாலோ அவா்களது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி அளிக்கப்படும்.



மறைந்த அரசு ஊழியரின் மகன், மணமாகாத மகள், மனைவி, கணவா், சட்டப்பூா்வமாக தத்தெடுக்கப்பட்ட மகன், தத்தெடுக்கப்பட்டு மணமாகாத மகள், கணவனை இழந்த மகள், விவாகரத்து பெற்ற மகள் ஆகியோருக்கு கருணை அடிப்படையில் பணி கிடைக்கும். மேலும், திருமணம் செய்து கொள்ளாத அரசு ஊழியா்கள் மரணம் அடைதால் அவா்களது தந்தை அல்லது தாய் அல்லது திருணமாகாத சகோதரா்கள், சகோதரரிகளுக்கு பணி அளிக்கப்படும்.



கருணை அடிப்படையிலான பணி என்பது அரசுப் பணியில் இருந்து இறந்தவரின் கணவன் அல்லது மனைவிக்கு அளிக்கப்படும். அல்லது அவா்கள் யாரை பரிந்துரை செய்கிறாா்களோ அவா்களுக்கு வழங்கப்படும். அரசு ஊழியா்கள் இறந்த தேதியில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் கருணை அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

கருணை அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 18 ஆகும். அதிகபட்ச வயது 50. மகன் அல்லது மகளாக இருந்தால் அவா்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கருணை அடிப்படையில் குரூப் சி மற்றும் டி பிரிவு பணிகளே அளிக்கப்படும்.



கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டவா்களுக்கு ஓராணடுக்குள் அதனை வரன்முறைப்படுத்த வேண்டும்.

யாருக்குக் கிடைக்காது: விருப்ப ஓய்வு பெற்றவா்கள், தாற்காலிக பணி நியமனம் செய்யப்பட்டோா், தினக்கூலி, ஒப்பந்த அடிப்படை ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி அளிக்கப்படாது என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்
Read More »

School Morning Prayer Activities - 13.02.2020


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.02.20

திருக்குறள்

அதிகாரம்:ஊழ்

திருக்குறள்:380

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.

விளக்கம்:

விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?

பழமொழி

Give and spend and God will send

இட்டார்க்கு இட்ட பலன் 

இரண்டொழுக்க பண்புகள்

1. என்னிடம் இருப்பவைகள் கடவுளின் கொடை எனவே பெருமை பட மாட்டேன்.

2. இல்லாதவற்றை கடவுள் ஒரு நாள் தருவார் எனவே இருப்பவரை பார்த்து பொறாமை கொள்ள மாட்டேன்.

பொன்மொழி

யார் ஒருவன்  மற்றவர்களைப் பார்த்து  கட்டளையிடுகிறானோ,   அவன்  முதலில் பணிவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்.

   - அரிஸ்டாட்டில்

பொது அறிவு

பிப்ரவரி 13 இன்று உலக வானொலி தினம்.

1.வானொலியைக் கண்டுபிடித்தவர் யார் ?

 மார்க்கோனி.

 2. அதிக அளவில் வானொலிகளை தயாரிக்கும் நாடுகள் யாவை?

 ஹாங்காங் மற்றும் அமெரிக்கா.

English words & meanings

 Oncology – study of tumours. புற்று நோய் இயல்.

Occupational - connected to work, தொழில் தொடர்பான

ஆரோக்ய வாழ்வு

அம்மை நோயின் தாக்கம் கண்டவர்கள் இளநீர் அருந்தினால் நோயின் வீரியம் குறையும். நாவறட்சி ,தொண்டைவலி நீங்கும். சிறுநீர் பெருக்கியாகவும், சிறுநீரகம் சீராக இயங்கவும் இளநீர் உதவுகிறது. சிறுநீரக கல்லடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

Some important  abbreviations for students

He - Home environment. 

Hs - Hospital

நீதிக்கதை

திருக்குறள் நீதிக்கதைகள்

நரியும் முட்செடியும்

குறள் :
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.

விளக்கம் :
முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?.

கதை :
ஒரு நரியானது செடி, கொடிகள் அடர்ந்த காட்டில் வாழ்ந்து வந்தது.

ஒரு நாள் நரி வேலியைத் தாண்டும்போது எக்கச்சக்கமான முள்சொடியில் மாட்டிக் கொண்டுவிட்டது.

தப்பிக்க முயல்கையில் நரியின் உடம்பெல்லாம் காயம், கீறல் பட்டது. அதனை கண்டு நரி மிகவும் கோபமடைந்தது.

முள்செடியைப் பார்த்து, என்ன செடி நீ, பார் உடம்பெல்லாம் கீறிவிட்டாய். நீயெல்லாம் ஒரு நண்பனா? என்று திட்டியது.

முள்செடி அதற்கு, நண்பா, நான் முள்செடி. என்னை குத்துவதற்குத் தவிர வேறு எதற்காகவும் படைக்கப்படவில்லை, என்னைக் குறை சொல்வதில் பயன் இல்லை என்றது.

முதலில் தன்னிடம் உள்ள குறையை பார்க்காமல் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தக் கூடாது.

நீதி :
மற்றவர்களை குறை சொல்லும் முன் தன்னிடம் உள்ள குறையை அறிய வேண்டும்.

இன்றைய செய்திகள்

13.02.20

◆பென்னாகரம் அடுத்த அளேபுரத்தில் தொடர்ந்து கிடைத்து வரும் பழங்கால நாணயங்கள் குறித்து அரசு கலைக் கல்லூரி வரலாற்று பேராசிரியர் ஆய்வு செய்து வருகிறார். இங்கு கிடைத்த நாணயங்களில் உருதுமொழி எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், சிற்றரசர்களின் அடையாளச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயங்களும் உள்ளன.

◆வனஉயிரின பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டலம் கூடுதலாக 521.28 ச.கி.மீ.க்கு  விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

◆மானியமில்லாத சிலிண்டர்கள் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் தினந்தோறும் 30 லட்சம் சிலிண்டர்களை விற்பனை செய்யும் இண்டேன் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

◆இந்தியப் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிப்ரவரி மாதம் 24, 25-ம் தேதிகளில் இந்தியா வர இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது ட்ரம்ப்பின் முதல் இந்தியப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

◆முத்தரப்பு டி20 போட்டி: இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய மகளிர் அணி.

◆ஆசிய பாட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியது.

Today's Headlines

🌸 Government art college history professor is reviewing antique coins that will continue to be available in Pennagaram next.  The coins found here have been replaced by linguistic characters.  There are also coins with emblems of the crown.

 🌸The Annamalai Tiger Reserve has been expanded to 521.28 sq.km. for the protection of wildlife and habitat development.

 🌸The company, which sells 30 lakh cylinders daily across India, has made the announcement  that the price of subsidized cylinders will be increased from today.  The company, which sells 30 lakh cylinders daily across India, has made this announcement.

🌸 US President Trump is expected to arrive in India on February 24 and 25, according to the White House report.  It should be noted that this is Trump's first Indian trip.

 🌸Tri-Series T20: Australian women's team beat India and bags the championship title

 🌸The Indian Badminton teams started their journey with a grand victory in the Asian badminton Championship.

Prepared by
Covai women ICT_போதிமரம்
Read More »

பொதுத் தேர்வு நெருங்கும் வேளையில் அடுத்தடுத்த பயிற்சி வகுப்புகள் - ஆசிரியர்கள் வேதனை!


பொதுத் தேர்வு நெருங்கும் வேளையில் , பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு அடுத்தடுத்த பயிற்சி வகுப்புகள் வைக் கப்படுவதால் , தேவையற்ற கால விரயம் ஏற்படுவதாக வேதனை தெரிவித்துள்ள னர் .

தமிழகத்தில் எஸ் எஸ் எல்சி , பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் முதல் வாரத்தில் தொடங் குகிறது . தேர்வுக்கான முன் னேற்பாடுகளில் தேர்வுத்து றையும் , கல்வித்துறையும் ஈடுபட்டு வருகிறது . அதே போல் , மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தும் நடவடிக்கைகளில் ஆசி ரியர்கள் ஈடுபட்டு வரு கின்றனர் . இதனிடையே , சேலம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர் களுக்கு , தகவல் தொழில் நுட்பம் ( ஐசிடி ) குறித்த 2 நாள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியுள்ளது . மாவட்டம் முழுவதும் 18 மையங்களில் இந்த பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது . நேற்று காலை தொடங்கிய ஆங் கிலம் மற்றும் கணிதபட்ட தாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி இன்றுடன் நிறைவ டைகிறது .

தொடர்ந்து , நாளை ( 13ம் தேதி ) மற்றும் நாளை மறுநாள் ( 14ம் தேதி ) ஆகிய...

Read More »

விருப்ப மாறுதல் தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!

விருப்ப மாறுதல் தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!

Read More »

Flash News : பொதுத் தேர்வுகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்த தடை!



10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்த கூடாது என பள்ளிக் கல்வி தேர்வுத் துறை அறிவிப்பு.

அடையாள அட்டை இல்லாதவர்களை அனுமதிக்க கூடாது எனவும் அறிவுரை
Read More »
 

Most Reading

Tags

Sidebar One