Search

இம்மாத இறுதிக்குள் இதைச் செய்யவில்லை என்றால் கணக்கு முடக்கம்...! SBI விடுத்த எச்சரிக்கை

Friday, 7 February 2020

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில், சேமிப்புக் கணக்குகள் அல்லது பிற கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிர்வாகம் எச்சரிக்கை செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் சேமிப்பு மற்றும் பிற வகையான கணக்குகளை வைத்துள்ளனர்.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு எஸ்.பி.ஐ விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில், வரும் 28-ம் தேதிக்குள் KYC எனும் படிவத்தை சமர்ப்பிக்கவில்லை என்றால் கணக்கு முடக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.KYC - Know Your Customer எனப்படும் உங்களது வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளுங்கள் என்ற படிவம் ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வங்கிகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அருகிலுள்ள எஸ்.பி.ஐ வங்கிக் கிளையிலோ அல்லது நெட் பேக்கிங் மூலமாகவோ ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கிக் கிளைகளில் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதாக இருப்பின், கணக்கிற்கு உரிய நபர் நேரடியாகச் சென்று இணைத்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் அறிவிப்புப்படி இம்மாதம் 28-க்குள் KYC இணைக்கப்படாத வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.2002, பண மோசடி தடுப்புச் சட்டத்தின்படியும், அச்சட்டத்தின் விதிமுறைகளின்படியும் வங்கிகள் அடையாள நடைமுறைகளை பின்பற்றுவது அவசியமானதாகிறது
Read More »

மாணவர் விடுதிகளிலும் வருகிறது பயோ மெட்ரிக் வருகை பதிவு!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு உட்பட்ட 1480 பள்ளி, கல்லுாரி மாணவர் விடுதிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவு விரைவில் அமல்படுத்தப்படும்," என அத்துறை இயக்குனர் காமராஜ் தெரிவித்தார்.மதுரையில் நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:

இத்துறையில் 1480 விடுதிகளில் 85 ஆயிரம் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். 1000க்கும் மேற்பட்ட சமையலர், வாட்ச்மேன் பணியிடங்கள்காலியாக உள்ளன. திருவண்ணாமலை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இப்பணியிடங்களை நிரப்ப பிப்.,11, 12, 13ல் நேர்காணல் நடக்கிறது.இதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு விவரம் கேட்கப்பட்டுள்ளது.பிற மாவட்டங்களில் ஏப்ரலுக்குள் காலியிடங்கள் நிரப்பப்படும். 300 காப்பாளர் பணியிடங்கள் டி.ஆர்.பி., மூலம் நிரப்பப்படவுள்ளது. மாணவர் வருகை, விடுதி காப்பாளர்களை கண்காணிக்க பயோமெட்ரிக் வருகை பதிவு அமல்படுத்தப்படவுள்ளது.

600 மாணவியர் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.அனைத்து விடுதிகளிலும் மாணவர்களுக்கு, இரும்பு கட்டில் வசதி ஏற்படுத்தப்படவுள்ளன. மலை பகுதியில் மரக்கட்டில் வழங்கப்படும். மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்க ஒவ்வொரு ஆண்டும் 100 மாணவருக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.இதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாணவர் 'இயக்குனர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, எழிலகம், சென்னை' என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். கல்லுாரி மூன்றாமாண்டு மாணவருக்கு ஆண்டு தோறும் முன்னணி தனியார் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது ,என்றார்.
Read More »

ஈட்டியவிடுப்பினை சரண் செய்யும் போது தனி ஊதியத்தினையும்ஈட்டிய விடுப்பின் கணக்கில் சேர்க்கப்படுதல் வேண்டுமா? CM CELL Reply!

CM CELL Petition  :

தொடக்கக்கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி மாதியம் RS . 2000 / - ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது கணக்கில் எடுத்துக் | கொள்ளப்பட வேண்டுமா ? சில மாவட்டங்களில் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது ( தனி ஊதியம் சேர்த்து வழங்கப்படுகிறது . சில மாவட்டங்களில் மறுக்கப்படுகிறது . எனவே , தெளிவுரை வழங்கவும் . .

CM CELL Reply :

ஏற்கப்படுகிறது ஈட்டியவிடுப்பினை சரண் செய்யும் போது தனி ஊதியத்தினையும் ஈட்டிய விடுப்பின் கணக்கில் சேர்க்கப்படுதல் வேண்டும் . தொடக்கக் கல்வி இயக்கக ந . க . எண் 67320 . 12019 நாள் 11 , 04 , 2019
Read More »

ஆதார் எண் அடிப்படையில் ஆன்லைனில் ‘பான்’ எண் வழங்கும் நடைமுறை இந்த மாதமே அமல் மத்திய அரசு அறிவிப்பு

ஆதார் எண் அடிப்படையில், ஆன்லைனில் ‘பான்’ எண் வழங்கும் நடைமுறை இந்த மாதமே அமலுக்கு வந்து விடும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

*.ஆதார் எண்ணுடன் ‘பான்’ என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை இணைப்பதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கி உள்ளது.

*.இதன்படி 30¾ கோடி பான் எண்கள், ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டு விட்டன.*.கடந்த மாதம் 27-ந்தேதி நிலவரப்படி 17 கோடியே 58 லட்சம் பான் எண்கள், ஆதார் எண்ணுடன் இன்னும் இணைக்கப்பட வேண்டும்.

*.இதை செய்து முடிக்க அடுத்த மாதம் 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி நாடாளுமன்றமக்களவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார்.

*.அப்போது அவர் விரிவான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்பாமல், ஆதார் எண் அடிப்படையில், ஆன்லைனில் உடனடியாக பான் எண் அளிக்கும் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

*.இந்த திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

*.இதையொட்டி மத்திய வருவாய் துறை செயலாளர் அஜய் பூஷண் பாண்டே கூறியதாவது:- ஆதார் எண் அடிப்படையில் ஆன்லைன் வழியாக உடனடியாக பான் எண் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

*.எனவே இந்த மாதமே ஆன்லைன் வழியாக ஆதார் எண் அடிப்படையில் பான் எண் வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்து விடும். இப்படி பான் எண் பெற விரும்புகிறவர்கள், வருமான வரி இணையதளத்துக்கு சென்று தங்கள் ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்.

*.உடனே ஆதார் பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. என்று அழைக் கப்படுகிற ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பாஸ்வேர்டு அனுப்பப்படும்.

*.ஆதார் விவரங்களை சரிபார்க்க ஓ.டி.பி. பயன்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து பான் எண் உடனடியாக ஒதுக்கீடு செய்யப்படும். சம்பந்தப்பட்ட நபர் ஆன்லைனில் இ-பான் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

*.இது வரிசெலுத்துவோர், விண்ணப்பம் நிரப்பி அனுப்புவதில் இருந்து விடுபட உதவும். வரிசெலுத்துவோரின் முகவரிக்கு பான் அட்டையை அனுப்பி வைப்பதற்கான வருமான வரித்துறையின் செயல்முறையையும் இது எளிதாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Read More »

Nmms தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களது விபரங்களை பிப்.10க்குள் புதுப்பித்து கொள்ள உத்தரவு

திறன் வழி தேர்வின் வாயிலாக, கல்வி உதவி தொகை பெறும் மாணவர்களின் விபரங்களை புதுப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய, மாநிலஅரசுகளின் சார்பில், பல்வேறு திட்டங்களில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.சிறுபான்மையின மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்,பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களுக்கு, தனியாக கல்வி உதவி தொகை திட்டங்கள் உள்ளன. அதேபோல், அனைத்து வகைமாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில், தகுதி தேர்வு வழியாகவும், கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.


இதன்படி, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, என்.எம்.எம்.எஸ்., எனப்படும், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு நடத்தப்படும்.திறனறி தேர்வில் தேர்வாகும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 வரை, மாதம் தோறும் கல்வி உதவி தொகை வழங்கப்படும்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று, ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்து கொண்டிருக்கும் மாணவர்கள், வரும் ஆண்டுகளில் கல்வி உதவி தொகையை தடையின்றி பெற, தங்களின் விபரங்களை புதுப்பித்து கொள்ளும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

இந்தப் பணிகளை, பிப்., 10ம் தேதிக்குள் முடிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகள் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.

Read More »

தாயைப் போலவே தந்தைக்கும் 164 நாட்கள் பேறுகால விடுப்பு அறிவித்த பின்லாந்து அரசு..!

குழந்தை பிறப்பிற்கு பின் தாய்க்கு அளிக்கப்படுவது போலவே தந்தைக்கும் 164 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என பின்லாந்து அரசு அறிவித்துள்ளது.

பொதுவாக குழந்தைகள் வளர்ப்பு என்றாலே எல்லா பொறுப்புகளும் பெண்களுக்குத்தான் என்ற எண்ணம் உண்டு. ஆனால் இந்த எண்ணத்தை உடைத்திருக்கிறது பின்லாந்து அரசு. பின்லாந்தில், முற்றிலும் பெண்களை தலைமையாக கொண்ட கட்சிகளின் கூட்டணி ஆள்கிறது. கடந்த டிசம்பர் மாதம் 34 வயதான சன்னா மரின் பின்லாந்து பிரதமராக பதவியேற்றார். சில வாரங்களுக்கு முன்பு உலக பொருளாதார கூட்டமைப்பில் பேசிய சன்னா மரின், பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில், தங்கள் நாட்டில் பேறுகால விடுப்பு கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்போவதாக அறிவித்தார்.

அதன்படி, குழந்தை பிறப்புக்கு பின், தாயை போலவே தந்தைக்கும் 164 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என பின்லாந்து அரசு அறிவித்துள்ளது. இந்த 164 நாட்கள் விடுப்பில் தாயோ அல்லது தந்தையோ 69 நாட்கள் விடுப்பை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ளலாம். இதுவே தந்தை, தாய் இருவரில் ஒருவர் ‌மட்டுமே இருக்கும்பட்சத்தில் அவருக்கு 3‌28 நாட்கள் பேறுகால விடுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை வளர்ப்பில் இரு தரப்புக்குமே சமமான பொறுப்பு இருப்பதை உணர்த்தும் வகையில் ஆண்களுக்கான விடுப்பு நாட்களை அதிகரித்துள்ளதாக பின்லாந்து அரசு கூறியுள்ளது
Read More »

EMIS UPDATE HOW TO CHANGE STUDENTS MEDIUM OF INSTRUCTIONS TAMIL/ENGLISH IN EASY STEPS ..

EMIS UPDATE HOW TO CHANGE STUDENTS MEDIUM OF INSTRUCTIONS TAMIL/ENGLISH IN EASY STEPS ..



EMIS UPDATE HOW TO CHANGE STUDENTS MEDIUM OF INSTRUCTIONS TAMIL/ENGLISH IN  EASY STEPS ..

☝☝☝☝☝☝☝
பாருங்கள் பயன்படுத்துங்கள் பிறருக்கும் பகிருங்கள்

FOR MORE USEFUL VIDEOS
*SUBSCRIBE* THIS CHANNEL
*CLICK 🔔 BELL* ICON FOR NOTIFICATION......

🌈📡🔬🛶⏳☂️🔭
*இரா.கோபிநாத்*
*இடைநிலை ஆசிரியர்*
*ஊ.ஒ.தொ.பள்ளி ஒண்டிக்குப்பம்*
*கடம்பத்தூர் ஒன்றியம்*
*திருவள்ளூர் மாவட்டம்*
Read More »

TRB வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!!

TRB வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!!

Read More »
 

Most Reading

Tags

Sidebar One