Search

School Morning Prayer Activities - 29.01.2020

Tuesday, 28 January 2020


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 29.01.20

திருக்குறள்

திருக்குறள் : 366

அதிகாரம் : அவாஅறுத்தல்

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.

 பொருள்:

ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம்.  "

பழமொழி

Great engines turn on small pivots.

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

இரண்டொழுக்க பண்புகள்

1. நல்ல நண்பர்களோடு மட்டுமே சேர்வேன்.

2. எனது நண்பர்களுக்கு என்னால் முடிந்த அளவு எல்லா வகையிலும் உதவி செய்வேன்.

பொன்மொழி

கஷ்டத்தை அனுபவிக்காமல் வெற்றியின் வாசத்தை சுவாசிக்க முடியாது...

......காமராசர்

பொது அறிவு

1.எந்த நாடுகளின்  கொடி நமது இந்தியா நாட்டின் கொடி போன்று இருக்கும்?

ஹங்கேரி & நைஜர் நாடுகள்

2. நமது நாட்டு தேசிய கொடியின் நீள அகல விகிதம் எவ்வளவு?

3:2

English words & meanings

 Carpology – study of fruit. பழங்கள் மற்றும் அவற்றின் விதைகள் குறித்த படிப்பு

Caged-put inside a cage. கூண்டில் அடைக்க பட்ட

ஆரோக்ய வாழ்வு

சிறுதானியங்கள் நல்ல கொழுப்பு எனப்படும் உயர் அடர்த்தி லிப்போ புரதம் கொழுப்பு அளவினை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்கின்றன.

Some important  abbreviations for students

SIM - Subscriber Identification Module.

Ad - Advertisement

நீதிக்கதை

குரங்கின் தந்திரம்

குறள் :
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்.

விளக்கம் :
பின்னர் வரப்போவதை முன்னதாகவே அறிந்து காக்கும் அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வருவதான ஒரு துன்பமும் இல்லை.

கதை :
ஒரு நதியில் முதலை தன் துணைவியாருடன் வாழ்ந்து வந்தது. நதிக்கரையோரம் ஒரு குரங்கு வாழ்ந்து வந்தது. முதலையும் குரங்கும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் பெண் முதலை ஆண் முதலையிடம் தன் ஆசையை தெரிவித்தது. எனக்கு ரொம்ப நாளாக குரங்கின் இதயத்தை சாப்பிடனும்னு ஆசை, தாங்களால் கொண்டுவரமுடியுமா? என கேட்டது.

ஆண்முதலை யோசித்தது என்ன செய்வதென்று. திடீரென ஒரு யோசனை வந்தது, சரி நான் கொண்டுவருகிறேன் என சம்மதித்தது. நம் குரங்கு நண்பனை வீட்டிற்கு விருந்துக்கு அழைப்போம். அவனும் வருவான் அவனை கொன்று இதயத்தை சாப்பிடு என கூறியது. பெண் முதலைக்கோ கொண்டாட்டம். அடுத்த நாள் ஆண் முதலை குரங்கு நண்பனை விருந்துக்கு அழைத்தது. குரங்கும் சம்மதித்து முதலையின் முதுகில் ஏறி அமர்ந்ததும் முதலை புறப்பட்டது.

நடு ஆற்றில் சென்று கொண்டிருக்கும் போது ஆண் முதலை கூறியது நான் உன்னை என்ன செய்ய போகிறேன் தெரியுமான்னு கேட்டது. அப்பாவி குரங்கு விருந்துக்கு தானே அழைத்தாய் என்றது.

முதலை சொன்னது, அதான் இல்லை என்னோட மனைவி குரங்கின் இதயம் சாப்பிட ஆசைபட்டா, அதுக்காக தான் உன்னை அழைத்து செல்கிறேன் என கூறியது. சற்று குரங்கிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

சற்று யோசித்த குரங்கு, அடடா என்ன நண்பா இதை முன்னாடியே சொல்லகூடாதா? நேற்று நான் என் இதயத்தை எடுத்து காயபோட்டேன் அது அங்கேயே இருப்பதாக கூறியது.

முதலையும் அப்படியா வா திரும்பி போய் எடுத்துகொண்டு வரலாம் என திரும்பவும் கரைக்கு வந்து விட்டது. தப்பித்த குரங்கு முதலையிடம் கூறியது, முட்டாள் முதலையே நீயெல்லாம் ஒரு நண்பன் என்னையே கொள்ள பார்கிறாயான்னு சொல்லிட்டு மரத்தின் மேல் ஏறி சென்றது.

நீதி :
நமக்கு ஒரு இடத்தில் துன்பம் ஏற்படப்போகிறது என முன்னதாகவே தெரிந்தால், அந்த துன்பம் தன்னை வந்தடைவதற்கு முன்னால் சிந்தித்து அதிலிருந்து விடுபட வேண்டும்.

இன்றைய செய்திகள்

29.01.20

* 5 மாத கால அளவிலான புள்ளிவிவர அறிவியல் படிப்புகளைக் குறைந்த கட்டணத்தில் அளிக்க உள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

* சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாகி இருக்கும் நிலையில், வுஹான் மாநிலத்தில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்கும் பூர்வாங்கப் பணிகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.

* ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.

* ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் பிரிவில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடாலும், மகளிர் பிரிவில் ருமேனியாவின் சிமோனா ஹாலப்பும் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

* ஜிப்ரால்டா் செஸ் திருவிழாவில் இந்திய இளம் கிராண்ட்மாஸ்டா் பிரக்ஞானந்தாவிடம் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா் முன்னாள் உலக சாம்பியன் வெஸ்லின் டோபலோவ்.

Today's Headlines

🌸IIT announces that they are going to give a course on statistics for the duration of five months with low fees.

🌸 As the Wuhana District of China is infected with Corona virus central government taken the first step to recall the trapped Indians from there.

🌸 Against the Hydrocarbon Process Tamil Kaveri farmers Association filed a case in the Supreme Court.

🌸 In Australia Open Tennis in Men's league 7division First grade Spanish player Rafael Natal and in women's division Rumania's Simono Hollaf advanced to quarter finals.

🌸 Ex World Chess  Champion Veselin  Topolav was defeated by India's  Young Grandmaster Pragnanatha in Gibraltar Chess 2020 created a shock wave among the players.

Prepared by
Covai women ICT_போதிமரம்
Read More »

அரசு பள்ளி மாணவர்களுக்கான ATSL 2020 முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு.


Quality Intervention ( Secondary ) என்ற தலைப்பின் கீழ் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாட்டமறித் தேர்வு Aptitude Test at School Level நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . இக்கல்வி ஆண்டில் திட்ட ஏற்பளிப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ள 8 , 51 , 999 மாணவர்களுக்கு நாட்டமறித் தேர்வு நடத்தப்பட உள்ளது . அரசுஉயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இறுதித் தேர்விற்கு முன்பாக ( Pilot Test ) முன் மாதிரி நாட்டமறித் தேர்வு 8 மண்டலங்களில் ( திருவள்ளூர் , ஈரோடு , கடலூர் , சிவகங்கை , கிருஷ்ணகிரி , நாகை , திண்டுக்கல் , திருநெல்வேலி ) ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் 08 . 01 . 2020 நடத்தப்பட்டது . இதன் தொடர்ச்சியாக மாணவர்களின் பயிற்சிக்காக TNTP / EMIS இணையதளத்தில் மாதிரி வினாத்தாட்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது .

ATSL 2020 முதன்மைத் தேர்வு ஜனவரி 30 , 31 மற்றும் பிப்ரவரி 1 ந் தேதி ஆகிய மூன்று நாட்களில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படவுள்ளது .

தேர்வு நேரம்

* Session 1 : காலை 9 . 00 மணி முதல் 1 . 00 மணி வரை
* Session II : பிற்பகல் 2 . 00 மணி முதல் 6 . 00 மணி வரை

இத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து குழுக்கள் அமைத்து செயல்பட ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது .

மாணவர்கள் பள்ளியிலேயே தேர்வு எழுதுவதற்கு ஏற்ற வகையில் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் இணையதள வசதியுடன் கணினி வளங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் . அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அவ்வப்போது இதுகுறித்து வழங்கப்படும் அறிவுரைகளைக் கவனத்தில் கொண்டு தேர்வை நல்ல முறையில் நடத்தி முடிக்கத் தேவையான நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் .
Read More »

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேரங்களில் சிறப்பு வகுப்பு நடத்தி பொதுத்தேர்வுக்கு பயிற்சி அளிக்க இயக்குநர் உத்தரவு.


பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேரங்களில் சிறப்பு வகுப்பு நடத்த அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு.

தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைக் கடிதப்படி 2019 - 2020ஆம் கல்வியாண்டு முதல் மாநிலப் பாடத் திட்டத்தை பின்பற்றும் அனைத்து ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு / அரசு உதவி பெறும் நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 8ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பொதுத்தேர்வு நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது . எனவே கல்வியாண்டின் இறுதியில் 8 ஆம் வகுப்பிற்கு நடைபெறவுள்ள இத்தேர்வில் முதல் , இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவப்பாட புத்தகங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளதால் , மூன்று பருவப் பாடக் கருத்துகளையும் பின்வரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிறுதேர்வுகள் , வினாத்தாள்கள் மூலம் மீள்பார்வை செய்திட 8ஆம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு தெரிவித்திட வட்டாரக் கல்வி அலுவலர்கள் / குறுவளமைய தலைமையிட தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

1 . நாள்தோறும் மாலை வேளைகளில் கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கி 30 மதிப்பெண்களுக்கு முதல் இரண்டு பருவங்களில் வினாத்தாள் தயார் செய்து தேர்வு நடத்துதல்

2 . திங்கள் - தமிழ் , செவ்வாய் - ஆங்கிலம் , புதன் - கணிதம் , வியாழன் - அறிவியல் , வெள்ளி - சமூக அறிவியல் என 5 பாடங்களுக்கு தேர்வு நடத்துதல்

3 . இணைப்பு 1ல் உள்ளவாறு 5 பாடங்களுக்கும் மாலை நேரங்களில் முதல் இரண்டு பருவ பாடப்பகுதிகளில் தேர்வு நடத்துதுல்

4 . இணைப்பு 2ல் உள்ள Question Pattern அடிப்படையில் மாதிரி வினாத்தாள் தயார் செய்து தேர்வு நடத்துதல்

5 . பள்ளி நேரங்களில் மூன்றாம் பருவ பாடப்பகுதிகளிலிருந்து சிறு தேர்வு நடத்துதல் மேற்கண்டவாறு கற்றல் விளைவுகள் சார்ந்து மூன்று பருவங்களிலிருந்தும் வினாத்தாள் தயார் செய்து 8ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு சிறப்பான முறையில் மாணவர்களை தயார் செய்திடவும் , இத்தேர்வு நடைபெறுவதை முறையாகக் கண்காணித்திடவும் அனைத்து மேல்நிலை , உயர்நிலை மற்றும் உயர்தொடக்கநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

அனைத்து மேல்நிலை , உயர்நிலை மற்றும் உயர்தொடக்கநிலைப் பள்ளிகளிலும் மேற்கண்ட வழிமுறைகளின் அடிப்படையில் 8ஆம் வகுப்பிற்கு தேர்வு நடைபெறுவதை தங்கள் பார்வையில் உறுதி செய்திட அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் , குறுவளமையத் தலைமையாசிரியர்கள் , ஆசிரியர்பயிற்றுநர்கள் மற்றும் வட்டார வளமைய பொறுப்பு ஆசிரியர்பயிற்றுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
Read More »

தாமதமாக வந்ததாக 2000 அரசு, அரசு உதவிப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ்..

தாமதமாக வந்ததாக 2000 அரசு, அரசு உதவிப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ்.. 

நோட்டீஸ்க்கு விளக்கம் அளிக்காவிட்டால் நடவடிக்கை கல்வி அலுவலர் எச்சரிக்கை 
Read More »

விரைவில் அனைத்து அரசு பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

இந்த ஆண்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவிலிருந்து தமிழக அரசு பின் வாங்காது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் அரங்கில், தமிழர் திலகம் பத்திரிகையின் 2ஆம் ஆண்டு துவக்க விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், அனைத்து அரசு பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார். 1 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் வரை சரளமாக ஆங்கிலம் பேச, ஆயிரம் ஆங்கில வார்த்தைகள் என்ற பாடத்திட்டத்தின் கீழ் வாரம் 45 நிமிடங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

விடுமுறை நாட்களில், ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களை கொண்டு தமிழ் பயிற்சி, மற்றும் நீதிபோதனை வகுப்புகள் நடத்தவும் அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வை ரத்து செய்திட வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைகள் பற்றி, அடுத்த ஆண்டு முதல் பரிசீலிக்கப்படும் என்று கூறினார். நடப்பாண்டு கட்டாயம் பொது தேர்வு நடத்தப்படும் எனவும் உறுதிபட தெரிவித்தார். இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் எச்.வி ஹன்டே மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
Read More »

திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு படிப்புதவித் தொகை நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான படிப்புதவித் தொகை வழங்கும் பொருட்டு ரூ . 1 , 12 , 90 , 000 / - நிதி ஒதுக்கீடு பெறப்பட்டதையடுத்து , அரசுத் தேர்வுகள் இயக்குநரிடமிருந்து செப்டம்பர் 2019ல் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊரக திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் விவரங்கள் அடிப்படையில் இந்த நிதியினை சம்மந்தப்பட்ட மாணவ / மாணவியருக்கு வழங்கும் பொருட்டு இணைப்பில் குறிப்பிட்டுள்ள முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்படுகிறது .

மேற்கூறப்பட்ட தொகையானது கீழ்க்காணும் கணக்குத் தலைப்பில் பற்று வைக்கப்பட வேண்டும் .

2202 General Education - 02 Secondary Education - 107 Scholarships - State ' s Expenditure - AA National Scholarships at the secondary stage For Talented Children From Rural Areas - 312 Scholarship and Stipends - 09 others

New IFHRMS DP code - ( 2202 - 02 - 107 - AA 31209 )

Old DP code - ( 2202 - 02 - 107 - AA 1290 )

மேற்காணும் படிப்புதவித் தொகை 9 , 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தொடர்ந்து பயில்வதற்காக மட்டுமே ஒவ்வொறு மாணவ / மாணவிக்கும் ரூ . 1000 ( ரூபாய் ஆயிரம் மட்டும் ) வீதம் காசோலையாக வழங்கப்பட வேண்டுமென அரசாணை எண் . 960 பள்ளிக் கல்வித்துறை ( இ2 ) நாள் 11 . 10 . 1991 - ல் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் , கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் சலுகைகள் பெற பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு தற்போது ரூ . 1 , 00 , 000 / - என பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பள்ளிக் கல்வி இயக்குநரின் பரிந்துரையை ஏற்று பெற்றோரின் ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ . 12 , 000 / - லிருந்து ரூ . 1 , 00 , 000 / - வரை உயர்த்தப்பட்டுள்ளது . மேலும் மாணவர்கள் கிராமப்புறத்தைவிட்டு நகர்புறத்திற்கு சென்றலோ , மதிப்பெண் 50 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தாலோ அல்லது பாலிடெக்னிக் கல்லூரி போன்ற பிற கல்வி நிலையங்களுக்குப் பயிலச் சென்று விட்டாலோ அம்மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கக்கூடாது . உதவித் தொகை 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் . மேற்காணும் படிப்பு உதவித் தொகை 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியருக்கு மட்டுமே அரசாணை எண் . 960 கல்வித்துறை நாள் 11 . 10 . 1991 - ல் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்பட வேண்டும் .

Read More »

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கும் அவர்களுக்கு பயிற்சி வழங்கும் ஆசிரியர்களுக்கும் வினாத்தாள் குறித்த தெளிவுரை - தேர்வுத்துறை வெளியீடு.

மேல்நிலை முதலாம் | இரண்டாம் ஆண்டிற்கு வினாத்தாள் கட்டமைப்பு ( Blue Print ) இல்லாத நிலையில் , புத்தகத்தின் உட்பகுதியில் இருந்தும் , பாடம் சார்ந்தும் வினாக்கள் பொதுத்தேர்வில் கேட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது .

* 2019 - 20 கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பிற்கும் புதியப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து , இவ்வகுப்பு மாணவர்களுக்கும் வினாத்தாள் கட்டமைப்பு இல்லாத நிலை உள்ளதால் , சென்ற ஆண்டு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே மாணவர்கள் புத்தகம் முழுமையும் படித்து புரிந்து கொண்டு வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்குமாறு அறிவுறுத்த வேண்டும் மேலும் , வினாத்தாள் கட்டமைப்பு ( Blue Print ) இல்லை என்பதால் வினாக்கள் எந்த பாடத்திலிருந்தும் எந்த வகையிலும் ( வினாத்தாள் வடிவமைப்பில் ( Pattern ) மாற்றமின்றி கேட்கப்படலாம் .

* மாதிரி வினாத்தாள் சான்பது வினாத்தாள் வடிவமைப்பான பகுதி  பிரிவுகள் மதிப்பெண்கள் ஒதுக்கீடு பற்றி மாணவர்கள்  ஆசிரியர்கள் அறிந்து கொள்வதற்காகவே அன்றி மாதிரி வினாத்தாட்களில் கேட்கப்பட்டுள்ள வினா வகைகளே ( எடுத்துக்காட்டாக பொருத்துக கோடிட்ட இடங்களை நிரப்புக , தலைப்பு வினாக்கள் , வரைபட வினாக்கள் , வடிவியல் வினாக்கள் மற்றும் பல ) கேட்கப்பட வேண்டும் என கட்டாயமில்லை .

* ஒவ்வொரு பகுதியிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மதிப்பெண்களில் மாற்றம் இருக்காது எனவும் , ஆனால் ஒவ்வொரு பகுதியிலும் கேட்கப்படும் வினாக்கள் எந்தவொரு வடிவிலும் இருக்கும் என்பதனை அனைத்து மாணவர்கள் | ஆசிரியர்கள் உணர்ந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும் .

* வினாத்தாள் கட்டமைப்பு தேவையில்லை என்பது அரசின் கொள் . முடிவாகும் . காவே , மாதிரி வினாத்தாளில் உள்ளவாறு வினாக்கள் கேட்கப்படவில்லை என பானவர்கள் | ஆசிரியர்கள் உரிமை கோர இயலாது . மாதிரி வினாத்தாள் , வினாத்தான் வடிவமைப்பிற்காக , ( Pattern ) மட்டுமே வெளியிடப்படுகிறது .

* கடந்த ஆண்டிற்கு முந்தைய ஆண்டு வரை Blue Print இருந்ததால் , கட்டமைப்பு மாற்றமின்றி வினாக்கள் கேட்கப்பட்டன . ஆனால் புதிய பாடத்திட்டத்தில் கட்டமைப்பு இல்லாததால் , எந்த வகையான வினாக்களும் கேட்கப்படலாம் . ஆனால் வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் இருக்காது என்ற விவரத்தினை மாணவர்கள் / ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Read More »

பள்ளி செல்லா/ இடைநின்ற குழந்தைகள் அனைவரும் 5 & 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக தகுதியுள்ள மாணவர்கள் விபரங்களை EMIS ல் பதிவேற்றம் செய்ய மாநில திட்ட இயக்குநர் உத்தரவு!!

Read More »

ஆசிரியர்களை வைத்தே ஜூன் மாதம் தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடத்தப்படும்!


தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அதன்படி, கடைசியாக 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடந்தது. இதையடுத்து 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடக்கிறது.

தமிழகத்தில் கோடை காலம் முடிந்த பின்னர் ஜூன் 1ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 15ம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதையடுத்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும். முதல்கட்டமாக நடக்கும் கணக்கெடுப்பின்போது 34 கேள்விகள் கேட்கப்படும்.

ஒரு வீட்டில் எத்தனை பேர், எவ்வளவு அறைகள் உள்ளது, கழிப்பிட வசதி, கழிவுநீர் வசதி, கார், மோட்டார் சைக்கிள் விவரம், குளுகுளு வசதி, இன்டர்நெட் வசதி உள்ளதா என பல்வேறு கேள்விகள் அதில் இடம்பெறும். 2வது கட்ட மக்கள் தொகை இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்படும். அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை 21 நாட்கள் கணக்கெடுப்பு நடைபெறும். இதில் 28 கேள்விகள் கேட்கப்படும். அதன்படி குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் பெயர், படிப்பு, வேலை, திருமணம் ஆனவர்களா, குழந்தைகள் எத்தனை, இடம் பெயர்ந்தவரா, எஸ்.சி., எஸ்.டி. இனத்தவரா என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்படும். இதுவரையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி காகித முறையில் நடைபெற்று வந்தது.
இந்த முறை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் செல்போன் செயலி மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அனைவரும் இதற்கான செயலியை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து தகவல்களை பதிவு செய்வார்கள்.   செயலியை பயன்படுத்த விருப்பம் இல்லாதவர்கள் காகித முறையை பின்பற்றலாம். செல்ேபான் மூலம் பெறப்படும் புள்ளி விவரங்கள் நேரடியாக சர்வருக்கு சென்றுவிடும். தாமதம் ஏற்படாமல் விரைவாக கணக்கெடுப்பை முடிக்க இது உதவும். பொதுவாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்த பின்னர் அதனை வெளியிடுவதற்கு 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகிவிடும். ஆனால் இந்த முறை ஒரு வருடத்திற்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி குறித்தான அறிவிப்பாணையை வெளியிடுவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். வருகிற பிப்ரவரி மாதம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்று தெரிகிறது. அதன்பின்னர் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் இந்த பணியில் ஈடுபடுவார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முழு செலவையும் மத்திய அரசு ஏற்கிறது. தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அரசு பள்ளி ஆசிரியர்களை வைத்தே நடத்தப்படும். இதையொட்டி அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக இந்த பணியில் ஈடுபட வேண்டும் என்று பள்ளி கல்வி துறை அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

8 கோடியை தாண்டும்?

2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 88 ஆயிரத்து 958 ஆகும். 2001-11 காலகட்டத்தில் 10.60 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. இதில் ஆண்கள் 3,61,58,871 பேர், பெண்கள் 3,59,80,087 பேர். 1000 ஆண்களுக்கு 995 பெண்கள் என்ற அடிப்படையில் பாலின விகிதம் இருந்தது. எழுத்தறிவு பெற்றவர்கள் சதவிகிதம் 73.45ல் இருந்து 80.33 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, தமிழக மக்கள் தொகை 8 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் அதிகபட்சமாக 43,43,645 பேர் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருப்பதாக கூறப்பட்டிருந்தது. அதேநேரம் இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
Read More »

TRUST Exam Sep 2019 - Selected Students List Published ( District Wise )

ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான படிப்புதவித் தொகை வழங்கும் பொருட்டு ரூ.1,12 ,90,000 / - நிதி ஒதுக்கீடு பெறப்பட்டதையடுத்து , அரசுத் தேர்வுகள் இயக்குநரிடமிருந்து செப்டம்பர் 2019ல் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊரக திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் விவரங்கள் அடிப்படையில் இந்த நிதியினை சம்மந்தப்பட்ட மாணவ / மாணவியருக்கு வழங்கும் பொருட்டு இணைப்பில் குறிப்பிட்டுள்ள முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்படுகிறது.

TRUST SEP -2019 SELECTION LIST DISTRICT WISE - Download here...
Read More »
 

Most Reading

Tags

Sidebar One